SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Friday, August 23, 2013

பல்சுவை கதம்பம் - 4...

நான் சிந்தித்த, படித்த, பார்த்த, அனுபவப்பட்ட, கேள்விப்பட்ட, தெரிந்துகொண்ட, ரசித்த விஷயங்களையெல்லாம் உங்களுக்கும் அறிமுகப்படுத்துவதுதான் இந்த தொகுப்பு...

பல்சுவை கதம்பம்...

ரோஜாப்பூ : ஒரு குட்டிக்கவிதை / ஹைக்கூ...

நெருப்பின்றி
குளிர் காய்ந்தேன்...
என்னுடன் என்னவள்!...

செம்பருத்தி : அப்படியா?...

தானம் மற்றும் தர்மம் இரண்டும் வெவ்வேறானது... தானம் என்பது பலனை எதிர்பார்த்துச்செய்வது... தர்மம் என்பது எதையும் எதிர்பார்க்காமல் செய்வது!

 அரளிப்பூ : தத்துவம் நம்பர்-5001...!!!

ஒவ்வொரு பிறப்பிற்கும் மரணத்தைப்போன்ற நிச்சயிக்கப்பட்ட நிகழ்ச்சி நிச்சயமாய் வேறொன்றில்லை...!!! (பாத்து சூதனமா இருந்துக்கோங்க அப்பூ...)

லில்லி : நான் காணும் உலகங்கள் நீ காணவேண்டும்...
உலகில் கொட்டிக்கிடக்கும் விதவிதமான வீடியோக்களை யூ டியூப் போன்ற பல்வேறு இணையதளங்களில் பார்க்கலாம். ஆனால் இதில் எல்லாராலும் எல்லா வீடியோக்களையும் அடையாளம் கண்டு பார்த்துவிடமுடியாது. ஆகவே நான் ரசித்த சிலபல வீடியோக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதுதான் இது...

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை என்பது பிறக்கும் போதே ஜீன்களில் நிர்ணயிக்கப்பட்டதுதான் என்பதை இந்தக்குழந்தைகளின் திறமையை பார்க்கும்போது சந்தேகமின்றி நம்ப முடிகிறது...

நமது பாரம்பரிய பரத நாட்டியத்தில் எத்தனையோ மேதைகள் எல்லாம் மிக சீரியஸாக நடனமாடிக்கொண்டிருக்கையில் இந்தக்குழந்தைகள் அதையெல்லாம் சும்மா அலேக்காக பந்தாடியிருப்பது கண்களை விரியச்செய்கிறது... இப்படியொரு பரதத்தை நிச்சயம் நீங்கள் வேறெங்கும் பார்த்திருக்கமுடியாது...மிஸ் பண்ணாமல் கண்டிப்பாக பார்த்து ரசியுங்கள்... நிச்சயம் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் நடனம்...

மல்லிகை : கொஞ்சம் தெரிஞ்சிக்கனும்...

ஒரு மனைவியானவள் தன் கணவனுக்கு எல்லாமுமாக இருக்கவேண்டும். அதாவது சமயத்தில் ஒரு தோழி போலவும், சமயத்தில் ஒரு அன்னையாகவும், சமயத்தில் ஒரு நல்ல அறிவுரையாளராகவும், சமயத்தில் ஒரு சமையல்காரியாகவும் என எல்லாமுமாக இருத்தல்வேண்டும்... ஆனால் படுக்கையறையில் மட்டும் பச்சைத்தேவடியாளாகத்தான் (கூச்சமற்று கணவனின் ஆசைகளை நிறைவேற்றுபவளாக) இருக்கவேண்டும். அப்படியன்றி படுக்கையறையிலும் ஒருவள் மனைவியாகவே இருப்பாளேயானால் தன் கணவனை வேறொருத்தியுடன் பங்குபோட தயாராகிவிட்டாள் என்றுதான் அர்த்தம்...

லாவெண்டர் : போவோமா ஊர்கோலம்?...
இந்த வாரம் நாம் பயணிக்கப்போவது நியூஸிலாந்து... இங்கு நார்த் ஐலேண்டின் வெயிட்டோமோ என்ற பகுதியில் அமைந்திருக்கும் வெயிட்டோமோ க்ளோவார்ம் குகைக்குத்தான் இந்த வாரம் பயணிக்கப்போகிறோம்...


Waitomo என்பதற்கு maori மொழியில் wai என்றால் வாட்டர் என்றும் tomo என்றால் hole அல்லது shaft என்றும் அர்த்தமாம்... இந்தக்குகை 1887ம் ஆண்டு கண்டறியப்பட்டாலும் இதன் வயது கிட்டத்தட்ட முப்பது மில்லியன் ஆண்டுகள் என்று இதில் நிறைந்திருக்கும் சுண்ணாம்புப்பாறைகளின் மூலம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக்குகையில் அப்படியென்ன சிறப்பம்சம் என்று யோசிக்கிறீர்களா?... இருக்கிறதே... இந்தக்குகைக்குள் ஓடும் நீரில் படகுச்சவாரி அழைத்துச்செல்கிறார்கள்... அங்கே குகைக்குள் செயற்கை வெளிச்சமளிக்கும் எவ்வித விளக்குகளும் கிடையாது... குகையின் மேற்கூரை முழுவதும் ஒளிரும் தன்மையுடைய ஒருவித பூச்சிகள் ஒட்டிக்கொண்டு குகையை ஒளிமயமாய் ஜொலிக்கச்செய்யும் கண்கொள்ளா காட்சிதான் இக்குகையின் சிறப்பு... என்ன... குகைக்குள் பயணிக்கலாமா?...இதுதான் அந்த ஒளிரும் பூச்சிகள்...


என்ன?... நியூஸிலாந்துக்கு எப்போ போவோம்னு யோசிக்கிறீங்கதானே?...

முல்லை : நான் ரசித்த புகைப்படம்...

வாரவாரம் நான் ரசித்த ஒரு புகைப்படத்தை நதிமூலம், ரிஷிமூலம் எல்லாம் தெரியாமல் ஜஸ்ட் லைக் தட் இந்தப்படம் இன்ன காரணத்தினால் எனக்கு பிடித்திருக்கிறது என்று அறிமுகப்படுத்துவதுதான் இது...


ஒரு புது உயிர் உலகத்துக்கு வந்த தன் முதல் பார்வையை அழகாய் விளக்கும் படம் இது என்பதால் என்னை மிகவும் கவர்ந்தது... மற்றபடி இதை நீங்களும் ரசித்தீர்களா... இல்லையா... என்பது உங்கள் ரசனையைப்பொருத்ததுதான்...


தாமரை : நாட்டு நடப்பும்... முணுமுணுப்பும்!


நாட்டு நடப்பு -  வகுப்புவாத சக்திகளை தேர்தலில் தோற்கடிக்கவேண்டும் பிரதமர் மன்மோகன்சிங்...

முணுமுணுப்பு   அப்போ... ஊழல்வாத சக்திகளை அப்பிடியே வுட்டுறலாம்ன்றீங்களா?...!!!
                 ------------------------------------------------------
நாட்டு நடப்பு  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 3000மாவது கிளை மற்றும் SBIயின் 15000மாவது கிளை நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களால் திறந்துவைப்பு...

முணுமுணுப்பு  நிதியமைச்சரே... உங்களுக்கு ஒரு பழமொழி தெரியுமா?... ‘’ஒருத்தனுக்கு எந்திரிச்சு உக்கார்றதுக்கே வக்கில்லையாம், அவனுக்கு ஒம்போது பொண்டாட்டியாம்’’...
                ----------------------------------------------------------
நாட்டு நடப்பு  இலங்கையில் சிங்களப்பொதுமக்களில் யாருக்கும் தமிழர் மீது வெறி இல்லை… ஒரு வேளை சிங்கள ஆட்சியாளர்களுக்கு இருந்தாலும் இருக்கலாம்... – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன்.

முணுமுணுப்பு  இருந்தாலும் இருக்கலாமா?... பேஸ்புக்குல உங்களப்பத்தி இருந்த ஒரு கமெண்ட் இது...
‘’நான் சொல்லல?... ஆளு பாக்கத்தான் பொறி உருண்டை மாதிரி இருப்பாரு...ஆனா நல்லா காமெடி பண்ணுவாருன்னு...!!!’’
        -------------------------------------------------------------------
நாட்டு நடப்பு  நிலக்கரி சுரங்க ஊழல் கோப்புகள் மாயம் - பிரதமர் விளக்கமளிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்.

முணுமுணுப்பு  மும்பை தீவிரவாத தாக்குதலப்போ புல்லட் புரூஃப் ஜாக்கெட்டுல புல்லட் துளைச்சு உயிரை விட்டாரே கர்காரே... அவர் போட்டிருந்த குண்டு துளைக்கிற(!) புல்லட் புரூஃப் ஜாக்கெட் கூட அப்பவே மாயமாப்போச்சு... ''அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...''அப்பிடின்னு பிரதமர் விளக்கம் குடுப்பாரோ?...!!!

        -------------------------------------------------------------------
நாட்டு நடப்பு  பிரியாணி படத்தின் பாடல்கள் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியீடு – போலீசில் புகார்...

முணுமுணுப்பு  நல்லவேளை படம் இன்னும் இணையத்துல வரலைன்னு சந்தோஷப்பட்டுக்கோங்க அப்பூ...

                   ------------------------------------------------------

என்ன மக்களே... நான் தெரிந்துகொண்ட சில விஷயங்களை நீங்களும்  தெரிந்துகொண்டதோடு பல்சுவையையும் சுவைத்தீர்களா?...

என்ஜாய்... மீண்டும் சந்திப்போம்...!!!

5 comments:

 1. நாட்டு நடப்பும், முணுமுணுப்பும் நல்லாவே இருக்கு!!

  ReplyDelete
 2. சூப்பர் டான்ஸ் ,,,வெளிச்சம் போட்டு காட்டியமைக்கு நன்றி !

  ReplyDelete
 3. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி,,,

  ReplyDelete
 4. நாட்டு நடப்பு, போவோமா ஊர்வலம் என எல்லாம் அருமை...
  கதம்பம் அருமையான வாசம்.

  ReplyDelete