SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Tuesday, August 27, 2013

பதிவெழுதுவது நாறப்பொழப்புதானா?... – சத்தியமாய் இது தொடர் பதிவல்ல!

எனது சொந்தக்கதை – சோகக்கதை மட்டுமே இது...!!!
பதிவெழுத வந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஓடிவிட்டது... சிறுவயது முதலே எனக்குள் கனன்றுகொண்டிருந்த எழுத்தின் மீதான தாகத்திற்கும், என் மனதில் தோன்றும் கருத்துக்களுக்கும், சமூக, அரசியல் மீதான என் கோபதாபங்களுக்குமான வடிகாலாகத்தான் பதிவெழுத ஆரம்பித்தேன். 

ஆரம்ப காலத்தில் எனது டைரியில் உறங்கிக்கொண்டிருந்த பல கவிதைகளுக்கு எனது வலைத்தளத்தில் அடைக்கலமளித்தேன்... (யாரும் கற்றுத்தராமலேயே நானாக முட்டி மோதி பிளாக்கரின் பலவித பயன்பாடுகளையும், சிறப்புகளையும், செயல்பாடுகளையும் இன்னமும்கூட கற்றுக்கொண்டேதான் இருக்கிறேன்...) கவிதை காலத்துக்கு பின்னர் என் ஆழ்மனதின் உண்மையான வெளிப்பாடுகள் எனது பல்வேறு அரசியல் மற்றும் சமூக கட்டுரைகள் மூலம் கொஞ்ச கொஞ்சமாக வெளிப்பட ஆரம்பித்தன...

இங்கே வெறும் மனக்குமுறல்களும், கோபக்கனல்களும் மட்டுமே எழுதுவதென்பது நம்மை வேடிக்கைப்பொருளாய் ஆக்கி பலரும் எள்ளி நகையாடும் பவர் ஸ்டாராக ஆக்கிவிடும் என்பது பதிவெழுத ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே பதிவுலகம் எனக்குக்கற்றுத்தந்தது... பலரையும் நம் தளத்தின் பக்கம் இழுக்க என்ன எழுதலாம் என்று தீவிரமாய் யோசித்த காலம் அது... 

சினிமாவை மிகவும் ரசிக்கும் நபர்களில் நானும் ஒருவன்... கிட்டத்தட்ட எனது 18 வயதிலிருந்து 28வது வயது வரையிலும் ஒரு சினிமா பாக்கியில்லாமல் எந்தப்படமாக இருந்தாலும் சரி... ரிலீஸ் ஆன அன்றே பார்த்து திரிந்தவன் நான்... (கோவை மற்றும் சென்னை போலீஸாருக்கு அப்போதெல்லாம் தினமும் இரவு தவறாமல் தரிசனம் கொடுத்தவன் நான்...) ஆனால் பதிவுலகில் நுழைந்த பின்னர் ஏனோ தெரியவில்லை, இன்னமும்கூட சினிமா விமர்சனம் எழுத எனக்கு மனமேயில்லை...

யாருமே இல்லாத டீக்கடையில் எத்தனை நாளைக்கித்தான் டீ ஆத்திக்கொண்டேயிருப்பது?... எதையாவது எழுதி குறைந்தபட்ச வாசகர்களையாவது எனது தளத்தின் பக்கம் இழுக்க சிந்தித்ததன் பலன், காமசூத்திரத்தின் சில பகுதிகளை தமிழில் எழுத ஆரம்பித்தது...

பதிவுலகில் என்னை யாரென்றே தெரியாத அந்தக்காலக்கட்டத்தில் (இப்போதும்கூட அப்படித்தான்!!!) அந்த காமசூத்திரத்தை தேடிவந்த அளவில்லா வாசகர் கூட்டம்... சீரியஸாய் அரசியல், சமூக பதிவெழுதிக்கொண்டிருந்த... எழுத நினைத்த... என்னை செருப்பால் அடித்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஊர்வலம் ஏற்றியதைப்போல் இருந்தது...

தனிப்பட்ட சாதிகளை விமர்சித்து எழுதி பரபரப்பு வட்டத்துக்குள் ஒருநாளும் நுழையவில்லை நான்...

