SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Thursday, November 28, 2013

போட்டோ புடிக்கிறதுனா இதானா?...! - அனுபவப்படங்களுடன்!


முன்குறிப்பு – அனைத்து படங்களும் எவ்வித ஜூம் ஆஃப்ஷனையும் கையாளாமல் குளோசப் ஷாட்டில் எடுக்கப்பட்டவை என்பதால் படங்களை ரசிக்க விரும்புபவர்கள் க்ளிக் செய்து முழுத்திரையில் பாருங்கள்...!

இதன் முதல் பாகத்தை படிக்காதவர்கள் (பார்க்காதவர்கள்) ஒருமுறை க்ளிக்குங்கள்...!


ஏற்கனவே முதல் பாகத்திலேயே போட்டோகிராஃபி என்பது எளிதான விஷயம்தான் என்று காரணங்களோடு எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியை இன்னும் பல படங்களோடு தொடர்வதாயும் கூறியிருந்தேன்.

நாள்தோறும் நான் சந்திக்கும் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைப் போலவே... அவைகளை தவறாமல் போட்டோ பிடிக்கும் குணத்தினால் எனது தகவல் பெட்டகமும் நிரம்பிக்கொண்டிருக்கிறது.

போன பதிவில் கேமராவில் எடுத்த புகைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள்... ஒரு நல்ல போட்டோகிராஃபி என்பது தனியாக கற்றுக்கொண்டுதான் வரவேண்டும் என்பதில்லை. நம்மைச் சுற்றியிருக்கும் விஷயங்களை படம் எடுக்கும் மற்றொரு ஆவலான கண்களுடன் காணும்போது செல்போனில்கூட அழகான போட்டோக்களை எடுக்கலாம்.

நீங்கள் முதலில் காணப்போகும் சில படங்கள் அந்த ரகமே...

போனவருடக்கடைசியில் மார்கழிப்பனியில் காலை நடைபயிற்சியின்போது எனக்கு கிடைத்த அழகான வாய்ப்பு இது...! சென்னையின் புகை கக்கும் தொழிற்சாலைப்பகுதியான மணலிதான் எனது வசிப்பிடம். இந்தப்படம் எடுக்கப்பட்டதும் அதே தொழிற்சாலைப்பகுதியில்தான்...! பனிபடர்ந்த பின்புலத்தில் தொழிற்சாலைகள் தெரிந்தாலும் சூரிய உதயத்தின் அற்புதம் இயற்கையை எவ்வளவு அழகாக காட்டியிருக்கிறது. இந்தப்படம் எடுக்கப்பட்டது எனது சாதாரண செல்போன் கேமராவில்தான்!!!


இதேபோல ஏற்கனவே நான் மகாபலிபுரம் சென்ற பயணக்கட்டுரையான சென்னைக்கருகில் ஒரு சொர்க்கம்...  என்ற பதிவில் பகிர்ந்திருந்த ஒரு படமும் இந்த ரகம்தான். அதிகாலையில் மகாபலிபுர கடற்கரைக்குச் சென்றபோது கேமரா எடுத்துச்செல்ல மறந்துபோனேன். ஆனாலும் அந்த அதிகாலை ரம்யம் எனது செல்போனில்கூட அழகாய்த்தான் மலர்ந்தது...!


சில வருடங்களுக்கு முன்பு ஒகேனக்கல் சென்றபோது செல்போனில் எடுத்த படம் இது...!

கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்பு எனது ஆந்திர மாநில வாழ்க்கையின்போது ஒரு மாலைநேர வாக்கிங்கில் ஆகாயத்தை செல்போனுக்குள் அடைத்தது இது...!


அங்கேயே மற்றொரு மாலைநேரப்பொழுதில் வளர்ந்து உயர்ந்து நின்ற கற்றாழைச்செடியை வியந்துபோய் செல்போனிலேயே க்ளிக்கியது இது...!


அட... போட்டோகிராஃபி என்னங்க பெரிய போட்டோகிராஃபி?... நாம மனசு வச்சா வானவில்லைக்கூட செல்போனுக்குள்ளேயே அடைச்சிரலாம்... இப்பவாவது நம்புங்க... ‘’போட்டோகிராஃபி வெரி ஈஸி’’...


சரி... மனமிருந்தால் செல்போன்கூட சிறந்த கேமராதான் என்று பார்த்தாகிவிட்டது. அடுத்து சில தருணங்களில் கேமராவில் நான் எடுத்த சில படங்களைப்பார்க்கலாம்.

