SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Tuesday, September 3, 2013

மோடியை எதிர்ப்பவர்கள் ஊழலுக்கு கொடிபிடிக்க ரெடியா?...


கட்டுரைக்குள் செல்லும் முன்னர் இந்த சுயவிளக்கத்தை நான் தந்தே ஆகவேண்டும் என்பது கட்டாயம்...

நான் – எந்தக்கட்சியையும் சார்ந்தவனல்ல...
நான் – எந்தக்கட்சிக்கும் எதிரானவனல்ல...
நான் – மதவெறியன் அல்ல...
நான் – ஊழலற்ற இந்தியா நிச்சயம் வல்லரசாய் ஒளிரும் என்று நம்பி நம்பி நடக்கும் ஊழல்களையும், மக்கள் விரோத மங்குனித்தனங்களையும் பார்த்து மனதுக்குள் வெதும்பும் உங்களைப்போன்ற ஒரு சாமான்யன் மட்டுமே...

ஏற்கனவே பாரதப்பிரதமராவதற்கு அடுத்த தகுதி யாருக்கு?... என்று ஒரு கட்டுரையை கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னால் எழுதியிருந்தேன்... அந்த என் நிலைப்பாட்டில் இப்போதும் என்னிடம் எவ்வித மாற்றமும் இல்லை...

பெரும்பாலான மீடியாக்களும், சமூக வலைத்தள பங்காளர்களும், பெரும்பாலான கருத்துக்கணிப்புகளும் பாரதத்தின் அடுத்த பிரதமராய் கை காட்டி, கை தூக்கிவிடுவது மோடியைத்தான்...

அவர் மீது நம்பிக்கை வைக்கும் நடுநிலையாளர்கள் கூட்டத்தைப் போலவே, அவர் மீது வெறுப்பை உமிழும் நடுநிலையாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்... இப்படி இரு தரப்பு நடுநிலையாளர்களின் பல்வேறு வாதங்களும் இரு தரப்பு கருத்துக்களையும் நியாயப்படுத்திக்கொண்டிருக்கும் வேளையில், ஒருசில மதவாத கூட்டமும் மோடிக்கு எதிரான வெறுப்பை உமிழும் வேலையைச்செவ்வனே செய்துதான் வருகிறது.

நான் மோடிக்கு ஆதரவானவன் அல்ல என்றாலும் இந்தக்கட்டுரையின் சாராம்சமாய் மோடியை எதிர்ப்பவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்...

மோடி அப்பழுக்கற்றவராய் இல்லாமல் இருக்கலாம்...

மோடி ஒருவேளை உண்மையிலேயே குஜராத்தில் ஒரு மண்ணும் சாதிக்காமல் கூட இருக்கலாம்...

மோடி மதவாதியாய் ஒரு காலத்தில் இருந்திருக்கலாம்... இப்போதும்கூட ஒருவேளை அப்படியே இருக்கலாம்...

மோடியை விடவும் தகுதியான ஒருசிலர் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர்களாய் இருக்கலாம்...

ஆனால் அகில இந்திய அளவிலான பாப்புலாரிட்டி என்ற ஒரு விஷயத்தைத்தொடும்போது காங்கிரசுக்கு எதிரான சக்தியாய் முதலிடத்தில் வீற்றிருப்பது மோடிதான் என்பதை மறுக்கமுடியுமா?...


மோடி ஆட்சிக்கு வந்தால் தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளும், மதக்கலவரங்களும் நடக்கலாம் என்றும், மோடி தங்கள் மதத்திற்கு எதிரானவர் என்றும் வெறுப்பை உமிழ்வோரெல்லாம் புரிந்து கொள்ளவேண்டியது ஒன்றுதான்... மோடி பிரதமராகவே ஆனாலும்கூட இங்கு அப்படியெல்லாம் நடந்துவிட சகோதரத்துவத்துடன் வாழ நினைக்கும் இந்திய மக்களும், நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளும், இன்னமும் சாகாமல் ஓரளவுக்கு உயிர்ப்புடன் இருக்கும் நீதிமன்றங்களும் ஒருபோதும் அனுமதித்துவிடமாட்டார்கள்...