தனிப்பட்ட மதங்களை விமர்சித்து எழுதி பரபரப்பு வட்டத்துக்குள் ஒருநாளும் நுழையவில்லை நான்...

எனக்கு பிடிக்காத, எனது எண்ணத்திற்கு எதிர்மறையான கருத்துக்களைக்கொண்ட பதிவுகளை படிக்கும்போதும்... எதிர்மறையான கருத்துக்களையோ, பதிவெழுதியவரின் மீது தனிமனித தாக்குதல்களையோ எனது பெயரிலோ... அனானிமஸாகவோ ஒரு நாளும் எழுதியதில்லை நான்...

எப்படி நான் வாழ நினைக்கிறேனோ... அதேயளவு சென்சிட்டிவானவனும்கூட நான்... (அதுதான் என் வீக் பாயிண்ட்டும்!)...

எப்படி பதிவுலகம் புதிதாய் பதிவெழுத ஆரம்பிக்கும் பலரையும் கைதூக்கிவிட்டு காலம் காலமாய் அவர்களை உற்சாகப்படுத்தும் பல நல்ல நட்புகளை உள்ளடக்கியிருக்கிறதோ... அதேப்போல பல விஷமிகளையும், விஷமத்தனங்களையும்கூட உள்ளடக்கியிருக்கிறது...

கொஞ்ச கொஞ்சமாக எனது எழுத்துக்களுக்கு கருத்துக்கள் வர ஆரம்பித்து நான் சந்தோஷப்படத்தொடங்கியபோது, கூடவே இறக்கை கட்ட ஆரம்பித்திருந்தது அனானிமஸ் தாக்குதல்கள்...

நான் ஒருபோதும் எனது கருத்துப்பெட்டியை மூடி வைத்துக்கொள்வதில்லை... ஒருபோதும் கமெண்ட் மாடரேசன் வைத்துக்கொள்வதில்லை... எனது பதிவில் இருக்கும் தவறுகளை யார் சுட்டிக்காட்டினாலும் சரி... அது உண்மையிலேயே தவறாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக அதைத்திருத்துவதோடு அந்தத்தவறை சுட்டிக்காட்டிய கருத்தையும் அழிக்காமல் நான் செய்த தவறுக்கு சாட்சியாய் அப்படியேதான் வைத்திருப்பேன்... இதுவரை எனது பதிவுகளின் வாயிலாக என் மீது நிகழ்த்தப்பட்ட தனிமனித தாக்குதல்களையும் நான் அழித்ததில்லை...

உதாரணத்திற்கு இந்தப்பதிவுகளின் கருத்துக்களை கொஞ்சம் பாருங்கள்...

ஆரம்பத்தில் இது போன்ற அனானிமஸ்களின் கீழ்த்தரமான கருத்துக்களைக்கண்டு டென்ஷன் ஆனாலும் போகப்போக அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருக்க என்னை நானே பழக்கிக்கொள்ள முயன்றேன்...

இது எனது தளம்... இங்கே எனது மனதில் தோன்றும் கருத்துக்களை எழுதும் முழுச்சுதந்திரம் எனக்கு உண்டு. அதே போல எழுதுவதின் வரையறைகளும், வரைமுறைகளையும் கவனமாக கையாளத்தெரிந்த அனுபவமும், வயதும்கூட எனக்கு உண்டு...

எப்படி எழுதும் சுதந்திரம் எனக்கு உள்ளதோ... அதேப்போல எனது கருத்துக்களுக்கு விவாதம் புரியும் வகையில் எதிர்க்கருத்துகூற எவருக்கும் உரிமை உண்டு... தாராளமாய் ஆரோக்கியமான விவாதம் புரியலாம்... ஆனால் கருத்துக்களுக்கு எதிர்க்கருத்துக்கள் கூறுவதை விட்டுவிட்டு... எழுதியவரை நிலைகுலையச்செய்யும் வகையில் ஆபாசமான வார்த்தைகளில் தனிமனித தாக்குதல்கள் தொடுப்பது எப்பேர்ப்பட்ட கேவலமான செயல் என்பது இது போன்ற நண்பர்களுக்கு உரைக்கவே உரைக்காதா?...