2012 ஜனவரி மாதம்... தலைநகர் டெல்லிக்கு ஒரு திடீர் பயணம். போகும் வழியில் ஆக்ராவில் இறங்கி பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று கூடவந்த நண்பர்கள் திடீர் திட்டம் வகுத்ததில் தாஜ்மகாலை முதன் முறை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது எனக்கு.

எல்லோரும் விழுந்து விழுந்து தாஜ்மகாலின் முன்பக்கத்தை கேமராவில் பதிந்து கொண்டிருக்க நான் ரசித்து எடுத்த படம்... தாஜ்மகாலைப் பார்த்துவிட்டு வெளியே வரும் சந்தர்ப்பத்தில் மரங்களுக்கு இடையில் தெரிந்த அழகிய காட்சிதான்...!

தாஜ்மகாலை இப்படியும் போட்டோ எடுக்கலாம்...!


அதே டெல்லி பயணத்தில் ஒரு தெருவோர நாயின் தாய்ப்பாசம் எனது கண்ணில்பட உடனே கேமராவில் அந்தத் தருணத்தையும் பதிந்து கொண்டேன். என்ன காரணமோ தெரியவில்லை... எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த படம் இது...!


சரி... இப்போது எனது ராஜபாளைய வாழ்க்கைக்கு வருவோம். நான் இருப்பது இப்போது வனத்தை ஒட்டிய பகுதி என்பதால் நிறைய உயிரினங்கள் எனது கேமராவுக்கு விருந்தளிக்கின்றன என்று ஏற்கனவே கூறியிருந்தேன்.

இங்கே நான் பகிரப்போகும் படங்கள் எந்தவித ஜூமிங்கும் செய்யப்படவில்லை. ஒன்லி கிராப் & ரீ-சைஸ்... அவ்வளவுதான். (என்னவொன்று?... படம் எடுக்கும்போது ஆடாமல், அசையாமல், இந்தப்பூச்சிகள் கலைந்துவிடாத வகையில் மிகப்பொறுமையாக கேமராவை கையாளவேண்டும்.)

முதல் படத்தில் நீங்கள் பார்க்கப்போவது ஒரு அழகான கலர்ஃபுல் வண்டினம். இதன் அறிவியல் ஆராய்ச்சிக்குப் போகாமல் இதன் வண்ணத்தை ரசிப்பதே அழகுதான் என்பது என் எண்ணம்...!இந்தப்படத்தில் இருப்பது சாணி வண்டு எனப்படும் உருண்டை உருட்டிச்செல்லும் வண்டுதான். ஆனால் அதுவே கேமராவின் குளோசப்பில் எத்தனை அழகு பாருங்கள்?...! (கூடவே போனஸாய் இதில் இன்னொரு உயிரினமும் இருப்பது கிராப் பண்ணியபிறகுதான் எனக்கே தெரிந்தது!!!)மேலே பார்த்த வண்டை படம் எடுக்கும்போது தற்செயலாக எனது கண்ணில் பட்டது வெறும் 4mmக்கும் குறைவுள்ள இந்த சிறிய ஸ்பைடர். சரி... எதற்கும் க்ளிக்கிக்கொள்ளலாம் என்று ரெண்டு படங்களை எடுத்தேன். கடைசியில் கிராப் & ரீ-சைஸ்க்கு பிறகு இதன் தரம்... அப்பப்பா... என் கண்களை என்னாலேயே நம்பமுடியவில்லை...!


 இதேபோல மற்றொரு அழகான படம்... 8mmக்கும் குறைவான நீளம் கொண்ட இந்த சிறியவகை வண்டினம். நீங்களும் இதை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்...!


அடுத்து நாம் பார்க்கப்போவதும் வண்டினம்தான். முதல் நாள் நல்ல தூக்கத்தில் இருந்த இந்த வண்டு சாதாரண ஒரு புல்லில் பற்றிக்கொண்டு தூங்கும் அழகு கேமராவில் என்ன அழகாய் வந்திருக்கிறது பாருங்கள்?...


அடுத்த நாள் தூக்கம் கலைந்த அதே இன வண்டு...


அடுத்து என்னைக் கவர்ந்தது... இந்த அழகான கலர்ஃபுல் வண்டும், துளசிச்செடியில் அது அமர்ந்திருக்கம்போது எடுத்த படத்தின் குளோசப் பிரம்மாண்டமும்தான்!... (படத்தை க்ளிக் செய்து முழுத்திரையில் பார்த்தால்தான் ரசிக்கமுடியும்...!)


