SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Saturday, July 6, 2013

திண்டுக்கல் தனபாலன் மட்டும்தானா?...


பதிவுலகில் நான் எழுத ஆரம்பித்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகப்போகிறது. ஆரம்பகாலத்தில் எனது மனதுக்கு பட்டதை எழுதி அதை போஸ்ட் செய்வதோடு எனது கடமையை முடித்துக்கொள்வேன். மற்றவர்களின் தளத்திற்குச்சென்று படித்ததேயில்லை. நான் சென்று படித்த ஒரு சில தளங்கள் செம மொக்கையாக, செம பிளேடாக, உறுப்படாத விஷயங்களை எழுதுவதாகவே இருந்ததால் எல்லாமே அப்படித்தானோ என்னவோ என்று எதையுமே படிக்காமல் ஒதுக்கினேன். (அது தவறு என்பதை பின்னாளில் உணர்ந்து கொண்டேன்). அதேபோல அந்தக்காலகட்டத்தில் எனக்கு பதிவுலகமும், பதிவர்களும் அவ்வளவாக புரியாமல் எட்டியே நின்றேன்.

இதில் கடந்த இரண்டு வருடங்களாய்த்தான் கொஞ்ச கொஞ்சமாய் பதிவுலகில் என்னையும் ஓரளவிற்காவது இணைத்துக்கொள்ள ஆரம்பித்தேன். பத்திரிக்கை துறையைவிட எத்தனையோ திறமையான எழுத்துக்கள் பதிவுலகில் குவிந்து கிடக்கிறது. பல சாதாரண விஷயங்களைக்கூட படிப்பவர்கள் ரசிக்கும்படி எழுதும் திறன் படைத்தவர்கள் ஏராளமிங்கே.

சரி, இப்போ என்ன திடீர்னு?... அப்படின்னு நீங்க யோசிக்கிறது புரியுது. திறமை இருக்கிறவங்ககிட்ட கர்வம் இருக்கத்தான் செய்யும்னு அந்தக்காலத்துல அதை சாதாரணமா எடுத்துக்குவாங்க. ஆனா இப்போ அப்பிடியில்லைங்க. ஒரு நல்ல எழுத்தாளனுக்கு அழகு, கர்வமில்லாம பலரோட நல்ல திறமையான எழுத்துக்களை படிப்பதும், விமர்சிப்பதும், பாராட்டுவதும், ஊக்குவிப்பதும்தான்...

திண்டுக்கல் தனபாலன்... http://dindiguldhanabalan.blogspot.com


இன்னைக்கு தமிழ் பதிவுலகத்தில இவரைத்தெரியாதவரே இருக்க முடியாது என்று சொல்லலாம். இவருடைய கருத்துரை இல்லாத ப்ளாக்குகளை பார்ப்பதே சிரமம்தான். ஆரம்பகாலத்தில் ஒருசில தளங்களில் இவரைப்பற்றி எந்தப்பதிவையும் முழுதாகப்படிக்காமலேயே ஏதோவொரு கருத்தை உளறிவிட்டுப்போகிறவர் என்பதுபோல மறைமுகமாக விமர்சித்திருந்தார்கள். நானும் அப்படித்தான் என்று தவறாக நினைத்தேன்.

ஆனால் மனிதர் அப்படிப்பட்டவரல்ல... தானும் ப்ளாக் எழுதுவதோடு நில்லாமல், பதிவெழுதி வரும் புதுமுகங்கள், முன்னணி எழுத்தாளர்கள் என எவருடைய எழுத்தையும் விடாமல் அனைத்தையும் படித்து, உடனடியாக கருத்திட்டு, ஓட்டும் அளித்து முதல் ஆளாக ஊக்கப்படுத்துபவர் இவர்தான். 

