SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Friday, July 5, 2013

ஓட்டு அரசியலுக்கு வேட்டு வைத்த இளவரசன்...


முதலில் சாதிமத அரசியலுக்கு அப்பாற்பட்டு காதலுக்காக உயிர் துறந்த இளவரசன் என்ற மனித ஜாதிக்கு என் மனமார்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்...

இளவரசன், திவ்யா என்ற இரு சின்னஞ்சிறு காதல் உள்ளங்களின் மனித ஜாதிக்கே உரித்தான மெல்லிய உணர்வுகளும் ஆசைகளும் சில சுயநலமிக்க சாதி அரசியலில் கருகிப்போயிருக்கிறது. நேற்றிலிருந்தே பல நல்ல உள்ளங்கள் பதிவுலகம் முழுக்க சாதியை ஒழிக்கவேண்டும் என்று  ஆற்றாமையை கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். வழக்கமான இந்திய தேசிய மறதி நோயிலிருந்து இந்த விஷயம் தப்புமா என்பது தெரியவில்லை...

சிறுவயதிலிருந்தே சாதிய எதிர்ப்பு மனநிலையிலேயே வளர்ந்தவன் நான். எனது பெற்றோர் சாதிய மற்றும் மத மறுப்புத்திருமணம் செய்து கொண்டவர்கள். எனது தந்தை இந்து மதத்தையும், தாயார் கிறித்துவ மதத்தையும் சேர்ந்தவர்கள். வாழ்நாள் முழுக்க அவர்கள் இருவரும் அன்யோன்யமாய் வாழ்ந்ததையும், ஒருவருடைய மத நம்பிக்கையின் மீது மற்றவர் வைத்திருந்த மரியாதையையும் பார்த்து வியந்திருக்கிறேன். என் தந்தை என் அம்மாவுடன் சர்ச்சுக்கு போவார். என் அம்மா எனது தந்தையுடன் கோவிலுக்குப்போவார். அவர்களுக்குள்ளான சமூக வேறுபாட்டை களைந்தது ஒருவர் மீது ஒருவருக்கிருந்த காதலாய்த்தன் இருக்கும் என்று நம்புகிறேன். காதல் ஒன்றிற்கு மட்டும்தான் சாதியையும், மதத்தையும் பற்றிக்கவலையுறாத மனம் இருக்கிறது என்பதை ஆணித்தரமாய் நம்புகிறேன்.

நானும் அவர்கள் வழிதான். நான் காதலித்தபோது என் பெற்றோர் எனக்கு மகிழ்ச்சியுடன் எவ்வித எதிர்ப்புமின்றி சாதிய மறுப்புத்திருமணம் செய்து வைத்தார்கள்.

கல்வியறிவு வளர வளர அடுத்த தலைமுறையிடம் சாதியும், மதமும் வெறியாய் இல்லாமல் ஒரு சாதாரண விஷயமாய் அமுங்கிப்போகும் என்று நம்பிய கூட்டத்தில் நானும் ஒருவன். ஆனால் சாதியையும், மதத்தையும் வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் கேடுகெட்ட கூட்டங்கள் இருக்கும்வரை அதற்கு சாத்தியமில்லை என்பதற்கான சாட்சிகளை சமூகம் பார்க்கத்தொடங்கியாகிவிட்டது.

எவ்வளவோ காதல் திருமணங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாட்டில் இளவரசனுக்கு மட்டும் ஏன் இந்தக்கதி?... என்ற ஆற்றாமை எண்ணத்தில் இன்னும் சில எண்ணங்கள் ஓடத்தான் செய்கின்றன. ஒருவேளை இளவரசன் வன்னியர் சமூகப்பெண்ணை காதலிக்காமல் வேறெதாவதொரு சமூகத்தைச்சேர்ந்த பெண்ணை காதலித்திருந்தால் விஷயம் இவ்வளவு பூதாகரமாயிருக்குமா என்பது கேள்விக்குறிதான். ஆனால் காதல் சாதி பார்த்து, மதம் பார்த்து, அந்தஸ்து பார்த்து வருவதில்லை என்பது பெரும்பாலான உள்ளங்களுக்குத்தெரிந்திருக்கும்.

பா.ம.கவும், வி.சி.யும் அதாவது ராமதாசும், திருமாவளவனும் சகோதரர்களாய், ஒன்றாய் அரசியல் மேடைகளில் ஆரத்தழுவிக்கொண்டார்கள். அன்புத்தம்பியும், அருமை அண்ணனும் ஒருவருக்கொருவர் ஆதரவாய் அறிக்கை விட்டுக்கொண்டார்கள். எல்லாம் நல்லாத்தான் போய்க்கொண்டிருந்தது.

நான்கூட இவர்களது அரசியலை கடுமையாக விமர்சித்தெல்லாம் எழுதியிருக்கிறேன்.ஒருகட்டத்தில் தி.மு.கவும், அ.தி.மு.கவும் பா.ம.கவை கூட்டணிக்கு அழைக்காமல் மதிக்காமல் கழட்டி விட்டதும்தான், மருத்துவர் ஐயா திடீரென பொங்கியெழுந்து திராவிடக்கட்சிகளுடன் இனி ஒருபோதும் கூட்டணி இல்லை என்று அறிவித்தார். அதன் பின்னர் பா.ம.க அரசியல் நடத்தவேண்டுமென்றால் பரபரப்பாக ஏதாவது செய்தாக வேண்டும்...

இலங்கைப்பிரச்சனையும், மதுவிலக்கும் பா.ம.கவுக்கு எதிர்பார்த்த அரசியல் லாபத்தை தரவில்லை. இந்த நிலையில்தான் தொடர்ந்து அரசியல் செய்ய, மீண்டும் ஆரம்பகால சாதி அரசியலை கையில் எடுத்தது பா.ம.க. அப்போது அவர்களுக்கு சாதி அரசியல் செய்ய அல்வா கிடைத்த மாதிரி இளவரசன்-திவ்யா காதல் விவகாரம் கிடைத்தது. தொடர்ந்து மரக்காணம் கலவரம்... ராமதாஸ் கைது செய்யப்பட்டபோது தமிழகத்தின் வடமாவட்டங்களில் ஏற்படுத்திய கலவரங்கள் என்று பா.ம.கவின் பரபரப்பு அரசியல் ஏறுமுகத்தில் சென்றதைப்பார்த்து திராவிடக்கட்சிகளே கொஞ்சம் அதிர்ச்சிதான் அடைந்தன. ஏன் ராமதாசேகூட படிப்பறிவு வளர்ந்துவிட்ட இந்தச்சமூக சூழலில் மீண்டும் சாதி அரசியல் எனும் மகுடிக்கு இத்தனை பாம்புகள் மயங்கும் என்று எதிர்பார்த்திருக்கமாட்டார். எந்தளவுக்கு ஏறுமுகத்தில் சாதிஅரசியல் செய்தாரோ, அதைவிட பலமடங்கு வேகத்தில் இன்று அவரது சாதி அரசியல், இளவரசனின் மரணத்தால் சாமன்யர்களிடையே அதள பாதாளத்தில் வீழத்தொடங்கியுள்ளது.

இளவரசனின் மரணம், திவ்யாவுக்கோ அவரது உறவினர்களுக்கோ இல்லை சாதியக்கட்சிகளுக்கோ ஏதாவது மனமாற்றத்தையும், மனவருத்தத்தையும் ஏற்படுத்துகிறதோ இல்லையோ... பரபர அரசியலை விரும்பும் சாதியக்கட்சிகளுக்கு நிச்சயமிது சரியான செக் வைக்கும்.

இளவரசனின் மரணத்துக்கு இன்று தமிழகத்தின் நடுநிலையாளர்கள் பலரும் சாதி மத உணர்வுகளை தாண்டி மனதார வருந்துகிறோம். படித்தவர்கள், நடுநிலையாளர்கள், விமர்சகர்கள், பொதுமக்கள் என்று பலதரப்பினரிடையேயும் இளவரசனின் மரணம் சாதி அரசியல் மீதான வெறுப்பை விதைத்திருக்கிறது.

இளவரசனின் மரணம் ஒன்று வீரமரணமல்ல. சமூகத்துக்கான தியாக மரணமல்ல... இதுவல்ல... அதுவல்ல... என்று எத்தனையோ வாதங்கள் எழலாம். உண்மைதான்... தன் காதலை நினைத்து உருகிக்கொண்டிருந்த ஒரு சாமான்ய உள்ளத்தின் மரணம்தான் அது...

ஆனாலும்கூட எல்லாவற்றையும் மீறி இளவரசனின் மரணம், நமது தேசியவியாதியான மறதியையும் தாண்டி, ஓட்டு வங்கிக்காக சாதி அரசியல் செய்வோரின் அரசியல் எதிர்காலத்துக்கு வேட்டு வைக்கும் பட்சத்தில் இனிவரும் காலங்களில் சாதியை சங்கமாகவும், அரசியலாகவும் சுயலாபத்துக்கு பயன்படுத்த நினைப்போருக்கு சரியான சவுக்கடியாக வரலாற்றில் வீற்றிருக்கும் என்று நம்புவோம்...

பின்குறிப்பு:- சாதி அரசியல் மீதான கண்டனம் வெறுமனே பா.ம.க.வுக்கு மட்டும் கிடையாது. சாதியை வைத்து அரசியல் செய்யும் தொல்.திருமாவளவன், புதிய தமிழகம்-கிருஷ்ணசாமி, கொங்கு வேளாளர் கட்சி, etc., etc., போன்ற அனைவருக்கும் பொதுவானதே இக்கண்டனம்.

19 comments:

 1. சாதீய சக்திகளை விவரம் தெரியாமல் ஓட்டு போட்டு வளர்த்து விட்டு,இன்று அதன் தாக்கத்தை உணரும்போது நமக்கெல்லாம் ஓட்டு போடற வெவரம் இன்னும் பத்தலைனுதான் தோனுது.கட்டுரை சரியான பார்வையில் சமர்பித்திருக்கிறீர்கள்

  ReplyDelete
 2. Dont come to any conclusion.Why blame PMK and Ramadoss.My assumption is if this is a murder there is 99% possibility that this murder should have been committed by some rascists from divya family.Bcoz divya may be adamant to go back to Ilavarasan.

  ReplyDelete
  Replies
  1. No Shiva... I never concluded anything related with the death of Mr.Ilavarasan that it was a murder or suicide... I just expressed my view that the political parties should not act with the background of castes... I blame PMK for changed the Divya-Ilavarasan's love marriage as a public issue through the caste...

   Delete
 3. பத்து மாதம் சுமக்கல, கவனிச்சு வளார்க்கலை, ஆனாலும் இளவரசன்ன்னு பேரை கேட்டாலே ஏதோ மனசை பிசையுது. என் வீட்டு பிள்ளை இறந்த மாதிரி ஒரு சோகம் மனசுக்குள்.
  பொம்பளைங்களே இப்படித்தான்ன்னு சொல்லி, சொல்லி திவ்யாவை குற்றம் சாட்டி நிர்க்கதியான அந்த சின்னஞ்சிறு பெண்ணை இச்சமூகம் வாழ விடாது. அந்த பெண்ணையாவது இழக்காமல் இருக்க கடவுளிடம் பிரார்த்திக்கனும்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் அக்கா... எனக்கும்கூட நேற்று மாலை இந்த செய்தி கேள்விப்பட்டதிலிருந்து மனதை என்னவோ செய்து கொண்டேயிருக்கிறது. மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது... நீங்கள் சொன்னதுபோல பாவம் அந்தப்பெண்... காதலித்த ஒரே குற்றத்திற்காக இன்னும் இந்த சமூகத்தில் என்னென்ன கொடுமைகளை சுமக்கப்போகிறாளோ...

   Delete
 4. நல்ல வேலைக்கு ஏற்ற படிப்பு இல்லை
  திருமணதிற்கு ஏற்ற வயதில்லை
  வாழ்க்கைக்கு தேவையான பொருள் இல்லை
  வாழ தேயையான பக்குவம் இல்லை

  ஆனா காதல் இருக்காம்.

  இது சினிமா வுக்கு வேணா பொருந்தும் , நிஜ வாழ்க்கைக்கு பொருந்தாது
  இந்த மரணம் , காதல் பெயரால் காம விளையாட்டு நடத்தும் அனைவருக்கும் ஒரு பாடம்.

  சாதியை இழுக்காமல் , எதார்த்தத்தை யோசித்தால் முன்னேறலாம் .

  ReplyDelete
  Replies
  1. சரியான கருத்து,

   Delete
  2. இந்த மரணம் , காதல் பெயரால் காம விளையாட்டு நடத்தும் அனைவருக்கும் ஒரு பாடம்////
   இங்கு நடந்தது திருமணம்தான்... காம விளையாட்டு அல்ல... காதலின் பெயரால் காம விளையாட்டு நடத்த நினைப்பவர்கள் தாலிகட்டி கூட்டிச்சென்று வாழவேண்டிய அவசியமில்லை... நானும் சாதியை இழுக்காமல் யதார்த்தத்தை எதிர்கொள்ளுங்கள் என்றுதான் கூறுகிறேன்...

   Delete
  3. ethu ellam irrunthalum, kalappu thirumanathuku othukiruvingala..?

   Delete
  4. பையன் நல்ல வேலையில இருந்து , கண்ணியமான குடும்பமா இருந்தா. கலப்பு திருமணத்துக்கு ஓகே . இதுல ஒன்னு குறைந்தாலும் . தூக்கி போட்டு மிதிக்க வேண்டியதுதான் , பொண்ணையும் பையனையும்.

   Delete
  5. //இங்கு நடந்தது திருமணம்தான்... காம விளையாட்டு அல்ல... காதலின் பெயரால் காம விளையாட்டு நடத்த நினைப்பவர்கள் தாலிகட்டி கூட்டிச்சென்று வாழவேண்டிய அவசியமில்லை..//

   வாழ்ந்த மாதிரி தெரியலையே. அதனால தான் சொல்றேன். காதலிக்க பக்குவம் தேவை , காமத்துக்கு எந்த புண்ணாக்கும் தேவை இல்லை. உருவம் மட்டும் போதும்.


   எல்லாம் உணர்ச்சி வச படாம. அப்பாகிட்ட செலவுக்கு பணம் கேக்குற ஒரு பிள்ளைய அவர பாத்தா போதும். குடும்பம் நடத்த தகுதியுள்ள ஒரு புருஷன எனக்கென்னமோ தோணல.

   ச்சின்ன பையன் அவன். செட்டில் ஆகல இன்னமும்.

   Delete
 5. திறமைகளை வளர்த்தெடுக்க வேண்டிய பொன்னான வயதில் திருமணம், குடும்ப வாழ்க்கை போன்ற பெரிய பொறுப்புகளைப் பற்றி நினைப்பதோ, ஈடுபடுவதோ வாழ்க்கையையே அழித்துவிடும்.

  நன்றி:
  பசுமை பக்கங்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக உண்மைதான்... ஆனால் ஊரில் காதலித்து திருமணம் செய்யும் ஜோடிகள் எவ்வளவோ இருக்கும்போது ஏன் திவ்யா-இளவரசன் மீது மட்டும் இவ்வளவு டார்கெட்டுகள்?... இது சரிதானா?...

   Delete
 6. There are three players in the field who are to be fired : PMK,DPI and Media. If they remained silent nothing would have happened. Deaths and damages could have been averted in this case.

  ReplyDelete
 7. All so-called political parties owing allegiance to the religion and caste have to be banned.

  ReplyDelete

 8. வேலை இல்லை ஆனா மது வேண்டும்.
  வேலை இல்லை ஆனா பொண்ணு வேணும்.
  பணம் இல்லை ஆனா குடும்பம் நடத்தனும்.

  இதுக்கெல்லாம் .. இணையத்தில் குலைக்கிற நாய்கள் வைக்கும் பேரு காதல். இந்த ஐடியா நல்லா இருக்கே.

  பள்ளி கூட மாணவர்களே எவனும் படிக்க வேணாம். முதல்ல சாதி வெறியை ஒழிப்போம். பெண்களின் பின்னல் சுற்றுங்கள். ஒரு நாள் அந்த பெண் பலவீனமாக இருக்கும் போது மடியும். அது போதும். இங்கே இணையத்தில் இருப்பவர்கள் வேலை வாங்கி தருவார்கள்.

  நோ படிப்பு ..
  நோ வேலை ..
  நோ வயசு வித்தியாசம் ..

  ஒன்லி காதல் ...

  சூபர்ரப்பு .....

  ReplyDelete
  Replies
  1. பதிவர் தன்னுடைய கருத்தை மட்டுமே இங்கு பகிர்ந்துள்ளார்.அவ்வளவுதான். நீங்கள் அவரை தாக்கிப்பேசுவதற்கோ, வேறு விதத்தில் குறைகூறுவதற்கோ தகுதியில்லாமல் இருக்கிறீர்கள் என அறிய முடிகிறது.

   இங்கே, இக்காலத்தில் மட்டுமல்ல.. எக்காலத்திலும் 100 சதிவிகித காதலும் காமத்தை அடிப்படையாகக்கொண்டு அமைந்தவையே.. உதாரணத்திற்கு நீங்கள் பிறந்ததே உங்களுடைய தாயுக்கும், தந்தைக்கும் இடையே எழுந்த காமம்தான்... இதில் உங்களுக்கு சந்தேகமிருக்கிறதா?

   சில "காதல்" திருமணங்களில் முடிகிறது.... சில நிறைவடையாமல் தற்கொலைகளில் முடிகிறது.. மிகப் பலவோ நிறைவடையாமல் பரஸ்பரம் வெவ்வேறு துணையுடன் முடிவடைகிறது.

   காதல் திருமணம் செய்தவர்கள் அவரவர்களின் வாழ்க்கை நிலைமையை உணர்ந்து தங்களது நிலையை உணர்ந்து முன்னேறியும் இருக்கிறார்கள்..இந்த காதலில் காமம் ஒன்றே குறிக்கோளாக இருந்தால் திருமணம் எந்த பந்தத்தை நாடியிருக்கமாட்டார்கள்.

   திருமணமாகும்போது அனைவருமே தேவையான வருமானத்துடனோ, நல்ல வேலையிலோ இருந்திருப்பதில்லை..

   எப்படியோ சுற்றியிருந்தவர்கள், ஊடங்கள் ஊதி பெரிதாக்கி.. ஒருவரின் உயிரை பலியாக்கிவிட்டன என்பதே உண்மை. இதுபோன்ற சம்பவங்கள் நாளும் அங்கங்கே நடந்துகொண்டுதான் உள்ளன. ஆனால் அது ஊடகங்களுக்கோ, அரசியல் வாதிகளுக்கோ முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுகிறது.. அவ்வளவே...!!!

   Delete
 9. 'VIDYA' MIGHT HAVE THOUGHT THE BELOW WAY AFTER MARRIAGE!!

  Boy : Do you love me more than Ur
  family ?
  ..
  Girl : No ... :|
  ..
  Boy : Why ?
  .
  .
  Girl : okay Listen This when I started to
  walk, I fell, U were not there to pick me up
  But my mom was..
  ..
  When i went outside,
  U were not there to hold my palm.
  But my dad was.
  ..
  When i cried. U didn't gave me your toys
  to
  play. .
  But my brother and sister did.
  ..
  My family is more precious than anything
  else.....

  ReplyDelete