SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Thursday, August 15, 2013

பல்சுவை கதம்பம் - 3...

நான் சிந்தித்த, படித்த, பார்த்த, அனுபவப்பட்ட, கேள்விப்பட்ட, தெரிந்துகொண்ட, ரசித்த விஷயங்களையெல்லாம் உங்களுக்கும் அறிமுகப்படுத்துவதுதான் இந்த தொகுப்பு...

பல்சுவை கதம்பம்...

ரோஜாப்பூ : ஒரு குட்டிக்கவிதை / ஹைக்கூ...


தலையையே கொளுத்தினாலும்
தப்பி ஓட முயற்சிப்பதில்லை...
தீக்குச்சி!...

செம்பருத்தி : அப்படியா?...

உணர்ச்சி வேகம் ஒருவனை குடிகாரனைப்போல ஆக்கிவிடும்உணர்ச்சி வேகத்துக்கு அன்பு” என்ற நல்ல பெயரும் உண்டு... “கோபம்” என்ற கெட்டப்பெயரும் உண்டு...!

 அரளிப்பூ : தத்துவம் நம்பர்-5001...!!!



வாழ்க்கையில் ஆசைகள் இருக்கலாம்... ஆசையே வாழ்க்கையாயிருத்தலாகாது...!!! (வெறுமனே ஆசை மட்டுமே பட்டுக்கிட்டிருந்தா வெறும் பயலாவேதான் இருக்கனும்...!!!)

லில்லி : நான் காணும் உலகங்கள் நீ காணவேண்டும்...

உலகில் கொட்டிக்கிடக்கும் விதவிதமான வீடியோக்களை யூ டியூப் போன்ற பல்வேறு இணையதளங்களில் பார்க்கலாம். ஆனால் இதில் எல்லாராலும் எல்லா வீடியோக்களையும் அடையாளம் கண்டு பார்த்துவிடமுடியாது. ஆகவே நான் ரசித்த சிலபல வீடியோக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதுதான் இது...

இன்று நமது சுதந்திர தினம் என்பதால் அது சம்மந்தப்பட்ட ஒரு நடனத்தை பார்க்கலாம்…

உடலையும் கைகளையும் தேசியக்கொடியாக மாற்றியிருப்பது இந்த நடனத்தின் சிறப்பம்சம்…

அதிலும் தேசியக்கொடி அசைவது போன்ற மூவ்மெண்ட்டும், அசோகச்சக்கரம் சுற்றுவது போன்ற மூவ்மெண்ட்டும் மிகச்சிறப்பான அம்சங்கள்... சான்ஸ்லெஸ் பெர்ஃபார்மன்ஸ்...



ஒரு முறை பார்த்து ரசியுங்கள்... நிச்சயம் இது உங்களுக்கும் பிடிக்கும்... ஜெய்ஹிந்த்...!

மல்லிகை : கொஞ்சம் தெரிஞ்சிக்கனும்...

உனக்காக ஒருவர் காத்திருக்கும்போது நீ வேறு ஒரு வேலையில் ஈடுபடுவதைப்போன்ற அநாகரிகமான செயல் வேறேதுமில்லை.

தனிமனித ஒழுக்கமில்லாதவர்கள் எப்போதும்எதையும்யாரையும் விமர்சிக்கத் தகுதியற்றவர்கள்தான்... ஒரு நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தனிமனித ஒழுக்கத்தை கடைபிடித்தால் மட்டுமே அந்த நாடு நாகரீக முன்னேற்றமான நிலையை அடையுமேயொழியஎந்த சட்டங்களாலும்கட்டுப்பாடுகளாலும் ஒரு நாட்டை திருத்திவிட முடியாது என்பதை தெரிந்து கொள்ளுதல் நலம்...

லாவெண்டர் : போவோமா ஊர்கோலம்?...
போனவாரம் கடலுக்கு மேலே தங்கும் ரிசார்ட்டுகளை பார்த்தோம்... இந்த வாரம் நாம் பார்க்கப்போவது கடலுக்கு அடியில் தங்கவும், உண்ணவும் உங்களுக்காக காத்திருக்கும் ஒரு ஸ்பெஷல் ரெஸ்ட்டாரண்ட்...

