சில மாதங்களுக்கு முன் நர்சரி கார்டன் சென்றிருந்தபோது நண்பர்
ஒருவர் அறிமுகப்படுத்திய செடிதான் இந்த நிறம் மாறும் பூக்களைக் கொண்டது. நர்சரி கார்டனில்
இதற்கு சேஞ்சிங் ரோஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். உங்களில் பலருக்கு ஒருவேளை
இதைப்பற்றி தெரிந்திருந்தாலும், நான் நிஜமாகவே அதற்கு முன் இதைப்பற்றி கேள்விப்பட்டதேயில்லை.
இந்தச்செடியில் பூக்கும் பூவானது காலையில் மலரும்போது வெள்ளை
நிறத்திலும், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறி ரோஸ் நிறத்திலும் மாறும் என்று கூறியதை
நான் நம்பாமல் கிண்டலடித்தேன்.
இந்தக்கதையை கேட்டபிறகு நான் அந்தச் செடியை வாங்கி, வளர்த்து
அந்த அதிசயத்தை உண்மையா பொய்யா என்று ஆராய்ந்தே தீரவேண்டுமென முடிவெடுத்தேன்.
சிறிய மரம் போல வளரும் வகையைச் சேர்ந்த இந்தச்செடி காய்ப்பதில்லை.
கிளைகளை வெட்டி நடுவதன் மூலம் பெருக்கப்படுகிறது. நான் வாங்கி வந்து, வீட்டில் நட்டு,
கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆனபிறகுதான் மொட்டுக்கள் கொத்து கொத்தாய் பிடிக்க ஆரம்பித்தது.
அதிசயம்தான்... ஏற்கனவே இது பூக்க ஆரம்பித்து சில மாதங்கள்
ஆகியும் இன்றுதான் திடீரென இதைப்பற்றி பதிவில் பகிர்ந்துகொள்ள தோன்றியது.
இதைப்பற்றிய கதைகள் உண்மையா... பொய்யா... என்பதை காலையில் மலர்ந்ததிலிருந்து மாலையில் சூரியன் மறையும் வரையிலும் விதவிதமான நேரங்களில் நான் எடுத்த இந்த படங்களைப் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்...!
முந்தையநாள் மொட்டாய்...
6.30 AM...
9.30 AM...
11.30 AM...
12.30 PM...
2.30 PM...
4.30 PM...
6.30 PM...
அடுத்தநாள் காலையில்...
சரி... தொடர்ந்து சில அறிவியல் பதிவுகளில் லயித்திருக்கும்
நான் இந்த விஷயத்தையும் ஆராயாமல் விட்டுவிடமுடியுமா என்ன?...
இந்த நிறம் மாறும் விஷயம் பற்றி அறிவியல் உலகம் என்ன சொல்கிறது...
நிறம் மாறும் பூக்கள் பற்றி நிறைய அலசியும்கூட எனக்கு கிடைத்த
தகவல்களின் அடிப்படையில் ஒரே வகைப்பூவில் பல நிறத்தில் இருக்கும் விதவிதமான பலவகைச்
செடிகள் இருக்கின்றன. அதேபோல ஒருசில மலர்களை செடியிலிருந்து பறித்து கலர் கலரான சாயத்தண்ணீரில்
அதன் காம்புகளை சொருகிவைக்கும்போது அந்த நிறங்களை அந்த மலர்கள் உறிஞ்சி, நிறம் மாறும்
விதவிதமான ஆராய்ச்சிகளும் குவிந்து கிடக்கிறது.
ஆனால் செடியில் இருக்கும்போதே இயற்கையிலேயே தனக்குத்தானே
நிறம் மாறும் குணம் கொண்டது (நானறிந்து அலசிய வகையில்) இந்த ஒருவகை பூ மட்டும்தான் என்பது கூடுதல் ஆச்சர்யம்...!
இதன் அறிவியல் பெயர் ஹைபிஸ்கஸ் முயுடாபிலிஸ்...!
5 முதல் 15 அடிவரை உயரம் வளரக்கூடிய இந்தச்செடியில் ஒற்றை
அல்லது இரட்டை அடுக்காக பூக்கும் இதன் பூ 4 முதல் 6இன்ச் வரை விட்டமுடையது (கிட்டத்தட்ட
ஒரு விரிந்த கையின் அளவு...).
