SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Friday, October 18, 2013

வெள்ளை காக்காவும், வெள்ளை யானையும், விநோத அறிவியலும் - வீடியோ மற்றும் படங்களுடன்!


காக்கா என்றாலே கருமை நிறத்துக்கு உவமைப்படுத்தும் நமது கலாச்சாரத்தில் அதன் நிறத்தால்தான் அதை சனீஷ்வர பகவானின் வாகனமாய் வணங்கிவரும் நிகழ்வுகள் நடக்கிறது. ஆனால் அந்தக்காக்கை இனத்திலேயே வெள்ளை காக்கா என்று ஒன்று இருந்தால்?....!!!

எனது சிறுவயதில் அக்கம் பக்கத்து வீடுகளில் குழந்தைக்கு சோறு ஊட்டும் அம்மாக்கள் பலரும் ‘’அதோ பாரு வெள்ளைக்காக்கா...’’ என்று ஏமாற்றுவதைப்பார்த்திருக்கிறேன். கொஞ்சம் வளர்ந்த காலங்களில்கூட யாராவது பொய் சொல்வதை சுட்டிக்காட்ட விரும்பும் நேரத்தில் பலரும் ‘’அதோ பாரு வெள்ளைக்காக்கா...’’ என்ற வார்த்தையை உபயோகிப்பதையும் கவனித்திருக்கிறேன்.

இயற்கையின் அறிவியல் அளப்பரிய தகவல்களைக் கொண்டது என்றாலும்கூட இதுவரையிலும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள் இவ்வுலகில் நிறைந்திருக்கும் இயற்கையின் படைப்புகளில் இருபது விழுக்காடுகூட இருக்காது என்பதும் நிதர்சனமான உண்மைதான்.

அப்படிப்பட்டதொரு அறிவியல் விநோதமாய் இதுவரையிலும் நம்மில் பலரும் பார்த்திராத பல அற்புத உயிரினங்களை பார்த்து ரசித்து தெரிந்துகொள்ளப்போகும் தொகுப்புதான் இந்தப்பதிவு...!

வெள்ளை காக்கா...

முதன் முதலில் நாம் பார்க்கவேண்டியது நம் உலகில் வெள்ளை காக்கா என்று ஒன்று இருக்கிறதா?... இல்லையா?... என்பதை!

முதலில் உலகின் பல பகுதிகளிலும் வெள்ளை காக்கா இருப்பதை உணர்த்தும் இந்தப்படங்களை பாருங்கள். இவை எதுவுமே எந்தவித சாஃப்ட்வேர் ஏமாற்றுவேலையும் இல்லாத ஒரிஜினல் படங்கள்தான்.

இந்தியாவில் கேரளாவில் வெள்ளை காக்கா பாருங்கள்...!
இந்தியாவில் ஒரிஸ்ஸாவில் வெள்ளை காக்கா பாருங்கள்...!இந்த வெள்ளை காக்காவுக்கு அறிவியல் வைத்திருக்கும் பெயர் அல்பினோ பறவை அல்லது அல்பினோ காக்கா...!

அதாவது... அல்பினிசம் என்ற நிறம் வெளுக்கும் நோயினால்தான் இந்த காக்காக்கள் வெண்மை நிறமாக மாறியிருப்பதாக அறிவியல் கூறுகிறது. அல்பினிசம் நோயினால் பாதிக்கப்பட்ட இன்னும் சில உயிரினங்களின் படங்களையும் பாருங்கள்...


அது நோயாக இருந்தாலும் சரி... இல்லை இயற்கையாக இருந்தாலும் சரி... எது எப்படியோ... வெள்ளை காக்கா என்று ஒன்று இருப்பது ரசிக்கும்படியான ஆச்சர்ய உண்மைதான்...!

வெள்ளை யானை...

தாய்லாந்து, பர்மா, கம்போடியா போன்ற நாடுகளின் வரலாறுகளில் வெள்ளை யானை ஒரு தெய்வ அடையாளமாக பார்க்கப்படும் கதைகள் ஏராளமிருந்தாலும்கூட, நமது இந்திய இதிகாசக்கதைகளிலும் தேவர்களின் தலைவனான இந்திரனிடம் வெள்ளை யானை இருப்பதாக தகவல் உண்டு.

