உலக வரலாறுகளில் கொடுங்கோலன் என்றால் பெரும்பாலான நாடுகளின்
சாமான்ய மக்களுக்கு நியாபகம் வருவது ஹிட்லர்தான்...
ஆனால் அந்த லிஸ்ட் மிக மிக நீண்டது என்பது வரலாற்று ஆய்வாளர்களுக்கும்,
வரலாறுகளின் மீது விருப்பம் கொண்டவர்களுக்கும் தெரிந்திருக்கும். ஹிட்லர், முசோலினி,
இடி அமீன், கடாஃபி, சதாம் உசேன், ராஜபக்சே என நீளும் இந்த லிஸ்ட்டில் சிலவற்றில் உண்மையும்,
சிலவற்றில் வல்லவன் வகுத்ததுதான் நியாயம் எனும் ஜோடனைகளுமாய் பதியப்பட்டதுதான் வரலாறு...
நான் ஏற்கனவே கூறியதுபோல வரலாற்றுக்கு எப்போதுமே இரண்டு முகங்கள்
உண்டு.
ஒன்று பெரும்பான்மை சமூகத்தால் வரலாற்றில் நிலைநிறுத்தப்பட்ட
அவர்களது பார்வை... (இதைத்தான் வல்லான் வகுத்தது எனக்கூறுகிறேன்…!). இதுதான் பெரும்பாலும்
உலகத்துக்கும், எதிர்கால சந்ததியினருக்குமான செய்தியாய் வரலாற்றில் நிறைந்துகிடக்கும்.
மற்றொன்று ஒவ்வொரு வரலாற்று நிகழ்வுகளின் மறைக்கப்பட்ட, நசுக்கப்பட்ட...
பெரும்பான்மை சமூகத்தினரால் மக்களிடம் எடுத்து செல்லப்பட விரும்பாத இன்னொரு பரிமாணம்...
என்னைக்கேட்டால் கொடுங்கோலன் என்று வகுக்க விரும்பினால் அது
சொந்த மக்களை கொன்று குவிக்கும் ஆட்சியாளர்க்கு மட்டுமான பட்டப்பெயர் அல்ல…
பல்வேறு காரணிகளை முகமூடிகளாக்கி, உலகில் மனித உயிர்களை கொன்று
குவிக்க உடந்தையாய் இருக்கும் மற்றும் கொன்று குவிக்கும் எந்தவொரு ஆட்சியாளனும் கொடுங்கோலன்தான்...
இப்படியொரு பார்வையில் பார்த்தால் அமெரிக்க ஜனாதிபதிகளின் வரிசையில் பெரும்பாலானோர்
இந்ந கொடுங்கோலன் வகையில்தான் அடங்குவர் என்பது நிதர்சனம்...!
ஹிட்லர்... இவர் தனது சொந்தநாட்டிலேயே குறிப்பிட்ட இனமக்களுக்கு
எதிரான தனது துவேசத்தைக்காட்டி லட்சக்கணக்கான மக்களைக் கொன்றதால் மட்டுமே கொடுங்கோலன்
என்று உலகிற்கு அடையாளமானார் என்றால் அது மிகப்பெரிய தவறு...
ஹிட்லரின் உலகநாடுகளை ஆக்கிரமிக்கும் எண்ணமும், அதைத்தொடர்ந்த
இரண்டாம் உலகப்போரும், உலகநாடுகளுக்கு அது ஏற்படுத்திய தலைவலியும்தான் ஹிட்லரை வரலாற்றில்
கொடுங்கோலனாய் நிறுத்திய முக்கியக்காரணி...
ஹிட்லர் சொந்த மக்களைக் கொன்றவிதத்தில் நிச்சயம் கொடுங்கோலன்தான்
என்பதில் எந்தவித சந்தேகமோ, இரண்டாம் கருத்தோ எனக்கில்லை...
ஆனால் ஒருவேளை ஹிட்லர் வல்லமை பொருந்திய நாடுகளை எதிர்க்காமல்,
அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும், சோவியத் யூனியனுக்கும் ஜால்ரா தட்டியிருந்தால்...
தனது இனஒழிப்பு வேலைகளை வெளிப்படையாக செய்யாமல், நல்லவன் முகமூடியில் நச்சுப்பாம்பாய் செய்திருந்தால்...
அவர் கொடுங்கோலனாக வரலாற்றில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பாரா?...என்பதுதான்
என் சந்தேகம்...!
(மற்றபடி ஸ்டாலின் என்றதும் நீங்கள் ஏதோ தமிழகத்தை நினைத்துக்கொண்டு
கட்டுரைக்குள் புகுந்திருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல...!)
இன்றளவுக்கும் பெரும்பாலானோர்களுக்கு தெரிந்தது... ஸ்டாலின்
என்றால் அவர் ரஷ்யாவைச்சேர்ந்த மாபெரும் புரட்சியாளர்... கம்யூனிஸ்ட் தலைவர் என்பது
மட்டும்தான்... அதாவது உலகில் பெரும்பாலானோரின் மனதில் ஸ்டாலின் என்பவர் ஒரு கம்யூனிச
ஹீரோ... மறுமலர்ச்சியின் தந்தை... என்ற அளவில்தான்! (நம் நாட்டில்கூட எத்தனையெத்தனை
பேர் தங்கள் வாரிசுகளுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டுகிறார்கள்...)
ஆனால் இதே ஸ்டாலின் தனது சொந்த மக்களில் கொன்றொழித்த எண்ணிக்கை
ஹிட்லரின் கொடுங்கோல்தனத்தில் இழந்த உயிர்களைவிட
மிக அதிகம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் என்பது சந்தேகம்தான்...!
தடயங்களை விட்டுச்சென்று தோற்றுப்போன அணியில் இருந்த திருடனுக்கும்,
தடயமே இல்லாமல், ஜெயித்த அணியில் கூட்டு சேர்ந்துகொண்ட திருடனுக்குமான எதிர்கால வரலாறு
எப்படியிருக்கும்?...
கம்யூனிசம் பற்றி தெரிந்த நம்மில் எத்தனை பேருக்கு ஸ்டாலினிசம்
பற்றி தெரியும்?...
ஸ்டாலினின் எழுச்சியையும், சாணக்கியத்தனமாய் அரசியல் வாழ்க்கையில்
செய்த சூழ்ச்சிகளையும் ஆராய்ந்து படிக்கும்போது ஒரு மனிதனால் இப்படியெல்லாம் எப்படி
முடிந்தது என்று தலை சுற்றுகிறது. (ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறை முழு விவரங்களுடன் கொடுப்பது
கட்டுரையை எங்கோ நீட்டித்துவிடும் என்பதால் முடிந்தவரை முக்கியமான விஷயங்களை என்னால்
முடிந்த அளவு சுருக்கமாய் தருகிறேன்...)
