SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Tuesday, September 24, 2013

இந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...


இந்தப் பதிவை நீங்க படிக்கிறீங்கன்னா கண்டிப்பா இது நீங்க, நானு, நம்மளப்பத்தின பதிவுதான்னு முதல்ல தெரிஞ்சிக்கனும்...

திருவாளர் பதிவர்... யார் இவரு?...

டெய்லி என்னத்த எழுதறது?... என்ன தலைப்பு வைக்கிறது?... எப்படி எழுதுனதை நாலு பேர படிக்க வைக்கிறது?... எப்படி நாலு பேருக்கு தெரியிற மாதிரி முன்னணியில வர்றது?ன்னு யோசிச்சி யோசிச்சி ஒன்னொன்னும் செய்யிறதுக்குள்ள... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...யப்பா... அது மட்டுமா?... என்னத்தையாவது எழுதி பப்ளிஷ் பண்ணிப்புட்டு அதுக்கு எதாவது கமெண்ட் வந்திருக்கா?... ஹிட் ஆகியிருக்கான்னு?... வூட்டுல, அலுவலகத்திலனு ஒரு இடம்கூட விடாம யாருக்கும் தெரியாம அப்பப்போ ப்ளாக்கர் அக்கவுண்ட்ல நுழைஞ்சி எட்டிப்பாக்கிறது இருக்கே... நாறப்பொழப்புடா இதுன்னு தலைச்சுத்திப்போற ஆளுதான் இவரு...!


இந்தத் திருவாளர் பதிவர் படுற அவஸ்தை இருக்கே... முதல்வன் படத்தில ரகுவரன் சொல்வார் பாருங்க... ‘’முதலமைச்சர் பதவின்னா என்னான்னு தெரியுமா உனக்கு?... ஒரு நாளைக்கு எத்தனை மாலைகள், எத்தனை மரியாதைகள், எத்தனை கண்ணீர்கள்...’’ அப்பிடின்னு நீளும் பாருங்க... ''இந்தப்பதவி ஒரு முள் கிரீடம் மாதிரி''ன்னுவாரே...

அதேதான்ங்க... ரகுவரன் சொல்ற அந்த முதல்வர் பதவி அவஸ்தையை விடவும் பெரும் அவஸ்தை நம்ம திருவாளர் பதிவரோடதுதாங்க...

வுட்டாக்க ரகுவரன் மாதிரியே ‘’பதிவர்னா என்னான்னு தெரியுமா உனக்கு?... ஒரு நாளைக்கு எத்தனை பேஜ் வியூஸ், எத்தனை கமெண்ட்ஸ், எத்தனை ஃபாலோயர்ஸ், எத்தனை ஓட்டுக்கள், எவன் எப்போ எதிர் கமெண்ட் போடுவான்னு தெரியாது... எவன் எப்போ எவனை கிண்டல் பண்ணுவான்னு தெரியாது... அட பாதிபேரு உண்மையிலேயே பதிவைப்படிச்சிட்டுதான் கமெண்ட் போடுறானான்னுகூட தெரியாதுய்யா... அடுத்தவனுக்கு நீ கமெண்ட் போட்டாத்தான்... உனக்கு அவன் பதிலுக்கு கமெண்ட் போடுவான்... அடுத்தவனுக்கு நீ ஓட்டு போட்டாத்தான்...உனக்கு அவன் பதில் ஓட்டு போடுவான்...


திருவாளர் பதிவர்னு உக்காந்திருக்கிற இந்த நாற்காலியோட நாலு காலும் என்னென்னு தெரியுமா?...

ஒரு காலு விதவிதமா யோசிச்சு சொந்தமா எழுதாட்டியும்கூட பல பேப்பர்ல வர்ற விஷயத்தையோ... இல்லை பல வேற்றுமொழி வலைத்தளங்களோட விஷயத்தையோ காப்பியடிச்சி வித்தியாசமா தலைப்பு வைச்சி சொந்தமா யோசிச்சு எழுதுனமாதிரியே பில்டப் கெளப்புறது...

இரண்டாவது காலு... சினிமா விமர்சனமோ.. கில்மா சமாச்சாரமோ... ஏதோ ஒரு கவர்ச்சி சமாச்சாரத்தை வித்தியாசமா, விவகாரமா தலைப்பு வச்சி எழுதுறது...

