SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Wednesday, November 20, 2013

க்ளிக் + கிராப் = ஃபோட்டோகிராஃபி - அட இம்புட்டுதானா?!!!

முன்குறிப்பு - இந்தப்பதிவில் இருக்கும் ஒவ்வொரு படங்களையும் க்ளிக் செய்து முழுத்திரையில் பார்த்தீர்களேயானால் அதன் அழகை ரசிக்கலாம்...!!!

பதிவுலகம் பக்கம் வந்து வெகுநாட்களாகிவிட்டது. வேலை நிமித்தமாக சென்னை வாசத்திலிருந்து மாறி, தற்போது தென்தமிழகத்தின் ராஜபாளையம் அருகில் இருக்கும் ஒரு சிறு கிராமத்தில் பேச்சிலர் வாழ்க்கை...!

குடும்பஸ்தனாக இருக்கும் ஒருவன் பேச்சிலர் வாழ்க்கை வாழ மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்போது கேட்கவா வேண்டும்... சில பல பார்ட்டிகளுக்கு நேரம் ஒதுக்குவதிலேயே வேலை போக மீதியிருக்கும் மாலைப்பொழுது கழிந்துபோகிறது.

ப்ராஜெக்ட் சைட் அமைந்திருப்பது மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தின் வனப்பகுதி எல்லையில்... ராஜபாளையத்திலிருந்து குற்றாலம் செல்லும் வழியில் காட்டுக்குள் பிரியும் ஒரு கிளைச்சாலையில் கிட்டத்தட்ட 13 கி.மீ தூரம் பயணம்...

தூரத்தில் மனிதர்கள் போகமுடியாத இடத்தில் கொட்டும் அருவி தெரிகிறதா?...

பெரும்பாலும் மேகம் சூழ்ந்திருக்கும் மலைகள் ஒருசில நேரத்தில் வெயிலுடன் ரம்மியமாய் காட்சியளிக்கின்றன... எங்கள் வாகனத்தைத்தவிர இங்கே காற்றை மாசுபடுத்த எந்த வாகனமோ, தொழிற்சாலையோ இல்லை என்பதால் அடுத்த சில மாதங்களுக்கு சுத்தமான காற்றை சுவாசிக்கும் பாக்கியம் எனக்கு!

மான்களும், மயில்களும் சர்வசாதாரணமாக கூட்டம் கூட்டமாக எங்கள் சைட்டுக்குள்ளேயே சுற்றித்திரிகின்றன. வேலை முழு வேகமெடுக்கும்போது பணியாளர்களின் அதிகரித்த எண்ணிக்கை நடமாட்டத்தில் இவை சைட்டுக்குள் வருவதை குறைத்துக்கொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கிறேன்... இந்த காட்டுப்பகுதியில் சிறுத்தைகளும், யானைகளும் இருப்பதாக சந்தித்த ரேஞ்சர் ஒருவர் கூறினாலும் இதுவரையிலும் எங்கள் கண்ணில் எதுவும் தட்டுப்படவில்லை...!

ஏற்கனவே தொடர்ந்து பலவித உயிர்களைப்பற்றி அலசி, ஆராய்ந்து தகவல் சேகரித்து எழுதிவந்த எனக்கு, எனது கேமராவிலேயே அதேபோன்ற அற்புத காட்சிகள் பல கிடைத்தன... அதையெல்லாம் உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் எண்ணம்தான் இந்தப்பதிவு...!

சரி... கட்டுரைக்கு வருவோம்... நான் ஒரு ஃப்ரோபஷனல் ஃபோட்டோகிராஃபர் கிடையாது. எனக்குத்தெரிந்து நான் பிளஸ் ஒன் படிக்கும்போது(1994) வீடியோ கேசட்போல இருக்கும் ஒரு கேமராவை ஒரு பள்ளிச்சுற்றுலா சென்றிருந்தபோது வாங்கினேன். அதுதான் எனது வாழ்வில் கேமராவை நான் முதன் முதலில் கையாண்டது.

அதற்குப்பிறகு இன்ஜினியரிங் படித்த காலத்தில் கல்லூரி நண்பர்கள் பலரிடமும் இருந்த கோடக் கம்பெனியின் பேசிக் மாடல் கேமரா மிகப்பிரபலம்... என்னிடம் அப்போது கேமரா இல்லையென்றாலும் நண்பர்களிடம் ஓசி வாங்கி அதற்கு பிலிம் ரோல் வாங்கிப்போட்டு கல்லூரி வாழ்க்கையின் பல தருணங்களை புகைப்படத்தில் சேகரித்ததுண்டு.

அப்போதெல்லாம் ஒரு போட்டோ எடுப்பதென்றால் அது எப்படி வந்திருக்கிறது என்பதை அறிய பிலிம் ரோலில் இருக்கும் முப்பத்தாறு போட்டோக்களையும் எடுத்து, அதற்குப்பிறகு அதை டெவலப்பிற்கு கடைக்குக்கொண்டு சென்று நெகட்டிவாக்கி, அதை உற்று உற்று பார்த்து அதில் எது நன்றாகயிருக்கிறதோ அதை மட்டும் பிரிண்ட் போட்டு வாங்குவேன்.

