SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Tuesday, September 10, 2013

வாசம் தொலைத்த மலர்கள் இரண்டு...


உன் கண் பார்த்து எனக்கு
காதல் வந்த காலங்களில்-நம்
வாய் வார்த்தை மௌனமானதில்
வாழ்க்கையது மாறிப்போனது...
வசந்தங்களும் வாடிப்போனது;

திசைக்கொருவராய் சிதறச்செய்த
வாழ்க்கைச் சக்கரத்தின் வேகச்சுழற்சியில்
வேரறுந்த காட்டுமரமானவனை
விழுதுகளாய் தாங்கத்துடிக்கிறாய்
பொட்டல் காடாகிப்போன - என்
வாழ்க்கை பூமியில்
வசந்தங்களை விதைக்கத் தூவுகிறாய்...


கண்ணீர் விட்ட காலங்கள் போதும் - இனி
காதல் தண்ணீர் விட்டு முளைக்கச்செய்வோம்...
மகரந்தச்சேர்க்கையே நடக்காமல் போனாலும்
மகசூல் மட்டுமாவது குறையாமல் பார்ப்போம்...

விளையக்காத்திருக்கும் வசந்தங்களனைத்தையும்
உனக்கானதாகவோ இல்லை எனக்கானதாகவோ
ஒருபோதுமதை ஒருபுறமாய் நடத்தாமல்
நமக்கானதாய் மாற்றிக்கொண்டு
நம்மை நாமே நேசித்து வெல்வோம்...

இருபதில் தொலைத்த போதும்
இனி இரு பதில் எதிலுமின்றி
ஒரு பதிலாய் இனியாவது
அறுபதிலும் இணைந்திருப்போம்...

என்னுடனான உன் நீண்டதூர பயண ஆசையும்,
உன்னுடனான என் கை கோர்க்கும் ஆசைப்பயணமும்,
என்னுடனான இளையராஜா இசை கமழும்
உன் தனிமைத்தருண ஆசையும்,
உன்னுடனான என் நெற்றி முத்த ஆசையும்,
என்னுடனான உன் மழைக்கால மலைவாசஸ்தல ஆசையும்,
உன்னுடனான என் வாழ்க்கைகால பந்த ஆசையும்,
என்னுடனான உன் தோள் சாயும் பவுர்ணமி கடற்கரை ஆசையும்,
உன்னுடனான என் மடியில் தலை சாய்க்கும் ஆசையும்,
என்னுடனான உன் கல்லூரிப்பயண ஆசையும்,
உன்னுடனான என் இதழ் பருகும் ஆசையும்,
நம்முடனே நசுங்கிப்போகாமல்
நமக்கானதொரு வாழ்க்கையை
வாழ்வோமா தெரியவில்லை?...


கருவேல பூவானாலும்
காற்றோடு கதை பேசலாம்...
காகிதப்பூக்களானபின்
காதல் சொல்லி என்ன செய்ய?...

விடையில்லா கேள்விகள்
ஒருபோதும் ஓயாது...
தொலைந்து போன தருணங்கள்
ஒருபோதும் திரும்பாது...


எதிர்கால ஏக்கங்களும்
நிகழ்கால நிஜங்களும்
நெஞ்சுக்குள் சத்தமிட்டு
நித்தம் ஒரு சண்டையிடும்...

நல்லதா?... கெட்டதா?...
நம்மிலான உணர்வு என்று
நம்மை நாமே கேட்டுக்கொள்ள
இது வரைக்கும் மனமுமில்லை - இது
கெட்டுப்போகும் வழியுமில்லை...


என்னை நீ நம்புவதும்
உன்னை நான் நம்புவதும்...
எனக்கான தேடலாய் நீயும்
உனக்கான தேடலாய் நானும்...
வருங்கால வாழ்விலாவது
வருத்தங்கள் தொலைத்து நின்று
வாசம் தொலைத்த மலர்கள் இரண்டு
வாழ்வை மட்டுமேனும் தொலைக்காமல் நின்று
நமக்கானதொரு வாழ்வை வாழ
இனியேனும் இங்கே
வழிகளென்று ஏதுமுண்டோ?...

13 comments:

 1. ரசித்தேன்...