இந்தப்பூவும் இதன் இலைகளும் கொண்ட மருத்துவ குணம் வீக்கம்
மற்றும் தோல் நோய்களுக்கு சிறந்த மருந்து என்பதுவும், இதன் பூவிலும் இலையிலுமிருந்து
எடுக்கப்படும் திரவம், பிரசவத்தின்போது சிறந்த மருந்தாக பயன்படுத்தக்கூடியது என்பதுவும்
கூடுதல் தகவல்.
இதன் வகையில் இதேபோல இலையமைப்பு கொண்ட இன்னும் சிலவகை செடியைப்
பாருங்கள். ஆனால் இவையெல்லாம் நிறம் மாறுவதில்லை.
சரி... அறிவியல் உலகில் பூக்களில் மட்டும்தான் இந்த மாற்றம்
என்பதில்லை என்று உங்களுக்கும் தெரியும்.
நிறம் மாறுதல் என்றாலே நமக்கெல்லாம் சட்டென்று நியாபகத்துக்கு
வருவது பச்சோந்திதான். ஆனால் பச்சோந்தி மட்டுமல்ல... இந்த நிறம் மாறும் விஷயம் இன்னும்
விரிந்திருக்கும் தூரம் ஏராளம்...
நிறம் மாறும் உயிரினங்களுக்கு பொதுவான விஷயம் அவையெல்லாமே
எக்டோதெர்ம்ஸ் வகைகள்... (எக்டோதெர்ம் என்பது தனது உடல் வெப்பத்தை தனக்குத்தானே உற்பத்தி
செய்து கொள்ளமுடியாத வகை...). அதேபோல நிற மாற்றத்திற்கு உதவும் ஒருவித சிறப்பு செல்கள்
இந்த எக்டோதெர்ம்ஸ் வகைகளில் மட்டும்தான் உண்டு.
தோலின் செல்களிலிருக்கும் ஒருவித கெமிக்கல் பிக்மெண்ட்ஸ்
சுற்றியிருக்கும் ஒளியிலிருந்து கிரகித்துக்கொள்ளும் நிறத்துக்கு தோலை மாற்றிக்கொள்ள
உதவுகிறது. செல்லில் இருக்கும் குரோமாடோஃபோர்ஸ் எனப்படும் பிக்மெண்ட்ஸ்தான் நிறமாற்றத்திக்கு
உதவும் முக்கிய விஷயம். இவைகளில் மூன்று வகைகள் இருக்கின்றன.
இன்னும் மேலும் மேலும் ஆழத்திற்கு சென்று இதன் நிறம் மாறும்
அறிவியலை பதிவிட்டால் போரடிக்கும் என்பதால் அடுத்து நிறம் மாறும், இதுவரையிலும் நாம்
அறிந்திராத சில உயிரினங்களைப் பார்க்கலாம்... (யாருக்காவது ஒருவேளை இந்த நிறமாற்றம்
குறித்த அறிவியல் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள்... இ-மெயிலில் அனுப்பிவைக்கிறேன்...!)
முதன் முதலில் நமக்குத் தெரிந்த பச்சோந்திகூட Chameleon என்றழைக்கப்படும்
வகையைச்சேர்ந்ததுதான்.
தானிருக்கும் இடத்திற்கு ஏற்ப உடல் நிறத்தை மாற்றிக்கொள்ளும்
இதில் எண்ணற்ற ரகங்கள் இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாத விஷயம்தான்... இதில்
Panthar Chameleon என்ற ரகம் சிறந்த Petஆக பலராலும் வளர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
நிறம் மாறும் உயிரினங்களிலேயே அதிக நிறங்கள் மற்றும் அவற்றின் காம்பினேஷன்களில் நிறம்
மாறும் திறனுடையது இந்த Chameleonsதான் என்பது கூடுதல் தகவல்...
ஃப்லௌண்டர்...
கடலின் தரைப்பகுதியில் வாழும் வகையான இந்தவகை மீன்கள், தன்னை
தற்காத்துக்கொள்ளவும், தனது இரையை வேட்டையாடவும் தானிருக்கும் இடத்திற்கு ஏற்ப தனது
உடல் நிறத்தையும், பேட்டர்னையும் மாற்றிக்கொள்வது அதிசயம்...
பார்ப்பதற்கு சாதாரண மீன்களைப்
போலவே இருந்தாலும் இவைகளுக்கு இரண்டு கண்களும் உடலின் ஒரே பக்கத்தில் இருப்பதுவும்,
இவை உடலின் அடிப்பகுதி மூலமாக உணவு உண்ணும் ரகம் என்பதுவும் கூடுதல் தகவல்...
Peacock Flounder...
Leopard Flounder...
Two sides of a Flounder...
கோல்டன் ராடு கிராப் ஸ்பைடர்...
