SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Monday, September 9, 2013

கவிதை மாலை - நான் ரசித்த கவிதைகள் 02 to 08-09-2013வரை...

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...


பதிவுலகில் சென்ற வாரத்தில் நான் படித்ததில் என்னைக்கவர்ந்த சில கவிதைகளை சில வாரங்கள் அறிமுகப்படுத்தினேன். இடையில் சிலபல மனத்தாங்கலால் அதைத்தொடராமல் விட்டேன்... ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா என்பார்கள்...!!! அதேபோல இப்போது மீண்டும் அதே வேலை...

அதன் தொடர்ச்சியாய் 2013 செப்டம்பர் 2 முதல் 8ம் தேதி வரையிலான பதிவுலக கவிதைகளில் எனது ரசனையின் அடிப்படையிலான தொகுப்பு இங்கே...

நான் படித்தவைகளில் சிறந்தவைகளை மட்டுமே இதில் வரிசைப்படுத்துகிறேனேயொழிய நான் தவறவிட்ட நல்ல கவிதைகளும் நிச்சயம் இருக்கலாம்...(நான் அளித்திருக்கும் தரவரிசை கவிதைகளுக்கு மட்டுமேயொழிய அதன் படைப்பாளிகளுக்கு அல்ல... அதுமட்டுமின்றி இந்த தரவரிசை எனது ரசனையின் அடிப்படையிலானது மட்டுமே என்பதை மீண்டும் மீண்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்...)

இந்த வாரம் என்னைக்கவர்ந்ததில் முதலிடம் பிடிப்பது இரு கவிதைகள்...
 
முதலில் தீபிகா என்பவர் எழுதிய குடியிரவு எனும் கவிதைதான்...

குடிப்பழக்கத்தினால் நிகழும் சமூகச் சீரழிவுகளைவிட அந்த தனிப்பட்ட குடும்பத்தின் வேதனைகள் எப்படிப்பட்டது?... அதை வேடிக்கை பார்க்கும் சமூகத்தின் மனது எப்படிப்பட்டது என்பதையெல்லாம் சாமான்யரும் உணரும் கவிதை மொழியில் குடிகாரனின் குணம் முதல் அரசியல் வரை பட்டென போட்டு  உடைத்திருக்கிறார் ஆசிரியர்...

படித்தவுடனேயே பட்டென்று மனதில் நின்று முதலிடத்தை பிடித்த கவிதையிது...

இரவைக் கிழித்துக் கொண்டொலிக்கும்
குடிகாரனின் தத்துவப்பாடலில்
கரைந்து கசிகிறது
ஒரு குடும்பத்தின் கண்ணீர்.

வெட்கமும், அவமானமும் தின்ற
அவனது
வளர்ந்த பெண்பிள்ளைகளின் முகங்கள்
கண்ணீர் குடித்து வீங்கியிருக்கின்றன.

என்று மிக வலிமையான உணர்வுக்கோர்ப்பில் யதார்த்தத்தைச்சுட்டி தன் கவிதையை ஆரம்பித்திருக்கிறார்...

    கவிதையை கடைசியாய் முடித்தவிதம் ஆயிரம் பாராட்டுக்களுக்கு சொந்தமானது என்பதில் ஐயமில்லை...

ஒரு முறை முழுவதும் படித்துத்தான் பாருங்களேன்...


                                                        --------------------------------

அடுத்து முதலிடத்தை பகிர்ந்து கொண்ட அடுத்த கவிதை...

பெயரற்றவன் கனவு என்ற தலைப்பில் ஒரு யதார்த்தத்தின் வித்தியாச கோணத்தை கவிதையாக்கி வி.பாலகுமார் என்பவர் எழுதியது...

பெரும்பாலும் நியாயமாக வாழ நினைப்பவனை முட்டாளாக... கையாலாகாதவனாக பார்க்கத்தொடங்கியாகிவிட்டது இந்தச்சமூகம்... அப்படிப்பட்ட வாழ்க்கைச்சூழலில் ஒரு யதார்த்த சிந்தனையை புதுக்கவிதையாய் வார்த்தைகளில் கொட்டிய இதன் தனிச்சிறப்புதான் இதை ரசித்து முதலிடம் தரவைத்தது என்னை...