மூனாவது காலு... மதம், சாதி, மாமு, மச்சின்னு ஒரு கும்பல் சேத்துக்கிட்டோ, இல்லை கள்ள ஓட்டு போட்டோவாவது பிரபலமா இருக்க வழி பண்ணிக்கிறது...

நாலாவது காலு கவிதைன்ற பேருல கடிச்சித்துப்புறதும், கட்டுரைன்ற பேருல என்ன எழுதுறோம்னே தெரியாம எழுதுறதும், ஒன்னுமே இல்லாத விஷயத்தையெல்லாம் ஊதிப்பெரிசாக்கி மொக்கையை கெளப்புறதும், எப்படியாவது எதிர்மறையா எதையாவது எழுதியும் ஹிட்ஸ் நோக்கியே எய்ம் பண்றதுதான்...

இதுல எதாவது ஒரு காலு உடைஞ்சிட்டாகூட அப்புறம் பதிவர்னு பதிவெழுதி ஒன்னுமே பண்ணமுடியாதுய்யா...’’ அப்பிடின்னு மூச்சு வுடாம டயலாக் பேசுனாலும் பேசுவார் நம்ம திருவாளர் பதிவர்!!!

இந்தத் திருவாளர் பதிவரை ஒரே ரகத்துக்குள்ள அடக்கிற முடியாதுங்க...


சீரியஸா சிலபேரு அரசியல், சமூகம், அது இதுன்னு நல்ல நல்ல கருத்து எழுதிட்டிருப்பாக... நல்லதா அழகா ரசிக்கிற மாதிரி சிலபேரு கவிதை எழுதிட்டிருப்பாக... தங்களோட அன்றாட வாழ்க்கை அனுபவங்களைகூட சிலபேரு அழகான வார்த்தைகள்ல பதிவா போடுவாங்க... வரலாறு, அறிவியல், சட்டம், அறியாத தகவல்கள் இப்படி ஒவ்வொன்னையும் அழகா ரசிக்கிற மாதிரி சிலபேரு எழுதுவாங்க... எவ்வளவோ உருப்படியான விஷயத்தை எழுதி யாருமே படிக்காம கடுப்பாகிப்போகும் திருவாளர் பதிவர் சமூகங்களுக்கு தெரியாது...
இங்கே என்னதான் சீரியஸா டீ ஆத்துனாலும் கூட்டமே இல்லாம போற உங்க கடையை மட்டுமே பார்க்காம... கூட்டம் மொய்க்கிற டீக்கடையையும் கொஞ்சம் எட்டிப்பாத்து கத்துக்கனும்னு...!


பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்... அப்பிடின்னு விதவிதமா இருக்குறாக பாருங்க... அய்ய்ய்யய்ய்யய்ய்ய்யியோ... படிக்கிறவுகளையும், மத்த பதிவர்களையும் மண்டைகாய வுடுறதில ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம்ங்க...!!!

வூட்டுல வெண்டைக்கா வெட்டுனது, தக்காளி வதக்குனதுன்னு எதையாவது கொஞ்சம் எதுகை மோனையோட எழுதனும்...!

உங்க வூட்டுல சுடுதண்ணி வச்சாலும் சரி, தெருமுனையில இருக்கிற தெருவோர பிள்ளையாரை கும்பிடப்போனாலும் சரி... நாலு போட்டாவ கிளிக்கி எதையாச்சும் கிறுக்கத்தெரிஞ்சிருக்கனும்...

ஏடாகூட ரகத்துல அடுத்த படம் ஏதாச்சும் வந்தாக்க, இதுக்கெல்லாமா விமர்சனம் எழுதுவாகன்னு யோசிச்சிட்டு இருக்காம... முந்திக்கிட்டு மொத ஆளா விமர்சனத்தை எழுதி கூட்டத்தை கூட்டிப்புடனும்...!

புடிச்சிருக்குதோ... இல்லையோ... ரெகுலரா, விடா முயற்சியோட நாலு பேரு பதிவுக்கு போயி... ஆஹா, ஓஹோன்னு பாராட்டி கருத்து போட்டு, கூடவே ஓட்டும் போட்டுட்டு வந்துரனும்..!