ஆனால் இப்போது?... டெக்னாலஜி இஸ் வெரி மச் இம்ப்ரூவ்டு...!!! J

எல்லாம் டிஜிட்டல் மயம்... ஒரு போட்டோ எடுப்பதற்கு நீங்கள் எத்தனைமுறை வேண்டுமானாலும் க்ளிக்கலாம். உங்களுக்கு வேண்டியதை மட்டும் வைத்துக்கொண்டு சரியாக வராத படங்களை டெலிட் செய்து கொள்ளலாம். இதில் எந்தவித நஷ்டக்கணக்கும் இல்லை என்பது அறிவியல் வளர்ச்சி நமக்களித்த கூடுதல் உபயம்.

2007ல் சோனி சைபர் ஷாட் டிஜிட்டல் கேமராவின் பேசிக் மாடல் ஒன்று சொந்த உபயோகத்திற்காக வாங்கினேன். நான் பகிரப்போகும் பெரும்பாலான படங்கள் அதில் எடுத்தவைதான் என்றாலும் சில சந்தர்ப்பங்களில் செல்போனில் எடுத்த படங்களும் ஒருசில இதில் அடக்கம்...

நான் ஏற்கனவே கூறியதுபோல நான் ஒன்றும் போட்டோகிராஃபி வல்லுனர் இல்லை என்றாலும் எனக்குத்தெரிந்து இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒரு அழகான போட்டோ எடுப்பதற்க்கு நாம் வல்லுனராக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்றே உணர்கிறேன். ஒரு அழகான விஷயத்தை புகைப்படமாக்க ஒரு பேசிக் மாடல் ஆட்டோ ஷூம் கேமரா மற்றும் டைமிங், க்ளிக், கிராப் இது மட்டுமே போதும் என்றுதான் தோன்றுகிறது.

மூன்று வாரங்களுக்கு முன்பு எனது சென்னை இல்லத்தின் தோட்டத்தில் எனக்கு காட்சியளித்த சில உயிர்களை புகைப்படமாக்கியிருக்கிறேன். அதை முதலில் பாருங்கள்... அதன் பிறகு தொடர்ந்து பேசலாம்...

கொசுக்களில் தோட்டத்தில் திரியும் ஒருவகை கலர்ஃபுல் கொசுவை நம்மில் பெரும்பாலானோர் பார்த்திருப்போம். எங்கள் வீட்டு வாழை மரத்தின் இலைகளில் ஒரு காலைப்பொழுதில் சுற்றித்திரிந்த அந்தக்கொசுக்களை பார்த்ததும் ஏற்கனவே எழுதிய கடைசி கட்டுரைகளின் தாக்கத்தில் இருந்த என் மனதில் இதை போட்டோ எடுத்தால் என்ன என்று தோன்ற கேமராவை எடுத்துவந்து பொறுமையாக அந்தக்கொசுக்களை இலையில் அமரவிட்டு அவைகள் கலைந்துவிடாமல் இருக்க சத்தம் எழுப்பாமல் மெல்ல சில படங்களை எடுத்தேன். அடுத்து அந்தப்படங்களை லேப்டாப்பில் போட்டு வேண்டாத படங்களை டெலிட் செய்துவிட்டு நன்றாக வந்த படங்களை விண்டோஸ் பெயிண்ட்டில் வெறுமனே கிராப் மட்டும் செய்ததில், படங்களின் தரம் என்னை வியப்புக்குள்ளாக்கியது.

கிராப் செய்வதற்கு முன் ஒரிஜினல் படம்...

கிராப் செய்த பிறகு...

எல்லாப்படங்களையும் இதுபோல ஒரிஜினாலிட்டியோடு சேர்த்து கொடுக்கமுடியாது என்பதால் இன்னும் சில கிராப் செய்யப்பட்ட படங்களை மட்டும் பாருங்கள்...இதேபோல எனது வீட்டுத்தோட்டத்தில் எடுத்த இன்னும் சில உயிரினங்களின் கிராப் செய்யப்பட்ட படங்களை பாருங்கள்... இதில் நான் பகிரும் எந்தப்படங்களும் கிராப் மற்றும் ரீ-சைஸ் என்ற ஒரு ஆப்ஷனைத்தவிர வேறெந்த டச்-அப் வேலைகளும் செய்யப்படாதது என்பது குறிப்பிடத்தக்கது...!

பப்பாளி மரத்தில் அமர்ந்த பிளாக் & வொய்ட் ஈ...

செம்பருத்தி இலையில் அமர்ந்த கலர்ஃபுல் ஈ...


அதே போன்றதொரு கலர்ஃபுல் ஈ இன்னும் சில க்ளிக்குகளில்...


இப்போது தொடர்ந்து பேசலாம்... என்னடா இவன் பெரிய பு___கி மாதிரி போட்டோகிராஃபி ஒன்னுமே இல்லை என்று வாயைக்கிழிக்கிறானே என்ற எண்ணம் தோன்றியவர்கள், எனது கட்டுரையை மீண்டும் ஒருமுறை ஆரம்பத்தில் இருந்து படிக்கலாம்...!