பெயரற்றவன் கனவு
குழு நிழற்படங்களின் ஓரத்தில்
பாதியாய் தெரிபவன்

எதற்கான எதிர்வினையாயும்
தலைகவிழ்ந்த ஒற்றை சிரிப்பை உதிர்ப்பவன்

என்று ஒரு சாமான்யனின் குணத்தை விவரிக்கும் வார்த்தைகளுடன் ஆரம்பிக்கும் கவிதையை முழுவதும் படித்துத்தான் பாருங்களேன்...


                                                 ------------ X -------------இந்த வாரம் நான் ரசித்த கவிதைகளில் இரண்டாமிடத்தைப் பிடித்தது மொத்தம் மூன்று கவிதைகள்... (வாரா வாரம் பதிவுலகில் வழக்கத்தைவிட அதிகமான எண்ணிக்கையில் கவிதைகள் அதிகரித்துக்கொண்டிருப்பது என்னை திக்குமுக்காட வைக்கும் விஷயம்!!!)

மனவரிகள்-இன்றேனும் ஒரு நாள் என்ற தலைப்பில் எங்கள் பிளாக் என்ற தளத்தில் எழுதிய கவிதை எல்லோரையும் நிச்சயம் கவரும்...

எளிமையான வார்த்தைகளில் மனிதர்களின் அன்றாட மனஓட்டத்தை சொல்வதாய் நீள்கிறது கவிதை...

யதார்த்தங்கள் 
மறந்த வாழ்வில் 
சதா இருக்கும் 
கவலைகளை மறந்து 
இன்றேனும் ஒருநாள் 
இயல்பாய் இரு!

இன்னும் இருக்கின்றன 
நாட்கள்... 
இன்னும் இருக்கின்றன 
கவலைகள்.....
என்றும் கிடைக்காது 
சாபவிமோசனம்..
அவை கிடக்கட்டும்..
இன்றேனும் ஒருநாள் 
இயல்பாய் இரு!

என்று இயல்பான வார்த்தைக்கோர்ப்பு மிகச்சிறப்பாய் அமைந்து மனிதர்களின் நிம்மதியற்ற மனநிலையையும், முகமூடிகளையும் அகற்றி ஒரு நாளாவது வாழ்வில் நிம்மதியாய் இருங்கள் என்று வேண்டி முடிந்திருக்கிறது கவிதை...

இதுவரை படிக்காமல் தவறவிட்டவர்கள் படித்து ரசியுங்கள்...

                    
                                                    ----------------------------------------

அடுத்து இரண்டாமிடத்தை பகிர்ந்து கொள்ளும் அடுத்த கவிதை என்கவுண்டர் கவிதை... எனும் தலைப்பில் கே.ஆர்.பி.செந்தில் அவர்களால் எழுதப்பட்ட கவிதை...

இன்றைய சூழலில் எதற்கெடுத்தாலும் எதிர்வாதமும் புரிய ஒரு கூட்டமிருப்பதையும், எழுதியவரின் கருத்துக்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் புரிந்து கொள்வதையும், விமர்சிக்க தகுதியற்றுப்போய் எழுத்தாளரையே ஒழித்துக்கட்ட நினைக்கும் மனப்பான்மையையும் என இன்னும் இன்னும் ஏராளமாய் இன்றைய சமூகச்சூழலை யதார்த்தமானதொரு கவிதை நடையில் படம் பிடித்து காட்டியிருப்பது ரசிக்கவைத்தது...

எனது பார்வையில் நிச்சயமிது இரண்டாமிடத்துக்கு தகுதியான ஒரு சிறப்பான கவிதைதான்... மிகவும் ரசித்தேன்...

ரசிக்க விரும்புபவர்களுக்கு...


                                                       ----------------------------------------------

இரண்டாமிடத்தைப் பகிர்ந்து கொள்வதில் இடம் பிடித்திருக்கும் அடுத்த படைப்பு நான் இசைக்கும் ஒற்றைப்பாடல் என்ற தலைப்பில் எம்.ரிஷான் ஷெரீப் என்பவர் எழுதியிருப்பது...