சரி... உண்மையிலேயே வெள்ளை யானை என்று ஒன்று இருக்கிறதா?... புலிகளில்கூட வெள்ளைப்புலி என்று ஒன்று இருப்பதை பலரும் பார்த்திருப்போம். யானையில்?...யானைகளிலும் வெள்ளை யானை என்ற ஒன்று இருக்கிறது. ஆனால் இதுவும் அல்பினிசம் நோயால் நிறம் வெளுத்த யானைகளாகவே அறிவியல் கூறுகிறது. என்னதான் இருந்தாலும் இந்த கருப்பு யானைகளுக்கு நடுவே திடீரென வரும் இந்த வெள்ளை யானைகள் ஒரு அற்புதக்காட்சியாகவே தோன்றுகிறது இந்த வீடியோவில்... ஒருமுறை பார்த்து மெய்சிலிருங்கள்...!!!
வெள்ளைத்திமிங்கலம்...

பெலுகா திமிங்கலம் என்று அழைக்கப்படும் இந்த வகைத்திமிங்கலங்கள் அல்பினோ நோய் இல்லாமல் இயற்கையாகவே வெள்ளை நிற தேவதை போல அமைந்திருப்பது ஆறுதல் தரும் விஷயம்தான்...

பின்க் டால்பின்...

டால்பின்களில் பின்க் நிறமாக கண்டறியப்பட்ட இந்த டால்பின்கள் 2007ம் ஆண்டு மெக்சிகோவின் லூஸியானாவில் இருக்கும் Calcasieu ஏரியில் எடுக்கப்பட்ட படங்கள். இதுவும்கூட அல்பினிசம் நோயால் நிறம்மாறிய அல்பினோ டால்பின்கள் என்றுதான் அறிவியல் கூறுகிறது.


ஹாங்காங்கில் எடுக்கப்பட்ட பின்க் டால்பின் படம்...


விநோத அறிவியல்...

இயற்கையின் படைப்பில் சில வித்தியாசங்கள் அவ்வப்போது நிகழ்வதுண்டு. அப்படிப்பட்ட வித்தியாசங்கள் மனிதனுக்கு அமானுஷ்ய விஷயமாகத் தோன்றினாலும் அதில் எந்தவித அமானுஷ்யமும் இல்லை... அது சில உயிர் தோன்றலில் நிகழ்ந்த அறிவியல் பிறழ்வுகள் மட்டும்தான் என்பதே அதன் உண்மை பதில்.

சீனாவில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் வளர்க்கப்பட்ட ஒரு பன்றி ஈன்ற ஐந்து குட்டிகளில் ஒன்று மட்டும் வேற்றுக்கிரகவாசிபோல இந்த வித்தியாசத் தோற்றத்துடன் பிறந்து பார்ப்பவர்களை பயமுறுத்தும் ரகமாய் இருப்பதில் எந்தவித அமானுஷ்யமும் இல்லை என்பதே உண்மை.சீனாவில் வெகு அண்மையில் நடந்த மற்றொரு விஷயம்... ஏழு கால்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி!


மனிதர்கள் சில நேரங்களில் ஆறு விரல்களுடன் பிறப்பது போல இதுவும் ஒரு சாதாரணமான விஷயம்தான் என்றும் இந்த ஆட்டுக்குட்டி தொடர்ந்து உயிர்வாழ சாத்தியமில்லை என்றும் கால்நடை மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டபோதிலும் மனிதர்களால் இதுவொரு அமானுஷ்ய விஷயமாகவே ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது!

கடல்... இது தன்னுள் கொண்டிருக்கும் எண்ணற்ற அபூர்வங்களை மனிதர்களால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் முழுவதுமாக கண்டறியமுடியாது என்பது நிதர்சனம். புதிது புதிதாக கடலில் கண்டறியப்படும் உயிரினங்களும், அவ்வப்போது கடற்கரையில் ஒதுங்கும் உயிரற்ற உடல்களும் மனிதர்களிடையே அவ்வப்போது வேற்றுக்கிரக உயிர்கள் என்று பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்தான்...!

2008ம் ஆண்டு நியூயார்க்கின் மான்டெக் நகர கடற்கரையில் ஒதுங்கிய ஒரு உயிரற்ற உடல் அக்காலக்கட்டத்தில் மீடியாக்களில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பலவித ஆராய்ச்சிகளின் முடிவில் இது ஒரு ராக்கூன் என்றும், இதுவொரு நாய் என்றும், ஆடு என்றும், கடல் ஆமை என்றும் விதவிதமான முடிவுகள் அறிவிக்கப்பட்டாலும்கூட அது எல்லாவற்றையும் பல், உடல் அமைப்பு, கால்களின் நீளம் என்று ஒவ்வொரு காரணிகளின் அடிப்படையில் மறுத்த ஆதாரப்பூர்வ அறிவியல் கூற்றுகளும் நிறைந்திருக்கிறது.


மொத்தத்தில் கரை ஒதுங்கிய இந்த உயிரற்ற உடல் Montauk Monster என்ற பெயரில் ஒரு ஆச்சர்யமான விவாதப்பொருளாகவே மனிதர்களிடையே பரவியிருக்கிறது.

நரக மீன் என்று அழைக்கப்படும் இந்தப்படம்கூட கரை ஒதுங்கிய உயிரினமாகவே பல தளங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், இது கரை ஒதுங்கிய இடம் மற்றும் மேலதிக தகவல்கள் எங்கும் இல்லை. இருந்தாலும்கூட இந்தப்படம் உணர்த்தும் அமானுஷ்யம் மனிதர்களுக்கு எப்போதும் சுவாரஷ்யம்தான்.
Hell Fish...


இன்னும் பல அற்புதங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த நினைத்தாலும் சப்ஜெக்டிவ் விஷயம் அடிப்படையில் அவற்றை தனிப்பதிவாக வெகு விரைவிலேயே இன்னமும் பல அற்புத உயிரினங்களோடு உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்...

மீண்டும் சந்திப்போம்...!

நன்றி – இந்த தகவல்களுக்காகவும், படங்களுக்காகவும் நான் நுழைந்த பல்வேறு இணையதளங்கள்...!

17 comments:

 1. வணக்கம்

  பார்க்க முடியாத அதிசயங்களை நீங்கள் தொகுத்து வழங்கியமைக்கு பாராட்டுக்கள்...தேடல் அருமை..வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மதுரை எக்ஸ்பிரஸை முந்திய உங்கள் வேகத்தை கண்டு மலைத்து போனேன்... (தனபாலன் சார்... இத இப்புடியே வுட்றக்கூடாது சார்...!)

   Delete
 2. வியக்க வைக்கிறது... ஆனால் உண்மை... வேற்றுக்கிரகவாசி - யம்மாடி...! வெள்ளை வெள்ளையாக படங்கள் மனதை கொள்ளை கொண்டன...


  தகவல் சேகரிப்பிற்கும், அருமையாக தொகுத்து வழங்கியமைக்கும் நன்றி... பாராட்டுக்கள்...

  ReplyDelete
  Replies
  1. உங்களின் மேலான பாராட்டுக்கும். தொடர்ந்த ஊக்கத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் தலைவா...

   Delete
 3. அனைத்துமே அதிசயங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சார்...

   Delete
 4. என்னதான் வெள்ளை வண்ண உயிரினங்கள் அதிசயமாவே இருந்தாலும் கருப்பாய் பார்த்து பழகிய கண்களுக்கு இது எப்படியோ இருக்கு!!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்... இருந்தாலும் இது தெரிந்து கொள்ளவேண்டிய தகவல் என்று நம்புகிறேன்...

   Delete
 5. அதியசங்கள் பற்றி பகர்ந்ததிற்கு நன்றி.. நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது கருத்திற்கும் நன்றி... நன்றி...

   Delete
 6. நாங்கள் சில நிமிடங்கள் மட்டுமே செலவிட்டு அரிய தகவல்களை அறிந்துகொள்வதற்காக, தாங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிக்கும்,கடின உழைப்பிற்கும் பாராட்டுக்கள்.நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது பாராட்டிற்கு மனமார்ந்த நன்றிகள் சுஜி...

   Delete
 7. அரிய அதிசயப் படங்கள்
  அருமையான பதிவாக்கி
  அனைவரும் அறியத் தந்தமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் ஐயா...

   Delete
 8. அரிய தகவல்கள். அபூர்வ படங்கள்.
  கடுமையாக உழைத்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete