SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Saturday, September 21, 2013

அம்மாவின் அடுத்த கூட்டணி யாருடன்?...


எங்கு பார்த்தாலும் மோடி எதிர்ப்பலைகள் ஒரு பக்கம்… ஊழலுக்கு எதிராக மோடிக்கு ஆதரவான கருத்தலைகள் ஒரு பக்கம்…

அது எல்லாம் இருக்கட்டும்... இங்கு தமிழகத்தில் அம்மாவுக்கும் பிரதமர் கனவு வந்து வெகுநாளாகிவிட்டது... ‘’நாற்பதும் நமக்கே... அம்மாவை பிரதமர் அரியணையில் அமரவைக்காமல் ஓயமாட்டோம்’’… என்றெல்லாம் அவருடைய அடிப்பொடிகள் கூவித்திரிந்தாலும் அது நடக்குமா?... நடக்க வாய்ப்பிருக்கிறதா?...

அம்மா கடந்து வந்த வரலாறுகளை திரும்பிப்பார்க்கும்போது தேர்தலுக்கு முன் சிலபல கட்சிகளுடன் கூட்டணி வைப்பதும்... தேர்தல் வெற்றிகளுக்குப்பின் அவர்களை வெற்றிலை பாக்கு மென்று துப்புவது போல துப்புவதும் அம்மாவுக்கு கைவந்த கலையாகி விட்டது என்பதே விளங்குகிறது...

தி.மு.க – காங்கிரஸ் – தே.மு.தி.க கூட்டணி அமையலாம் என்று செய்திகள் இறக்கை கட்டத்தொடங்கியிருக்கிறது... காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தமிழர்களுக்காக விலகியது போல விலகியதும், பின் அவர்களையே வானளாவ புகழ்ந்து...  விட்டுவிட மனமில்லாமல் ஒட்டிக்கொள்ள துடிப்பதுவும் அவரவர் அரசியல்... அதை ஏற்றுக்கொள்வதும், புறக்கணிப்பதும் ஓட்டுரிமை இருக்கும் அவரவரின் தனிப்பட்ட முடிவு...

அதே போல மோடியும், அம்மாவும் நல்ல நண்பர்கள் என்ற போதும், இன்று பிரதமர் நாற்காலி அவர்கள் இருவருக்குள்ளும் மியூசிக்கல் சேர் நடத்தும் நிலைமைக்கு அம்மாவை கொண்டு வந்திருக்கிறது... நண்பர் மோடியை ஆதரிப்பதா?... இல்லை நானே பிரதமர் வேட்பாளர்... நான் எப்படி நண்பரை ஆதரிப்பது என்பதோ அம்மாவின் தனிப்பட்ட முடிவு... எப்படியானாலும் அம்மா இருக்கும் வரையிலும் கழகம், கட்சி, முதல் நிலை, இரண்டாம் நிலை எல்லாமே அம்மாதான்... அ.தி.மு.க.வில் மற்றவர்கள் எல்லாமே சும்மாதான் என்பது நாடறிந்த செய்தி...

சரி... அம்மாவின் அடிப்பொடிகள் அடுத்த பிரதமர் அம்மாதான் என்று கூவுவது ஒரு பக்கம் இருக்கட்டும்... உண்மையிலேயே இன்று தேசிய அரசியலில் அதற்கான வாய்ப்புகள் என்ன?... அம்மாவின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கவேண்டும்?... நாற்பதும் நமக்கே என்று தனித்து போட்டியிடுவது நிச்சயம் நன்மை பயக்காது என்பது அம்மாவுக்கு தெரியுமோ இல்லையோ?... தேசிய அரசியலை உற்று நோக்கும் நடுநிலையாளர்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் தெரியும்...

தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்குமான மாற்று சக்தியாய் மக்கள் வை.கோ.வை நம்பத்தொடங்கிய நாட்களில் கூட்டணி சேற்றில் சிக்கி, இன்று வை.கோ. என்ற தனிமனிதனைத்தவிர கட்சி என்ற ஒன்று கரைந்து போய் பலமிழந்து நிற்கிறார்... (தங்களுக்கான மாற்று சக்தியாய் வளர நினைப்போரை அன்பாய் அரவணைப்பதைப்போல அரவணைத்து பின்னர் கொஞ்ச கொஞ்சமாய் கரையச்செய்து நாறடிப்பதில் தி.மு.க, அ.தி.மு.க என்ற பாகுபாடு ஏதுமில்லாமல் பணியாற்றுவதில் இரண்டு கட்சிகளுமே கில்லாடிகள்தான்...) 