ஸ்டாலின் பிறந்த தேதி டிசம்பர்-6, 1878...
ஸ்டாலினின் இயற்பெயர் Joseph Djugashvili in Gori...
கேகே மற்றும் பெசோ என்பவர்களுக்கு
மூன்றாவது மகனாக பிறந்திருந்தாலும் முதல் இரண்டு குழந்தைகளும் சிறுவயதிலேயே இறந்துபோனதால்
ஒரே மகனாகவே வளர்ந்திருக்கிறார். சிறுவயது முதலே இவரின் எதிர்காலம் குறித்த
பார்வையில் இவரது தந்தைக்கும் தாய்க்கும் கருத்து வேறுபாடுகள் இருந்து
வந்திருக்கிறது. அதாவது இவருடைய தாய் கேகே இவரை படிக்க வைக்க
விரும்பியிருக்கிறார். இவருடைய தந்தை பெசோவோ இவரை வேலை பார்த்து சுயமாக வாழவைக்க
விரும்பியிருக்கிறார்.
ஸ்டாலின்-1894ல்...
இவரது 12வது வயதில் தந்தை அலைந்து
திரிந்து தான் வேலை பார்த்த அதே பேக்டரியில் இவருக்கும் வேலை வாங்கி
கொடுத்திருக்கிறார். இருந்தாலும் அவரது தாய் கேகே சில படித்தவர்கள், நண்பர்கள்
மற்றும் உறவினர்களுடன் வந்து பஞ்சாயத்து செய்து தனது மகனை தன்னுடன்
அழைத்துச்சென்றிருக்கிறார். அன்று முதல் இவரது தந்தை தனது மனைவி மற்றும் மகனுடனான
தொடர்பை முற்றிலும் துண்டித்திருப்பது வரலாறு தரும் செய்தி...
அதன்பிறகு தாயார் கேகே சலவைப்பணி
செய்துதான் ஸ்டாலினை வளர்த்து படிக்கவைத்திருக்கிறார். செமினரியில் படிக்கும்போது
படிப்பில் கெட்டியாக இருந்த இவருக்கு பல ஸ்காலர்ஷிப்புகள் கிடைத்திருந்தாலும், அதே
காலகட்டத்தில் இவர் சில தெரு கோஷ்டிகளுக்கு தலைவனாக இருந்ததாகவும், அடாவடித்தனங்களில்
ஈடுபட்டு பல குழுக்களில் இவரது தலைமையிலான குழு முதலிடத்தில் இருந்து வந்ததாகவும்
சில வரலாற்றுச்சான்றுகள் கூறுகிறது.
செமினரியில்தான் கார்ல்
மார்க்ஸ்சின் சிந்தனைகளை படிக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது இவருக்கு. அதன்
மீது ஏற்பட்ட ஈர்ப்பில் உடனடியாக லோக்கல் சோஷலிச பார்ட்டி ஒன்றில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறார்.
சிஸர் நிக்கோலஸ்-II என்பவரின் ஆட்சிக்கு எதிராகத்தான் அப்போது ரஷ்யாவில் பல்வேறு
குழுக்களின் மனநிலை இருந்திருக்கிறது. அதுவும் சிஸர் நிக்கோலஸ்-II வின் முதலாளித்துவம்,
தனியார்மயம் மற்றும் முதல் உலகப்போரில் ரஷ்யாவை ஈடுபடுத்தியது ஆகியவைதான்
மிகப்பலமான எதிர்ப்பை உருவாக்கியிருக்கிறது. கிராஜூவேஷனுக்கு சில மாதங்களுக்கு
முன்பு படிப்பைவிட்டு வெளியேறிய ஸ்டாலின் ஒரு புரட்சியாளராக சிஸர் நிக்கோலஸ்-II க்கு
எதிராக தனது முதல் உரையை நிகழ்த்தியது 1900ம் ஆண்டில்தான்.
ஸ்டாலின்-1902ல்...
அதன்பிறகு தலைமறைவு
புரட்சிக்குழுவில் தன்னை இணைத்துக்கொண்ட ஸ்டாலின் முதன் முதலில் போலீசாரால் 1902ம்
ஆண்டு கைது செய்யப்பட்டு 1903ம் ஆண்டு சைபீரிய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
சிறையிலிருந்து வெளியே வந்ததும் சிஸர் நிக்கோலஸ்-IIக்கு எதிராக நடந்த 1905
ரஷ்யப்புரட்சியின்போது பணியாட்களை ஒருங்கிணைக்கும் பணியை செய்திருக்கிறார்
ஸ்டாலின்.
1902லிருந்து 1913வரை ஸ்டாலின் பலமுறை சிறைக்குச்சென்றதும், 6முறை
சிறையிலிருந்து தப்பியதும் அரங்கேறியிருக்கிறது. இதற்கு நடுவில் தன்னுடன் செமினரியில்
படித்த தனது நண்பன் ஒருவனின் சகோதரியான யெகேத்தரினாவை காதலித்து 1904ம் ஆண்டு
மணந்திருக்கிறார்.
இந்த யெகேத்தரினா ஸ்டாலினுக்கு யாகோவ் எனுமொரு ஆண் வாரிசை கொடுத்துவிட்டு டியூபர்குலோசிஸ் நோயினால் 1907ம் ஆண்டு இறந்திருக்கிறார். இந்த யாகோவ் இரண்டாம் உலகப்போரில் இறந்திருக்கலாம் என்பது வரலாறு தரும் நிச்சயமற்ற செய்தி...!
யெகேத்தரினா...
இந்த யெகேத்தரினா ஸ்டாலினுக்கு யாகோவ் எனுமொரு ஆண் வாரிசை கொடுத்துவிட்டு டியூபர்குலோசிஸ் நோயினால் 1907ம் ஆண்டு இறந்திருக்கிறார். இந்த யாகோவ் இரண்டாம் உலகப்போரில் இறந்திருக்கலாம் என்பது வரலாறு தரும் நிச்சயமற்ற செய்தி...!
Bolsheviksன்
தலைவராக சிஸர் நிக்கோலஸ்-IIக்கு எதிராக போராடிக்கொண்டிருந்த லெனினை ஸ்டாலின் முதன்
முதலில் 1905ம் ஆண்டு சந்தித்திருக்கிறார். அப்போது ஸ்டாலினின் திறமைகளை
அறிந்துகொண்ட லெனின் அவரை மிகவும் ஊக்கப்படுத்தியிருக்கிறார்.
