SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Friday, September 6, 2013

பல்சுவை கதம்பம் - 5...

நான் சிந்தித்த,  படித்த,  பார்த்த,  அனுபவப்பட்ட,  கேள்விப்பட்ட,  தெரிந்துகொண்ட,  ரசித்த விஷயங்களையெல்லாம் உங்களுக்கும் அறிமுகப்படுத்துவதுதான் இந்த தொகுப்பு...

பல்சுவை கதம்பம்...

ரோஜாப்பூ : ஒரு குட்டிக்கவிதை / ஹைக்கூ...


நீயும் நானும் ஒன்றுதான்...
உடம்புக்குள் காற்று புகாவிடில்
ஒன்றுக்கும் உதவுவதில்லை...
புல்லாங்குழல்!

 அரளிப்பூ : தத்துவம் நம்பர்-5001...!!!


அன்பு ஆயிரம் அணுகுண்டுகளைவிட வலிமை மிக்கது...!!! (ஆகையால் மக்களே எப்போதும் எவ்வுயிரிடத்தும் அன்பு செலுத்துங்கள்...!!!)

லில்லி : நான் காணும் உலகங்கள் நீ காணவேண்டும்...
உலகில் கொட்டிக்கிடக்கும் விதவிதமான வீடியோக்களை யூ டியூப் போன்ற பல்வேறு இணையதளங்களில் பார்க்கலாம். ஆனால் இதில் எல்லாராலும் எல்லா வீடியோக்களையும் அடையாளம் கண்டு பார்த்துவிடமுடியாது. ஆகவே நான் ரசித்த சிலபல வீடியோக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதுதான் இது...

இதில் நாம் பார்க்கப்போவது மேற்கத்திய பாணி நடனம்தான் என்றாலும் இதில் ஆடும் குழந்தைகள் நமது இந்திய வாரிசுகள் மற்றும் இந்திய வளர்ப்புதான் என்பது ஆச்சர்யம்...

அதிலும் குறிப்பாக இதில் ஆடும் பெண்குழந்தையின் நடனம்... அப்பப்பா... ரிப்பனை சுற்றுவதைப்போல அந்தப்பையன் இந்தப்பெண்ணை சுற்ற இவளும் ரிப்பன் போலவே உடலைச்சுற்றுவது சான்ஸ்லெஸ் மூவ்மெண்ட்...

மிஸ் பண்ணாமல் கண்டிப்பாக பார்த்து ரசியுங்கள்... நிச்சயம் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் நடனம்...நான் ரசித்தேன்... நீங்களும் நிச்சயம் ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்...

மல்லிகை : கொஞ்சம் தெரிஞ்சிக்கனும்...

எதிர்பார்ப்புகள் இருக்குமிடத்தில்தான் ஏமாற்றங்களும் இருக்கும்.
ஐம்புலன்களை அடக்கத்தெரியாதவன் நிறைய இடங்களில் அடிமையாத்தான் ஆகவேண்டும்...!

லாவெண்டர் : போவோமா ஊர்கோலம்?...

இந்தவாரம் நாம் பயணிக்கப்போவது ரஷியாவில் கிழக்கு சைபீரியாவில் இருக்கும் மிர்னி நகரம்... இங்கு அப்படி என்ன இருக்கிறது என்கிறீர்களா?...

உலகின் பெரிய தரைச்சுரங்கங்களுள் ஒன்றான ‘’மிர்னி மைன்’’ இங்கிருக்கிறது. மனிதன் தனது தேவைக்காக என்னவேண்டுமானாலும் செய்வான் என்பதற்கு உதாரணமாக காட்சியளிக்கிறது இந்த வைரச்சுரங்கம்.


சில வருடங்களுக்கு முந்தைய இதன் ஆழம் 525 மீட்டர். அகலம் 1.2 கிலோ மீட்டர்...! இப்போது இது உபயோகத்தில் இல்லை என்றாலும் இன்றளவும் இதுதான் உலகின் தோண்டப்பட்ட சுரங்கங்களில் ஆழத்தில் நான்காவது இடத்தையும் அளவில் இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கிறது என்பது கூடுதல் தகவல்...மேலதிக படங்களுக்கு

மேலதிக தகவலுக்கு...