ஆரோக்கியமான விவாதமும் அரை வேக்காடு அனானிமஸ் தாக்குதல்களும் நிறைந்த இந்தப்பதிவின் கருத்துக்களையும் கொஞ்சம் பாருங்கள்...

இதில் நெல்லை கிருஷ்ணன் என்ற நண்பர் எடுத்துரைத்திருந்த எதிர் விவாதத்திற்கு பல்வேறு விஷயங்களையும் படித்து அலசி தனியாக ஒரு பதிவே எழுதி பதிலளித்திருந்தேன்... அதுதான் ஒரு விஷயத்தை எழுதுபவரின் கடமையும்கூட...

இப்படி ஆரோக்கியமான விவாதம் புரிய தயாராய் இருப்பவர்கள் எதிர்மறையான கருத்துக்களையிட தகுதியானவர்களே... நெல்லை கிருஷ்ணன் விவாதம் புரிந்தவிதம் மிகச்சரி... ஒருவேளை அவர் எனது பதில் பதிவை படிக்காமல் இருந்து அதனால் மீண்டும் விவாதத்தில் பங்கேற்காமல் இருந்திருக்கலாம்...

நீண்ட நாட்களாகவே பதிவுலகில் சிலபல நல்ல எழுத்துக்கள் பலரையும் சென்றடையாமல் சில குரூப்பிஸ பாலிடிக்சில் அமுங்கிப்போவது எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்துக்கொண்டேயிருந்தது... சரியென்று வாராவாரம் பதிவுலகில் வெளியாகும் கவிதைகள் அனைத்தையும் சேர்த்து படித்து தரம் பிரித்து பதிவிடத்தொடங்கினேன்...

இதில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பவர்களும், இதைப்படிப்பவர்களும் இதற்கு வாக்களியுங்கள்... அப்போதுதான் இது பலரையும் சென்றடையும் என்று வெட்கத்தைவிட்டு நல்லதொரு நோக்கத்தில் நான் வேண்டியும் அதற்கான வாக்களிக்கும் நேரத்தை ஒதுக்கக்கூட பெரும்பான்மையோருக்கு நேரமில்லை... சத்தியமாய் நான் அதைக்குற்றம் சொல்லவில்லை... அது அவரவர் விருப்பம்... நானே வெறுத்துப்போய் முதன் முதலாக எனக்கு நானே போலி வாக்குகள் போட்டுக்கொண்ட பதிவுகள் அது... மூன்று வாரங்கள் அதைத்தொடர்ந்து எழுதினேன்... அதன்பிறகு மனசு வெறுத்துப்போய் நிறுத்திவிட்டேன்...

எழுதும் போது கவிதைகளை தரம்பிரித்து எழுத நீ யார் என்று கேட்கவும் ஆளில்லை... எழுதுவதை நிறுத்தியதும் ஏன் அதை நிறுத்திவிட்டீர்கள் என்று கேட்கவும் ஆளில்லை...!!! (இப்படியொரு நாறப்பொழப்பு தேவைதானா எனக்கு?...)
(எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவரே முப்பது ஓட்டுக்களும்கூட போடலாம் என்பது பதிவுலகில் பலரும் அறிந்திராத மற்றொரு முகம்...நானும் பலரது பல நல்ல படைப்புகளையும் எனது ஒரு சில படைப்புகளையும் ஏழு ஓட்டுக்கள் வரை போட்டு முன்பக்கத்தில் கொண்டுவரும் வேலையைச்செய்ய ஆரம்பித்து வெகுநாளாகிவிட்டது...!!! இது தவறுதான்... எனது நேர்மைக்கு நான் செய்யும் இழுக்குதான் என்பது புரிந்தும் சில நல்ல நோக்கங்களுக்காக இதைத்தொடர்ந்து செய்ய தயாராகவே இருக்கிறேன்... இதை விமர்சிக்கும் தகுதி தனக்குத்தானே ஓட்டுப்போட்டுக்கொள்ளும் மற்றும் ஒருவரே ஒன்றுக்கும் மேல் ஓட்டுப்போடும் பெரும்பான்மை சமூகத்துக்கு இல்லை என்பதால் இதுவரை தனக்குத்தானே ஓட்டுப்போடாத நல்லவர்கள் இதற்கு விளக்கம் கேட்கலாம்… இது அப்பட்டமான தவறுதான் என்றாலும் தவறை ஒத்துக்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன்...)

எனது கதம்பமாலை தளத்தில் காமசூத்திரமும் கலந்திருப்பதால் பெரும்பாலானோர் நுழையத்தயங்கலாம் எனுமொரு எண்ணத்தில் நான் பதிவெழுத ஆரம்பித்த காலத்திலேயே நிறுத்தி வைத்திருந்த எனது மற்றொரு வலைப்பூவை தூசுதட்டி, கலவிக்கல்வி என்று பெயர் மாற்றி, கதம்ப மாலையிலிருந்து கலவியறிவு சம்மந்தமான இடுகைகளை பிரித்தெடுத்து அந்த வலைப்பூவில் பதிவிட்டேன்... (அதில் கமெண்ட் மாடரேஷன் இருந்தது எனக்குத்தெரியாது...)

இப்படிப்பிரித்த அடுத்தநாளே கலவியறிவுக்கட்டுரை ஒன்றில் ஒரு கமெண்ட்... வழக்கமாக அனானிமஸ்கள் கையாளும் கீழ்த்தரமான வேலையை மாசிலா என்று ஒருவர் கையாண்டிருந்தார்... (ஒருவேளை அனானிமஸாக கமெண்ட் போடுவதற்குப்பதிலாக மறதியில் தனது பேரோடு போட்டுவிட்டாரா என்று தெரியவில்லை...)

வலைப்பூவில் இவரது கீழ்த்தரமான கருத்தை நான் முதன் முறையாக கருத்தை அழிக்கும் வேலையைச்செய்து அழித்து விட்டமையால், எனது இ-மெயிலில் இருந்த அவரது கருத்தை அப்படியே உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்...

[கலவிக்கல்வி...] New comment on காமசூத்திரம் கற்றுக்கொடுக்கும் கலவி நிலைகள் எத்தனை....
Thursday, 22 August, 2013 3:24 AM

From: 
"மாசிலா"
To: 
subra_be@yahoo.co.in

மாசிலா has left a new comment on your post "காமசூத்திரம் கற்றுக்கொடுக்கும் கலவி நிலைகள் எத்தனை...":

உங்க அம்மாவை உங்க அப்பா இப்படி எல்லாம் செய்துதான் உங்களை பெத்து எடுத்தாங்களா சாய்ரோஸ்? நான் இது போல செய்து பார்ப்பதற்துக்கு பழக்கப்பட்ட ஒரு ஆள் தேடுகிறேன் சார். உங்க அம்மா. விலாசம் தர முடியுமா சாய்ரோஸ்?

வந்தேறி ஆரிய பரதேசி நாய்கள் கஞ்சா அடித்துவிட்டு மண்ணிணன் பூர்வீக மைந்தர்களின் சிறுமிகள் மீது போதையில் சிறுவர்கள் சிறுமிகளின் மீது நடத்தேற்றிய பொர்னோகிராபி மற்றும் பெடோபிலிதான் இங்கு நீங்கள்புகழ் பாடும் காம சாத்திரம்.


Posted by
மாசிலா to கலவிக்கல்வி... at August 22, 2013 at 3:24 AM

இவரைப்பற்றிய லின்க்கில் சென்று பார்த்தபோது http://www.blogger.com/profile/09346282730823447790 தனது சுய அறிமுகத்தில் இவர் குறிப்பிட்டிருந்தது இதுதான்...  
About me
Gender
Male
Industry
Occupation
Location
Introduction
விளையாட்டு தொழில் துறை மூலம் தமிழுலகிற்கு பெரிய அளவில் சாதிக்க துடிக்கும் ஒரு அபார மனிதன்.
Interests
Favorite Music

பண்பாடு கலாச்சாரம் எனப்பேசும் ஒரு மனிதர் ஒரு எழுத்தின் குறையாய் தனக்குத்தோன்றியதை எப்படி விமர்சிக்கவேண்டும் என்ற குறைந்தபட்ச நாகரீகம் மற்றும் பண்பாடுகூட இல்லாமல் இருக்கிறார்...  இவரைவிட கீழ்த்தரமாய் இவரது இந்தக்கருத்துக்கு என்னால் பதில் சொல்லமுடியும் என்றாலும் அப்படியொரு வேலையைச்செய்ய எனக்கு மனமேயில்லை...