அதற்குப்பின் பல சமயங்களில்
கொள்ளைகள் மூலம் Bolsheviksன்
பொருளாதாரத்தை உயர்த்த உதவியிருக்கிறார் ஸ்டாலின். 1912ம் ஆண்டு லெனினின்
கம்யூனிஸ்ட் பார்ட்டியின் பத்திரிக்கையான ‘’Pravda’’க்கு எடிட்டராக
நியமிக்கப்பட்டிருக்கிறார் ஸ்டாலின். அதே ஆண்டிலேயே Bolsheviksயின் சென்ட்ரல் கமிட்டியிலும் ஸ்டாலின்
உறுப்பினராக்கப்பட்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முக்கிய நபராக
அடித்தளமிடப்பட்டிருக்கிறார்.
அவர்
எடிட்டராக இருந்தபோது எழுதிய முதல் புரட்சிக்கட்டுரைக்கு ‘’ஸ்டாலின்’’ என்ற
புனைப்பெயரில் கையெழுத்திட்டிருக்கிறார். அதுதான் அவருடைய பெயர் ‘’ஜோசப் ஸ்டாலின்’’
என்று வரலாற்றில் பதிந்ததன் ஆரம்பம் என்பது சுவாரசியம்...!
சைபீரியாவில் அரசியல் கைதியாகயிருந்ததால்
1913லிருந்து 1917ரஷ்யப்புரட்சி வரையிலான காலகட்டத்தில் ஸ்டாலினின் தலையீடு எதிலும்
இல்லை. எனினும் 1917-பிப்ரவரி மாதம் 23ம் நாள் பெண்கள் தினமான அன்று ரஷ்யாவில்
பேக்டரியில் வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கான பெண்கள் வீதிக்கு வந்து போராடி நடத்திய
ரஷ்யப்புரட்சியில் சிஸர் நிக்கோலஸ்-IIன் ஆட்சி அகற்றப்பட்டு இடைக்கால அரசாங்கம்
அமைக்கப்பட்டபிறகு லெனின் மற்றும் ஸ்டாலின் இருவருமே நாடு திரும்பினர். நாடு
திரும்பிய லெனினுக்கு மக்களால் கொடுக்கப்பட்ட அமோக வரவேற்பும், அப்போது அவர்
நிகழ்த்திய உரையும், அதற்கடுத்த சிலமணி நேரங்களிலேயே இடைக்கால அரசாங்கத்தை
எதிர்த்து அவர் ஆற்றிய அதிர்ச்சி உரையும் வரலாற்றில் முக்கியமானவையாகும்.
லெனின்...
சிஸர் நிக்கோலஸ்-II
ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டாலும், இடைக்கால அரசாங்கமும் முதலாம்
உலகப்போரிலிருந்து ரஷ்யா பின்வாங்காது என்று அறிவித்ததும், எவ்வித சீர் நடவடிக்கையையும்
எடுக்காமலிருந்ததும் அக்டோபர்-1917ம் ஆண்டு லெனின் தலைமையில் மீண்டும் ஒரு
ரஷ்யப்புரட்சி வெடித்து Bolsheviks ஆட்சியை
கைப்பற்ற காரணமாகிவிட்டது. Bolsheviks ஆட்சியை
கைப்பற்றினாலும்கூட ரஷ்யாவில் உள்நாட்டுப்போர் தொடங்கி 1921வரை நடந்திருக்கிறது.
1919ல் நடந்த ரஷ்ய கம்யூனிச பார்ட்டியின் 8வது மாநாட்டில்...
நடுவில் ஸ்டாலின் மற்றும் லெனின்
அதாவது முதல் உலகப்போரிலிருந்து ரஷ்யா
வெளியேறிய லெனினின் நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான வீரர்கள் நாடு
திரும்பியிருக்கின்றனர். ஏற்கனவே தனியார் வசமிருந்த நிலங்களெல்லாம் மீட்கப்பட்டு விவசாயிகளுக்கு
வழங்கப்பட்டிருந்தன. தொழிற்சாலைகள் எல்லாம் நாட்டுடமை ஆக்கப்பட்டிருந்தன. நிலம்
பெற்ற விவசாயிகள் தங்களது தேவைக்கான அளவு மட்டும் விவசாயப்பொருட்களை உற்பத்தி
செய்துகொண்டதால் நாட்டில் உணவுப்பற்றாக்குறை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டங்கள்
தலைவிரித்தாட, 1918ம் ஆண்டு உள்நாட்டுப்போர் தொடங்கியிருக்கிறது.
லெனின் தலைமையேற்ற பிறகு 1922ம்
ஆண்டு பக்கவாதத்தில் படுக்கையில்விழ அவரின் நோய்வாய்ப்பட்ட இறுதிகாலத்தில், தன்னை
அவரின் அடுத்த வாரிசாக முன்னிறுத்தும் எல்லாவித ராஜதந்திரங்களையும் முன்னெடுத்தவர்
ஸ்டாலின். 1922ம் ஆண்டு லெனினால் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட சோவியத் ரஷ்யாவின்
கம்யூனிச பார்ட்டியின் ஜெனரல் செக்ரட்டரி பதவி அரசாங்கத்திலும் தனக்கு
வேண்டப்பட்டவர்களை முக்கிய பதவிகளில் அமர்த்த உதவியிருக்கிறது ஸ்டாலினுக்கு...!
ஸ்டாலினின் பலவித நடவடிக்கைகள் பிடிக்காமல்
அதற்கு எதிராக லெனின் வெளியிட விரும்பிய உயிலறிக்கை மக்களை சென்றடையாமலேயே
முடக்கப்பட்டிருக்கிறது. லெனினின் இரு கரங்களாக சமமாக விளங்கியவர்கள் ட்ராட்ஸ்கி
மற்றும் ஸ்டாலின். இதில் ஸ்டாலினை விட ட்ராட்ஸ்கிக்கு செல்வாக்கு அதிகம்
இருந்திருக்கிறது.
ஆனாலும் ஒரு சில ராஜதந்திரங்களின்
மூலமாக சில உறுப்பினர்களை தன்வசப்படுத்தி ட்ராட்ஸ்கிக்கு எதிராக காய் நகர்த்தி
முன்னேறியவர் ஸ்டாலின். ஜனவரி-21, 1924ம் ஆண்டு ஹார்ட் அட்டாக்கில் லெனின்
இறந்தபிறகு பார்ட்டியில் தனக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி தனக்கு
எதிரானவர்களையெல்லாம் அடக்கி 1927ம் ஆண்டு சோவியத் யூனியனின் தலைமை பொறுப்பை
அடைந்திருக்கிறார் ஸ்டாலின். ட்ராட்ஸ்கியும் இன்னும் சில எதிர்ப்பாளர்களும் ஸ்டாலினால்
நாடு கடத்தப்பட்டிருக்கின்றனர்.
