SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Thursday, August 8, 2013

பல்சுவை கதம்பம் - 2...

நான் சிந்தித்த, படித்த, பார்த்த, அனுபவப்பட்ட, கேள்விப்பட்ட, தெரிந்துகொண்ட, ரசித்த விஷயங்களையெல்லாம் உங்களுக்கும் அறிமுகப்படுத்துவதுதான் இந்த தொகுப்பு...

 பல்சுவை கதம்பம்”...

கதம்பத்தின் முதல் பூ : ஒரு குட்டிக்கவிதை / ஹைக்கூ...


எதிர் வீட்டுக்காரன் வளர்கையில்
எனக்கும் வளர்ந்தது...
பொறாமை...!

கதம்பத்தின் இரண்டாம் பூ : அப்படியா?...
ஒரு வகுப்பில் தாமதமாய் வந்த ஒரு மாணவன் காரணம் கேட்ட ஆசிரியரிடம் சைக்கிள் பஞ்ச்சர் சார்...’ என்றான். அதைக்கேட்ட அத்தனை மாணவர்களும் சிரித்தனர்.
ஏன்டா சிரிக்கிறீங்க?...’ என்று ஆசிரியர் கேட்டதுக்கு அவன்கிட்ட சைக்கிளே கிடையாது சார்... அவன் வந்ததே நடந்துதான்...’ என்றனர் மற்ற மாணவர்கள்.
உடனே அந்த ஆசிரியர் தாமதமாய் வந்த மாணவனிடம் ஏன்டா பொய் சொன்னே?...’ என்று கேட்டார். அதுக்கு அந்த மாணவனின் பதில் உண்மையைச்சொன்னா நீங்க அடிப்பீங்களே சார்...’!
இது ஒரு சாதாரண குட்டிக்கதையாய் தெரிந்தாலும்கூட இது உணர்த்தும் செய்தி மிகப்பெரியது.

‘’எங்கே உண்மை தண்டிக்கப்படுகிறதோ... அங்கேதான் பொய்மை ஆரம்பமாகிறது’’... சரிதானே?...

கதம்பத்தின் மூன்றாம் பூ : தத்துவம் நம்பர்-5001...!!!

பசுவாய் இருந்தால் பாலை கறப்பதும்... பாம்பாய் இருந்தால் பாலை ஊற்றுவதும்தான் இந்த சமுதாயத்தின் இயல்பு!!! (எம்மாடியோவ்... என்னவொரு தத்துவம்?... எவன் கண்டுபுடிச்சான்னு தெரியல...!!!)

கதம்பத்தின் நான்காம் பூ : எனக்குப்பிடித்த பாடல்... அது உனக்கும் பிடிக்குமே...

ஆட்டோராஜா எனும் தமிழ்ப்படத்தில் வரும் பாடல் இது... இளையராஜாவின் இசையில் ரசித்து கேட்கும்போது மனதை கிறங்கடிக்கும் பாடல்களின் வரிசையில் நிச்சயம் இதுவும் ஒன்று...

“சங்கத்தில் பாடாத கவிதை, உனதங்கத்தில் யார் தந்தது...” என்று ஆரம்பித்து “கையென்றே செங்காந்தள் மலரை நீ சொன்னால் நான் நம்பவோ... கால் என்றே செவ்வாழை இணைகளை நீ சொன்னால் நான் நம்பி விடவோ... மை கொஞ்சம்... பொய் கொஞ்சம்... கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்...” என்று தொடரும் பாடல் சுகமோ சுகம்தான்... முதன் முதலில் மலையாளத்தில் வெளிவந்த இந்தப்பாடல் அதற்கடுத்துதான் தமிழில் வந்திருக்கிறது... அதைத்தொடர்ந்து தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் ஹிட் அடித்திருக்கிறது... இந்தப்பாடலின் பல சிறப்புகளில் பாட்டின் வரிக்கு வரி வரும் பெண் ஹம்மிங் வாய்ஸ்ம் ஒன்று என்பது பாடலைக்கேட்ட உங்களுக்கே புரிந்திருக்கும்...

கதம்பத்தின் ஐந்தாம் பூ : கொஞ்சம் தெரிஞ்சிக்கனும்...
நீங்கள் ஒருவர் மீது வைக்கும் அன்பு எந்தவொரு சூழ்நிலையிலும் அவரது சுதந்திரத்தைப்பாதிக்காதவாறு இருக்கவேண்டும்.

நீங்கள் உங்களுக்கு பிடிக்காத குணங்களைக்கொண்ட உங்கள் நண்பரையோதுணையையோ மாற்றமுடியும் என்ற எண்ணமே அபாயகரமானதுதான்இதற்கு அர்த்தம் ஆரம்பம் முதலே போராட்டம் என்பதுதான் என்று புரிந்து கொள்ளுதல் நலம்

கதம்பத்தின் ஆறாம் பூ : போவோமா ஊர்வலம்?...
இந்தவாரம் நாம் பார்க்கப்போவது போரா போரா தீவு... இது பிரெஞ்ச் கலாச்சாரத்தை தழுவி பசிபிக் கடலின் நடுவில் அமைந்துள்ள ஒரு குட்டித்தீவு நாடு... டாகிதி(Tahiti)வரை விமானத்தில் சென்று அங்கிருந்து ஒரு 50நிமிட லோக்கல் பயணத்தில் போராபோரா தீவை அடையலாமாம்...
இந்தத்தீவின் சிறப்பம்சமே கடலுக்கு மேல் அமைந்துள்ள ரிசார்ட்டுகளும் கிரிஸ்ட்டல் கிளியர் கடல் தண்ணீரும்தான்... ஒரு இரவுக்கு ஒரு நபருக்கு 500டாலர் முதல் 5000 டாலருக்கு மேலும் ரிசார்ட்டுகளைப்பொருத்து கட்டணமிருக்கும். ஒருசில ரிசார்ட்டுகளின் புகைப்படத்தைப்பாருங்களேன்... வாழ்க்கையில் ஒருமுறையாவது போய் தங்கமாட்டோமா என்று ஏங்கவைக்கும் தீவு இது... (சுனாமி வந்து சுருட்டாதவரை நிச்சயம் இது சொர்க்கம்தான்...!!!)

கதம்பத்தின் ஆறாம் பூ : நான் ரசித்த புகைப்படம்...
வாரவாரம் நான் ரசித்த ஒரு புகைப்படத்தை நதிமூலம், ரிஷிமூலம் எல்லாம் தெரியாமல் ஜஸ்ட் லைக் தட் இந்தப்படம் இன்ன காரணத்தினால் எனக்கு பிடித்திருக்கிறது என்று அறிமுகப்படுத்துவதுதான் இது...

ஆஃப்கானிஸ்தானிலும், அரேபியாவிலும் ஒருசில பெண்களுக்கு உலகத்திலேயே அழகான கண்கள் அமைந்திருப்பதாய் பல புகைப்படங்களை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கலாம்...
அழகுக்கண்களுக்கு சொந்தமான இந்த குட்டிப்பெண்ணும் ஆஃப்கானிஸ்தானைச்சேர்ந்தவள்தான்...

கதம்பத்தின் கடைசிப்பூ : நாட்டு நடப்பும்... முணுமுணுப்பும்!

நாட்டு நடப்பு - வேண்டுமானால் மத்திய அரசு எல்லா ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் எங்கள் மாநிலத்தில் இருந்து திரும்ப பெற்றுக்கொள்ளட்டும்... - முலாயம் சிங் கட்சியின் பீத்த... ஸாரி... மூத்த அரசியல்வாதி ஒருவர் கருத்து.

முணுமுணுப்பு  அப்பிடியே உங்க கட்சியோட எல்லா எம்.பிக்களையும்கூட மக்கள் திரும்ப பெற்றுக்கொள்ளலாமா?... 
                 ------------------------------------------------------
நாட்டு நடப்பு  தமிழகத்தில் தாது மணல் கொள்ளையில் ஈடுபட்ட V.V.மினரல்ஸ்க்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயலும் மாவட்ட ஆட்சியர் இடமாற்றம்...

முணுமுணுப்பு  பாவம்... ஏற்கனவே மதுரையில வேலை செஞ்சவய்ங்களே ஒரு மண்ணும் நகர்த்த முடியலன்றது தெரியாது போல... ஒரு வேளை துர்கா-ஐ.ஏ.எஸ் ஆபிஸர் விஷயமும் தெரிஞ்சிருக்காதோ?...!!!
                ----------------------------------------------------------
நாட்டு நடப்பு  விஐய் நடிச்ச தலைவா பட ரிலீசுக்கு அடுத்தடுத்து பிரச்சினை...

முணுமுணுப்பு  ஃபிரியாவே வெளம்பரம் குடுக்கிறதுக்குன்னு பலபேர் இருக்கிறவரைக்கும் சினிமாக்காரங்களுக்கு கொண்டாட்டம்தான் போல... (ஒருவேளை விஜய்யும் வெளிநாட்டில் போய் குடியேறுவேன்னு பேட்டி எதாவது குடுப்பாரோ?...!!!
                ---------------------------------------------------------------
நாட்டு நடப்பு  இந்திய வீரர்கள் 5பேர் பலியான விவகாரத்தில் தவறான தகவலைத்தந்த ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி பதவி விலக வேண்டும்... - எதிர்க்கட்சிகள் அமளி.

(ஏ.கே.அந்தோணி)முணுமுணுப்பு (வடிவேலு குரலில்)  எம்மா சிம்ரன்... நாங்க ரெண்டுபேரும் சின்ன வயசுலயிருந்தே இப்பிடித்தான்... அவன் குடும்பத்த நான் கேவலமா பேசுவேன்... என் குடும்பத்த பத்தி அவன் ரொம்ப கேவலமா பேசுவான்... இதெல்லாம் எங்களுக்குள்ள சகஜம்மா... அவ்வ்வ்வ்வவ்ஊஊஊஊஊஊ....
                   ------------------------------------------------------

என்ன மக்களே... நான் தெரிந்துகொண்ட சில விஷயங்களை நீங்களும் தெரிந்து கொண்டதோடு பல்சுவையையும் சுவைத்தீர்களா?... 

என்ஜாய்... மீண்டும் சந்திப்போம்...!!!


6 comments:

 1. போவோமா ஊர்கோலத்தை தான் ரொம்ப ரசிச்சேன்

  ReplyDelete
 2. உங்களுக்கு ஒரு யோசனை சொல்லுறேன். தவறா இருந்த மன்னிச்சுக்கோங்க. பதிவுக்கு கதம்பம்ன்னு பேரு வச்சாச்சு. ஒவ்வொரு தலைப்புக்கும், முதல் பூ, இரண்டாம் பூன்னு சொல்லுவதற்கு பதிலா முல்லை, மல்லி, கனகாம்பரம், மரிக்கொழுந்துன்னு தலைப்பு வைங்களேன். உதாரணத்துக்கு சாலை குண்டும் குழியுமா இருந்தா அதை கோவமா சொல்லுவீங்கல் அதுக்குச்சிவப்பு கலர் பூவான, கனகாம்பரம், நல்ல விசயத்தை பகிரும்போது முல்லை, 18+ பத்தி சொல்லும்போது மஞ்சள் பூவான சாமந்தின்னு சொன்னா பதிவுக்கு இன்னும் அழகூட்டுமே! எனக்கு தோணுனதை சொன்னேன். தவறா இருந்தா மன்னிச்சு தம்பி

  ReplyDelete
  Replies
  1. ஐயோ... என்னக்கா நீங்க?... எனக்கு என்னோட பதிவுகளை எப்படி திருத்தம் பண்ணினா இன்னும் நல்லாயிருக்கும்னு சொல்ல நிஜவாழ்க்கையிலும் சரி... பதிவுலகத்திலயும் சரி... நண்பர்கள் யாருமில்லை... (என்னை என்னுள்ளேயே குறுக்கிக்கொள்ளும் என் சுபாவம் அப்படி...) அப்படியிருக்கும்போது நீங்க ஒரு ஐடியா சொல்லியிருக்கீங்க... நெஜமாவே ரொம்ப சந்தோஷம் அக்கா... அதுவுமில்லாம நீங்க கொடுத்த ஐடியாவும் ரொம்ப சரிதான்... அடுத்த வாரத்துல இருந்து உங்க ஐடியாவையே ஃபாலோ பண்ணிக்கிறேன்... நன்றி அக்கா...

   Delete
 3. கதம்பம் கலக்கல் ...!

  ReplyDelete
 4. தஞ்சாவூர் கதம்பம் போல் மணம்

  ReplyDelete
 5. நாட்டு நடப்பு - முணுமுணுப்பு....
  போவோமா ஊர்வலம்.... எல்லாம் சிறப்பு...
  பல்சுவைக்கதம்பத்துக்கு வாரத்தில் ஒரு நாள் ஒதுக்குங்கள்...

  ReplyDelete