சந்திப்பதற்கான ப்ரியம்
பச்சிலைகளிலான கிளியொன்றின் அசைவிலிருந்து
ஆரம்பிக்கிறது
உன்னிடம் பகரக்காத்திருக்கும் சொற்களையெல்லாம்
தனக்குள் பதுக்கி வைத்திருக்கிறது அக்கிளி

ஒரு வாழைமரத்தைப் பிரதிபலிக்கிறது
நீ பரிசளித்த அக் கிளி
சிறகுகள் சுற்றிக்கட்டப்பட்ட அதற்குக்கனவுகளில்லை
கிளையில்லை; ஆகாயமில்லை
ஒரு கூண்டு கூட இல்லை...

என்று ஆரம்பித்து நிதானமாய் படித்துப்புரியும் வண்ணம் ஆழமான கருப்பொருளுடன் வார்த்தைகளை கோர்த்து எழுதியிருப்பது மிகச்சிறப்பு...

இந்தக்கவிதை முழுக்க முழுக்க வித்தியாசமான உணர்வுக்கோர்வைகளை உண்டாக்கி காட்சிகளை நம் கண் முன்னே விரியச்செய்வதாய் அமைந்திருப்பது மிக அருமை...

ரசித்தேன்... மிகச்சிறப்பான கவிதையிது...

நீங்களும் ரசிக்க...


                                        ------------- X -------------

எனது ரசனையில் இந்த வாரம் மூன்றாமிடத்தைப் பிடித்திருப்பது மொத்தம் ஆறு(!) கவிதைகள்...

முதலில் ராமலிங்கம் முரளிகிருஷ்ணன்(அகலிகன்) என்பவர் எழுதிய ஏனோ தெரியவில்லை எனும் கவிதை...

யதார்த்த நிகழ்வுகளை, உணர்வுகளை கவிதையாக்குவது புதுக்கவிதையை எளிதாக வெற்றியடையச்செய்யும் வழிகள் என்று நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன்...அப்படிப்பட்ட ஒரு கவிதைதான் இதுவும்...

சாமன்ய ரசிகனுக்கும் புரியும் வகையில் கவிதையின் கருப்பொருளை சொல்லிய விதம் தனிச்சிறப்புதான்...

சில வரிகள்...

இனி
எப்போதுமே
அழைக்கமுடியாது
என அறிந்தும்
அழிக்கமுடிவதில்லை
சில எண்களை – கைபேசியிலிருந்து.

முழுதும் படிக்க http://agaligan.blogspot.in/2013/09/blog-post.html 
                          ------------------ X ------------------
அடுத்து மூன்றாமிடத்தை பிடித்த மற்றொரு கவிதை சிதறல்-4 எனும் தலைப்பில் பிரியா என்பவர் எழுதிய குட்டிக்கவிதைகள்...

ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதமான உணர்வலைகளை உண்டாக்கிச்செல்வது தனிச்சிறப்பு...

பெரும்பாலும் சில உணர்வுக்கவிதைகள், கவிதை எழுதும் பழக்கமுடையவர்கள் படிக்கும்போது உள்மனதில் சில கோடிட்டு செல்லும்... சாமான்ய ரசிகர்கள் ஒருவேளை அந்த உணர்வைப்பெறாமல் போகலாம்... கவிதையெழுதும் பெரும்பான்மையோரின் உள் மனதில் சில பல ஏக்கவரிகள்... உணர்வுகள் ஓடிக்கொண்டேயிருக்கும்... அதன் வார்த்தை வெளிப்பாடு கவிதையாய் மாறும்போது அதன் உணர்வு வீரியம் மிக அதிகமானதாய் இருக்கும்...

இந்த குட்டிக்கவிதைகள் ஒவ்வொன்றுமே அப்படிப்பட்ட குணாதிசயங்களில் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல என்கின்றன

சில வரிகள்...

யாருமற்ற
கணங்களின் யோசிப்பில்
ஏதோ ஒன்றின்
ஆரம்பப் புள்ளியாய்
சில நினைவுகள்...

படித்துப்பாருங்கள்... வீரியம் புரியும்...

                                   -----------------------------X------------------------------

சுரேஷ் சுப்ரமணியன் என்பவர் ரிஷ்வன் எனும் பெயரில் எழுதியிருக்கும் இப்பத்தான் நியாபகம் வந்ததா -கவிதை எனும் கவிதையும் இந்த வாரம் மூன்றாமிடத்தை அலங்கரிக்கிறது...