  இளையராஜா இசை மட்டும் தான் பிடிக்குமோ...?

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. ஐயோ தலைவா... இவ்வளவு வேகமா?... பதிவை வெளியிடும் அடுத்த நொடியிலேயே உங்கள் கருத்து வந்து விழுகிறது... இதே வேகத்தில் சென்றால் மதுரை எக்ஸ்பிரஸ் கின்னஸ் சாதனையில்தான் போய் நிற்கும் என்று நினைக்கிறேன்... :-)

  ReplyDelete


 3. கதம்ப மாலை...
  கவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் சொந்த தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது! விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...  அன்பு நண்பர்களுக்கு...
  தேடிச்சோறு நிதந்தின்று
  பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
  மனம் வாடித்துன்பமிக உழன்று
  பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
  நரை கூடிக்கிழப்பருவமெய்தி
  கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
  பல வேடிக்கை மனிதரைப்போலே
  நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!
  Tuesday, September 10, 2013 2/2  வாசம் தொலைத்த மலர்கள் இரண்டு...  உன் கண் பார்த்து எனக்கு
  காதல் வந்த காலங்களில்-நம்
  வாய் வார்த்தை மௌனமானதில்
  வாழ்க்கையது மாறிப்போனது...
  வசந்தங்களும் வாடிப்போனது;


  திசைக்கொருவராய் சிதறச்செய்த
  வாழ்க்கைச் சக்கரத்தின் வேகச்சுழற்சியில்
  வேரறுந்த காட்டுமரமானவனை
  விழுதுகளாய் தாங்கத்துடிக்கிறாய்…
  பொட்டல் காடாகிப்போன - என்
  வாழ்க்கை பூமியில்
  வசந்தங்களை விதைக்கத் தூவுகிறாய்...

  கண்ணீர் விட்ட காலங்கள் போதும் - இனி
  காதல் தண்ணீர் விட்டு முளைக்கச்செய்வோம்...
  மகரந்தச்சேர்க்கையே நடக்காமல் போனாலும்
  மகசூல் மட்டுமாவது குறையாமல் பார்ப்போம்...


  விளையக்காத்திருக்கும் வசந்தங்களனைத்தையும்
  உனக்கானதாகவோ இல்லை எனக்கானதாகவோ
  ஒருபோதுமதை ஒருபுறமாய் நடத்தாமல்
  நமக்கானதாய் மாற்றிக்கொண்டு
  நம்மை நாமே நேசித்து வெல்வோம்...


  வார்த்தைகளில் சிக்சர் அடித்திருக்கிறீர்கள்.. முழுக் கவிதையும் ரசித்தேன் !

  ReplyDelete
  Replies
  1. தங்களின் ரசனைக்கு மனமார்ந்த நன்றி நண்பா...

   Delete
 4. ஆஹா காபி பேஸ்ட் செய்ததில் முழுப் பக்கமும் வந்தாச்சு போல.. !

  ReplyDelete
 5. வருங்கால வாழ்விலாவது
  வருத்தங்கள் தொலைத்து நின்று
  வாசம் தொலைத்த மலர்கள் இரண்டு
  வாழ்வை மட்டுமேனும் தொலைக்காமல் நின்று
  நமக்கானதொரு வாழ்வை வாழ
  இனியேனும் இங்கே
  வழிகளென்று ஏதுமுண்டோ?...//

  நிச்சயம் உண்டு
  இத்தனை முதிர்ச்சியும் புரிதல்களும்
  உள்ளவர்களுக்கு நிச்சயம் வழிகள்
  இருந்துதானே ஆகவேண்டும்
  மனம் கவர்ந்த கவிதை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் மேலான வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா...

   Delete
 6. என்னை நீ நம்புவதும்
  உன்னை நான் நம்புவதும்
  >>
  நம்பிக்கைதானே எல்லாம்!

  ReplyDelete
 7. வாழக்கையை தேடியப்பயணம்..!

  அழகிய கவிதையில்

  ReplyDelete
 8. நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....! //மனதால் எப்போதும் இளமையாய் இருங்கள்

  ReplyDelete
 9. உன் ஆசையும் என் ஆசையும் மிகவும் அழகான அருமையான வரிகள்...

  ReplyDelete