ஸ்டாலின் பதவியேற்றதும் அவரால்
கொண்டுவரப்பட்ட முதல் ஐந்தாண்டு திட்டத்தின் முதலாம் ஆண்டான 1928ம் ஆண்டுதான்
பதவிக்காக எதையும் செய்யத்துணிந்தவர் ஸ்டாலின் என்பதற்கு அடித்தளமிட்டிருக்கிறது.
அவருடைய முதல் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய அம்சம்... ரஷ்யாவை தொழில்மயமாக்குதல்...
கம்யூனிசம் என்ற பெயரில் பண்ணைகள்,
தொழிற்சாலைகள் என அத்தனையையும் மக்களிடமிருந்து பிடுங்கியிருக்கிறார் ஸ்டாலின். ரஷ்யாவின்
முக்கிய உற்பத்தியே உணவுப்பொருட்கள்தான் என்பதால் உற்பத்தி செய்யப்படும் உணவில்
பெரும் பகுதியை ஏற்றுமதி செய்து, அதற்குப்பதிலாக இயந்திரங்களையும்,
போர்த்தளவாடங்களையும் வாங்கிக் குவித்திருக்கிறார் ஸ்டாலின்.
இதனால்
உள்நாட்டில் ஆயிரக்கணக்கானோர் உணவின்றி தவித்தும், உணவில்லாமல் இறப்பவர்கள்
இறக்கட்டும்... இறப்பு விகிதம் பெருக பெருக உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருளின்
ஏற்றுமதியை அதிகரிக்கலாம் என்பதுதான் ஸ்டாலினின் எண்ணமாக இருந்திருக்கிறது.
இந்தக்காலக்கட்டத்தில்
நாட்டில் வேலை செய்யமுடியாத முதியோர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், ஊனமுற்றவர்கள்,
பிச்சைக்காரர்கள் போன்றோரெல்லாம் கொன்றொழிக்கப்பட்டதாகவும் ஒரு வரலாற்றுத்தகவல்
உண்டு.
ஸ்டாலினின் ஆட்சிக்காலத்தில்
முக்கிய நிகழ்வாக கருதப்படும் The Great Terrorதான் ஸ்டாலினின்
சர்வாதிகாரத்தனத்துக்கான சிறந்த சாட்சியாக சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த கிரேட்
டெர்ரர் காலத்தில் ரஷ்யாவின் சாதாரண பொதுமக்கள் மட்டுமே கிட்டத்தட்ட ஏழு லட்சம்
பேர் கொல்லப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
1937-38 காலகட்டத்தில் ஸ்டாலினால்
நேரடியாக கையெழுத்திடப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டவர்களின்
எண்ணிக்கை மட்டும் நாற்பது ஆயிரம் பேர்...! ரஷ்யாவின் பெரும்பாலான பகுதிகளில்
கூட்டம் கூட்டமாக பிணங்கள் புதைக்கப்பட்டிருப்பதில் இன்னமும் பல முழுதாக வெளிஉலகுக்கு
வரவில்லை.
நாட்டில் அவருக்கு எதிராக கருத்து
சொல்வோர்களும், அவருக்கு எதிரான சிந்தனை கொண்டவர்களும் ஸ்டாலினால் உருவாக்கப்பட்ட
சிறப்பு காவல் படையினரால் கைது செய்யப்பட்டு என்ன ஆனார்கள் என்று தெரியாதவாறு
சிறையிலடைக்கப்பட்டும், சுட்டுக் கொல்லப்பட்டுமிருக்கிறார்கள்.
அரசாங்கத்துக்கும், நாட்டுக்கும்
எதிரானவர்களாக கோடிக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு தொழிற்சாலைகளிலும்,
சிறைச்சாலைகளிலும் குறைந்த உணவில் அளவுக்கதிகமான வேலை வாங்கப்பட்டு இறந்திருக்கிறார்கள்.
ஸ்டாலினுக்கு எதிரான ராணுவ
அதிகாரிகள், போலீஸ்காரர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என எண்ணற்றோர் கும்பல்
கும்பலாக கொல்லப்பட்டிருக்கின்றனர்.
ஸ்டாலினின் சீர்திருத்த
நடவடிக்கையாக நாட்டில் மதம் என்று ஒன்று இருக்கவேகூடாது என்று
தடைசெய்யப்பட்டிருக்கிறது. அதாவது மதங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு தடையானவை
எனக்கருதி கம்யூனிசம் என்ற ஒரேயொரு மதம்தான் நாட்டில் இருக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறார்
ஸ்டாலின். சர்ச்சுகளின் நிலங்கள் முழுவதும் அரசாங்கத்தால்
கையகப்படுத்தப்பட்டிருக்கிறது.
வெளிநாடுகளுக்கு விஷயம் எதுவும்
தெரிந்துவிடாதவாறு மீடியாக்கள் அனுமதிக்கப்படாமலும், உள்நாட்டிலும் எதிரான
கருத்துக்களை எந்தவித மீடியாக்களும் கையாண்டிராதவாறும் திறம்பட
கட்டுப்படுத்தியிருக்கிறார் ஸ்டாலின்.
முதல் மனைவியின் இறப்பிற்கு பிறகு நீண்ட
காலம் கழித்து 1919ம் ஆண்டு தனது செகரிட்டரியும், சக Bolsheviksமான Nadya என்பவரை மணந்திருக்கிறார் ஸ்டாலின். இவர்களுக்கு
ஒரு மகனும் ஒரு மகளும் பிறந்திருக்கிறார்கள். தனது நெகட்டிவ் இமேஜை வெளியே
தெரியாமல் பலவிதத்திலும் கட்டுப்படுத்திய ஸ்டாலினால் தனது மனைவியின்
கிரிட்டிசிஸத்தை கட்டுப்படுத்த கஷ்டமாயிருந்திருக்கிறது.
இருவரும் மியூச்சுவல் அஃபெக்சன்
காரணமாகவே திருமணம் செய்திருந்தபோதிலும் ஸ்டாலினின் நடவடிக்கைகளால் மனமுடைந்து
போயிருந்த Nadya 1932ம் ஆண்டு நவம்பர்-9ம் தேதி ஒரு டின்னர் பார்ட்டியில்
ஸ்டாலினால் கடுமையாக திட்டப்பட்டு அதனால் தற்கொலை செய்துகொண்டதாக வரலாறு
கூறுகிறது.
ஒருபக்கம் கோடிக்கணக்கான மக்கள்
கொன்றொழிக்கப்பட்டபோதிலும், இன்னொரு பக்கம் தனது சிலைகள், பிரச்சாரங்கள்,
புகழாரங்கள் என்று நடத்தி தன்னைப்பற்றிய, தனது
ஆட்சியைப் பற்றிய நெகட்டிவ் விஷயங்கள் எதுவும் மக்களிடம் சென்றடையாதவாறு
பார்த்துக்கொண்டு, மக்களின் மனதில் தன்னை ஒரு ஹீரோவாகவே நிலைநிறுத்தியிருக்கிறார்.