கவிதையின் கருப்பொருள் இன்றைய காதலின் சூழல்களையும் சொல்ல முடியா தவிப்பையும் உணர்த்துவதாய் இருப்பதும், கவிதையின் வார்த்தை நடையும், கவிதையை முடித்த விதமும் என்னை மிகவும் கவர்ந்திழுத்தது...

சில வரிகள் உங்கள் ரசனைக்கு...

அலுவல் இடைவெளியில் 
நிறைய பேசுவோம்

இடையில் வந்து 
சுஜாதாவும் 
பாலகுமாரனும் 
கதை சொல்வார்கள் 

போரடித்தால் 
மணிரத்னமும் 
ஷங்கரும் 
படம் காட்டுவார்கள் 

சமயத்தில் 
வாலியும் 
வைரமுத்தும் 
காதில் வந்து 
காதல் மொழி 
ஊற்றுவார்கள்

தொடர்ந்து படித்து கவிதையை முழுமையாக ரசிக்க...


             --------------------- X --------------------

அடுத்த கவிதையும் மேலே பார்த்தது போன்றதொரு காதல் கவிதைதான்... இதை எழுதியிருப்பது அக்கா ராஜி அவர்கள்... (அவ்வப்போது ராஜி அக்காவின் கவிதைகளை படிக்கும்போதும் அதன் தரத்தை பார்க்கும் போதும் அவர்கள் புத்தகம் வெளியிடும் காலம் நெருங்கிவிட்டதாகவே உணர்கிறேன்...)

காதலில் பிரிவுத்துயரையும், பிரிந்த சூழலிலும் துணையை எதிரியாய் எண்ணாத மனதையும் மிக அருமையாய் கவிதையாய் கோர்த்து, இறுதியில் முத்தாய்ப்பாய் முடித்திருப்பது மிக மிக ரசிக்க வைத்தது...

மனதின் குமுறல்...
உன் கடுஞ்சொற்களால் நான்
வீழ்ந்து போனாலும் கூட,
உன் நினைவுகள்
என்னைவிட்டு விலகவில்லை!!

நாம் இருந்த இடங்கள் யாவும்
மறைந்து போனாலும் கூட,
நீ விட்டுச் சென்ற
தடயங்கள் இன்னும் மறையவில்லை!!

தொடர்ந்து படிக்க...


                                      -------------------- X -------------------

மூன்றாமிடத்தை பகிர்ந்து கொள்ளும் மற்றொரு கவிதை ஹேமா அவர்கள் எழுதிய காதல் துளிகள் (8) எனும் கவிதை...

 இந்தக்கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான உணர்வுகளை உண்டு பண்ணி உண்மையிலேயே மனதைக்கவர்ந்தது...

நான்கு கவிதைகளுமே மிக அருமை... மிகவும் ரசித்தேன்... அனைத்து கவிதைகளுமே கவிதை மொழி பேசியிருப்பது சாமான்யர்களுக்கு கொஞ்சம் தூரமாய் தெரிந்தாலும் கவிரசிகர்களுக்கு விருந்துதான்...

அதிலும்...

குரூர விழிப்புடன்
தூங்க மறுக்கிறான்
இருளின் கடைவாயிலில்
உதிரும் உதிரம் பார்த்தவன்!!!

என்ற வரிகளின் சிறப்பு புரிகிறதா உங்களுக்கு?...

தொடர்ந்து ரசிக்க...


                      -------------------------X-------------------------- 

மூன்றாமிடத்தைப் பகிர்ந்து கொள்ளும் இறுதிக் கவிதை தொகுப்பு... ராஜ வேல் என்பவர் எழுதியிருக்கும் காதல் கவிதைகள்...

அனைத்து கவிதைகளுமே மிகச்சாதாரணமாய் காதலை, அதன் உணர்வுகளை தென்றலாய் வருடிச்சென்றிருப்பது ரசிக்க வைத்தது... புதுக்கவிதைன்னா இதுதான்யா புதுக்கவிதை எனும்படி இருந்தது...

நீயாய் இருப்பாயோ
என்ற குழப்பத்துடனும்
என்னுடைய நீயாய்
இருந்துவிடமாட்டாயோ
என்ற ஆசையுடனுமே
என் பயணங்கள்...