புரட்சிகரமா எழுதுறேன் பேர்வழின்னு... கிருஷ்ணன் ஒரு காமக்கொடூரனா?... முருகன் ஒரு பொம்பளைப்பொறுக்கியா?... விநாயகர் ஒரு விரசக்கடவுளா?... கோயில்கள் காமக்கூடங்களா?... பாரதத்தை அழிக்கும் பார்ப்பான்கள்... அப்பிடி இப்பிடின்னு ஏடாகூடமா எதையாவது எழுத ட்ரை பண்ணனும்...!

சுயமரியாதையே இல்லாம யாருக்காவது ஜால்ரா தட்டிக்கிட்டே... சுயமரியாதை, பெரியார், தமிழினம், அப்படி, இப்பிடின்னு முழங்கனும்...

மொத்த ஊரே ஒருத்தரையே குறிவெச்சு கழுவி கழுவி ஊத்தினாலும் நீங்க ஒத்த ஆளா நின்னு பாயிண்ட் பை பாயிண்ட்டா எழுதி அவரை எப்படியாவது தூக்கி நிறுத்த முயற்சி பண்ணனும்...

இந்துத்வா ஆதரவு, இந்துத்வா எதிர்ப்பு என இரண்டில் எதில் கை வைத்தாலும் நல்ல அறுவடைதான்...! மோடி ஒரு கேடி... மோடிக்கு கோடித்துணி... மோடிக்கு வெடி... என்றெல்லாம் டைமிங் பார்த்து அடிப்பதும் திறமைதான்...!

முஸ்லீம்களுக்கு இந்தக்கொடுமை... முஸ்லீம்களுக்கு அந்தக்கொடுமை... இஸ்லாம் என்றால் இளக்காரமா?... அப்பிடின்னு தொடர்ந்து எழுதி ஒரு குறிப்பிட்ட வட்டத்தை கவர ட்ரை பண்ணனும்...

ஸ்டேட், சென்ட்ரல் என்று பாகுபாடில்லாமல் அனைத்து அரசியல் திட்டங்களையும் குறைகளின் பார்வையில் மட்டுமே விமர்சிக்கத்தெரியனும்... தப்பித்தவறிகூட எந்தவொரு திட்டத்தையும் நிறையைச்சொல்லி எழுதிரக்கூடாது...!

அந்த, அதுக்கு, செக்ஸ், முத்தம் அப்பிடீன்லாம் தலைப்புல மிக்ஸ் பண்ணி வைக்க முடியுமான்னு ட்ரை பண்ணனும்...!

முடிஞ்சாக்க கொஞ்சம்கூட வெக்கமேயில்லாம ''எறும்பு செக்ஸ் வைத்துக்கொள்வது, கரப்பான் பூச்சி hug பண்ணிக்கொள்வது... பல்லி சுள்ளி பொறுக்குவது...'' என இருக்கும் ஜீவராசிகளையெல்லாம் தேடிப்பிடித்து... ''வீடியோ இணைப்புடன்...'' அப்பிடீன்னு வித்தியாச(!) பதிவு போட்டாலும் ஹிட்டோ ஹிட்தான்...!

எவ்வளவு சீரியஸான விஷயத்தை எழுதினாலும் சரி... இல்லை குப்பை விஷயத்தை கொட்டினாலும் சரி... தலைப்புல மட்டும் ‘’இது தெரியுமா உங்களுக்கு?... அது வருமா உங்களுக்கு?... இப்படி எங்கேயாவது பாத்திருக்கீங்களா?...’’ அப்பிடின்லாம் சம்மந்தம் சம்மந்தமேயில்லாம பேரு வைச்சி ஜனங்களைக்கவர கத்துக்கனும்...! (உதாரணத்துக்கு இந்தப்பதிவோட தலைப்பையே பாருங்களேன்!!!...)

அந்தந்த சமயத்தில எது பரபரப்பு நியூசோ அதுக்கு கண்டிப்பா காரணமே இல்லேன்னாலும் எதிர்மறையா எழுத, ரூம் போட்டு யோசிச்சு சில காரணத்தை உருவாக்கி வரிசையாய் அடுக்கி சும்மா அசரடிக்கனும்...!