கல்லாதது உலகளவு என்பதை மனதில் நிறுத்திக்கொண்டு அனைத்து எழுத்துக்களையும் தவறாமல் வாசிக்கும் ஆச்சர்யமனிதர். துளியும் கர்வமில்லாதவர். எனக்கு நீ ஓட்டளி, விமர்சனம் எழுது... உனக்கு நான் ஓட்டளிக்கிறேன், விமர்சனம் எழுதுகிறேன்... என்றுகூட Give and take பாலிசி இருக்கும் பதிவுலகில் எதையும் எதிர்பாராது முதல்ஆளாய் எல்லா எழுத்துக்களையும் படித்து கருத்திட்டு, ஆதரிக்கும் எளிமையான வெள்ளை மனம் கொண்டவர்... ஒரு சாயலில் சின்னத்தம்பி படத்தில் குஷ்பூவின் அண்ணன்களில் ஒருவராய் வரும் உதயபிரகாஷ் என்ற நடிகரை  நியாபகப்படுத்தினாலும் மனிதர் உண்மையிலேயே ஹீரோதான்...
சினிமா பாடல்களை இவரைவிட அருமையாய் விமர்சிக்க ஆளிருக்காது என்பது இவருடைய பதிவை படிப்பவர்களுக்குப்புரியும். எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் தளம் எங்காவது அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் அந்தத்தகவலை வேலை மெனக்கெட்டு உங்கள் தளத்தில் வந்து உங்களுக்குத்தெரிவிக்காமல் இருக்கவேமாட்டார்... எத்தனை பேருக்கு வரும் இந்த உள்ளமும், பொறுமையும்?...

திண்டுக்கல் தனபாலன் சார் உங்களைப்பார்த்து நான் வியக்கிறேன்... தலை வணங்குகிறேன்... ஹேட்ஸ் ஆஃப் டூ யூ சார்...

பதிவுலகத்துல இவரை மாதிரியே கர்வமில்லாத இன்னும் பல நல்ல உள்ளங்களும் நிரம்பிக்கிடக்குது. அவங்களுக்கெல்லாம் மரியாதை செய்யுறமாதிரி ஒரு பதிவை எழுதுறது தப்பே இல்லைன்னு என் மனசுக்கு பட்டது. இதுல நான் எழுதப்போற பதிவர்கள் எல்லாம் எனக்குத்தெரிஞ்சு என்னோட அனுபவங்களின் அடிப்படையில் மட்டுமே நான் கணக்கிட்டிருப்பது.

இதுல விடுபட்டுப்போற, எனக்குத்தெரியாத எத்தனையோ நல்ல உள்ளங்கள் நிச்சயமா இருப்பாங்க. அப்படி இதுல நான் எழுதாம விட்டு உங்களுக்குத்தெரிஞ்சு இருக்கிற நல்ல உள்ளங்களை எனக்கு பின்னூட்டத்தில் அறிமுகப்படுத்தினால் அது நீங்கள் அவர்களுக்குச்செய்யும் மரியாதையும் எனக்களிக்கும் சந்தோஷமும் கூட....

என்னை ஊக்கப்படுத்திய முதல் பதிவர் :-

மெட்ராஸ் பவன் ‘’சிவகுமார்’’ – http://www.madrasbhavan.com/
இந்த ஃபோட்டாவைப்பார்த்தாலே இவர் ஞாபகம்தான் வரும்...


ஆரம்ப கால கட்டத்தில் பதிவெழுத வரும் எல்லாருக்கும் வரும் அதே மனப்பிரச்சினை எனக்கும் வந்தது. என்னடா இது நம்ம எழுத்துக்களை யாரும் விமர்சிப்பதில்லை... நிறையபேர் படிப்பதில்லை என்றெல்லாம் கவலைப்பட்டு (சிறிது கோவத்துடன்கூட) தூத்தேறி... இனியும் எழுதனுமா ப்ளாக்கரில்?...கொஞ்சம் யோசிக்கத்தான் வேண்டும்! என்று ஒரு பதிவெழுதினேன்.

அப்போது எனக்கு பதிவுலகைப்பற்றி எடுத்துக்கூறி, இது புதிதாக பதிவெழுத வரும் எல்லாருக்கும் இருக்கும் ஆரம்பகாலப்பிரச்சினை... இதுவும் கடந்துபோகும் என்றும், வாசகர்களைக்கவரும் விதமாக எப்படியெல்லாம் பதிவெழுதலாம் என்றும், பிறதளங்களையும் படித்து கருத்திடுவது பலரையும் நம் தளத்தின் பக்கம் வரவழைக்கும் என்றும்... என்னை யாரென்றே தெரியாமலேயே என்னை மிக அழகாக, எளிமையாக, ஒரு சகோதரனைப்போல, சிறந்த நண்பனாய் ஊக்கப்படுத்தி, பதிவுலகை எனக்கு புரியவைத்து என்னைத் தொடர்ந்து எழுதவைத்தார். அதற்கெல்லாம் வெறும் நன்றி என்ற ஒற்றை வார்த்தை போதாது என்பதால் அதை இங்கே உபயோகிக்காமல் தவிர்க்கிறேன்.