அனைத்து கவிதைகளையும் ரசிக்க...
http://tamilka.blogspot.in/2013/09/nazriya.html  ஆசையாய் தாவணி 3
http://tamilka.blogspot.in/2013/09/shawl.html அது எனக்கான இடம்
http://tamilka.blogspot.in/2013/09/blog-post_3607.html என் பயணங்கள்
http://tamilka.blogspot.in/2013/09/time.html  நீ பிரியும் நேரம்

முதல் மூன்று இடங்களை பிடித்த கவிதைகளை பார்த்தாகிவிட்டது... அதன் படைப்பாளிகள் தொடர்ந்து இதைவிடவும் பல அருமையான படைப்புகளை படைத்திட நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
              ------------------ X -------------------
இனி முதல் மூன்று இடங்களைப் பிடிக்காவிட்டாலும் எனைக்கவர்ந்து டாப் லிஸ்ட்டின் எஞ்சிய இடங்களை அலங்கரிக்கும் கவிதைகளின் லிஸ்ட் இது...

நேரமின்மையால் இவைகளின் விமர்சனத்தை தவிர்க்கிறேன் என்றாலும் இந்தக்கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் எனைக் கவர்ந்தவைதான்...

குட்டிக்குட்டிக்கவிதைகளாய் அருமையாய் கோர்த்திருந்தாலும் பிச்சைக்காரியைகூட விடமாட்டார்கள் என சுட்டியிருந்த கவிதை ரசிக்க வைத்தது...
http://www.puradsifm.com/news/iakkiyam-pakkam/pachchai-tamilians/  பிச்சைகாரி மீது இச்சை கொள்ளும் பச்சைத்தமிழர்கள்

எம்.எஃப்.நிரோஷனின் சமூகம் சார்ந்த குட்டிக்கவிதைகள் எப்போதுமே ரசிக்க வைக்கும் ரகம்தான்... அன்றாட வாழ்வின் சாதாரண நிகழ்வுகளைக்கூட கவிதையாய் வடித்திருப்பது இதன் தனிச்சிறப்பு...

http://karaiyorakaatru.blogspot.in/2013/09/blog-post.html  அநியாய நிசப்தம்
http://karaiyorakaatru.blogspot.in/2013/09/blog-post_5.html  நின்னுட்டே வாங்க பெருசு
http://karaiyorakaatru.blogspot.in/2013/09/blog-post_7.html  தேர்தல் இலவசத்தில் கல்வி தாருங்கள்…

முதுமையின் மறதியையும், தாய்ப்பாசத்தையும் கவிதை மொழியில் அருமையாய் சொல்லியிருக்கும் படைப்பு இது...
http://geethamanjari.blogspot.in/2013/09/blog-post.html  மறதி

ஊடலின் தோல்வியடையும் காரணங்களை காதல் சுவையுடன் அடுக்கியிருக்கும் கவிதை... மிகவும் ரசித்தேன்...
http://vithuvaan.blogspot.in/2013/09/blog-post.html   ஊடல் தோற்கும் புள்ளி

காதலிக்கும் எல்லோராலும் கவிதை எழுதிவிட முடியாது எனும் போது ஒரு சாமான்யன் தன் காதலை எப்படிக்கூறுகிறான் என்று உணர்த்தியிருக்கும் நடை மிக அருமை...
http://chennaipithan.blogspot.com/2013/09/blog-post_3.html  காதல் என்னும் வேதனை

சமூகக்கவிதையா?... இல்லை நக்கல் கவிதையா என்றெல்லாம் யோசிக்காமல் ரசிக்க வைத்தது கவிதை...
http://www.rishvan.com/2013/09/blog-post.html  காமாசனம் – கவிதை

http://yaathoramani.blogspot.in/2013/09/blog-post_4.html  அர்த்த உயிரும் வார்த்தை பிணமும்

ஸ்ரவாணி அவர்களின் அழகான காதல் கவிதை இது... வெண்ணிலவிலிருந்து வெள்ளை மாளிகைவரை வித்தியாசமாய் உவமைகாட்டி எழுதிய காதல் கவிதையை இப்போதுதான் பார்க்கிறேன்... இறுதியாய் எல்லா உவமைகளையும் காதலோடு கோர்த்திருப்பது மிகவும் ரசிக்க வைத்தது....
http://kuzhanthainila.blogspot.in/2013/09/blog-post.html  ஒரு யுகத்தின் நிழல்