என்ன?... இதெல்லாம் நேர்ல போய் பாத்து ரிஸ்க் எடுக்கிறதுக்கு போட்டாவுலேயே பாக்கிறதுதான் பெஸ்ட்டுன்னு யோசிக்கிறீங்களா?...

முல்லை : நான் ரசித்த புகைப்படம்...

வாரவாரம் நான் ரசித்த புகைப்படத்தை நதிமூலம்ரிஷிமூலம் எல்லாம் பார்க்காமல் ஜஸ்ட் லைக் தட் இந்தப்படம் இன்ன காரணத்தினால் எனக்கு பிடித்திருக்கிறது என்று அறிமுகப்படுத்துவதுதான் இது...

அவ்வப்போது எனது கேமராவை கேட்டு அடம்பிடிப்பான் எனது நான்கு வயது மகன்... அதேபோல சென்றமுறை அடம்பிடித்து என்னிடம் கேமராவை வாங்கிச்சென்றவன் எங்கள் வீட்டு தோட்டத்தில் அவனே தனியாக சிலபல படங்களை கிளிக்கியிருக்கிறான்... கேமராவின் மெமரியை கிளியர் செய்ய அதிலிருக்கும் படங்களை லேப்டாப்பில் காப்பி செய்யும்போதுதான் கவனித்தேன்...

சாதாரண சோனி டிஜிட்டல் கேமராதான் என்றாலும் இவ்வளவு சிறுவயதில் எடுத்த படங்களில் பெரும்பான்மை சரியில்லை என்றபோதும் சில படங்கள் வெகு நேர்த்தியாய் வந்திருந்தது... நான் மிகவும் ரசித்தேன்...(ஒருவேளை எனது மகன் என்பதாலா என்று தெரியவில்லை?...)
மற்றபடி இதை நீங்களும் ரசித்தீர்களா... இல்லையா... என்பது உங்கள் ரசனையைப்பொருத்ததுதான்...

தாமரை : நாட்டு நடப்பும்... முணுமுணுப்பும்...

நாட்டு நடப்பு -  உணவுபாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றி கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் பசியைத்தீர்த்து வைத்த சோனியாகாந்திக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் – கலைஞர் கருணாநிதி...

முணுமுணுப்பு   ‘’நேத்துதானய்யா மத்திய அரசு தமிழர்கள் விஷயத்தில் தொடர்ந்து பாராமுகம் காட்டுவது கண்டிக்கத்தக்கது… பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு...’’ அப்பிடின்ல்லாம் பில்டப் கெளப்புனீங்க?... அதுக்குள்ளவா இப்பூடி?...!!!
                 ------------------------------------------------------
நாட்டு நடப்பு  நிலக்கரி சுரங்க ஊழல் விஷயத்தில் கோப்புகள் காணாமல் போகவில்லை, திருடப்பட்டிருக்கின்றன – பா.ஜ.க...

முணுமுணுப்பு  கண்டுபுடிச்சிட்டாய்ங்கடா உலகமகா உண்மையை!!! இதுல அவுக வேற இதை மறுக்கிறாகளாம்... காணாம போறதுக்கு அதுக்கென்ன கை காலா இருக்கு?... தானா நடந்துபோக?... களவாணித்தனத்துக்கு ஒரு விவாதம், விளக்கம்னுகிட்டு எத்தனை நாளக்கிதாண்டா இப்புடி?... வெளங்கிரும் பாராளுமன்றம்!!!
                ----------------------------------------------------------
நாட்டு நடப்பு  இலங்கைக்கு இந்தியா இரண்டு போர்க்கப்பல்களை வழங்குகிறது - செய்தி.