சிவகுமார் சார்... உங்கள் முகம் எனக்குத்தெரியாமல் போனாலும் உங்களுக்கு இங்கே ஒரு சல்யூட் வைப்பது எனது கட்டாயக்கடமை...

அடுத்து ‘’கவிதை வீதி’’ சௌந்தர் :- http://kavithaiveedhi.blogspot.com/

வித்தியாசமான எண்ணங்களைக்கோர்த்து மிக அழகாய் கவிதை எழுதுபவர்... இவருடைய பெயர்க்காரணத்தினாலேயே பெரும்பாலானோரால் அறியப்பட்டவர். பதிவர் என்ற வகையில் எனக்குத்தெரிந்து எந்த வம்பு தும்புக்கும் போகாத, மெல்லிய மனமும், பொறுமையும் கொண்ட அற்புதமான மனிதர்... ஆரம்பகாலம் முதலே தொடர்ந்து எனது பெரும்பாலான எழுத்துக்களை விமர்சித்து வருபவர்... எனக்கு ஒரு தம்பி போல எனது எண்ணத்தில் பதிந்தவர்...

சௌந்தர்... தொடர்ந்து நீங்கள் மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்...

அடுத்து “Suji” :- http://www.blogger.com/profile/00733210628014644474

இவருடைய பெயரைத்தவிர வேறெந்த விபரமும் என்னால் பெறமுடியவில்லை. ஆனால் ஆரம்பகாலம் முதலே என்னுடைய தரமான எழுத்துக்களின் வாசகராகவும், விமர்சகராகவும் இருந்து எனக்கு ஆதரவளித்துக்கொண்டிருப்பவர். நான் எழுதும் மொக்கை பதிவுகளில் இவரது விமர்சனம் இருக்காது. ஆனால் சமூக, அரசியல் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு, விமர்சனப்பதிவுகளில் கட்டாயம் வந்து படித்து கருத்திடுவார்...

நன்றி Suji...

அடுத்து ‘’என் ராஜபாட்டை’’-ராஜா :- http://rajamelaiyur.blogspot.com/

தம்பி சௌந்தரைப்போலவே இவரும் வித்தியாசமான பெயர்க்காரணத்தினால் பலருக்கும் அறிமுகமானவர்தான். சிறந்த சமூக சிந்தனை கொண்டவர். ஆக்கமான எழுத்துக்களுக்கு எப்போதும் ஆதரவளிப்பவர்... ஆரம்பகாலம் முதலே என்னுடன் கைகோர்த்து வந்து கொண்டிருக்கிறார்... (இப்போது கொஞ்ச நாளாய் தம்பியை பார்க்கமுடியவில்லை...)

தொடர்ந்து உங்கள் ராஜபாட்டையை பட்டையைக்கிளப்புங்கள் ராஜா... காத்திருக்கிறேன்.

அடுத்து ‘’பிலாசபி பிரபாகரன்’’ :- 

இவரைப்பற்றி தனியாகச் சொல்லித் தெரியவேண்டியதில்லை... வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் எழுதி, படிப்பவர்களை இவர் வயதைப்பார்த்து ஆச்சர்யப்படவைத்தாலும், இவர் பதிவுலகின் செல்லத்தம்பியாய் ஆனதற்கு இவரது வயதும் நிச்சயம் ஒரு காரணம்தான். எடுத்துக்கொள்ளும் விஷயம் எதுவானாலும் மிகச்சிறந்த முதிர்ச்சியுடன் அந்த விஷயத்தை அணுகி எழுதுவதில் வல்லவர் இவர்... எல்லாவற்றையும்விட சினிமா விமர்சனம் எழுதுவதில் இந்த செல்லத்தம்பி என்னை வெகுவாக கவர்ந்தவர்... (இவருடைய விமர்சனத்தை படித்துவிட்டு அதற்காகவே சில சினிமா படங்களை பார்த்தவன் நான்!!!)

பார்ட்டி கொஞ்சம் அழகிய பெண்களின் படங்களை அவ்வப்போது அழகில் மயங்கி விமர்சித்து எழுதி(ஜொள்ளி)னாலும், பதிவுலகில் எழுத்துக்கில்லிதான்...

என்னுடைய படைப்புகளை இவர் தொடர்ந்து படிக்கிறாரா இல்லையா என்பது எனக்குத்தெரியாது. ஆயினும் இவர் தன்னுடைய ஒரு பதிவில் http://www.philosophyprabhakaran.com/2011/10/17102011.html
என்னுடைய எழுத்துக்களை நல்லவிதமாய் அறிமுகப்படுத்தி எழுதியது எனது வாசகர் வட்டத்தை பெரிதாய் விரிவுபடுத்தியது. அதற்காக செல்லத்தம்பிக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்...

அடுத்து லேட்டஸ்ட்டாய் ‘’ராஜி’’ :- http://rajiyinkanavugal.blogspot.in/

இவுகளைப்பற்றி கடந்த பதிவர் சந்திப்பின்போது கொஞ்சம் செய்திகள் படித்திருக்கிறேன். மற்றபடி பெரிதாய் அறிமுகமில்லை என்றாலும் கொஞ்சகாலமாக எனது எழுத்துக்களை விமர்சிப்பதில் அக்காவின் (கண்டிப்பாக தங்கையாக இருக்காது... அக்காதான் என்று நம்புகிறேன்!) பங்களிப்பு தவறாமல் தொடர்ந்து கொண்டிருப்பதில் எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியே...

சாதாரண மொக்கை விஷயங்களைகூட படிப்பவர்கள் வெகு இண்ட்ரஸ்ட்டிங்காய் படிக்கும் வகையில் எழுதிச்சிறப்பிப்பதில் அக்காவை அடித்துக்கொள்ள ஆளிருப்பது சந்தேகம்தான்... (சுடர் விழி என்று ஒருவர் இருக்கிறார்... அவர் அக்காவுக்கு இணையாக ஓரளவு டஃப் கொடுப்பவர் என்று நம்பலாம்!!!)

அக்கா... உங்களின் ஆதரவை தொடர்ந்து வேண்டுகிறேன்...

இவர்களைப்போலவே இன்னும் Ramani ஐயா, சங்கவி, ஜோதிஜி என்று பதிவெழுதுபவர்களை கைதூக்கி விடும் செம்மனச்செம்மல்கள் ஏராளமிங்கே...

இவர்களுக்கெல்லாம் என்னால் முடிந்த கைம்மாறு ஒன்றே ஒன்றுதான்...

‘’நேரம் கிடைக்கும் போதெல்லாம் நானும் இனி எல்லாருடைய தளங்களையும் பார்வையிட்டு அவர்களுடைய எழுத்துக்கள் செம்மைப்படும் வண்ணம், அவர்களை ஊக்கப்படுத்தும் வண்ணம் எனது விமர்சனங்களையும், ஆதரவுகளையும் நடுநிலைமையோடு தொடர்ந்து அளித்து வருவேன்’’... என்று உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன்.

வாழ்க பதிவுலகம்... வளர்க பதிவர்கள்!!!

30 comments:

 1. புத்தகங்களை மட்டுமல்ல பிளாக்குகளையும் தேடிப் படிப்பதில் ஒரு தனி சுகம் இருக்கத்தான் செய்கிறது...

  தொடரட்டும் உங்கள் பதிவுகளும்... படிப்புகளும்...

  ReplyDelete
 2. நீங்கள் குறிப்பிட்டரமணி அய்யா,ஜோதிஜி,திண்டுக்கல் தனபாலன் ,
  மெட்ராஸ்பவன்சிவகுமார்,கவிதைவீதிசௌந்தர்,பிலாசபி.பிரபாகரன்,
  காந்திமதி,ராஜா, சங்கவி ஆகிய அனைவருமே பாராட்டுக்குரியவர்கள் எல்லோருக்குமே அறிமுகமான பதிவர்கள்.

  ReplyDelete
 3. நிறைய எழுதுங்க., நிறைய படிங்க இதற்காக தினமும் கொஞ்ச நேரத்தை ஒதுக்குங்க போதும் எல்லாம் நல்லபடியாக அமையும்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. பாராட்டுக்குரிய பதிவர்களைப் பரந்த மனதுடன் போற்றிப் புகழ்ந்த உங்களுக்கு என் மனப்பூர்வமான பாராட்டுகள்.

  ReplyDelete
 5. தனபாலன் அண்ணே உண்மையிலேயே பாராட்டுக்குரியவர் எத்தன பேருக்கு இந்த மனம் வரும் அவனவனுக்கு இருக்குற பிரச்சனையில் ஹட்ஸ் ஆப் அண்ணே \\\

  நீங்க சொன்னதும் தான் கவனிக்கிறேன் அம்மாடி ஜாடை ஒரே மாதிரில இருக்கு ஒருவேளை தூரத்து சொந்தமா இருக்குமோ? ஹாஹா

  எனக்கு ஊக்கம் அளித்த பதிவர்கள் இரவு வானம் சுரேஷ், மைந்தன் சிவா ,கிஷோகர் போன்றவர்கள் அவர்களுக்கு நன்றியை இதன் வாயிலாக தெரிவித்து கொள்கிறேன் சகோ

  ReplyDelete
  Replies
  1. இரவு வானம் சுரேஷ், மைந்தன் சிவா, கிஷோகர் போன்றோர்க்கு நானும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்... உங்களுக்கும் என் நன்றிகள் ஆயிரம்...

   Delete
 6. ஆமாம் என் பதிவுகளையும் தொடர்ந்து வாசிப்பவர் தனபாலன் சார் மட்டுமே....

  ReplyDelete
 7. அடடே... இவங்க எல்லாரும் என் நண்பர்கள். ராஜி என் தங்கை. இவங்க்லாம் படிச்ச/கருத்திடற தளத்தை நான் தவறவிட்டுட்டனே இத்தனை நாளா? இனி அவசியம் விசிட் அடிக்கறேன்! தனபாலனுக்கிணை அவரே! மிகச் சரியாக அனைவரையும் நினைவுகூர்ந்த உங்களை மனம் நிறைய பாராட்டுகிறேன்!

  ReplyDelete
 8. திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களைப் பற்றி சரியாய் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. திண்டுக்கல் தனபாலன் சார் உண்மையிலயே ஒரு ஆச்சர்ய மனிதர்தான்! எப்படி இவரால் இத்தனை பதிவுகளையும் படித்து கருத்துச்சொல்ல முடிகிறது என நானும் வியந்ததுண்டு!!

  உங்கள் நிறைய பதிவுகளை படித்திருந்தாலும் இதுதான் எனது முதல் பின்னூட்டம் என நினைக்கிறேன்..காரனம் சோம்பல்தான்.

  உண்மையிலேயே சுவாரசியமான எழுத்து உங்களுடையது.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி பிரதர்... உங்களது தொடர்ந்த ஊக்கங்கள் எனது எழுத்தை செம்மைப்படுத்தட்டும்...

   Delete
 10. அனைவரையும் ஊக்கப்படுத்தும் பதிவர்களைப் பற்றிய அழகானதொரு பகிர்வு.

  தனபாலன் எல்லாரையுm ஊக்குவித்து உற்சாகப்படுத்துவதில் முதல் இடம் பிடிப்பவர் என்றால் மிகையாகாது...

  ReplyDelete
 11. முதலில் மிக்க நன்றி...

  தங்களின் பாராட்டை தலை வணங்கி ஏற்றுக் கொள்கின்றேன்... இந்த வலையுலகத்தில் பல நல்ல உள்ளங்களை நட்புறவு பெற்றுள்ளேன் (எனது தளத்தில் Followers-ல் பாதியளவு) கைபேசியில் தொடர்பு கொள்ளும் அளவிற்கு என்பது மிகவும் சந்தோசம்... நிஜ வாழ்விலும் அப்படித்தான்... நட்பே எனது உலகம்...

  வாசிப்பது, பகிர்ந்து கொள்வது எவ்வளவு நாள் தொடரும் என்பது தெரியவில்லை... எ(இ)துவும் கடந்து போகும்... ஹிஹி... வாழ்த்துக்கள்...

  இப்பகிர்வில் உள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்...

  தொடர்ந்து எழுதவும் வாழ்த்துக்கள்...

  மிக்க நன்றி...

  ReplyDelete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்கள்தான்.. !!! எழுத்தின் தனித்துவம் காட்டி, எதை எழுதினாலும் சுவை குறையாமல் எழுதினால் ரசிகர்கள் (வாசகர்கள்) கூட்டம் அலைமோதும்.. !

  பதிவில் இடம்பெற்ற சக பதிவர்களும் அதைத்தான் செய்துள்ளார்கள். நீங்களும் கூட..!

  தொடர்ந்து எழுதுங்கள்...!!!

  வாழ்த்துகள்...!!!

  ReplyDelete
 14. சித்திரமும் கைப்பழக்கம், வலையெழுத்து நம் முயற்சி மூலம் மட்டுமே வெளிப்படும். வாழ்த்துகள்

  ReplyDelete
 15. நான் முதலில் இவருக்கு வேறு வேலை இல்லை அதனால் தான் ஒரு template கருத்து சொல்கிறார் எல்லா பதிவிற்கும் என நினைத்தேன்.அதற்காக வருத்தபடுகிறேன் .அவரோட ஒரே ஒரு பதிவை படித்து என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை .அவ்வளவும் technicals .hats ஆப் to u தன பாலன் sir .please continue sir .எனது பணிவான வேண்டுகோள்

  ReplyDelete
 16. பதிவுலகில் திரு தனபாலனை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. எல்லோருக்கும் தனது பின்னூட்டத்தால் உற்சாகம் அளித்து வருபவர். இனிமையானவர். பழக எளிமையானவர்.மொத்தத்தில் ஒரு நல்ல மனிதர். சினிமா பாடல்களை வைத்துக் கொண்டு பெரிய பெரிய விஷயங்களை அனாயாசமாக விளக்குபவர். நீங்கள் எழுதி இருக்கும் அளவு அவரைப்பற்றி ஒவ்வொரு பதிவரும் எழுதலாம்!

  நீங்கள் இங்கு குறிப்பிட்டிருக்கும், திரு. சிவா, திரு சௌந்தர், திரு ராஜா, திரு ரமணி, திரு ஜோதிஜி எல்லோருமே மிகச் சிறந்த எழுத்தாளர்கள்; மற்றவர்களின் எழுத்துக்களைப் படித்து உற்சாகமூட்டுபவர்கள். திரு பிரபாகரனை தவிர மற்றவர்களின் எழுத்துக்களை தொடர்ந்து படித்து வருகிறேன்.

  உங்கள் தளத்தில் இவர்களைப் பற்றி மேலும் அறிய முடிந்தது மகிழ்ச்சி.

  எல்லோருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள்!


  ReplyDelete
 17. சாய் ரோஸ் தங்கள் அன்பிற்கு நன்றி. மனதில் பட்டதை தொடர்ந்து எழுதுங்கள். பதிவுலக நண்பர்கள் மற்றும் வாசகர்கள் ஆதரவுடன் தொடர்ந்து வெற்றி நடைபோட வாழ்த்துகள்.

  ReplyDelete
 18. நீங்க குறிப்பிட்ட நடிகரை விட DD இன்னும் நன்றாக இருப்பார். நடிகர் படத்தை எடுத்துவிடுங்கள். இல்லையில்லை, இருக்கட்டும். DD க்கு திருஷ்டி படாமல் இருக்கும்!
  பதிவுலகில் அவரது மீசையை ரசிப்பவர்களும் உண்டு, தெரியுமா?

  ReplyDelete
 19. நான் பதிவு எழுதுவதில்லை. ஆனால் comment எழுதுவது உண்டு. என்னை தொடரும் ஒரே நண்பர் திண்டுக்கல் தனபாலன் மட்டும் தான். அவரை பற்றி எழுதியதற்காக தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 20. ஆரம்பகாலத்தில் எடக்கு மடக்கு எனுமொரு தளத்தில் ஒரு இடுகையின் கருத்துரை பகுதியில் இவரைப்பற்றி எந்தப்பதிவையும் முழுதாகப்படிக்காமலேயே ஏதோவொரு கருத்தை உளறிவிட்டுப்போகிறவர் என்பதுபோல மறைமுகமாக விமர்சித்திருந்தார்கள். நானும் அப்படித்தான் என்று தவறாக நினைத்தேன்.[[[[]]]]]]]]]]]

  வணக்கம் அன்பரே
  திண்டுக்கல் தனபாலனை பற்றி எங்கள் தளத்தில் எழுதவில்லை. நீங்கள் தவறாக எங்கள் தளத்தை சுட்டுகிறீர்கள்.
  தனபாலன் பின்னூட்டத்தை குறை சொல்லிய ப்ளாக் லிங்க் இங்கு கொடுத்துள்ளேன்.
  http://www.thamilnattu.com/2011/12/blog-post_26.html
  (திண்டுக்கல் அன்பருக்கும் குறைந்தது ஐந்திற்கும் மேற்பட்ட தனி மடல் அனுப்பி அன்பாக எடுத்துச் சொன்னேன். கேட்டார்களா? ரொம்பவே காமெடியாக பின்னூட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள்)

  இந்த லிங்கை படித்து தனபாலனை தாக்கிய முழுமையான விஷயத்தை அறியுங்கள்.
  இந்த பதிவில் எங்கள் தள பெயரை நீக்கிட எடக்கு மடக்கு சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

  ReplyDelete
 21. Ennapp nadakku ingke....  http://sivaparkavi.wordpress.com/
  sivaparkavi

  ReplyDelete
 22. வணக்கம் ப்ளாக் பக்கிரி... நான் எடக்கு மடக்கு தளத்தின் தீவர ரசிகன்... பதிவுலகத்தின் பல நிழல்மட்ட வேலைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கில்லாடிகள் நீங்கள்... நான் DDயைப்பற்றி உங்கள் தளத்தில் எழுதியதாகக்குறிப்பிடவில்லை...
  ''ஆரம்பகாலத்தில் எடக்கு மடக்கு எனுமொரு தளத்தில் ஒரு இடுகையின் கருத்துரை பகுதியில் இவரைப்பற்றி எந்தப்பதிவையும் முழுதாகப்படிக்காமலேயே ஏதோவொரு கருத்தை உளறிவிட்டுப்போகிறவர் என்பதுபோல மறைமுகமாக விமர்சித்திருந்தார்கள்.''....
  உங்கள் தளத்தின் ஏதொவொரு இடுகையின் கருத்துரை(பின்னூட்டம்) பகுதியில்தான் அவரைப்பற்றி விமர்சித்திருந்ததை படித்தேன்...(ஆயிரக்கணக்கான பின்னூட்டங்கள் கொட்டிக்கிடக்கும் உங்களது தளத்தில் அதை இப்போது என்னால் identify பண்ணமுடியவில்லை...)
  Anyhow உங்களது கோரிக்கையை ஏற்று உடனடியாக உங்களது தளத்தின் பெயரை நீக்குகிறேன்...
  நன்றி...

  ReplyDelete
 23. சாதாரண மொக்கை விஷயங்களைகூட
  >>
  ஹலோ! வாட் ஈஸ் திஸ்? என்னை மொக்கை போடுற ஆளுன்னு சொல்லாம சொல்லீட்டீங்கள்ல?! உங்க பேச்சு க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க். இந்த பிளாக் பக்கம் இனி வர மாட்டேன். ஏன்னா! இன்னிக்கு ஞாயித்துக்கிழமை. கணவர், பசங்கலாம் வீட்டுல இருக்காங்க. வீட்டு வேலைலாம் இருக்கு. நாளைக்கு வரேன்.

  ReplyDelete
  Replies
  1. ஏனுங்கக்கா?... தம்பி மேல கோவிச்சிக்கலாமுங்களா?... அதென்னங்க்கா... மொக்கை போடுறத அவ்வளவு சாதாரணமா சொல்லிப்புட்டீக?... அது எவ்வளவு கஷ்டம் தெரியுமுங்களா?... வடிவேலு ஒரு படத்துல ''ஏய்... ஒரு மணிநேரம் சும்ம்ம்ம்ம்மா இருக்கனும்....'' அப்பிடின்னு சொல்வாரு... அதைவிட இது கஷ்டம்னு நான் நம்புறேன்க்கா...!!!

   Delete
 24. கண்டிப்பாக தங்கையாக இருக்காது... அக்காதான் என்று நம்புகிறேன்!
  >>
  கண்டிப்பா சொன்னாலும், இதமா சொன்னாலும் நான் அக்காவா இருக்க போறேன்.

  ReplyDelete
 25. மிக்க நன்றி.

  ReplyDelete
 26. திண்டுக்கல் தனபாலன் சார் உண்மையிலயே ஒரு ஆச்சர்ய மனிதர்தான்! எப்படி இவரால் இத்தனை பதிவுகளையும் படித்து கருத்துச்சொல்ல முடிகிறது என நானும் வியந்ததுண்டு

  ReplyDelete
 27. நீங்கள் குறிப்பிட்டு சொல்லி இருக்கும் சில ப்ளாக்குகளை மட்டும் தான் படித்து இருக்கிறேன். புதியதாய் இன்று தெரிந்து கொண்டேன்.

  ReplyDelete