அமெரிக்காவின் முகமூடியை மிக எளிமையான வார்த்தைகளில் குட்டிக்கவிதையாய் சொல்லியிருந்தது ரசிக்க வைத்தது...
http://thenusdiary.blogspot.in/2013/09/blog-post_9259.html  உலகத்தின் அண்ணன்...

http://www.saraladevi.com/2013/09/blog-post_6.html  கல்கியில் என் கவிதை

இவருடைய கவிதைகள் வாராவாரம் பலமுறை படித்தும் எனது அறிவுக்கு எட்டவேயில்லை... இந்தவாரம்தான் ஓரளவாவது புரிந்தது என்றாலும் இவரது அனைத்து கவிதைகளும் ஜீனியஸ் ரகம்தான்...
http://mubeensadhika.blogspot.in/2013/09/blog-post.html  கிளி ஆற்றுவித்தல் கூற்று

http://kavithaiveedhi.blogspot.com/2013/09/blog-post_2.html   நான் நாத்திகனல்ல

வெளிநாடு வேலையின் வருத்தமுகத்தை உணர்வுகளில் கூறிய குட்டிக்கவிதை இது...
http://itzyasa.blogspot.in/2013/09/blog-post_6.html  அன்று அறைந்தது

கவிதை எழுதும் எல்லாருக்குமே இரவு என்பது மிக நீண்டது... அதன் நிசப்தம் கவிஞர்களின் மனதோடு பேசுவது... அதை வார்த்தையில் வடிப்பது அவ்வளவு எளிதல்ல... இருந்தும் அப்படியொரு உணர்வை அழகாய் கவிதையில் வடித்திருப்பது இதன் தனிச்சிறப்புதான்...
http://veesuthendral.blogspot.in/2013/09/blog-post_6.html  இரவின் மடியில்

http://www.padaipali.net/2012/12/blog-post_7.html  அழுக்கு என் தேகமெங்கும்

விநாயகர் சதுர்த்தியை எல்லோரும் கொண்டாடும் இந்நாளில் அதன் மற்றுமொரு முகத்தை தோலுரித்திருக்கும் கவிதை இது... நான் ரசித்தேன்...
http://ramaniecuvellore.blogspot.in/2013/09/blog-post_2823.html  தடிகளோடு தயாராய்

              ------------------------ X -------------------------

மேலே நான் தேர்வு செய்த கவிதைகள் மட்டும் இல்லாமல் சென்ற வாரம் நான் படித்த மொத்தக்கவிதைகளில் மீதிக்கவிதைகளின் லிஸ்ட் கீழே தருகிறேன்... பெரும்பாலும் சென்ற வாரம் எந்தக்கவிதையையும் நான் மிஸ் பண்ணவில்லை என்று நம்புகிறேன்...