ஆனாலும் வை.கோ. என்ற தனிமனிதன் மட்டுமாவது நிச்சயம் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும்... அப்படியொரு சூழ்நிலையில்தான் ஒவ்வொரு எம்.பி.யும், தான் நாடாளுமன்றத்தில் எப்படி பேசவேண்டும்?.... தங்களைச்சார்ந்த மக்கள் தன்னை ஏன் நாடாளுமன்றத்திற்கு அனுப்பினார்கள் என்று பாடம் கற்றுக்கொள்ள ஏதுவாயிருக்கும் என்பது வை.கோ பற்றி நானறிந்த எனது தனிப்பட்ட கருத்து... என்னைப்பொருத்தவரையில் நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமாய் விவாதிப்பதில் வை.கோ.வை மிஞ்ச ஆளில்லை என்பதே நிஜம்..


தே.மு.தி.க.வை ஏற்கனவே அம்மா ஏறி மிதித்தாகிவிட்டது... இனி அவர்களோடு கைகோர்க்க இந்த நாடாளுமன்றத்தேர்தலில் வாய்ப்பில்லை... தி.மு.க.வோ, காங்கிரசோ எவர் வேண்டுமானாலும் தே.மு.தி.க.வுடன் கை கோர்த்துக்கொள்ளட்டும்... அது அவரவர் முடிவு... பிரதமர் கனவில் இருக்கும் அம்மாவுக்கு காத்திருக்கும் அடுத்த கதவுகள் என்னென்ன?...

அம்மா தனது தனிப்பெரும்பான்மையை அடுத்து வரும் நாடாளுமன்றத்தேர்தலில் தேசிய அளவில் நிரூபிக்க தனித்து போட்டியிடுவதென்பது நிச்சயம் நன்மை பயக்காத ஒன்று... கடந்த கால வரலாறுகளில் ஆயிரம் தவறுகள் அம்மா பக்கம் இருந்தாலும் எப்போதுமே அரசியல் வட்டாரத்தில் இந்திராகாந்திக்கு பிறகு அவரைப்போன்றதொரு இரும்புப்பெண்மணி என்ற பட்டத்திற்கு பொருத்தமானவர் நினைத்ததை செய்யும் அம்மா மட்டுமே... (மம்தா பானர்ஜியும் மாயாவதியும் இந்தப்போட்டியில் இருந்தாலும், அம்மாவின் முன் அவர்கள் எல்லாம் பின்தங்கியே இருக்கிறார்கள்... அதேபோல நினைத்ததை எவருக்கும் பயப்படாமல் செய்ய முடிவெடுக்கும் இந்திராகாந்தியின் குணத்தில் எந்தளவுக்கு நன்மையிருக்கிறதோ... அதே அளவு தீமையும் இருக்கிறது என்பதுவும் கடந்தகால வரலாறுதான்...!) இது எல்லாவற்றுக்கும் மேல்... அம்மாவின் ஆட்சி இந்த முறை ஒருசில குறைகள் இருந்தாலும், ஆவரேஜ் என்றால் முந்தைய ஆட்சியோடு ஒப்பிடும்போது பாராட்டும்படியாகவே இருக்கிறது... இருந்தாலும் தன்னை சுற்றியிருப்பவர்களை மட்டுமே நம்பாமல், கொஞ்சம் நாட்டு நடப்புகளையும், மக்களின் நாடித்துடிப்பையும் அறிந்து செயலாற்றினால் இன்னமும் அதிகமாய் மிளிரலாம் என்பதும் உண்மைதான்...

தனித்து போட்டியிடும் (விபரீத)முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை அம்மா புரிந்து கொண்டால் நலம் பயக்கும்... ‘’நாற்பதும் நமதே’’ என்ற கனவை ஓரம் தள்ளிவிட்டு அதிக சேதாரமில்லாமல் லாபம் தரும் ஒரு கூட்டணியை அம்மா அமைக்கவேண்டுமென்றால் அது...

அ.தி.மு.க – பா.ஜ.க – ம.தி.மு.க – வலதுசாரி – இடதுசாரி கூட்டணியை அமைப்பது மட்டுமாகத்தான் இருக்கமுடியும்...