நான் எழுதிய கலவியறிவுக்கட்டுரையை விமர்சிப்பவர்களுக்கு எனது ஒரே பதில் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று விமர்சிக்காமல் எனது அனைத்து கட்டுரைகளையும் படித்துவிட்டு விமர்சியுங்கள்... அதேபோல எனது எந்த எழுத்தை விமர்சிப்பதானாலும் சம்மந்தப்பட்ட கருத்துக்களை விமர்சித்து எதிர் விவாதம் செய்யுங்கள்... அதைவிட்டு தனிமனித தாக்குதல்கள் செய்வது என்பது... நீங்கள் பெயரோடு வந்தாலும் சரி... அனானிமஸாக வந்தாலும் சரி... உங்களை ஒரு கேடுகெட்ட கீழ்த்தரமான ஜென்மமாகத்தான் மற்றவர்களை அறுவெருப்படையச்செய்யும் என்பதை கொஞ்சம் மனதில் கொள்ளுங்கள்...

கீழ்த்தரமான எழுத்துக்களை நான் ஒருபோதும் எழுதுவதில்லை என்பது என்னால் எக்காலத்திலும் அளிக்கமுடிந்த வாக்குறுதி...

இது போன்ற கருத்துக்களை அவாய்டு பண்ண கமெண்ட் மாடரேஷன் வைத்துக்கொண்டாலும் அது மற்ற வாசகர்களுக்குத்தெரியாமல் மறைத்துக்கொள்ள உதவுமேயொழிய நம் கண்களில் பட்டு நமது மனதைப்பாதிக்கும் வேலையைச்செய்யத்தான் செய்யும்...

ஒருவேளை கருத்துப்பெட்டியை நிரந்தரமாய் மூடிவிடுவதுதான் சரியான தீர்வா?...

இதைவிட மோசமான அனுபவங்களை இன்னும் பல பதிவர்கள் சந்தித்து அதை அவர்களுக்குள்ளாகவே டேக் இட் ஈஸி என்று டைஜஸ்ட் செய்திருக்கலாம்...

இதெல்லாம் பதிவுலகிலும், எழுத்துலகிலும் சாதாரணம் என்பது எனது புத்திக்கு நன்றாகப்புரிந்தாலும், மனதுக்கு இன்னும் புரியவில்லைதான்... பதிவெழுதுவது நாறப்பொழப்புதானா?... இந்த தேவையற்ற டென்ஷன்கள் நமக்கு தேவைதானா?... என்றொரு எண்ணம் என்னைச் சுற்றிக்கொண்டேயிருக்கிறது...

காயங்கள் தொடர்ந்து என்னை காயப்படுத்திக்கொண்டேயிருந்தாலும் எதிலிருந்தும் மீளும் சக்தி எனது எழுத்துக்களுக்கும், எனக்கும் உண்டு என்றே நம்புகிறேன்...

பதிவர் சந்திப்பும் அது குறித்த இடுகைகளும் எப்படியும் இன்னுமொரு இருபது நாட்களுக்கு மேலும் நீடிக்கும்... அந்த நிகழ்வுகள் எல்லாம் வெற்றிகரமாய் முடியட்டும்...

தொடர்ந்து தொய்வின்றி எழுத முயல்கிறேன்...

(இந்தப்பதிவுக்கும் வந்து எந்த அனானிமஸாவது கருத்துப்போடலாம் என்று எதிர்பார்க்கிறேன்... இனி கீழ்த்தரமான கருத்துக்கள் உடனடியாக நீக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்...)

இது முழுக்க முழுக்க எனது தனிப்பட்ட ஆதங்கமும் கருத்துக்களும்தானேயொழிய எந்தவொரு தனிநபரையும் (கீழ்த்தரமான கருத்துக்களை வெளியிடுபவர்களைத்தவிர...) புண்படுத்தும் நோக்கில் எழுதவில்லை என்று மனதார உறுதிமொழி அளிக்கிறேன்...

நன்றி... மீண்டும் கூடிய விரைவில் சந்திப்போம்...!


9 comments:

 1. செக்ஸ் பற்றிப் பண்பாடு பிறழாமல்தான் எழுதுகிறீர்கள். உங்களைப் பற்றிக் குறை சொல்ல ஏதுமில்லை.

  இணையம் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாத அதிசய உலகம்.

  இங்கே அறிவுக்குத் தீனி தேடுவோரிடையே, தங்களின் நிறைவேறாத இச்சைகளுக்கு வடிகால் தேடும் வக்கிர புத்திக்காரர்களும் உலவத்தான் செய்வார்கள்.

  நம்மைச் சுற்றி நாம்தான் பாதுகாப்பு அரண் அமைத்துக்கொள்ள வேண்டும்.

  இதை இப்போது தெளிவாக உணர்ந்திருக்கிறீர்கள். பின்னூட்டங்களைத் தணிக்கை செய்யப் போவதாக நீங்கள் எடுத்த முடிவு மிகச் சரியானதே.

  தடுமாற்றத்திற்கு இடம் தராமல் தைரியமாய் அதை செயல்படுத்துங்கள்.

  ReplyDelete
 2. தங்கள் மன வருத்தம் என்னை மிகவும் பாதித்தது
  பதிவுலகில் நீங்கள் குறிப்பிடும்படியான
  அரசியல்,படைப்பை விட படைப்பாளியை
  விமர்சித்து மகிழுமொரு சிறு கும்பலும் உண்டு
  தங்கள் உணர்வு பூர்வமான எழுத்து எனக்குப் பிடிக்கும்
  இங்கு நம் பதிவுக்கு வந்து பின்னூட்டமிடுகிறவர்களின்
  பதிவுக்கு செல்வதற்கே நேரமின்றிப் போவதால்
  தங்கள் பதிவிற்கு பலர் வரமுடியவில்லையென
  நினைக்கிறேன்
  தாங்கள் ஹிட் நோக்கமின்றி எழுதத் துவங்க்கினால்
  நிச்சயம் முன்னணி பதிவராகிவிடுவீர்கள் என்பதுதான்
  என நம்பிக்கை.
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. காய்த்த மரம்தான் கல்லடி படும்ன்னு தமிழ்ல ஒரு பழமொழி உண்டு. அதுப்போல, எப்போ ஒருத்தர் விமர்சனத்துக்கு ஆளாகிறார்ப்ப் அ[[ப்ப் அவர் கவனிக்கப்படுகிறார்னு அர்த்தம். அநாகரிக கருத்துக்கு ஒரு போதும் பதிலளிக்காதீங்க. அதேப்போல ஒருபோதும் அநாகரீக வார்த்தகளலா மத்தவங்களுக்கு கருத்து சொல்லாதீங்க. வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 4. உங்களுக்கு அனானிகளிடமிருந்து பின்னூட்டம் வந்தால் நீங்க பிரபலம் ஆகிட்டீங்க என்று அர்த்தம்..
  மேலே ராஜி அக்கா சொன்னதை நானும் வழிமொழிகிறேன்,

  ReplyDelete
 5. போற்றிப் புகழ்தலும் புழுதி வாறித் தூற்றலும் இந்த பதிவுலகில் சகஜமே.

  ReplyDelete
  Replies
  1. வாறி - தவறு. வாரி என்று இருக்கவேண்டும்.

   Delete
 6. இதெல்லாம் பதிவுலகில் சகஜம்தான்...
  நாம் மற்றவர்களுக்காக நம்மை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை...
  தொடர்ந்து எழுதுங்க சாய்ரோஸ்...
  எதற்காகவும் உங்கள் எண்ணங்களுக்கு தடை போடாதீர்கள்.

  ReplyDelete
 7. எதையுமே செய்ய தகுதி இல்லாதவர்கள்தான் எல்லாவற்றையும் மட்டம் தட்டியே தன் இருப்பை நிறுவமுயற்சிப்பார்கள். அதை துச்சசமென நினைத்து போய்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

  ReplyDelete
 8. வணக்கம் சாய்ரோஸ்...

  வலைச்சரத்தில் தங்களைப் பற்றி தெரிவித்துள்ளேன்... நேரமிருப்பின் கீழிருக்கும் இணைப்பின் வழியாக வலைச்சரம் வந்து பாருங்கள்...

  நன்றி...

  http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_3.html

  ReplyDelete