முதல் ஐந்தாண்டுகளிலேயே வரலாறு காணாத ஊழல்களில் நாட்டை நாசப்படுத்திய காங்கிரசுக்கு அடுத்து வந்த தேர்தலில் அதளபாதள தோல்வியை அளித்து மக்கள் ஒரு பாடம் புகட்டியிருந்தால்... சோனியோ... மோடியோ... யாராக இருந்தாலும் மக்கள் மீது ஒரு பயம் இருந்திருக்கும்... ஆனால் இங்கு நடந்தது என்ன?... அத்வானியின் பிரதமர் கனவினாலேயே வலுவான எதிரணி பிரதமர் வேட்பாளர் இல்லாமல் போய், தொடர்ந்து இரண்டாவது தடவையும் காங்கிரசுக்கு அரியணையை வழங்கி வரலாற்று பிழை புரிந்தோம் இந்திய மக்களாகிய நாம்...

விளைவு?... அடடா... நாம் எவ்வளவு ஊழல் புரிந்தாலும் சரி... எவ்வளவு மக்கள் விரோத தனியார் மய வேலைகளைச்செய்தாலும் சரி... தேர்தல் நேரத்தில் பணத்தை தூக்கி வீசினால் கவ்விக்கொண்டு நம்மை கச்சிதமாய் அரியணையில் அமர்த்துவார்கள் இந்திய மக்கள் என்ற எண்ணம் மனதில் பதிந்து கேட்பாரின்றி நடக்கிறது மெகா ஊழல்கள்... சர்வ சாதாரணமாக ஆதாரங்களை தொலைத்து ஊத்தி மூடப்படுகிறது மெகா ஊழல்கள்... ஊழல்களையும், மக்கள் விரோதப்போக்கையும் நினைத்து கொஞ்சம்கூட தயக்கமோ, வெட்கமோ, மக்கள் மீதான பயமோ துளிகூட இல்லாமல் நடக்கிறது ஆட்சி...


நிலக்கரி சுரங்க ஊழலில் கோப்புகள் தொலைந்து போனதற்கு விளக்கமளிக்கும் பிரதமர் மன்மோகன்சிங் ‘’நான் ஒன்றும் நிலக்கரி சுரங்க அமைச்சகத்தின் கோப்புகளின் பாதுகாவலன் அல்ல’’ என்று கூசாமல் பேசுகிறார்... அப்படியென்றால் எந்தவொரு அமைச்சகத்தின் செயல்பாடுகளும் பிரதமருக்கு கீழ் இல்லை என்கிறாரா?... பிரதமர் பதவி என்பது வெறுமனே பொம்மை போல அலங்கரிப்பதற்கு மட்டும்தான் என்கிறாரா?... நிலக்கரி சுரங்க ஊழலில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை சமாளிப்பது எப்படி என்று நடந்த ஒரு அமைச்சரவைக்கூட்டத்தில் நிலக்கரி சுரங்க ஊழலையும், கோப்புகள் தொலைந்ததையும் நியாயப்படுத்திப்பேச என்னென்ன வழிகள் இருக்கிறது என்றுதான் ஒட்டுமொத்த கூட்டமும் விவாதித்திருக்கிறார்களேயொழிய ஒருவர்கூட இப்படிப்பட்ட ஊழல் நடக்க காரணம் யார்?... அவருக்கு என்ன தண்டனை?... எதிர்காலத்தில் இதுபோன்ற ஊழல்கள் நடக்காமலிருக்க என்ன செய்யலாம்?... என்றெல்லாம் மூச்சுகூட விடவில்லை என்பது நம்மை... மக்களை... கிள்ளுக்கீரையாக அவர்கள் நினைக்கும் நமது தலையெழுத்தை நொந்துகொள்ள வேண்டிய செய்தி...!


தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு கடுமையான சட்டத்திருத்தம் கொண்டுவர முயலாத அரசு... குற்றவாளிகள் பதவியில் நீடிக்கக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உடனடியாக சட்டத்திருத்தத்தை அமல்படுத்துகிறார்கள்...!!!

ஊழல் பணத்தை திருப்பிக்கொண்டு வருவதைப்பற்றி துளியும் கவலைப்படாத அரசு, பொருளாதாரத்தை மேம்படுத்துகிறேன் பேர்வழி என்று கோயில்களில் இருக்கும் மக்கள் பணத்தையும் கண்வைக்கத் தொடங்கியிருக்கிறது. உண்மையிலேயே பொருளாதாரத்தை மேம்படுத்த கருப்புப்பணத்தையும், சாமியார்களின் சொத்துக்களையும் மூலதனமிட தைரியமிருக்குமா இவர்களுக்கு?... (மேல்மருவத்தூர், புட்டப்பர்த்தி, நித்தியானந்தா, கல்கி... என்று நாடு முழுவதும் நீளும் லிஸ்ட்டின் சொத்து மதிப்பை கூட்டினால் தலைச்சுற்றிப்போகும் என்பது மட்டும் நிச்சயம்...!!!)

பொருளாதார வீழ்ச்சி, மெகா ஊழல்கள், அந்நிய ஆக்கிரமிப்புகள், தனியார் மயம் என்று அடுக்கிக்கொண்டே போக ஆயிரம் வேலைகளைச் செய்திருக்கிறது காங்கிரஸ் அரசு...

கைச்சின்னத்தில் இருக்கும் கை கண்ட இடத்திலும் கைவைத்து மக்கள் பணத்தை சுருட்டத்தானோ என்பது போலாகிவிட்டது...!!!

மோடியை எதிர்ப்பவர்களிடம் நான் கேட்க விரும்புவது ஒன்றே ஒன்றுதான்... மோடி ஒன்றும் அப்பழுக்கற்ற அரசியல்வாதி அல்ல... அவர் பிரதமரானாலும்கூட ஊழல்கள் நடக்கத்தான் செய்யும்...

ஆனாலும்... திக்விஜய் சிங், கபில் சிபல், சல்மான் குர்ஷித், நாராயணசாமி போன்ற காமெடிக்கூட்டத்திற்கு பதிலாய் மோடி, அத்வானி, வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ் போன்ற கூட்டம் எவ்வளவோ தேவலை இல்லையா?...


அகில இந்திய அளவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்காமலிருக்க சரியான டஃப் கொடுப்பதற்கு மோடியைத்தவிர வேறெந்த தலைவராவது இருக்கிறார்களா?...

அண்டை நாடுகள் இந்தியாவின் தலைமைப்பதவியில் ஒரு வலுவான தலைமை அமர்ந்திருப்பதாக உணர்ந்து வாலாட்டாமலிருக்க மோடிக்கு என்பதைவிட பா.ஜ.க.வுக்கு மீண்டும் வாய்ப்பளிப்பது தவறா?...

மதவாதம் என்ற ஒற்றை வார்த்தையின்கீழ் எதிரணியின் எல்லா தவறுகளும் நியாயமாகிப்போகுமா?...

மூன்றாவது முறையும் காங்கிரசை நீங்கள் அரியணையில் அமர்த்தி நாட்டையே மொத்தமாய் சுரண்டித்தின்றாலும் சரி... இல்லை அடகு வைத்தாலும் சரி... மறுபடி மறுபடியும் உங்களிடம்தான் அதிகாரத்தை கொடுப்போம் என்ற தவறான முன்னுதாரணத்தை வரலாற்றில் பதிய நீங்கள் ரெடியா?...

என்னைப்பொருத்தவரை மீண்டும் காங்கிரஸ் அரியணையில் அமராமலிருக்க தேசிய அளவில் மோடியைத்தவிர வலுவான தலைவர் வேறெவரும் இல்லை என்பதால், மோடியை எதிர்ப்பவர்கள் எல்லாருமே மீண்டும் காங்கிரசை ஆட்சியில் அமர்த்தி இன்னும் பல வரலாற்று மெகா ஊழல்களுக்கு கொடிபிடிக்க ரெடியாவதாகவே அர்த்தம் கொள்கிறேன்...

மோடியை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு மீண்டும் காங்கிரசுக்கு வாக்களித்து ஆட்சியை ஒப்படைக்க நினைப்பதும், ஏற்கனவே வார்டு முதல் நாடு வரை நம்மை ஆண்டு கொண்டிருக்கும் கூட்டங்கள் ''நாம் என்ன செய்தாலும் நம்மை ஒன்றும் செய்யாத இவர்கள் மக்கள் அல்ல... மாக்களே''... என்று கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் நம் மீதிருக்கும் வாக்கு பயத்தை போக்குவதும் ஒன்றுதான் என்பதால் கொஞ்சமாவது சிந்தியுங்கள் மக்களே... 

நாட்டின் மீது அக்கறைகொண்ட ஒரு சராசரி இந்தியனாய் நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு குமுறுபவர்கள் எல்லாம் இன, மத உணர்வுகளைத்தாண்டி காங்கிரஸ் கையில் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்காமல் இருப்பதைத்தவிர நாட்டுக்காய் செய்யமுடிந்தது வேறொன்றும் இருக்கமுடியாது என்பது என் தாழ்மையான கருத்து...!

இங்கே எல்லா கூட்டமும் திருடர் கூட்டம்தான் என்றாலும்... இருப்பதில் பரவாயில்லை திருடன் யார் என்று பார்ப்பதுதானே நம் தலைவிதி?...

தொடர்ந்து பேசுவோம்...!!!

தொடர்புடைய இடுகைகள்...


12 comments:

 1. //ஒருசில மதவாத கூட்டமும் மோடிக்கு எதிரான வெறுப்பை உமிழும் வேலையைச்செவ்வனே செய்துதான் வருகிறது.//

  unmai.

  ReplyDelete
 2. #இங்கே எல்லா கூட்டமும் திருடர் கூட்டம்தான் என்றாலும்... இருப்பதில் பரவாயில்லை திருடன் யார் என்று பார்ப்பதுதானே நம் தலைவிதி?...#இது உங்களின் கருத்து !என் வலைப்பூவில் நான் இன்று இட்ட கருத்து ...
  #கொடியை ஏற்றி முடிந்ததும் ,பல கோடி மதிப்புள்ள ஆபரணங்கள் கட்சிக்கே சொந்தம்ன்னு கூட சொல்லுவார் !#
  நம் தலைஎழுத்து என்று மாறுமோ ?

  ReplyDelete
 3. நேர்மையான பதிவு. பெரும்பாலான இந்தியர்களின் மன நிலையும் இதுதான். ஆனால், பா.ஜ.க, கர்னாடகத்தில் தனக்குக் கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். குஜராத், மத்திய பிரதேசம் மானிலங்கள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன. எந்த மாற்று அரசும் உதிரிக்கட்சிகளின் ஆதரவோடு அமையப்போகிற ஆட்சியாகத்தான் இருக்கும். கஷ்டம்தான். காங்கிரஸ் போக வேண்டிய தருணம் வந்துவிட்டது. அவர்களுக்கே அது தெரிந்த விஷயம்தான். ஒவ்வொரு இந்தியனும், பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஒன்றுபட்டு வாழ்ந்தால், நன்மை உண்டு நமக்கெல்லாம்.

