SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Thursday, August 1, 2013

தவறுக்கு வருந்துகிறேன்...


இன்று காலை வலைத்தளங்களில் காப்பி பேஸ்ட்டை தடுக்க ரைட் கிளிக்கை தடை செய்வது எப்படி என்று ஒரு பதிவு எழுதினேன்...

வழக்கமாக நான் எப்பொழுது பதிவெழுதினாலும் அதை draft-ல் வைத்திருந்து ஒன்றுக்கு இரண்டு முறை படித்து, பல்வேறு விஷயங்களையும் உறுதி செய்து கொண்டு, preview பார்த்து அதன் பின்னர் அதை வெளியிடுவதே எனது பழக்கம்...

கிட்டத்தட்ட ஏழு பதிவுகளுக்கும் மேலாக எனது draft-ல் வெளியிடுவதற்கு தயாராக இருந்தும் எனது கெட்டகாலமோ என்னவோ தெரியவில்லை... நான் அவசரமானதொரு வேலை நிமித்தமாக வெளியில் கிளம்ப தயாராகிக்கொண்டிருந்த நேரத்தில் சரி... போகும்முன் ஏதாவதொரு பதிவை publish செய்து விட்டு போகலாமே என்று லேப் டாப்பை திறந்தேன்...

காலையில்தான் எனது வலைத்தளத்தில் ரைட் கிளிக்கை தடை செய்யும் வழிமுறைகளை கூகுளில் தேடி அதை அப்ளை செய்திருந்தேன்... அட இதையே வெளியிட்டால் ஒருசில பதிவர்களுக்கு உபயோகமாய் இருக்குமே என்றொரு திடீர் எண்ணம்...(ஏற்கனவே நிச்சயம் இதையும் இதைவிட பெரிய பெரிய விஷயங்களையெல்லாமும் எவராவது ஜாம்பவான்கள் பதிவாக இட்டிருப்பார்கள் என்பதும் தெரியும்தான்... இருந்தாலும் எழுதுவோமே என்று தோன்றியதும் எனது நேரம்தான்...)

அவசர அவசரமாக டைப் செய்து கிடைத்த ஒரு படத்தையும் இணைத்து பெரிய வெண்ணையாட்டம் அதுக்கு “உங்கள் தளத்தை காப்பி-பேஸ்ட்டிலிருந்து காத்துக்கொள்ள எளிதான மூன்று ஸ்டெப்ஸ்” என்றொரு பெயர் வேறு வைத்து அவசர அவசரமாக அதை பப்ளிஷ் செய்துவிட்டு தமிழ்மணத்திலும், தமிழ்வெளியிலும் மட்டும் இணைத்துவிட்டு நான் வழக்கமாக இணைக்கும் இன்னபிற தளங்கள் எதிலும் இணைக்காமல் லேப்டாப்பை மூடிவிட்டு கிளம்பிவிட்டேன்...

மதியம் எனது மொபைல் போனில் வந்த இ-மெயில்களை சாப்பாட்டு நேரத்தில் தற்செயலாக படித்தபோதுதான் அந்த இடுகைக்கான கமெண்ட்டுகளை படிக்கநேர்ந்தது...

எந்த இடுகையானாலும் முதல் ஆளாக கருத்திடும் திரு.தனபாலன் சார் அவர்கள்தான் இதிலும் முதள் ஆளாக எனது தவறுகளை சுட்டிக்காட்டியிருந்தார்... (அவசரத்தில் ரைட் கிளிக்கை தடை செய்யும் முக்கியமான விஷயத்தை பதிவில் save செய்யும் முன்னரே பப்ளிஷ் செய்திருக்கிறேன்… (செய்த தவறையும் உருப்படியாக செய்யவில்லை!!!)  

அப்புறம் ஏதோவொரு அனானிமஸ் நண்பர் ரைட் கிளிக்கை மட்டும் தடைசெய்தால் போதுமா... மொத்தத்தையும் செலக்ட் செய்து Ctl + C அழுத்தி காப்பி செய்தால் என்ன செய்வீர்கள் என்று எனது அந்த பதிவையே காப்பி பேஸ்ட் செய்து கமெண்ட் பகுதியில் இட்டு எனது மண்டையில் கொட்டியிருந்தார்... (அடடா... எவ்வளவு சாதாரண விஷயம்?... எப்படி சறுக்கினேன்?... என்று மிக மிக வருத்தப்பட்டேன்...)

உடனடியாக நண்பர் ஒருவரின் மொபைல் போனில் பிளாக்கர் லாக்-இன் செய்து அந்தப்பதிவையே delete செய்தேன்...

இப்பொழுது வீடு திரும்பியதும் முதல் வேலையாக எனது வருத்தத்தை பதிவு செய்கிறேன்...

இன்றைய நிகழ்வில் நான் கற்றுக்கொண்ட பாடங்கள் இவைதான்...

தெரியாத விஷயங்களை, நமக்கு அறிமுகமில்லாத விஷயங்களைப்பற்றி அவசரப்பட்டு பதிவெழுதக்கூடாது... (எனக்கு கம்ப்யூட்டர் – சாஃப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் அறிவு ஜீரோ… ஏதோ நானே இங்கொன்றும் அங்கொன்றுமாக கற்றுக்கொண்ட விஷயங்களை வைத்து காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்...)

எந்தப்பதிவை எழுதினாலும், எக்காலத்திலும் அவசரப்பட்டு நேரமில்லாத நிலையில் அதை அவசர அவசரமாக preview பார்க்காமல் வெளியிடக்கூடாது...

பதிவுலகம் ஒரு கடல்... இங்கு நீந்தும் எவராக இருந்தாலும் யாரோ ஒருவரால் கண்காணிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறோம்... நாம் தவறான தகவல்களை எழுதும் பட்சத்தில் உடனடியாக தலையில் குட்டி திருத்த ஆசான்கள் நிறையபேர் இருக்கிறார்கள்...

எதையோ பார்த்து எதுவோ சூடு போட்டுக்கொண்ட கணக்காக இனி நானும் எப்படியாவது டெய்லி ஒரு பதிவு எழுதிவிட வேண்டும் என்று முயல்வது விரும்பத்தகாத வீண் விளைவுகளை ஏற்படுத்திவிட வாய்ப்புண்டு... (எப்பவாவது எழுதினாலும் நமக்குத்தோன்றுவதை தரமாய் கொடுத்தால் போதுமானது... இல்லை அடிக்கடி எழுதினாலும் எழுத்தின், எழுதும் விஷயத்தின் தரம் குறையாமல் பார்த்துக்கொள்வது மிக மிக அவசியம்...)

எப்படியோ ஒருமுறை தவறு செய்தாலும், பலமுறை தவறு செய்தாலும் தவறு தவறுதான் என்பதால் எனது தவறை சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்ளும் அதே நேரத்தில் எனது தவறுக்கு மனமார்ந்த வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்...

இனி இது போன்ற தவறு நிகழாமல் பார்த்துக்கொள்வதோடு அவ்வாறு மீண்டும் ஒருமுறை நிகழும் பட்சத்தில் நான் எனது எழுத்துக்களையே நிறுத்திக்கொள்ளும் மனதிடத்துடனேயே இருக்கிறேன்... கதம்பமாலையில் இனி இதுபோன்றதொரு தவறு நிகழாது என்று உறுதியளிக்கிறேன்...

மீண்டும் ஒருமுறை கூறுகிறேன் நண்பர்களே...

எனது தவறுக்கு மனமார்ந்த வருத்தங்கள்...

மீண்டும் சந்திப்போம்...9 comments:

 1. காலையில் டேஸ்போர்டில் பார்த்து விட்டு புக்மார்க் பண்ணி இருந்தேன் நைட் வாசிக்கலாம்னு..

  ஆனால் எப்படி பதிவு போட்டாலும் காப்பி பேஸ்ட் பண்ணும் முறை வந்து விட்டது.. என்ன கிரைம்னு சொல்லி யாரும் பிடிக்காத வரையில் கட்டாயம் இது தொடரும்..

  //தவறுக்கு வருந்துகிறேன்...//
  பதிவுலகில் இது எல்லாம் சகஜம்.. dont worry.. be happy..

  ReplyDelete
 2. பதிவு எழுதுவதில் இதெல்லாம் ஜகஜம் அதுக்கு இவ்ளோ பீலா விடுங்க பாஸ்

  இதுக்கு தான் இந்த தொழில் நுட்ப பதிவெல்லாம் நான் முயற்சிக்கிறது இல்ல ஹாஹா நானும் இதுல்ல 0 தான் நாம என்ன திண்டுக்கல் தனபாலன் அண்ணனா தமிழ்வாசி பிரகாஷ் அண்ணனா அதெல்லாம் அவங்களுக்கு தான் வரும் ஹிஹி

  ReplyDelete
 3. தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பவன் பெரிய மனிதன். அதனால, நோ பிராப்ளம்.

  மன்னிப்பவன் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய் மனிதன். அதனால உன்னைவிட நாந்தான் சிறந்தவன் தம்பியோவ்!!

  ReplyDelete
 4. இதுப்போன்ற சின்ன சின்ன தவறுகள் சகஜம் தம்பி.. இப்போகூட ரூபக்ராம் என்கிற தம்பி பேரை ரூபக் குமார்ன்னு அடிச்சு பல்ப் வாங்கி வந்திருக்கேன்.

  இப்படிலாம் கலங்குனா பிரபல பதிவர் ஆகிட முடியாது!!

  ReplyDelete
  Replies
  1. சகோதரி... ஓட்டு எப்படி போடுவது...? தொடர்பு கொள்க... dindiguldhanabalan@yahoo.com

   Delete
 5. இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள்

  thooyaraji dindiguldhanabalan

  ReplyDelete
 6. நண்பரே....

  அடுத்து தொழிநுட்ப பதிவு எழுத இந்த தவறுகளை முன்னுதாரணமாக எடுத்து வெற்றியடையுங்கள்...

  தொழில்நுட்பம் எழுதும் முன் ஒன்றை நினைவில் கொள்க: அந்த நுட்பத்தை உங்கள் கணினியிலோ, வலைப்பூவிலோ பயன்படுத்தி பார்த்தபின் பதிவெழுத தொடங்குக...

  ReplyDelete
 7. அட விடுய்யா......சித்திரமும் கைப்பழக்கம்ன்னா தவறு செய்து செய்து படிப்பதுதான் கவலை வேண்டாம் தொடர்க....நாங்கெல்லாம் இருக்கோம்ல அப்புறம் என்ன ?

  ReplyDelete