Tsaritsyn என்ற நகரத்துக்கு 1925ம் ஆண்டு Stalingrad என்று
பெயர் மாற்றியிருக்கிறார்.
"Father of Nations," "Brilliant
Genius of Humanity," "Great Architect of Communism,"
"Gardener of Human Happiness," என்றெல்லாம் பட்டங்களை
ஏற்றுக்கொண்டதோடு மட்டுமில்லாமல், 1917 ரஷ்யப்புரட்சியில் தன்னை முக்கியத்துவப்படுத்தி
எழுதவைத்து ரஷ்யாவின் வரலாற்றையே திருத்தியிருக்கிறார்.
லெனினின்
அமைச்சரவையில் இருந்தவர்களில் ஸ்டாலினைத்தவிர வேறு எவருக்கும் இயற்கையான மரணம்
இல்லை என்பதே ஸ்டாலினின் அரசியல் காய் நகர்த்தலுக்கான மிகப்பெரிய உதாரணம்.
ஸ்டாலினுடன் இருந்த முக்கிய தலைவர்களின் மரணத்துக்கான உதாரணம்...
ரஷ்ய ராணுவத்தை யாருமே
எண்ணிப்பார்க்கமுடியாத அளவுக்கு பலமாக்கியதும், ரஷ்ய உளவுத்துறை என்று ஒன்றை
உருவாக்கி அதை உலகம் முழுக்க பரவவிட்டதிலும் ஸ்டாலினின் திறமை அலாதியானதுதான். ட்ராட்ஸ்கி
மெக்ஸிகோவில் 1940ல் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், உலகம் முழுக்க விரிந்திருந்த
ஸ்டாலினின் உளவுத்துறை பலத்தை உலகுக்கு காட்டியிருக்கிறது.
இரண்டாம் உலகப்போரின்போது
ஜெர்மனியிடம் இருந்த ராணுவ பீரங்கி 4000. அதே காலகட்டத்தில் ஸ்டாலினின் ரஷ்ய
ராணுவத்திடம் 14000 ராணுவ பீரங்கிகள் இருந்திருக்கிறது. இருந்தும்கூட இரண்டாம்
உலகப்போரில் ரஷ்ய ராணுவத்துக்கு ஏற்பட்ட பேரிழப்புக்கு ஸ்டாலினின் ஆட்சிமுறைகள்
மீது வெறுப்புற்ற ரஷ்ய ராணுவ வீரர்களின் மனநிலையே காரணம் என்றும் சில ஆய்வுகள்
கூறுகிறது.
இரண்டாம் உலகப்போரின் முன்னும்
பின்னுமாய் கிட்டத்தட்ட 1941ல் இருந்து 1949வரையிலும் ரஷ்யாவில் வசித்து வந்த
மக்கள் பலரும் வலுக்கட்டாயமாக சைபீரியாவுக்கும் மத்திய ஆசிய குடியரசுகளுக்கும்
இடம் மாற்றப்பட்டிருக்கிறார்கள். இதில் 43% பேர் இறந்திருக்கிறார்கள். அதேபோல சோவியத்
கொரியன்ஸ், வோல்கா ஜெர்மன்ஸ் போன்ற ரஷ்யாவில் வாழ்ந்த மக்களையும் இடம் பெயர்ந்து
குடியமர்த்தச்சொன்ன ஸ்டாலினின் உத்தரவில் அதற்கான பயணத்திலேயே இலட்சக்கணக்கான
மக்கள் இறந்திருக்கிறார்கள்.
எல்லாவற்றையும்விட கொடுமை உலக
வரலாறுகளில் பதிந்துபோன 1933ம் ஆண்டு ரஷ்யப்பஞ்சம்... இதில் இறந்த ரஷ்ய மக்களின்
எண்ணிக்கை மட்டும் கிட்டதட்ட ஒரு கோடியைத்தாண்டும் என்பதுவும்,
அந்தக்காலகட்டத்தில் பஞ்சத்தை போக்கவோ, உணவை வழங்கவோ ஸ்டாலினின் அரசாங்கத்தால்
எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுவும் அவரது வரலாற்றின் முக்கிய கருப்பு
பக்கங்கள்தான்...!
பஞ்சத்தில் விழுந்து கிடப்பவர்களை கண்டுகொள்ளாத பாதசாரிகள்...
முதலில் ஜெர்மனியின் ஹிட்லருடன்
ஒப்பந்தமிட்டு கூட்டு வைத்திருந்த ஸ்டாலின், இரண்டாம் உலகப்போரில் ஆக்ஸிஸ்
நாடுகளுடன் சோவியத் ரஷ்யாவை இணைத்துக்கொள்ள ஹிட்லருக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின், ஜெர்மனிப்படைகள்
ஜூன்-22, 1941ல் ஆப்பரேஷன் பார்பரோஷா என்ற பெயரில் சோவியத் யூனியனின் பகுதிகளை
ஆக்கிரமிக்கத்தொடங்கியதும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு ஜெர்மனிக்கு எதிரான
நேசநாடுகளுடன் கூட்டு சேர்ந்திருக்கிறார்.
ரூஸ்வெல்ட் மற்றும் வின்ஸ்டன் சர்ச்சிலுடன் ஸ்டாலின்...
ஜெர்மானியப் படைகள் சோவியத்
யூனியனை ஆக்கிரமிக்கத் தொடங்கியதும், ரஷ்ய மக்களும் ஸ்டாலினுக்குப் பதில் ஜெர்மன்
ஆதிக்கம் எவ்வளவோ தேவலை என்று சந்தோஷப்பட்டதாகவும் தகவல்கள் நிலவுகின்றன. இந்த ஆக்கிரமிப்பை
தடுத்து நிறுத்த ஸ்டாலின் செய்த வேலை என்ன தெரியுமா?... ஜெர்மானியப்படைகள்
முன்னேறும் வழியில் இருக்கும் வயல்கள், பண்ணைகள், ஊர்கள் என எல்லாவற்றையும்
நெருப்பிட்டு கொளுத்தி அவர்களது முன்னேற்றத்தை தடுக்க உத்தரவிட்டிருக்கிறார்.
இதிலும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததும், உடமைகளை இழந்ததும் நடந்திருக்கிறது.
இந்தப்போரின் இறுதியில் ஜெர்மனி
வீழ்ந்தாலும் ரஷ்யாவுக்கு பேரிழப்புதான் என்பதில் சந்தேகமில்லை. ரஷ்யாவின்
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படியே இந்தப்போரில் இழந்த ரஷ்யவீரர்களின் எண்ணிக்கை
கிட்டத்தட்ட 2.80கோடி. ரஷ்யர்களில் நாலில் ஒருவரை இழந்திருந்தாலும் இதுவும்
ஸ்டாலினுக்கு தேசத்தின் பாதுகாவலனாய் இமேஜை உயர்த்தத்தான் செய்திருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்குப்பின்னும் பனிப்போரை தொடர்ந்ததில் ஸ்டாலினின் பங்கு அலாதியானதுதான்.
தனது கடைசி காலத்தில் அமைதிக்கான தூதுவராய் தன்னை சித்தரித்ததும், ரஷ்யாவின் மறுகட்டமைப்புக்காக நிதி ஒதுக்கி சில ப்ராஜெக்ட்டுகளை செய்ததும் ஸ்டாலினின் சில எடுபடாத நடவடிக்கைகள்...!
தனது கடைசி காலத்தில் அமைதிக்கான தூதுவராய் தன்னை சித்தரித்ததும், ரஷ்யாவின் மறுகட்டமைப்புக்காக நிதி ஒதுக்கி சில ப்ராஜெக்ட்டுகளை செய்ததும் ஸ்டாலினின் சில எடுபடாத நடவடிக்கைகள்...!
மார்ச்-1, 1953ம் ஆண்டு ஸ்டாலின்
தனது 74வது வயதில் ஸ்ட்ரோக் வந்து பாதிக்கப்பட்டு, நான்கு நாட்களுக்குப்பிறகு
அதாவது 1953ம் ஆண்டு மார்ச்-5ம் தேதி உயிரிழந்ததாய் அறிவிக்கப்பட்டிருக்கிறார். லெனின்
இறந்தபோதே அவரது உடல் ஸ்டாலினால் மிகச்சிறந்த மருத்துவர்களையும்
அறிவியலாளர்களையும் கொண்டு பதப்படுத்தப்பட்டு மக்களின் பார்வைக்காக ரெட் ஸ்கொயரில்
நிரந்தரமாக வைக்கப்பட்டிருக்கிறது. ஸ்டாலின் இறந்ததும் அவரது உடலும் அதே முறையில்
பதப்படுத்தப்பட்டு லெனினுக்கு அருகிலேயே வைக்கப்பட்டிருக்கிறது.
பதப்படுத்தப்பட்ட லெனின் மற்றும் ஸ்டாலினின் உடல்கள் அருகருகில்...
ஸ்டாலினுக்குப்பிறகு அவரது இடத்தை
நிரப்பத் திணறிய கம்யூனிச இயக்கத்துக்கு, 1956ம் ஆண்டு நிகிதா குருச்சேவ்வால் அந்த
இடம் நிரப்பப்பட்டிருக்கிறது. இந்த நிகிதா குருசேவ்தான் கோடிக்கணக்கான சொந்த
மக்களையே கொன்று குவித்த ஸ்டாலினின் உண்மை முகத்தை வெளி உலகுக்கு கொஞ்சம் கொஞ்சமாக
தெரியப்படுத்தியிருக்கிறார்.
ஸ்டாலினை கடவுளுக்கு இணையான தலைவராக கொண்டாடிக் கொண்டிருந்த ஒரு நாட்டு மக்களிடம், அதே இயக்கத்தைச் சேர்ந்த குருசேவ் ‘’டி-ஸ்டாலினிசேஷன்’’ என்றழைக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் ஸ்டாலின் உருவாக்கி வைத்திருந்த பொய் பிம்பத்தை உடைப்பதென்பது மிகக்கடினமானதொரு விஷயமாகத்தான் இருந்திருக்கிறது. இருந்தாலும் ஸ்டாலினிசம் நடத்திய படுகொலைகளை ஆதாரத்துடன் நாட்டு மக்களுக்கு தோலுரித்த நிகிதா குருசேவ்வின் அதிரடியால் ஸ்டாலினின் சிலைகள் மற்றும் படங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றப்படத்தொடங்கியிருக்கின்றன.
ஸ்டாலினை கடவுளுக்கு இணையான தலைவராக கொண்டாடிக் கொண்டிருந்த ஒரு நாட்டு மக்களிடம், அதே இயக்கத்தைச் சேர்ந்த குருசேவ் ‘’டி-ஸ்டாலினிசேஷன்’’ என்றழைக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் ஸ்டாலின் உருவாக்கி வைத்திருந்த பொய் பிம்பத்தை உடைப்பதென்பது மிகக்கடினமானதொரு விஷயமாகத்தான் இருந்திருக்கிறது. இருந்தாலும் ஸ்டாலினிசம் நடத்திய படுகொலைகளை ஆதாரத்துடன் நாட்டு மக்களுக்கு தோலுரித்த நிகிதா குருசேவ்வின் அதிரடியால் ஸ்டாலினின் சிலைகள் மற்றும் படங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றப்படத்தொடங்கியிருக்கின்றன.
ஸ்டாலின்கிராடு என்று
பெயரிடப்பட்ட நகரத்தினை 1961ம் ஆண்டு வோல்காகிராடு என்று பெயர் மாற்றியிருக்கிறார்கள்.
அக்டோபர் 1961ம் ஆண்டு, கம்யூனிச
பார்ட்டியின் 22ம் மாநாடு நடந்தபோது எழுந்த விவாதங்களின் அடிப்படையில் ஒரு சில நாட்களுக்குள்ளாகவே
ஸ்டாலினின் உடல் லெனினின் உடலுக்கருகில் இருந்து ஒரு நள்ளிரவு நேரத்தில்
நிசப்தமின்றி நீக்கப்பட்டு 300மீட்டர் தொலைவில் மற்ற சாதாரண புரட்சியாளர்களின்
சமாதியோடு புதைக்கப்பட்டிருக்கிறது. ஒரு வாரத்திற்கு பிறகு அந்த இடத்தில் அவருடைய
பெயருடன்கூடிய ஒரு கருப்பு கிரானைட் கல் மட்டும் நட்டப்பட்டிருக்கிறது.
ஒருவழியாய் ஒரு கடவுள்
சாமான்யனாகியிருக்கிறார்...!
சரி... விஷயத்திற்கு வருவோம்...
ஹிட்லரின் இன அழிப்பில்
கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2.5கோடியிலிருந்து 5கோடி வரையிருக்கும்
என்பதுவும், ஸ்டாலின் கொன்றொழித்த மக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3
கோடியிலிருந்து 6 கோடி வரையிருக்கும் என்பதுவும் வரலாறு தரும் செய்தி...!