முணுமுணுப்பு –  யாரங்கே...  இனிமே முன்னைவிட அதிகமா இந்திய... ஸாரி... தமிழக மீனவர்களை நாசப்படுத்தவேண்டும் என்று இலங்கைக்கு செய்தி அனுப்புங்கள்...!!!’’
                ---------------------------------------------------------------
நாட்டு நடப்பு  பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை விஜயகாந்த்துக்கு வழங்கியது தே.மு.தி.க செயற்குழு கூட்டம்.

முணுமுணுப்பு   ம்ம்ம்ம்ம்... இல்லாட்டி மட்டும் வேற யாராவது முடிவு எடுத்திர முடியுமா என்ன?... ஏன்ப்பூ... கூட்டணி கெடக்குது கழுதை... அத அப்புறம் பாத்துக்கலாம்... முதல்ல கட்சிய காப்பாத்திக்கிற அதிகாரத்த யாருக்காவது வழங்குங்கப்பூ...!
                   ------------------------------------------------------
நாட்டு நடப்பு  ஊழல் மற்றும் கிரிமினல் வழக்கில் சிக்கியவர்களும் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடலாம் – இந்திய ஒலிம்பிக் சங்கம்.

முணுமுணுப்பு  ஆமாம்டா... ஏற்கனவே பதக்கமா வாரி குமிச்சிட்டிருக்கிறோம்... இதுல நீங்க வேற... 
ஆமா... நீங்கெல்லாம் கொஞ்சம்கூட வெக்கமே படமாட்டிங்களாடா?...!!!
                    -------------------------------------------------------
நாட்டு நடப்பு  இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தல் சென்னையில் வைத்து நடைபெறும் – இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன்

முணுமுணுப்பு -  கழுத... அது எங்க வைச்சு நடந்தா என்ன சார்?... எப்படி ஜெயிக்கனும்னு உங்களுக்குத்தெரியாதா என்ன?...
                    --------------------------------------------------------------

என்ன மக்களே... நான் தெரிந்துகொண்ட சில விஷயங்களை நீங்களும்  தெரிந்துகொண்டதோடு பல்சுவையையும் சுவைத்தீர்களா?...

என்ஜாய்... மீண்டும் சந்திப்போம்...!!!

11 comments:

 1. ரசித்தேன்... சுவைத்தேன்... நன்றி...

  ReplyDelete
 2. உங்கள் மகன் எதிர்காலத்தில் பாலு மகேந்திரா போல வருவான் போலிருக்கே ,வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. தங்களின் ஆசீர்வாதம் பலிக்கட்டும்... மிக்க நன்றி சார்...

   Delete
 3. அந்த டான்ஸ் மிகவும் அருமை... அந்த குழந்தை பம்பரம் போல் சுற்றுவதை பார்த்தல்.. அம்மாடியோவ்வ்வ்வ்வ்... பாலே வகை நடனம் என்று நினைக்கிறேன் சரியாக தெரியவில்லை... படங்கல் அருமை அதிலும் முதல் படம் தெரிந்தோ தெரியாமலோ focus அருமையாக வந்துள்ளது. நாட்டு நடப்பில் ஒலிம்பிக் செம பஞ்ச்...

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்.... நானும் அந்த நடனத்தைப்பார்த்து பிரமித்துப்போனேன்... அதனால்தான் பகிர்ந்ததும்...

   Delete
 4. உங்க வாரிசு எடுத்த படம் சூப்பர், அந்த ஆட்டமும் சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அக்கா... தங்கள் பதிவர் சந்திப்பு அனுபவங்களை படித்துக்கொண்டிருக்கிறேன்...

   Delete
 5. உங்க மகன் எடுத்த புகைப்படங்கள் அருமை..

  ReplyDelete
 6. முதல் முறை உங்கள் பக்கம் பார்கிறேன் ...
  நல்ல முயற்சி ...
  பயணத்தில் உங்களோடு கை கோர்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது ....!!!

  ReplyDelete
 7. பல் சுவைப் பதிவு! நன்று!

  ReplyDelete