http://tamizhmuhil.blogspot.com/2013/09/blog-post.html  செல்லப்பிராணியின் அன்பு
http://2008rupan.wordpress.com தித்திக்குதே தித்திக்குதே
http://bharathidasanfrance.blogspot.in/2013/09/blog-post_3.html  மன்னன் வருவான்
http://rupika-rupika.blogspot.com/2013/09/blog-post.html  எதை நீ சாதித்தாய் பெருமை கொள்வதற்கு...
http://www.rishvan.com/2013/09/514.html  திருக்குறள் கவிதை வடிவில் குறள் எண்-514
http://www.rishvan.com/2013/09/513.html  திருக்குறள் கவிதை வடிவில் குறள் எண்-513
http://rupika-rupika.blogspot.com/2013/09/blog-post_2.html  சுகமான வாழ்விற்கு இவையாவும் அவசியமே
http://tvrk.blogspot.com/2013/09/blog-post.html மிருகங்களே மனித ஆசை தவிர்...
http://tamilamudam.blogspot.com/2013/09/blog-post.html  பெயரற்றவன்ரிச்சர்ட் ரைட் ஆங்கில கவித்துளிகள்
http://yaathoramani.blogspot.in/2013/09/blog-post.html  ஆழக்கடலும் பதிவர் சந்திப்பும்
http://bharathinagendra.blogspot.in/2013/09/blog-post.html  சென்னைப்பறவைகள்
http://kaviyazhi.blogspot.in/2013/09/blog-post_5.html  பதிவர்கள் கூட்டம்
http://www.pulavarkural.info/2013/09/blog-post_4.html  உலக மக்களின் வாழ்வுக்கு செய்யும் சேவை ஆசிரியர் தின வாழ்த்து
http://www.rishvan.com/2013/09/blog-post_5.html  வான் தந்த பூமழையே
http://naperiyasamy.blogspot.in/2013/09/blog-post_4.html  தாளாத குளிர்விப்பு
http://www.rishvan.com/2013/09/1145.html     திருக்குறள் காமத்துப்பால் கவிதை வடிவில் குறள்-1145
http://www.rishvan.com/2013/09/1146.html  திருக்குறள் காமத்துப்பால் கவிதை வடிவில் குறள்-1146
http://www.rishvan.com/2013/09/1147.html  திருக்குறள் காமத்துப்பால் கவிதை வடிவில் குறள்-1147
http://www.rishvan.com/2013/09/blog-post_6.html ஐந்து நிமிட சுகம்
http://bharathinagendra.blogspot.in/2013/09/blog-post_5.html  ஆசிரியர் தினம்
http://kovaikkavi.wordpress.com/2013/09/05/19   யார்...யார்...
http://itzyasa.blogspot.in/2013/09/blog-post.html  நீர் இல்லா தரணி
http://muruganandanclics.wordpress.com/2013/09/07 மெல்லென விரியும் மெத்தெனும் இதழ்கள்
http://kaviyazhi.blogspot.in/2013/09/blog-post_3012.html   மனிதம் போற்றி வாழுங்களேன்
http://newsigaram.blogspot.in/2013/09/kaaththiruppu.html  காத்திருப்பு
http://thoorikaisitharal.blogspot.in/2013/09/blog-post_7.html  பூ சிந்தும் கண்ணீர்
http://www.thamilnattu.com/2013/09/blog-post_8186.html  கண்டாங்கி சேலை வாங்கி கருணாநிதிக்கு கட்ட வாரீர்...
http://www.padaipali.net/2011/10/blog-post_04.html  மனிதம் மரணித்துப்போன சமுதாயம்
http://www.sudarvizhi.com/2013/09/blog-post_8.html  வருவியா மாட்டியாஒரு மொக்கை கவிதை

எல்லாக்கவிதைகளையும் படிச்சு ரசிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்... மீண்டும் அடுத்த வாரமும் இதே போன்றதொரு தொகுப்பை பார்க்கலாம்...

ஆல் தி பெஸ்ட்... என்ஜாய் மக்களே!!!

11 comments:

 1. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி... உங்களுக்கும் என் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் தலைவா...

   Delete
 2. கவிதைகளைத் தொகுபாய் கொடுத்திருக்கிறீர்கள்...

  அருமை... வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 3. இவ்வளவு கவிதைகளை படித்தீர்களா...

  உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை...
  நன்றி...


  நான் விட்டுவிட்ட கவிதைகளை சிலதை தற்போது வாசிக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. மீக நீண்ட இடைவெளிக்குப்பின் என் தளத்தில் தங்களை காண்பதில் மகிழ்ச்சி...
   மிக்க நன்றி சௌந்தர்... உங்களது வரவுக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும்...

   Delete
 4. பகிர்வுக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

  ReplyDelete
 5. 'எங்களை'யும் தொகுப்பில் சேர்த்ததற்கும், பாராட்டியதற்கும் எங்கள் நன்றிகள் சாய்ரோஸ்.

  ReplyDelete
 6. என் கவிதைக்கு 3ம் இடம் :) ... மிக்க நன்றி.... இதைப் போன்ற ஊக்குவிப்புகளே தொடர்ந்து எழுத துணை.. வாழ்த்துக்கு நன்றி.. :)

  ReplyDelete
 7. அப்பாடி.........இத்தனை தேடல்களா ரசிப்பாவென அதிசயிக்கிறேன்.மிக்க நன்றி சாய்ரோஸ் :)

  ReplyDelete
 8. என் கவிதையின் தேர்வுக்கும்..சிறப்பான தங்களின் அறிமுக ரசணைக் குறிப்புக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 9. உங்கள் நேரத்தை ஒதுக்கி நீங்கள் செய்யும் பணிக்கு மிக நன்றி. நல்ல வரிகளை கோர்வையாக்கி தந்ததற்கும் நன்றி. என் வரிகள் உங்களை கவர்ந்ததையிட்டு மகிழ்ச்சி.

  ReplyDelete