டெய்ஸி மற்றும் சூரியகாந்தி மலர்களில் வசிக்கும் இந்தவகை
பூச்சிகள் வெள்ளை மற்றும் மஞ்சள் ஆகிய இரண்டு நிறம் மட்டும் மாறக்கூடியன. இவைகள் பூக்களில்
அமர்ந்திருக்கும்போது பறவைகளால் வேட்டையாடப்படாமல் இருக்க இவைகளுக்கு இயற்கை கொடுத்திருக்கும்
தற்காப்பு வரம் இது...!
பெரோன்'ஸ் மரத்தவளை...
சிரிக்கும் மரத்தவளை என்றழைக்கப்படும் இந்த வகைத்தவளைகள்
சிரிப்பது போன்றே ஹைபிட்ச் ஒலி எழுப்பக்கூடியவை. ஒரு மணி நேரத்துக்கும் குறைவான நேரத்திலேயே
தனது உடலின் வண்ணத்தை தேவைக்கேற்ப வெள்ளை, பிரவுன் மற்றும் கிரே நிறங்களுக்கு மாற்றிக்கொள்ளும்
திறமை படைத்தது...
கோல்டன் டார்ட்டாய்ஸ் பீட்டில்...
இது தனது வெளிப்புற ஓட்டின் பிரதிபலிக்கும் தன்மையை மாற்றுவதன்
மூலம் தனது நிறத்தை கோல்டன் கலர் முதல் லேடி பக் போன்ற புள்ளிகளுடன் கூடிய சிவப்பு
நிறம்வரை மாற்றக்கூடிய திறன் படைத்தது...
ஆர்க்டிக் நரி...
ஆர்க்டிக் நரி எனப்படும் இவைகள் கோடைகாலத்தில் லேசான கிரே
முதல் பிரவுன் கலர் முடியுடன் கூடிய தோற்றத்திலும், பனிக்காலத்தில் படர்ந்திருக்கும்
பனியில் ஒன்றி வேட்டையாடும் விதத்தில் முழுக்க முழுக்க வெண்ணிறமாகவும் மாறுகின்றன.
இது மற்ற நிறம் மாறும் தன்மை போல இல்லாமல் சீசனல் நிறம் மாறும் தன்மை என்பதுவும், இதேபோல
இன்னும் சில சீசனல் நிறம் மாறும் விலங்குகள் இருப்பதுவும் குறிப்பிடத்தக்கது...
இந்த நிறம் மாறும் அற்புதத்தைவிட ஆச்சர்யமானதொரு விஷயம்...
உடலமைப்பையே பலவித உயிர்களைப்போன்று மாற்றி ஏமாற்றும் தன்மையைக்கொண்ட மிமிக்
ஆக்டோபஸ்...
தனது உடலுறுப்புகளையும், நகரும் தன்மையையும்கூட ”Sea
snakes, Lionfish, Flatfish, Brittle stars, Giant crabs, Sea shells, Stingrays,
Flounders, Jellyfish, Sea anemones and Mantis Shrimp” போன்ற 15வகையான கடல் உயிரினங்கள்
போன்று மாற்றிக்கொள்ளும் திறன் படைத்தவை இந்த மிமிக் ஆக்டோபஸ்கள் என்பது ஆச்சர்யத்திலும்
ஆச்சர்யம்தான்...
சரி… இதுவரையிலும் நிறம் மற்றும் உடலமைப்பு மாற்றும் சில
உயிர்களை பார்த்தாகிவிட்டது. அடுத்து?...
அடுத்து சிலவகை Camouflage உயிரினங்களை பார்க்கலாம்... அதாவது
தான் சார்ந்திருக்கும் விஷயத்தைப்போன்ற தோற்றத்தைக்கொண்ட சிலவகை உயிரினங்களைப்பார்க்கலாம்...
இதில் சிலவற்றில் உயிரினம் எங்கிருக்கிறது என்று பார்த்ததும்
கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு அற்புதமாய் இருப்பது நிச்சயம் உங்களை ரசிக்கவைக்கும்
ரகம்தான்...!
வழக்கம்போல இந்த அறிவியல் அற்புதங்களையும் அறிந்து, கண்டுகளித்து,
வியந்து ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்...
மீண்டும் சந்திப்போம்...!
நன்றி - இந்தப்பதிவின் தகவல்களுக்காகவும், படங்களுக்காகவும் நான் நுழைந்த பல்வேறு இணையதளங்கள்...!
