SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Wednesday, September 25, 2013

தோழியா?... நீ காதலியா?...


தினமொரு முகம் பார்த்தலுக்கு
ஒரே தெருவில் வாழ்ந்ததுமில்லை;
முகம் பார்க்கும் ஆவல்கூட
ஒருநாளும் இருந்ததுமில்லை;

பால்ய பருவத்தில் ஒரு நாளும்
ன்றாக விளையாடியதுமில்லை;
பள்ளிக்கூடத்தில் ஒன்றா
பேசிப்பழகி படித்ததுமில்லை;

இரட்டை ஜடை தாவணி நினைவுகள்
இன்றும்கூட என்னிலில்லை;
இளவயது இரவுகளிலும்
நினைவுகளில் வந்ததுமில்லை;

கல்லூரிப்படிப்பின் வசந்தநாட்களில்
சந்தித்துக்கொள்ள முயன்றதுமில்லை;
ண் ஜாடையில் பேசிக்கொள்ளவும்
ஒருநாளும் காத்திருந்ததில்லை;

சினிமாக்கொட்டகையில் அருகாமையில்
ஸ்பரிசித்த அனுபவங்கள் ஏதுமில்லை;
கனவுகளுக்குள் ஒருநாளும்
கை கோர்த்து நடந்ததுமில்லை;


விழிகள் ரெண்டும் சந்தித்தபோது
வண்ணத்துப்பூச்சிகள் பறந்ததுமில்லை;
புன்னகையில் மின்சாரமெல்லாம்
உற்பத்தியான உணர்வுகளுமில்லை;

இதயத்தில் மின்னல்கள்
ஒருநாளும் வெட்டியதில்லை;
கவிதைகளில் எழுதுவதற்கும்
எதுவுமே இருந்ததுமில்லை;

இயற்கையையும், மழையையும்
மலர்களையும் ரசித்ததில்லை;
இதயத்தில் காதல் வந்த
அறிகுறிகளும் இருந்ததில்லை;

கடிதங்கள், தொலைபேசி என
சொற்கள் எதுவும் பரிமாறவில்லை;
கடைசியாய் கண்டநாளும்கூட
நினைவுகளில் நிலைக்கவில்லை;


அனுபவங்களென்று ஏதுமில்லை என்றாலும்
கடந்து வந்த இளவயது நாட்களில்
எதிர்ப்பட்ட தருணத்தில் எல்லாம்
மறக்காமல் புன்னகைத்துச் சென்றவளை
இன்னமும் தேடத்தான் செய்கிறேன்
இறக்கும் முன் மீண்டுமொருமுறை
என்றாவது சந்திக்க நேரிடுமா
என்னை நான் மறந்து நிற்கும்
ஏதோவொரு நொடியிலேனும்?...

9 comments:

  1. எல்லார் வாழ்க்கையிலும் இப்படி ஒரு நினைவு இருக்கவே செய்கிறது இல்லையா ?

    கவிதை, நினைவுகளின் காலச்சுவடு....!

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான் சார்... ஆழ்மனதில் ஒன்றுமறியாற்போல் உறங்கிக்கொண்டிருக்கும் நினைவுகள் கொஞ்சம் வித்தியாசமானவைதான்...

      Delete
  2. நீங்காத நினைவுகள்..

    அழகிய கவிதை ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சௌந்தர் நண்பா...

      Delete
  3. ரசித்தேன்...

    அன்புடன் DD

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Desire-Greedy.html

    ReplyDelete
  4. புன்னகைச்சதுதான் போதுமே பாஸ். அதுக்கு மேலே நீங்கதான் ரோடு போட்டு இருக்கணும்.

    ReplyDelete
  5. இல்ல அப்போ வெவரம் பத்தாம இருந்துட்டீங்களா ..??!!!

    ReplyDelete
    Replies
    1. இன்னா பிரதர் நீங்க?... இதான வாணாங்கிறது...!!!!

      Delete
  6. படிக்கும் எவரும் ஒருதரமேனும் பள்ளி நாட்களுக்குப் போய் வருவார்கள்.

    "போகிற போக்கில்
    நீ
    சிரித்துவிட்டுப் போய் விடுகிறாய்.

    உனக்கேன்னவோ
    அது ஒரு புன்னகைதான்

    இங்கே பலருக்கு
    அது
    அணுகுண்டாகிவிடுகிறது"

    ReplyDelete