சரி... இதேபோல நான் க்ளிக்கிய இன்னும் சில படங்களையும் பார்க்கலாம். நாம் பார்க்கும் இந்த ரோஜாப்பூ படம் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்பு ஆந்திராவில் இருக்கும் எனது நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது பனிபொழிந்த ஒரு காலைப்பொழுதில் எடுத்த படம். இதில் முதல் படம் எவ்வித எடிட்டிங்கும் செய்யப்படவில்லை.

அவரின் வீட்டுத்தோட்டத்தில் எடுத்து கிராப் செய்த இன்னும் சில ரோஜாப்பூக்களின் படங்களைப்பாருங்கள்...

கிராப் செய்யும் முன்... ஒரிஜினல்...


கிராப் & ரீ-சைஸ் செய்த பிறகு...


இதேபோல எண்ணற்ற தருணங்களில் நான் க்ளிக்கிய பல படங்களை தொடர்ந்து இதன் அடுத்த பாகத்தில் அறிமுகப்படுத்துகிறேன். அதற்கு முன் ஒரு சிறு முன்னோட்டம்...

சென்னையின் வீட்டுத்தோட்டத்திலேயே கொசுவையும், ஈயையும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்த நான் இப்போது இருப்பது இயற்கை நிரம்பிய வனப்பகுதியின் ஓரத்தில்...! விடுவேனா என்ன?... இந்த ராஜபாளையம் வாழ்க்கை எனது கேமராவுக்கு எண்ணற்ற பரிசுகளை அள்ளிக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. இன்னும் ஆறு மாதங்களுக்கு இங்கேதான் வாழ்க்கை என்பதால் எனது தகவல் பெட்டகம் இன்னமும் நிரம்பும் என்று ஆவலோடு காத்திருக்கிறேன்...!

பல அற்புத படங்களை உங்களுக்கு அடுத்த பாகத்தில் அறிமுகப்படுத்துவதாகக் கூறினாலும் ஒரே ஒரு சேம்பிள் இங்கே...!

ஈயை விட சிறிய ஒரு பூச்சியினம்... போட்டோவுக்காக அலைந்து கொண்டிருக்கும் எனது கண்களில் எளிதாக மாட்டியது. சிறிய செடியின் இலைகளில் பயணித்த இதை சில க்ளிக்குகள் எடுத்துக்கொண்டேன். இரவு தங்கும் அறைக்கு வந்ததும் லேப்டாப்பில் போட்டு கிராப் பண்ணி பார்க்கும்போதுதான் அந்த ஆச்சர்யம் தெரிந்தது.

இயற்கை இதன் முதுகில் ஒளிவட்டத்துடன் கூடிய சிவலிங்கத்தை போன்ற அமைப்பைக்கொடுத்திருந்தது எனக்கு அடக்கமாட்டாத ஆச்சர்யம்தான்...!

நீங்களும் பார்த்து(தரிசித்து) மகிழுங்கள்...!
இன்னும் பல அற்புதங்கள் உங்களுக்காக எனது தகவல் சேமிப்பில் காத்திருக்கிறது.

மீண்டும் சந்திப்போம்...!

பின்குறிப்பு:- இந்தப்பதிவில் இருக்கும் படங்கள் முழுவதும் எனது சொந்த உழைப்புதான்!!! அருவியைக்காட்டிய படத்தைத்தவிர மீதியனைத்தும் ஆப்ட்டிக்கல் மற்றும் டிஜிட்டல் ஷூம் பயன்படுத்தாமல் எடுக்கப்பட்டவையே..!

8 comments:

 1. //மான்களும், மயில்களும் சர்வசாதாரணமாக கூட்டம் கூட்டமாக எங்கள் சைட்டுக்குள்ளேயே சுற்றித்திரிகின்றன.//

  திருத்தம் - நீங்கள் தான் அவர்கள் சைட்டிற்குள் சுற்றித்திரிகின்றீர்கள் :)


  Nice Photos ....!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் நண்பா... Thanks for your comment!

   Delete
 2. அட... ராஜபாளையம்... படித்த ஊர்...!

  முழுத்திரையில் படங்கள் அட்டகாசம்...

  கைவசம் பல வித்தைகள் உள்ளது... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் ஆதரவுக்கு என் நன்றிகள் தலைவா...

   Delete
 3. வணக்கம்
  அருமையான தொகுப்பு மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. படங்கள் அனைத்தும் அருமை....
  தொடர்ந்து பதியுங்கள்... ரசிக்கிறோம்.

  ReplyDelete
 5. இறுதி இலையில் அமர்ந்திருக்கின்ற வண்டில் - ஓம், வேல், சிவலிங்கம், சிவனின் உருவம், முனிவரின் தவக்கோலம் என எல்லாம் தெரிகிறது..

  ReplyDelete
 6. அற்புத ரசனைக்காரர் நீங்கள்

  ReplyDelete