இயற்கைக்குத் தான் என்னவொரு சக்தி...!!! அற்புத படங்களுடன் விளக்கங்களுக்கு பாராட்டுக்கள்...
ReplyDeleteஅற்புதமான பதிவு..
ReplyDeleteCamoflouge உயிரினங்கள் பல இருக்கும் இடமே தெரியவில்லை ஒருவேளை புகப்படத்தை hotspot format-க்கு மாற்றி
தெரிய வாய்ப்புள்ளதா என பார்க்க வேண்டும்.
சேஞ்ச் ரோஸ் செடி எங்க வீட்டில் இருக்கே!
ReplyDeleteஅறிவியல் பூர்வமான விளக்கம்...
ReplyDeleteகொஞ்சம் தெளிவாக விளக்கியுள்ளீர்...
படங்கள் அருமை...
இயற்கையின் அதிசயங்களை நம்புவதற்கு கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும்....
நீங்கள் குறிப்பிட்டுள்ள நிறம் மாறும் பூக்கள் உள்ள தாவரம் உண்மையே. கலூரியில் படிக்கும் காலங்களில் வீட்டிலிருந்து சைக்கிளில் காலையில் கல்லூரி செல்லும் போது தினமும் பார்பதுண்டு .குடந்தையில் ஒரு கிருஸ்துவ தேவாலயம் ஒன்று இருக்கிறது அதன் முன்னால் இருக்கும் தேட்டத்தில் இந்த வகை செடிகள் இருக்கும். காலையில் அந்த பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். மாலையில் கல்லூரி முடிந்து திரும்பி அதே வழியாக வரும்போது பார்த்தால் அதே பூக்கள் ரோஸ் நிறத்தில் காட்சியளிக்கும்.
ReplyDeleteஅறிய தகவல்...
ReplyDeleteஇந்தப் பதிவிற்காண உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. பாராட்டுகள்..
ReplyDeleteநம்மை சுற்றி இருக்குற அழகான உலகத்த கொஞ்சநேரம் கண்ணுக்குள்ள கொண்டு வந்துட்டீங்க... ஏற்கனவே இதெல்லாம் தெரிஞ்ச விஷயம்னாலும் படிக்க படிக்க நினைவு படுத்த முடிஞ்சுது. சூப்பர்
ReplyDeleteவணக்கம் நண்பரே.
ReplyDeleteபதிவை பார்த்து /படித்து முடிக்கவே தலை சுற்றுகிறது.
எப்படித்தான் தகவல்கள் சேகரித்தீர்களோ , !
பதிவுக்கு பாராட்டுக்கள் . நன்றி.
<><> கோ.மீ.அபுபக்கர்
இந்தச் செடி எங்கள் வீட்டில் இருந்தது.... அழகாய்ப் பூக்கும்... அருமையான தகவல்கள் அடங்கிய அழகிய பகிர்வு....
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வியய்ப்பூட்டும் தகவல்கள். முன்பு ஒருமுறை என்சைக்ளோபீடியாவில் படித்தது. படங்களுடன் அசத்தி விட்டீர்கள். அதிலும் கடல் வாழ் உயிரினங்களைப் பற்றிப் படிப்பது சுவையானது. பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅதேபோல ஒருசில மலர்களை செடியிலிருந்து பறித்து கலர் கலரான சாயத்தண்ணீரில் அதன் காம்புகளை சொருகிவைக்கும்போது அந்த நிறங்களை அந்த மலர்கள் உறிஞ்சி, நிறம் மாறும் விதவிதமான ஆராய்ச்சிகளும் குவிந்து கிடக்கிறது.//
ReplyDeleteஎனக்கு தெரியாத அநேக தகவல்கள் சொன்னமைக்கு நன்றி...!!!
கருத்தும், ஆதரவும், ஊக்கமும் அளித்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....
ReplyDeleteஒரு பூவிற்கு இத்தனை அக்கப்போரா?? அத்தனையும் எனக்கு புதிய தகவல்கள். வாழ்த்துக்கள்
ReplyDeleteஅறிவியல் அற்புதங்களை
ReplyDeleteபடத்துடன் அருமையாகவும் எளிமையாகவும்
விளக்கிப்போகும் தங்கள் பதிவு
அருமையிலும் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
tha.ma 3
ReplyDeleteபடங்களும் தகவலும் மிக மிக அற்புதம்
ReplyDeleteத.ம : 4
ReplyDeleteI think that is one of the most significant information for me. And i am glad reading your article. But wanna commentary on some common issues, The web site style is ideal, the articles is actually nice : D. Good process, cheers gmail login
ReplyDelete