மாலத்தீவில் ரங்காலி தீவு என்ற தனியாருக்குச்சொந்தமான தீவில் கான்ராடு ஹோட்டலின் நிர்வாகத்தில் இயங்குவதுதான் இந்த அண்டர்வாட்டர் ரெஸ்ட்டாரண்ட்... இதன் பெயர் இதா அண்டர்வாட்டர் ரெஸ்ட்டாரண்ட்...

“இதா” என்றால் “முத்துக்களின் தாய்” என்று அர்த்தமாம். கடலுக்கு அடியில் 5மீட்டர் ஆழத்தில் 16அடிக்கு 30 அடி அளவில் அமைந்திருக்கும் இந்த ரெஸ்ட்டாரண்ட் 14பேர் அமர்ந்து சாப்பிடும் வசதி கொண்டது. இது டிரான்ஸ்ஃபரண்ட் அக்ரிலிக் ரூஃப் கொண்டு 270° பனோரமிக் பார்வை கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நியூஸிலாந்தைச்சேர்ந்த M.J.மர்ஃபி லிமிடெட் என்ற நிறுவனத்தால் வடிவமைத்து கட்டப்பட்ட இந்த ரெஸ்ட்டாரண்ட் 2005ம் வருடம் ஏப்ரல் 15ம் தேதியிலிருந்து செயல்படத்தொடங்கியிருக்கிறது. இந்த ரெஸ்ட்டாரண்ட்டுக்குள் நுழைவதற்கு கவர் செய்யப்பட்ட படிக்கட்டுக்களுடன் கூடிய அமைப்பு கடல் மட்டத்திற்கு மேலிருந்து 5மீட்டர் ஆழத்தில் உள்ள ரெஸ்ட்டாரண்ட் அறைக்கு செல்லும் அளவு ஜெட்டி அமைப்புடன் உள்ளது. 2004ல் வந்த சுனாமியில் கூட இந்த ரெஸ்ட்டாரண்ட்டும் படிக்கட்டுகளும் (கட்டுமான நிலையிலிருக்கும்போது) எவ்வித சேதமும் இன்றி நிலைத்து நின்றிருப்பது கூடுதல் தகவல்...






இந்த ரெஸ்ட்டாரண்டில் தனிநபராக சென்றும் உணவருந்தலாம். மீட்டிங், செமினார் போன்றவற்றிற்கும் புக் செய்து கொள்ளலாம். எல்லாவற்றையும் விட சிறப்பு... தேனிலவு கொண்டாடும் தம்பதிகளும் இதை தங்களுக்கென தனியாக புக் செய்து கொள்ளலாமாம்...!

என்ன?... உடனே மாலத்தீவுக்கு ஒரு டிக்கெட் புக் பண்ணலாமான்னு யோசிக்கிறீங்களா?...

முல்லை : நான் ரசித்த புகைப்படம்...

வாரவாரம் நான் ரசித்த ஒரு புகைப்படத்தை நதிமூலம்ரிஷிமூலம் எல்லாம் தெரியாமல் ஜஸ்ட் லைக் தட் இந்தப்படம் இன்ன காரணத்தினால் எனக்கு பிடித்திருக்கிறது என்று அறிமுகப்படுத்துவதுதான் இது...
  

வானில் சிறகடிக்கும் ஒரு பறவையின் இறக்கையில் விரிந்த இறகுகளை சூரியஒளியின் பின்னனியில் கொள்ளை அழகாய் காட்டிய படம் இது என்பதால் என்னை மிகவும் கவர்ந்தது... மற்றபடி இதை நீங்களும் ரசித்தீர்களா... இல்லையா... என்பது உங்கள் ரசனையைப்பொருத்ததுதான்...

தாமரை : நாட்டு நடப்பும்... முணுமுணுப்பும்!

நாட்டு நடப்பு -  தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புக்கு தடையா?... பாகுபாடின்றி அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு...

முணுமுணுப்பு   இருக்காதா பின்னே?... இனிமே ஓட்டு வாங்குறதுக்கு இருக்கிற ஒரே வழி அதுதான்னு ஆகிப்போச்சு... அதுலேயும் மண்ணப்போட்டா எப்புடீ?...!!!
                 ------------------------------------------------------
நாட்டு நடப்பு  பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்கள் குறித்து ‘’ யாராவது போலீஸ் அல்லது ராணுவத்தில் சேருகிறார்கள் என்றால் அவர்கள் உயிர்த்தியாகம் செய்வதற்காகத்தான்’’ என்று பீகார் மாநில ஊரக வேலைத்துறை மந்திரி பீம்சிங் கருத்து...

முணுமுணுப்பு  பீம்சிங்கோ... ராம் சிங்கோ... அரசியல்வாதிங்க நாங்கெல்லாம் ராணுவத்திலேயே பெருச்சாளி வேலை பண்ணி எவ்வளவு சுருட்டமுடியுதோ அவ்வளவு சுருட்டுற ஆளுங்க... யாரு செத்தா எங்களுக்கென்ன?... கிடைச்சவரைக்கும் லாபம்தான்...
                ----------------------------------------------------------
நாட்டு நடப்பு  எல்லையில் அத்துமீறி நடத்தும் தாக்குதலை நிறுத்தும்வரை பாகிஸ்தானுடன் பேச்சு இல்லை – இந்தியா அறிவிப்பு.

முணுமுணுப்பு  அடேங்கப்பா... இப்போதான் “என்னாது... இந்திராகாந்திய சுட்டுக்கொன்னுட்டாங்களா?...ன்னு கேக்குறாய்ங்க... இதாய்யா உங்க டக்கு?...
                ---------------------------------------------------------------
நாட்டு நடப்பு  சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை முழுவதும் பாதுகாப்புக்காக 14ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்...

முணுமுணுப்பு  சுதந்திரத்தை கொண்டாடுறதுக்கே இவ்வளவு பாதுகாப்பு தேவைப்படுதா?... நல்லாத்தான்யா இருக்கு நாடு!!!
                   ------------------------------------------------------
நாட்டு நடப்பு  ராபர்ட் வதேரா பிரச்சினையில் எந்த நிலையிலும் பாராளுமன்றத்தில் விவாதம் இல்லை – காங்கிரஸ் உறுதி.

முணுமுணுப்பு  ம்ம்ம்ம்... அதுவும் நல்லதுதான்... விசாரணைக்கமிஷன் அது இதுன்னு அதுக்கும் மக்கள் பணத்தையெல்லாம் வாரியிறைச்சி வீணடிச்சிட்டு கடைசியில எல்லாத்தையும் ஊத்தி மூடி சங்கு ஊதறதுக்கு பதிலா ஆரம்பத்திலேயே எதுவுமில்லைன்னு முடிவடுத்து மக்கள் பணத்தை பாதுகாக்க நினைக்கிற காங்கிரஸ் கட்சியின் மக்கள் நலனை பாராட்டியே ஆகனுமில்லே?...
                    -------------------------------------------------------
நாட்டு நடப்பு  கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஒருவரையொருவர் தாக்கித் தொடர்ந்து அறிக்கைப்போர்...

முணுமுணுப்பு -  அதான் அஞ்சு வருஷம் உங்களுக்கு... அஞ்சு வருஷம் அவருக்குன்னு மாத்தி மாத்தி மொத்தக்குத்தகைக்கு தமிழ்நாட்டை விட்டாச்சுல்ல?... இன்னும் எதுக்கு சண்டை?...

                    --------------------------------------------------------------

என்ன மக்களே... நான் தெரிந்துகொண்ட சில விஷயங்களை நீங்களும்  தெரிந்து கொண்டதோடு பல்சுவையையும் சுவைத்தீர்களா?...

உங்களுக்கு என் மகிழ்வான சுதந்திர தின வாழ்த்துக்கள்...

என்ஜாய்... மீண்டும் சந்திப்போம்...!!!


1 comment: