SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Tuesday, August 20, 2013

டேஸ்ட்டி சிக்கன் மஞ்சுரியன் – வீட்டிலேயே செய்வதெப்படி?...

ஓட்டல்களுக்குச் சென்றால் நான் விரும்பிச் சாப்பிடும் சிக்கன் வெரைட்டி, இனிப்பும் காரமும் குடைமிளகாய் வாசமும், சுவையும் கலந்த இந்த சிக்கன் மஞ்சுரியன்தான்...


ஒரு நாளாவது அதை வீட்டிலேயே செய்து சாப்பிடவேண்டும் என்ற நீண்டநாள் ஆசை இப்போதுதான் நிறைவேறியது... ‘’ஞான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’’ என்று வாழ்வோரல்லவா நாம்!!! அதனால்தான் இந்தப்பதிவு...!

சிக்கன் மஞ்சுரியன் – தேவையானவை...


   1)   போன்லெஸ் சிக்கன் – ½ கிலோ
   2)   குடை மிளகாய் – 2 அல்லது 3 (உங்கள் ரசனைக்கேற்ப)
   3)   பெரிய வெங்காயம் – 2 அல்லது 3 (உங்கள் ரசனைக்கேற்ப)
   4)   தக்காளி சாஸ் – 2 அல்லது 3 குழிக்கரண்டி
   5)   பச்சை மிளகாய் – 3
   6)   பூண்டு (உரித்தது) – ஒரு கையளவு
   7)   இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
   8)   மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
   9)   மைதா மாவு – ஒரு கையளவு
  10) சோள மாவு -  ஒரு கையளவு
  11) முட்டை – 2
  12) தயிர் -  ஒரு கப்
  13) உப்பு – தேவைக்கேற்ப
  14) மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
  15) கேசரி பவுடர் -  ½ ஸ்பூன்
  16) எண்ணெய் – 250 ML

சரி... தேவையான பொருள்களை சேர்த்தாகிவிட்டது... இப்போது சிக்கன் மஞ்சுரியனை சமைக்கத்தொடங்கலாம்...

   1)   முதலில் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட போன்லெஸ் சிக்கனை ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு பிசைந்து நன்றாக கழுவிக்கொள்ளலாம். (மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி என்பதால் எப்போது அசைவம் செய்தாலும் அதைக்கழுவும்போதே மஞ்சள் தூள் போட்டு பிசைந்து கழுவுவது ஆரோக்கியமான ஒன்று…)

   2)   உரித்த பூண்டை மெல்லிய சிலைஸ் சிலைஸாக வெட்டிக்கொள்ளலாம். சிக்கன் மஞ்சுரியனுக்கு வெங்காயத்தையும் குடை மிளகாயையும் வெட்டும் முறை மிக முக்கியமானது. வெங்காயத்தை ஒவ்வொரு லேயராக உரித்து சதுர வடிவிலான துண்டுகளாக வெட்டிக்கொள்ளலாம். குடை மிளகாயையும் அவ்வாறே... பச்சை மிளகாயை உங்களுக்கு விருப்பமான விதத்தில் வெட்டிக்கொள்ளலாம்.


   3)   ஒரு கிண்ணத்தில் ஒரு கையளவு சோள மாவையும், ஒரு கையளவு மைதா மாவையும் கொட்டி அதில் சிறிதளவு உப்பும், கேசரி பவுடரும் சேர்த்து அதன் மீது இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவை மட்டும் ஊற்றி பிசைந்து கொள்ளவேண்டும்.


   4)   இப்படிப்பிசைந்த கலவையுடன் இப்போது சிக்கன் துண்டுகளையும் போட்டு பிசைந்து கொள்ளலாம்.


   5)   இப்படிப்பிசைந்த சிக்கன் துண்டுகளை ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் பொறித்து எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்...


   6)   அதன்பிறகு ஒரு ஃப்ரை பேனிலோ இல்லை கடாயிலோ சிக்கனைப்பொறித்த எண்ணையையே ஒரு குழிக்கரண்டி விட்டு எண்ணைய் சூடானவுடன் முதலில் நறுக்கிய பூண்டுகளை போட்டு வதக்கவும். பூண்டு சிறிது வதங்கியதும் அதில் இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். அடுத்து அதில் நறுக்கிய வெங்காயத்துண்டுகளையும் பச்சை மிளகாயையும் போட்டு வதக்கவும். அடுத்து அதனுடன் நறுக்கிய குடைமிளகாயை போட்டு வதக்கவும்.


   7)   இப்போது இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு, அரை ஸ்பூன் கேசரி பவுடர் ஆகியவற்றைப்போட்டு வதக்கவேண்டும். இது சிறிதளவு வெந்தவுடன் இதில் ஒரு குழிக்கரண்டி தக்காளி சாஸ் விட்டு வதக்கவும். அடுத்து இதில் ஒரு கப் தயிர் விட்டு தேவைப்பட்டால் சிறிது தண்ணீரும் விட்டு வதக்கவும்.


   8)   தயிர் இந்த வதங்கலில் நன்றாகக்கலந்து கரைந்ததும் ஏற்கனவே பொறித்தெடுத்து வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை இதில் கொட்டி நன்றாக வதக்கவும். பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் வெந்தவுடன் மீண்டும் ஒருமுறை ஒரு குழிக்கரண்டி தக்காளி சாஸ் விட்டு வதக்கி இறக்கிவிட்டால் சிக்கன் மஞ்சுரியன் ரெடி... (தேவைப்பட்டால் வெங்காயம் மற்றும் குடைமிளகாயை வதக்கும்போதே சோயா சாஸ்ம், சிறிது வினிகரும் சேர்த்து வதக்கலாம். இல்லையென்றாலும் பரவாயில்லை.)



அடுத்து?... அடுத்து என்ன சுவையான சிக்கன் மஞ்சுரியனை உங்களுக்கு விருப்பமான விதத்தில் ஒரு வெட்டு வெட்டவேண்டியதுதான்...!!!


பின் குறிப்பு -  இது நான் சமைத்து சாப்பிட்டு, சுவையும் நன்றாக வந்தபின் எழுதிய சமையல் குறிப்புதான்... 

படங்கள் – எனது சொந்த சமையல்...

என்ஜாய் மக்களே... மீண்டும் சந்திப்போம்...!

7 comments:

  1. சமைச்சு பார்த்து சொல்றேன்.

    ReplyDelete
    Replies
    1. சமைச்சுப்பாருங்க அக்கா... நல்லா இருக்கும்... ஏன்னா அல்ரெடி நான் டிரை பண்ணியாச்சு...!

      Delete
  2. அருமையான சமையல்.. எனக்கு பிடிச்ச வெரைட்டி இது...

    ReplyDelete
    Replies
    1. அட உங்களுக்குமா நண்பா?... எனக்கும் இது ரொம்ப ரொம்ப புடிக்கும்...
      சான்ஸ் இருந்தா என்னைக்காவது ரெண்டு பேரும் ஒன்னா சாப்பிடலாம்...!

      Delete
  3. (ரொம்ப சின்ன சின்னதாக கட் செய்து விட்டீகளோ...?) செய்து பார்ப்போம்... வெட்டிடுவோம்...

    ReplyDelete
    Replies
    1. இல்லே தலைவா... முதல் தடவை செய்ஞ்சப்போ பெரிய பீஸா போட்டு சரியா வரலை... இதுதான் நல்ல டேஸ்ட்... (ஆமா... ஒரு வாரத்துக்கும் மேல உங்களை வலையுலகத்தில் பார்க்க முடியலையே... பிஸியா?...)

      Delete
  4. வெங்காயத்தையும் , தக்காளியையும் நன்றாக வதக்கி நன்றாக கரைந்த பிறகு கோழியை சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் .

    ReplyDelete