  ReplyDelete
 4. தேசப்பற்றுள்ள ஒவ்வொரு இந்தியனின் ஆதங்கம் தான் இந்த வரிகள். எந்த ஒரு பிரச்சினைக்கும் ஒரு தெளிவான அரசாங்கம் தரக்கூடிய பதிலை இந்த காங்கிரஸ் ஒரு போதும் தந்ததே இல்லை. பிரச்சினையை திசை திருப்பக்கூடிய அனைத்து கீழ்த்தர வேலைகளையும் செய்ய முனைப்புடன் இருக்கும். திறம்பட முடிவு எடுத்து செயலாற்றுவதில் இருக்கும் அனைவரையும் விட மோடி சிறந்தவர்தான்.அவர் ஆக்கப்பூர்வமாக செய்த அனைத்தையும் விட்டு விட்டு, குழி விழுந்த பஸ் ஸ்டாண்டை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துவிட்டு என்னமோ இந்தியாவின் மற்ற பகுதியில் எல்லாம் பாலாறும் தேனாறும் ஒடுவது போல தோற்றத்தை உருவாக்குவதால் எதுவும் நேரப்போவதில்லை. காங்கிரஸ் என்னும் திருட்டு கும்பலுக்கு நாட்டை தாரை வார்ப்பதைத் தவிர.

  ReplyDelete
 5. வெகு நிச்சயமாய் காங்கிரஸ் விரட்டியடிக்க படவேண்டும்.
  அதில் மாற்று கருத்தே இல்லை. எனது விருப்பமும் மோடி தான்.

  ReplyDelete
 6. வெகு நிச்சயமாய் காங்கிரஸ் விரட்டியடிக்க படவேண்டும்.
  அதில் மாற்று கருத்தே இல்லை. எனது விருப்பமும் மோடி தான்

  ReplyDelete
 7. நடுநிலையாளர்களின் விருப்பமும் எதிர்பார்ப்பும் உங்கள் எழுத்துக்களில் பிரதிபலிக்கிறது.

  ReplyDelete
 8. ஆமாம் தங்களது ரேஸில் முதலிடம் பிடித்த நிதிஷ்குமார் எங்கே? தங்களது ஓட்டு பெட்டியில் அவருக்கு ஒரேயொரு ஓட்டுகூட விழவில்லை போலிருக்கே தாங்கலாவது ஒரு வாக்கு போடக்கூடாதா பாவம்யா வருங்கால பிரதமர், ,,,,,,

  ReplyDelete
  Replies
  1. இப்போதும்கூட மோடியைவிட நிதீஷ்குமாருக்குத்தான் திறமை அதிகம் என்பேன் நான்... ஆனாலும் திறமை வேறு... பாப்புலாரிட்டி...அதாவது மக்களிடம் தேசிய அளவில் ரீச் ஆன தலைவர் என்பது வேறு...
   பல்வேறு அம்சங்களையும் ஆராய்ந்து பார்க்கையில் காங்கிரசை வீழ்த்த இப்போது மோடியை விட்டால் இந்தியாவில் ஆளில்லை என்பதுதான் நிதர்சனம் நண்பா...

   Delete
 9. Hi,

  I strongly support Modi in this election, even though he will not do anything to Tamil Nadu for serious issues like eelam, kaveri water, fishermen being shot etc. But why Modi? To say in his words - "Corruption free India, Congress free India". This bloody old party is looting, looting and looting a lot and people like Kapil Sibal, Chidambram, Dig Vijaya justify it through idiotic statements. Those people who oppose Modi have only one point called Godra riots(here we should also take note of pre-Godra riots at Godra station burning sevaks). But after that he had rules the state for 10years without any riots. Some of his opposer are trying to create an image as if in the whole of India all the Muslims and Christians will be attacked on the next day of his anointment. In these 10 years Gujarat has grown a lot to have surplus funds and has not seen a single communal violence. Many things we can enlist here.

  Always a country should be ruled by a leader, so that other countries will respect us and not try to show their power to us. If BJP is in power China and Pakistan will not act like what they are doing now.

  There is also another scam called Thorium scam, which is bigger than Coal & 2G. So this idiotic party has many such feather to its hat and we have to show them their doors.

  Thanks,
  MGSP

  ReplyDelete
 10. Good cover story for wealthy INDIA .All Indians should be read and realized .Anybody can translate this article into Hindi and English for people of India.Can do it?

  ReplyDelete