இவ்வளவு இருந்தும் ஹிட்லரை உலகம்
முழுக்க கொடுங்கோலனாக அறிமுகப்படுத்திய பெரும்பான்மை வரலாறு, ஸ்டாலின் பற்றிய
சரியான முகத்தை அறிமுகப்படுத்தாமல் போனதன் காரணம் என்ன?...
கடைசிவரையிலும் தன்னை ஹீரோவாகவே
காட்டிக்கொண்டு ஆதாரமே இல்லாமல் படுகொலைகளை அரங்கேற்றிய ஸ்டாலினின் உண்மை முகம்
உலகம் முழுக்க உரத்து ஒலிக்காமல், ஹிட்லரின் படுகொலைகள் மட்டும் உரத்து ஒலித்ததன்
காரணம் என்ன?...
ஒருவேளை ஸ்டாலினால்தான் USSR
எனப்படும் ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யா எனும் வல்லரசு உருவானது என்றும், ரஷ்யாவின்
வளர்ச்சிக்கு ஒரே காரணம் ஸ்டாலின்தான் என்றும் புகழாரம் சூட்டி அவரின் படுகொலைகளை
மறைக்கலாம் என்றால், ஹிட்லர் காலத்தில் ஜெர்மனியின் வளர்ச்சி அதைவிட பன்மடங்கு
அதிகம் என்பதும் நிதர்சனம்...!
இதைவிடக்கொடுமை இப்படியொரு கொடுங்கோலனான ஸ்டாலின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்காக 1945லிருந்து 49 காலகட்டத்தில் இரண்டுமுறை பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. (ஆனால் நல்லவேளையாக கொடுக்கப்படாமல் நோபல் பரிசின் மானம் காப்பாற்றப்பட்டிருக்கிறது...)
ஆக... ஹிட்லருக்கு ஒரு நியாயம்... ஸ்டாலினுக்கு ஒரு நியாயம்...
இதைத்தான் உலக வரலாறுகளின்
பெரும்பான்மை சமூகத்தின் ஒரு பக்க முகம் என்று நான் சாடுவது...
கொடுங்கோல ஆட்சியாளனை கம்யூனிசத்தின்
மறு உருவாய், மறுமலர்ச்சியின் தந்தையாய், புரட்சியின் வித்தாய் கொண்டாடி எதிர்கால
சந்ததியினர்க்கும் அவரின் பெயரை சூட்டி மகிழும் மக்கள், வரலாற்றின் இன்னொரு பக்கத்தையும்
தெரிந்து கொள்ளுதல் நலம் என்பது மட்டும்தான் என் ஆவல்...!
மற்றபடி இந்தக் கட்டுரையை தமிழக
அரசியல்வாதி யாருடனாவது ஒப்பிட நினைத்து லெனினை அண்ணாவுக்கும், ஸ்டாலினை
ஒருவருக்கும், ட்ராட்ஸ்கியை இன்னொருவருக்கும், ஸ்டாலினின் இருதார மணத்தையும், அரசியல்
சாணக்கிய காய்நகர்த்தலையும், சொந்த மக்களையும், சொந்த கட்சியின் முக்கிய தலைவர்களை
கொன்றதையும், தனக்குத்தானே பல பட்டமளிப்புகளை நடத்திக்கொண்டதையும் சிலபல நிகழ்வுகளுடன் நீங்களாக ஒப்பிட்டுக்கொண்டால் அதற்கு நான்
பொறுப்பல்ல நண்பர்களே...!!!
மீண்டும் சந்திப்போம்...
நல்லதொரு வரலாற்று பகிர்வு... நன்றி... சென்சாருக்கு பின் படம் உட்பட அனைத்து படங்களும் அருமை...
ReplyDeleteசொந்த domain-க்கும் வாழ்த்துக்கள்...
நன்றி தலைவா... எல்லாம் தங்களின் அன்பான ஆதரவுதான்...
Deleteதலைப்பை பார்த்து ஏமாந்துட்டேனுங்க!!
ReplyDeleteநான்தான் முதல்லயே சொல்லிட்டேன்லாக்கா?...
Deleteதனி நபர் செய்தால் பயங்கரவாதம்.அதை அரசு செய்வதும் அரசு பயங்கரவாதம் தானே ?இப்படி கட்டப் பட்ட ரஷ்யா சுக்கு சுக்காய்உடைந்து போனதில் ஆச்சரியம் ஏதுமில்லை !பவுண்டேசன் வீக் ,பில்டிங் எப்படி ஸ்ட்ராங் ஆக இருக்கும் ?
ReplyDeleteத .ம 3
தங்களின் கருத்து ஒப்புக்கொள்ளக்கூடியதுதான் என்றாலும், சோவியத் சிதறியது பனிப்போரின் தோல்விக்கான சாட்சி...
Deleteபடங்களுடன் இதுவரை அறியாத
ReplyDeleteதகவல்களுடன் பதிவு மிக மிக அருமை
தாங்கள் ஒவ்வொரு பதிவுக்கும்
எடுத்துக்கொள்ளும் முயற்சிகளும்
பதிவின் நேர்த்தியும் பிரமிக்கவைக்கிறது
தங்கள் பதிவினைத் தொடர்வதை
பெருமைக்குரியாதாய் உணர்கிறேன்
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்களது பாராட்டுகளுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் ஐயா... தங்களைப்போன்ற பெரியவர்களின் ஆசீர்வாதமே என்னைப்போன்றோர்களை மேன்மேலும் ஊக்கப்படுத்தும்...
Deletetha.ma 5
ReplyDeleteதற்போது குஜராத் வளர்ச்சி பற்றி ஊடக கூக்குரல்களின் இந்த நேரத்தில் ஜெர்மன் ,ரஷ்யா சர்வாதிகாரிகள் (ஹிட்லர் -ஸ்டாலின் ) தங்கள் நாட்டை வளப்படுத்தியதையும் மோடியுடன் ஒப்பிட்டு பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை.
ReplyDeleteஉண்மைதான்... மக்களுக்கானதாக இல்லாத எந்தவொரு வளர்ச்சியும் மக்களாட்சிக்கு எதிரானதுதான்...
Deleteகாந்தியை ஏசத் துவங்கி இருக்கும்...இந்திய தீவிரவாத செஞ்சட்டைகள் ...ஸ்டாலினின் உண்மை முகத்தை ஏற்றுக் கொள்ள முன்வருவார்களா?
ReplyDeleteஉண்மைகள் கசக்கத்தான் செய்யும் சார்.... ஏற்கனவே திணிக்கப்பட்ட வரலாறுகளின் அடிப்படையிலான மனநிலையில் மாற்றுப்பரிமாணங்களை ஏற்றுக்கொள்வதுகூட கடினம்தான்... (நான் கோட்சேவின் வாக்குமூலம்கூட எழுதியிருக்கிறேன் சார்...!!!)
