SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Wednesday, July 3, 2013

எப்படித்தான் யோசிப்பாய்ங்களோ?...!!!

காலங்கள் வளர வளர நம்ம பயபுள்ளைகளோட சேட்டைகளும் அளவில்லாம வளந்துபோச்சு.  ஃபேஸ்புக் ஆகட்டும், இன்னபிற இண்டர்னெட் விஷயங்களாகட்டும்... நம்மாளுங்க கிடைக்கிற ஃபோட்டாவையெல்லாம் இவய்ங்க இஷ்டத்துக்கு மாத்துற கற்பனை இருக்குது பாருங்க... அதை ரசிக்கிறதுக்கு தனிமனசு வேணுங்க...

இவங்க குறும்புங்களுக்கு சாட்சிங்க எல்லையில்லாம இருந்தாலும் நான் ரசிச்ச ஒருசில படங்களை மட்டும் இங்க குடுக்கிறேன்... நீங்க ஏற்கனவே பாத்திருந்தாலும், பாக்கலைன்னாலும்... இதெல்லாம் உங்களுக்கும் புடிக்கும்னு நம்புறேன்...

இந்த ஆன்லைன் சேட்டிங்ல இப்படியும் நடக்குதுன்னு யூகிச்சிருக்காய்ங்க பாருங்க!!!
கரகாட்டக்காரன் படத்தோட காமெடிய தமிழ்கூறும் நல்லுலகம் அவ்வளவு சீக்கிரமா மறந்திர முடியாது... அதையே நம்ம பயலுக எப்படியெல்லாம் மாத்திருக்காய்ங்க... கற்பனை வளம்ன்றது இதானா?...


அந்தக்காலத்துல டி.ராஜேந்தருக்கு அப்படியொரு ரசிகர்கூட்டம் இருந்திச்சு... ஆனா இந்தக்கால இளசுங்ககிட்ட அவரு மரியாதையைப்பாருங்க... அய்யோ பாவம் மனுஷன்!!!

பெரும்பாலும் பொம்பளப்புள்ளைங்கள சீண்டுற வேலைய நம்ம பயபுள்ளைக நேரம் காலம் பாக்காம செலவழிச்சு மெனக்கெட்டிருக்கானுக... இந்த மாதிரி  நெறய இருந்தாலும் என் கண்ணுல பட்டதுல நான் ரசிச்சத மட்டும் குடுக்கிறேன்...பவர்கட் பிரச்சினை பூதாகரமா இருக்கிற காலத்துல அதையே விதவிதமா நக்கல் பண்ணி ஆயிரக்கணக்கான படங்கள், கமெண்ட்டுகள் போட்டாலும் எனக்கு இது கொஞ்சம் பிடிச்சிருந்தது...
ஃபேஸ்புக், டுவிட்டர்னு வேகமா வளர்ந்த கால மாற்றத்துல சில நன்மைகளும் இருக்குது... நம்ம ஆளுக கண்ணுல சமூகத்துல தப்புன்னு படுற எந்தவிஷயமா இருந்தாலும், உடனே அதை நக்கலடிச்சு பரப்பிறாய்ங்க... சம்பந்தப்பட்டவுக அப்புறமாவது ''ஷேம்...ஷேம்... பப்பி ஷேம்''னு திருந்துவாகளான்னு தெரியலை...அதேமாதிரி நம்மாளுகளோட கற்பனைத்திறன் இருக்குது பாருங்க... யம்மாடியோவ் என்னா நக்கலா சிறகடிச்சிப்பறக்குது அது?...
இதெல்லாம் ஜூஜூபி... வெறும் சாம்பிள்தாங்க... நம்மாளுகளோட ஒரிஜினல் டேலண்ட் இதையெல்லாம் தாண்டி எங்கேயோ போயிட்டு இருக்கின்றது டெய்லி ஃபேஸ்புக், டுவிட்டர் மாதிரி சமாச்சாரங்களை உபயோகப்படுத்துறவங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்...

ம்ம்ம்ம்... பயபுள்ளைக எப்படித்தான் யோசிக்குதுங்களோ?...!!!

நன்றி :- படங்கள்- Google
8 comments:

 1. ஹா... ஹா...

  சில குறும்புகள் மட்டும் பார்க்கவில்லை...

  ReplyDelete
  Replies
  1. எப்படி தனபாலன் முதல் ஆளாய் கருத்துரைக்கிறீர்கள்... உங்களைப்பார்த்தால் எனக்கு உண்மையிலேயே மிகப்பெரும் ஆச்சர்யம்தான்... நான் பார்வையிடும் பெரும்பாலான தளங்களில் உங்கள் கருத்துக்கள் இல்லாமல் இருந்ததேயில்லை... கல்லாதது உலகளவு என்று உங்கள் தளத்தில் நீங்கள் கூறியிருப்பதற்கேற்ப அனைத்தையும் படித்து உங்கள் சிந்தையை விசாலமாக்கிக்கொள்கிறீர்கள்... மிக நன்று... ஆச்சர்யமான மனிதர்தான் நீங்கள்...

   Delete
  2. I agree...!!!
   the one only person i wondered so fare in the world of tamil blogs...!!!!

   Delete
 2. குசும்பு ரொம்ப ஜாஸ்தியா போச்சு நம்மாளுங்களுக்கு

  ReplyDelete
 3. குறும்பு கற்பனை...

  ReplyDelete
 4. எல்லாம் பார்த்து ரசித்தது தான் என்றலும் மறுபடியும் பார்க்க நன்றா இருந்தது

  ReplyDelete