அப்பப்போ திருவாளர் பதிவர்களுக்குள்ளாகவே ஒருத்தர் மூஞ்சியில ஒருத்தர் காறித்துப்பி கூட்டம் சேர்க்கவும், கொஞ்ச நாள் கழிச்சு எதுவுமே நடக்காதது போல கை கோர்த்துக்கொள்ளவும் தெரிஞ்சிருக்கனும்...

முக்கியமா... நான் ஹிட்ஸ்க்கோ, பிரபலத்துக்கோ அலையுற ஆள் இல்லை அப்படின்னு அப்பப்போ புரூடா விடத்தெரியனும்...!

கள்ள ஓட்டு போடுறது எப்படின்னு?...எப்படியாவது கத்துக்கிட்டு கூச்ச நாச்சம், கொள்கை, குப்பையையெல்லாம் தூக்கி வீசிட்டு நமக்கு நாமே பல ஓட்டுக்களை குத்திக்கனும்...!

அப்பாலிக்கா ஒரு முக்கியமான மேட்டர் என்னனாக்க... அப்பப்போ இந்த மாதிரி ஒரு பதிவை மறக்காம போடத்தெரிஞ்சிருக்கனும்...!!!

அட... ஒருவேளை இதப்படிக்கிற நீங்களும் பதிவெழுதுற ஆளா இருந்து ‘’இதெல்லாம் ஒரு பொழப்பா?... இந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...’’ அப்பிடீன்னு கோவப்பட்டீகன்னா...
‘’ஹேய்...ஹேய்... நோ பேட் வேர்டுஸ்...’’ அப்பிடின்னு உங்களுக்கு நான் பொறுமையா சொல்லிக்கிறது ஒன்னே ஒன்னுதான்...

நீங்க ‘’திருவாளர் பதிவர்’’ ஆகுறதுக்கு லாயக்கே இல்லேங்க...!

மீண்டும் சந்திப்போம்...!!!

பின்குறிப்பு – நான் ''திருவாளர் பதிவர்'' ஆகும் முயற்சியில் அதற்கான ஆராய்ச்சிப்படிப்பில்(!) ஈடுபட்டுக்கொண்டிருப்பதால்தான் எதிர்கால சந்ததியினர்க்கு இந்த சிறிய வழிகாட்டல்...!!! மற்றபடி இந்த ஆராய்ச்சிக்காக எனக்கு நீங்க ''டாக்டர்'' பட்டம் கொடுக்கிறதும், கொடுக்காததும் உங்க இஷ்டம்தான்...! (வெளங்கிரும்னு உங்க மைண்டு வாய்ஸ் எனக்கு கேக்குது!...)

தொடர்புடைய இடுகைகள்...
21 comments:

 1. //திருவாளர் பதிவர்'' ஆகும் முயற்சியில் அதற்கான ஆராய்ச்சிப்படிப்பில்(!) ஈடுபட்டுக்கொண்டிருப்பதால்தான் //
  அப்போ நீ அப்ரண்டீசா

  ReplyDelete
  Replies
  1. அமைதியா வேல பாருங்கடா அப்பரண்டீசுகளா...!!!

   Delete
 2. நீங்கள் சொல்வதையெல்லாம்
  கடந்தால் மட்டுமே நல்ல பதிவராய் இருக்க
  முடியும்னு நினைக்கிறேன்
  பதிவர் அவஸ்திகளைச் சொல்லிப்போனவிதம் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. //இதுல எதாவது ஒரு காலு உடைஞ்சிட்டாகூட அப்புறம் பதிவர்னு பதிவெழுதி ஒன்னுமே பண்ணமுடியாதுய்யா//
  "மாற்று பதிவாளி" ன்னு ஒரு "குருப்" ப உருவாக்குவோம்ல

  ReplyDelete
  Replies
  1. ஏன்?... ஏன் இப்புடீ?... ஏன் இந்தக்கொலவெறி?...

   Delete
 4. பாஸு ஒரு ஒட்டுப் போட்டு இருக்கிறேன். என்னடா நான் தொண்டை தண்ணி வத்த ஸாரி, கை வலிக்க இவ்ளோ எழுதி இருக்கேன் நீ அசால்ட்டா ஒரு ஓட்டை போட்டு இருக்கேன்னு சொல்றன்னு நீங்க திட்டுறது கேக்குது ஆனாலும் என்ன செய்ய, எனக்கு கள்ள ஓட்டு போடத்தெரியாது. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க மானாவாரியா அள்ளிப்போட்டுர்றேன் ஹி ஹி ஹி...

  ReplyDelete
  Replies
  1. ஸ்ஸ்ஸ்... என்னா பாஸூ நீங்க... கள்ள ஓட்டு போடுற டெக்னிக்கெல்லாம் பப்ளிக்கா கேக்குறீக?.... தனியா கேளுங்க... ஃபுல் ட்ரைனிங் கொடுத்திரலாம்...

   Delete
 5. அப்புறம் ஒரு கமெண்டும், ஒரு ஓட்டும் வரல்லன்னா பிச்சுப்புடுவேன் பிச்சு.... ஆமா பாஸு இந்த ஒட்டை வச்சு mla/ Mp ஆகலாமா??? ஒரு டவுட்டுதான், கல்லெடுக்காதீங்க...

  ReplyDelete
  Replies
  1. நம்மகிட்ட மொய் எழுதாதவுகளுக்கே செழிப்பா மொய் செய்யப்படும் என்பதால் ஒரு மொய் எழுதிய நீங்களும் செமத்தியாய் கவனிக்கப்படுவீர்கள்...!!!

   Delete
 6. அப்புறம் உங்களோட இந்த பதிவை பிரிண்ட் போட்டுட்டேன். இனிமே இததான் ஃபுல்லா ஃபாலோ பண்ண போறேன். ஆமா அந்த ஹிட்ஸ வச்சு செவ்வாய் கிரகத்துல ஒரு ப்ளாட் வாங்கலாமா?? ஏன்டா உனக்கு இந்த அமிஞ்சிக்கரை, அண்ணா நகர் எல்லாம் பத்தாதோ?? இல்லா பாஸ் நான் வாங்குனா செவ்வாய் கிரகத்துலதான் பாஸ். நான் வெயிட் பண்றேன்...ஹி ஹி ஹி

  ReplyDelete
  Replies
  1. கரிக்ட்டுதான் பாஸூ... பிளாட் வாங்கும் போது ரெண்டா வாங்குங்க... ஒருவேளை நான் முன்னாடினாக்கா... உங்களுக்கும் சேத்து நான் வாங்கி வைக்கிறேன்... டீலா?... நோ டீலா?...

   Delete
  2. இவ்ளோ நாளும் "கெரகம் புடிச்சி போறவனே" ன்னு திட்டுனத மாத்தி இனி "கெரகம் புடிக்க போறவனே" ன்னு திட்டுவாங்களோ

   Delete
  3. அட... ஆமா இல்லே?... (ஆமாவா?... இல்லையா?...!!!)

   Delete
 7. நகைச்சுவையாக சொல்லப்பட்டிருந்தாலும், ஒவ்வொன்றும் நிதர்சன உண்மையே. ஹிட்ஸ் மோகத்தில் நிறைய நல்ல பதிவுகள் அடித்துச் செல்லப்படுவது சற்று கடுப்பாகத்தான் இருக்கிறது. என்றேனும் ஒரு நாள் இனங்கண்டு கொள்ளப்படுவோம் என்பது தான் நம்பிக்கையாக இருக்கிறது. விடாமுயற்சியுடன் நல்ல பதிவுகளாக எழுதுங்கள் விரைவில் சிகரம் தொட வாழ்த்துக்கள் நண்பா.

  ReplyDelete
 8. mokkai....


  http://sivaparkavi.wordpress.com/

  ReplyDelete
  Replies
  1. ஏன்ங்க இப்பூடி?... நான் என்ன இதை அறிவியல் ஆக்கப்பூர்வ படைப்புன்னா சொன்னேன்?... பக்கா மொக்கைதாங்க இது...

   Delete
 9. முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. என்னக்கா... ரொம்ப நாளுக்கு அப்புறமா மொய் எழுதியிருக்கீக?...
   அம்மாவுக்கு உடம்பு சரியாயிடுச்சிங்களா?...

   Delete
 10. செம காமெடியாத்தான் சொல்லிருகீங்க... பட் யோசிச்சா கொஞ்சம் சீரியஸ் விசயத்த தான் பேசிருக்கீங்க... இதுக்கும் ஒரு திறமை வேண்டும்.... வாழ்த்துக்கள்...

  ReplyDelete