Delete, சொந்த மக்களையும், சொந்த கட்சியின் முக்கிய தலைவர்களை கொன்றதையும், தனக்குத்தானே பல பட்டமளிப்புகளை நடத்திக்கொண்டதையும் சிலபல நிகழ்வுகளுடன் நீங்களாக ஒப்பிட்டுக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல நண்பர்களே...!!!// ஆமாமா நாங்க அப்படி எல்லாம் நினைக்கல...
ReplyDeleteகருத்துக்கு மிக்க நன்றி நண்பா...
Deleteஹிட்லரை விட பல மடங்கு கொடிய கொலைகளைச் செய்தவர் ஸ்டாலின். ஹிட்லரை அமெரிக்க அரசு சற்று விளையாட விட்டது. ஹிட்லர் ஒரு scapegoat. அவரை வைத்து ரஷ்யாவை ஒழிக்கலாம் என்பதற்காகவே அவரை ஓட விட்டு பின்னர் வீழ்த்தியதாக ஒரு கருத்து உண்டு. ஹிட்லர் உண்மையில் ஒரு தேசபக்தன். அதற்காக அவரை ஹீரோ அளவுக்கு பாராட்ட முடியாது என்பதும் உண்மையே. ஆனால் அவர் மட்டுமே மிக மோசமானவர் என்ற கதை புனையப்பட்டிருப்பதை ஏற்க முடியாது.
ReplyDeleteஉண்மைதான் காரிகன்... தங்கள் மேலான கருத்துக்களுக்கு என் நன்றிகள்...
Delete//இந்தக் கட்டுரையை தமிழக அரசியல்வாதி யாருடனாவது ஒப்பிட நினைத்து லெனினை அண்ணாவுக்கும், ஸ்டாலினை ஒருவருக்கும், ட்ராட்ஸ்கியை இன்னொருவருக்கும், ஸ்டாலினின் இருதார மணத்தையும், அரசியல் சாணக்கிய காய்நகர்த்தலையும், சொந்த மக்களையும், சொந்த கட்சியின் முக்கிய தலைவர்களை கொன்றதையும், தனக்குத்தானே பல பட்டமளிப்புகளை நடத்திக்கொண்டதையும் சிலபல நிகழ்வுகளுடன் நீங்களாக ஒப்பிட்டுக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல நண்பர்களே...!!!// :) Awesome
ReplyDeleteநன்றி... :-)
Deleteசுவாரஸ்யமான பதிவு.
ReplyDeleteபல அறியாத தகவல்கள்..
நன்றி
மிக்க நன்றி...
Deletepathivu muluvathum thodarnthu 2 murai padithen sir. theriyatha pala puthiya thakaval. thodarungal. apparam lost la ninga sonnathu superu..
ReplyDeleteமிக்க நன்றி மகேஷ்...
Deleteஅட்டகாசமான கட்டுரை!
ReplyDeleteரசித்தேன்.
தங்களின் பாராட்டுக்கு என் நன்றிகள்...
Deleteநான் தங்கள் பதிவுகளைத் தவறாமல் படித்து வருகிறேன்; தெரியாத விசயங்கள் நிறையவேத் தெரிந்துகொள்கிறேன்.
ReplyDeleteஉங்கள் செய்திகளுக்குக் கருத்து சொல்லும் அளவிற்கு எனக்கு அனுபவம் இல்லை.... புத்திசாலித்தனமும் இல்லை.....வெறும் பார்வையாளியாக வந்து போகவே விருப்பம்... நன்றி!
கருத்து சொல்வதற்கு மகா மேதாவியாக இருக்கவேண்டிய அவசியமில்லை... மனதில் பட்டதை, தோணுவதை, சரியென்று படுவதை கூறலாம்...
Deleteஇன்னும் தொடர்ந்து எனது பதிவுகளை படியுங்கள்.... முடிந்தவரை புதுப்புது தகவல்களை அறிமுகப்படுத்த முயல்கிறேன்...
தங்களின் கருத்துக்கு என் நன்றிகள்...
அருமையான வரலாற்றுப் பகிர்வு...
ReplyDeleteரொம்ப விரிவான பகிர்வை அழகாக தொகுத்திருக்கிறீர்கள்....
வாழ்த்துக்கள்.
அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.
ReplyDeleteஅன்று சோவியத்திலும் ஜெர்மனியிலும் நடந்த விசயங்கள் இன்று நம் நாட்டிலேயே அரங்கேறி வருகின்றன... அன்று ஸ்டாலின் தன்னை தெய்வ நிலைக்கு உயரத்திக்கொண்டார் அதைப்போலவே இன்றும் இங்கு ஒருவர் தன்னைத் தானே ஹீரோவாக்கிக் கொண்டுள்ளார் அன்றைய முட்டாள் ரஷ்ய மக்களைப் போலவே இன்றைய நம்முடைய மக்களும் அவரை உய்ரத்திக் கொண்டாடுகின்றனர்.. பின் விளைவுகளை அறியாமலேயே
ReplyDeleteWhat ever I read about Stalin in HISTORY is just HIS-STORY only aaa?
ReplyDeleteஆனால் ஒருவேளை ஹிட்லர் வல்லமை பொருந்திய நாடுகளை எதிர்க்காமல், அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும், சோவியத் யூனியனுக்கும் ஜால்ரா தட்டியிருந்தால்...
ReplyDeleteதனது இனஒழிப்பு வேலைகளை வெளிப்படையாக செய்யாமல், நல்லவன் முகமூடியில் நச்சுப்பாம்பாய் செய்திருந்தால்...
அவர் கொடுங்கோலனாக வரலாற்றில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பாரா?...என்பதுதான் என் சந்தேகம்...!
உண்மையான வரிகள் ப்ரோ கட்டுரை சூப்பர் நானே இவர இவ்ளோ நாளா ரொம்ப நல்லவன்னு நினைத்து கொண்டு இருந்தேன்
கொடுங்கோலனாக ஹிட்லர் காட்சி படுத்த்த பட்டாலும் எனக்கு அவரை பிடிக்கும் ப்ரோ
This comment has been removed by the author.
ReplyDelete"சர்வம் ஸ்டாலின் மயம்" என்ற நூலை வாசித்து நான் அறிந்து வைத்திருந்த ஸ்டாலின் ரொம்ப நல்லவர்.
ReplyDeleteஆனால், அவரது மறுபக்கம் எப்படியென எடுத்துச் சொன்ன தங்களின் எழுத்துவளம் இந்தளவு சிறப்பாக இருக்குமென நான் எதிர்பார்க்கவில்லை.
மிகவும் நன்றி நண்பரே.