SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Saturday, February 1, 2014

உன்னை எனக்கானவளாய்...


உன்னை எனக்கானவளாய்
நீ வாழ்ந்த தருணங்களில் எல்லாம்
என்னில் நீ இருந்தது
எனக்குள் புரிந்ததேயில்லை;

வேகமாய் நகரும்
வாழ்க்கை நதியினில்
துடுப்புகள் போட நினைத்தும்
நீரோட்டத்தில் கைகோர்த்தவன் நான்;

எனக்கானதொரு உள்ளமாய் உனை
ஏற்க நினைத்த போதெல்லாம்
எதார்த்த வாழ்வியல்கள் எனை
தடுத்து நிறுத்திய காலங்கள் அவை!

இலக்கில்லாத என் தேடல்கள்
எத்தனை முறை ரணமாக்கியிருக்கும்
உன் சுயமரியாதையை என்பது
எனக்குப்புரிந்தும் புரியாமலிருந்தவன் நான்;

உனக்கும் எனக்குமான
இடைவெளி நிகழ்ந்த பின்னர்தான்
இத்தனை நாள் நீ அனுபவித்த
உணர்வுச்சிதறல்கள் எனக்குமிங்கே
உறைக்கத்தொடங்கியது;

கோபம், கர்வம், இயலாமை, தயக்கம் என
கலவையானதொரு உணர்வுக்கத்தியில்
அறுபட்டு கிழியத்தொடங்குகிறது
நமக்குள் பின்னிய உறவு நூலிழைகள்!

ஆரம்ப காரணங்கள்
நானாய் இருந்தபோதிலும்
இச்ஜென்ம வாழ்வில்
இதுதான் முடிவென்றும்
எதிர்வரும் ஜென்மத்திலேனும்
வார்த்தை மாலைகளை
தொடுக்கும் நேரத்தில்
வாய்மூடி மௌனித்து
காலம் கடத்தாமல் கைகோர்க்குமொரு
வாழ்க்கை நடத்தலாமென்று
என்னை நானே சமாதானம் செய்யும்
முன்னெடுப்புகள் எனக்குள்
நித்தம் நிரம்பி
யுத்தம் புரியும் நாள் இன்று!

உனக்கானதொரு வாழ்வில் நீயும்
எனக்கானதொரு வாழ்வில் நானும்
பயணிக்கும் சில வேளைகளில்
நமக்கானதொரு வாழ்வுக்கான
நம்மிலான உணர்வுகளது
தவறான சில புரிதல்களுடன்
முற்றும் நோக்கிப்பயணிப்பதும்கூட
ஒருவேளை இங்கே
வாழ்வியல் யதார்த்தம்தானோ?...



8 comments:

  1. // நம்மிலான உணர்வுகளது
    தவறான சில புரிதல்களுடன் //

    சரியான புரிதல்களுடன் யதார்த்தம் சரியாகட்டும்... வாழ்த்துக்கள்...

    ஆனால் கீழே உள்ளது தான் ஏன் என்று புரியவில்லை... யதார்த்தம் கண்டிப்பாக இல்லை...

    ஒரு தளத்தில் "தேவையான அளவு...." என்று உங்களின் பங்களிப்பை கண்டேன்... எப்படி என்றால் பல நண்பர்களுக்கும் சொல்வேன்... ஹா... ஹா...

    ReplyDelete
  2. "தேவையான அளவு...." தெரியாவிட்டால் : விளக்கம் அறிய தொடர்பு கொள்ள :

    dindiguldhanabalan@yahoo.com

    ReplyDelete
    Replies
    1. அட... தேவையான அளவு இங்கேயுமா...? இப்போது தான் பார்த்தேன்... ஹா... ஹா... மாறுவது சிரமம் தான்...!

      Delete
  3. நல்ல சொல்லாடல்

    ReplyDelete
  4. வணக்கம்
    கவிதையின் வரிகள் சிறப்பு...
    வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete

  6. கோபம், கர்வம், இயலாமை, தயக்கம் என
    கலவையானதொரு உணர்வுக்கத்தியில்
    அறுபட்டு கிழியத்தொடங்குகிறது
    நமக்குள் பின்னிய உறவு நூலிழைகள்!//

    அருமையான வரிகள், ரசித்தேன்...!

    ReplyDelete