இப்படிப்பட்ட ஒரு கூட்டணியை அமைக்கும் பட்சத்தில் நாற்பதிலிருந்து கொஞ்சம் இறங்கி பா.ஜ.க.வுக்கு இரண்டு சீட் + ம.தி.மு.க.வுக்கு ஒரு சீட் + இடது சாரி & வலது சாரிகளுக்கு தலா இரண்டு சீட் என  மொத்தம் ஏழு முதல் எட்டு சீட் வரை தானம் செய்ய தயாராகும் பட்சத்தில் குறைந்தது இருபத்தைந்து முதல் முப்பது சீட் வரை தனித்து வென்றெடுக்க அம்மாவுக்கு சாத்தியமாகலாம்...

தேசிய அரசியலில் ஒருவேளை பா.ஜ.க. வெற்றி பெரும் பட்சத்தில், மோடியே பிரதமர் ஆனாலும்கூட தேசிய அளவில் தனது செல்வாக்கை நிலைநாட்ட அம்மாவுக்கு நிச்சயம் அந்த முப்பது சீட்டுகள் கை கொடுக்கும்...

தேசிய அரசியலில் செல்வாக்கை நிலைநாட்ட அம்மாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைப்பது என்பது அவரது நடவடிக்கைகளை நாட்டுக்கு உணர்த்தி, ஒருவேளை எதிர்வரும் காலங்களில் அவருக்கு பிரதமர் நாற்காலி உண்மையிலேயே தகுதியானதுதானா?... இல்லையா?... என்பதை உணரவைக்கும் ஒரு காரணியாகக்கூட விளங்கக்கூடும்...

கைகளில் மை வைக்க இன்னும் காலமிருக்கிறது... எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்பது இந்திய போதுஜனத்தின் இறுதிநேர ஓட்டளிக்கும் முடிவைப்பொறுத்தது என்பதால் இதுதான் என்று அடித்துச்சொல்ல எதுவுமில்லை...

பொறுத்திருந்து பார்க்கலாம்... அரசியல் கூட்டணிகளையும், தேர்தல் நாடகங்களையும்...!

மீண்டும் சந்திப்போம்...!!!

8 comments:

 1. கம்யூனிஸ்ட் கட்சிகளும் பாஜக வும் ஒரே அணியில் (வெளிப்படையாக) இருக்க மாட்டார்கள். மற்றபடி நீங்கள் சொல்வது சரி!

  ReplyDelete
  Replies
  1. நிஜம்தான்... கம்யூனிஸ்ட் கட்சிகள் பா.ஜ.க.இருக்கும் அணியில் இணையமாட்டார்கள்தான்....
   ஆனாலும் இது அ.தி.மு.க.வுக்கு நன்மை பயக்கும் கூட்டணி எனும் எனது அவா மட்டுமே...
   தங்களது மேலான கருத்துக்கு மிக்க நன்றி...

   Delete
 2. நல்ல அலசல்
  அம்மா அவர்கள் கொடுக்கிற சீட்டை கூட்டணிக் கட்சியினர்
  வாங்கிக் கொள்ள வேண்டும் என்கிற நெருக்கடி
  கொடுக்கவே நாற்பதும் நமதே என்கிற கோஷம் என
  நினைக்கிறேன்.பார்ப்போம்

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ஐயா... பொறுத்திருந்து பார்ப்போம்...

   Delete
 3. Good points to AIADMK. It would be a better coalition if ADMK(27), MDMK(4, also 3 in smoe cases), PMK(4), Comm(4). But not sure of JJ's jealousy. Any number more than 20 is a good result as far as ADMK to show its presence in Delhi. Even though I m not a pro-ADMK, but I want this to happen.

  Coming to VAIKO - YES u r right. He should go to parliament. Had he gone to parliament earlier instead of sippiparai Ravichandran, in eelam issue he would have definitely made a mark in parliament. A man like him always in parliament is definitely good for Tamil Nadu and Tamil people.

  ReplyDelete
  Replies
  1. Yes... all your points are true and valid one...
   Thanks for your comment...

   Delete
 4. அருமையான அலசல்...
  அரசியலில் எதுவும் நடக்கலாம்...
  பாமக கூட அம்மாவிடம் போகலாம்...
  எல்லாம் அரசியல்தான்...

  ReplyDelete