அதே வண்டு தேன்குடிக்கும் மற்றொரு குளோசப்பில்...தகவல் பெட்டகத்தின் நீளம் அதிகம் என்பதால் தொடர்ச்சியை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

(அடுத்த பகுதி – படமெடுக்கும் பாம்பை படமெடுப்பது எப்படி? அட... நல்லா வைக்குறாய்ங்கய்யா தலைப்பு!!!)

பின்குறிப்பு – படங்கள் அனைத்தும் சொந்தப்படைப்பு!

என்ஜாய் மக்களே...மீண்டும் சந்திப்போம்!t

21 comments:

 1. நாய்ப்பாசம் எனக்கும் ரொம்பவே பிடிச்சுருக்கு.

  மற்ற படங்களும் அருமையே!

  இனிய பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது ரசனைக்கும் பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

   Delete
 2. வணக்கம்
  படங்கள் அனைத்து அருமை தொகுப்பு அருமை தேடலுக்கு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. தங்களது கருத்திற்கு(!) நன்றி...

  ReplyDelete
 4. மிகவும் சிறப்பான பதிவு நண்பரே... அழகிய படங்கள்..தங்கள் ரசனைக்கு மனமார்ந்த பாராட்டுகள்... தா(நா)ய்ப்பாசம், கற்றாழை அவ்வளவு உயரமா..?! காலை நேர காட்சி மனதைக்கவர்ந்தது.. விளக்கியவிதம்.. அனைத்தும் சிறப்பு..தொடரட்டும். வாழ்த்துகள்.. :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது கருத்துக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றிகள்...

   Delete
 5. நிச்சயம் நீங்கள் சொன்னதனால்தான்
  நீங்கள் எடுத்த புகைப்படம் என அறிந்தோம்
  இல்லையெனில் மிகச் சிறந்த புகைப்படக் கலைஞர்
  எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளீர்கள் எனத்தான்
  நினைத்திருப்போம்
  படங்கள் அத்தனை சிறப்பு
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களைப்போன்றோர்களின் ஆசீர்வாதம் என்னைப்போன்றோரை இன்னும் மேம்படுத்தும்....
   மனமார்ந்த நன்றிகள்...

   Delete
 6. அனைத்தும் அட்டகாசமான படங்கள்...

  சாதாரண செல்போன் கேமராவில் எடுத்ததா...? அது என்ன செல்போன்...?

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. முதல் இரண்டு படங்களும் சாம்சங் S5360... ஒகேனக்கல் அருவி நோக்கியா N70 மற்றும் அடுத்தடுத்த படங்கள் Motorolo மற்றும் சைனா செட்...

   தங்களது தொடர்ந்த ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகள் தலைவா...!

   Delete
 7. Replies
  1. தங்களது ரசனைக்கும், தொடர்ந்த ஆதரவுக்கும் மிக்க நன்றி நண்பா...

   Delete
 8. அனைத்து படங்களும் மிகவும் அருமை.. என்ன கேமரா பயன்படுத்துகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள்லாமா.... அப்படியே மொபைலும்

  ReplyDelete
  Replies
  1. முதல் இரண்டு படங்களும் சாம்சங் S5360... ஒகேனக்கல் அருவி நோக்கியா N70 மற்றும் அடுத்தடுத்த படங்கள் Motorolo மற்றும் சைனா செட்...

   அடுத்து கேமரா.... சோனி சைபர் ஷாட் DSC W570...

   தகவல் போதுமா?... ;-)...

   கருத்துக்கு மிக்க நன்றி...

   Delete
 9. எல்லா படங்களுமே அவ்வளவு சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. தங்களது கருத்துக்கு மிக்க நன்றி...

   Delete
 10. வானவில்லை நானும் மொபைலில் படம் எடுத்திருந்தேன். வானவில்லை முழுமையாக சில முயற்சிகளுக்கு பிறகு அரைவட்டத்தை பிடித்தே விட்டேன். வலைச்சர அறிமுகம் பார்க்கவும் http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_28.html

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கும், வலைச்சர அறிமுகத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

   Delete
 11. அற்புதமான படங்கள்...
  ஒரு பாலுமகேந்திரா உருவாகிக் கொண்டிருக்கிறார்...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete