SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Tuesday, July 30, 2013

உணர்வுகள்...

நினைவுகளின் சிறகடிப்பில் மட்டும்
வாழ்க்கைப்பயணங்கள் தொடர்ந்து விடுவதுமில்லை;
கனவுகளின் மனக்களிப்பில் மட்டும்
வெற்றிச்சிகரங்களை தொட்டு விடுவதுமில்லை;

ஒவ்வொரு கனவுக்குள்ளும்
பல ஏக்கங்கள் உண்டு,
ஒவ்வொரு ஏக்கத்திலும்
பல கனவுகளும் உண்டு;

நிஜங்களின் கண்ணசைவினிலேயே
கனவுகள் கலைக்கப்படுகின்றன;

நிஜங்களின் நினைவுகளின்
இரு பக்க சிறகடிப்பினில்
வாழ்க்கைப்பயணம் வகையின்றி
பறக்கத்தான் செய்யும்;

நட்புகளும் காதலும்
கடந்து வந்த பாதைகளும்
ஒவ்வொருவரின் உள்மனதிலும்
ஒன்றுமறியாற்போல் உறங்கிக்கொண்டிருக்கும்;

ஒவ்வொரு நாள் தூக்கத்தின் போதும்
பலமுறை திடுக்கிட்டு விழித்திருக்கிறேன்
தூளியில் சத்தமின்றி முழித்திருக்கும்
குழந்தையின் முகம் மட்டுமே உணர்த்திடும்
நல்லவேளையாய்

வாழ்க்கை இன்னும் என் காலடியிலிருந்து நழுவி விடவில்லை!


2 comments:

  1. சந்தோசமாக இருக்கும் போது எந்த நினைவுகளும் உணரப்படுவதுமில்லை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வாழ்க்கைப் பயணம் வகையின்றி பறக்கத்தான் செய்யும்...
    நினைவுகள் உணரப்பட சந்தோஷம் சிறையிலடைக்கப்பட வேண்டும்... சந்தோஷ சிதறல் இருக்கும் வரை நினைவுகள் சிறையில்தான் இருக்கும்

    ReplyDelete