SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Friday, July 26, 2013

நாத்திக(குட்டி)க்கவிதைகள்...


எனது முந்தைய தொகுப்பான காம(குட்டி)க்கவிதையை படித்தவர்கள் எனது எழுத்துக்கள் 'அந்த' வட்டத்தைத்தாண்டி சுழலாது என்று எண்ணிவிடும் மாயையை உடைத்தாகவேண்டிய கட்டாயத்தில் இந்த அடுத்த தொகுப்பை எழுதியிருக்கிறேன்...

மற்றபடி வழக்கம்போல இதன் நிறை குறைகள் படிக்கும் உங்களது கருத்துக்களில்தான்...

                             XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

கடவுளென்பார்...
வெறும் கல்தான் என்பார்...
உண்டென்பார்...
உண்மையில் இல்லையென்பார்...
கவலையில்லை என்பேன்,
கல்லானாலும் கடவுளேயானாலும்
முன்னே வந்து நின்றால்
முட்டி மோதி விலகி நடக்கும்
பார்வையற்ற எனக்கு...!


“ MY DAYS ARE DARKER THAN YOUR NIGHTS “ – By a Blind man...

கண்தானம் செய்வோம்... மக்கிப்போவதை மனிதமாக்குவோம்...

           XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

ஒவ்வொரு கொடூர கற்பழிப்புகளின் போதும்
ஒவ்வொரு கொடூர இன அழிப்புகளின் போதும்
ஒவ்வொரு அமில வீச்சு சம்பவங்களின் போதும்
ஒவ்வொரு சகமனித மரணங்களின் போதும்
ஒவ்வொரு மனித மிருகங்களின் கொடூரத்தின் போதும்
ஓங்கிக்கத்த தோன்றினாலும்
உள்ளுக்குள்ளேயே அடக்கிக்கொள்கிறேன்...
“கடவுளே நீ இருக்கிறாயா?”...!!!

            XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்ததாம்….
பிளாட்ஃபாரத்தில் ஏறிய வண்டியில்
நசுங்கிச்செத்த எனக்குமா?....!

             XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

கல்லானாலும் கணவன்புல்லானாலும் புருஷன்
யாருக்கு? என்றாள்
கூட்டத்தில் ஒருத்தி தசரதனிடம்…!

             XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

கோடி கோடியாய் பணம் விழுந்தும்
பிச்சைக்காரன் பசித்தேயிருந்தான்
கோயில் உண்டியல்!

             XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX


குடும்பத்தில் நிம்மதியில்லை,
கோயிலுக்கு போனேன்...
கடவுளைத்தரிசிக்கும் முன்வரிசையில்
கையெடுத்து கும்பிட்டபடி என் மனைவி!!!...

       XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX


பெண் தெய்வம், ஆண் தெய்வம் என்று
ஆயிரம் தெய்வங்கள் இருந்தும்
எப்படி நான் நம்புவேன்?...
என்னைக்கற்பழித்து வேட்டையாடும்வரை
காப்பாற்ற வராத எந்த தெய்வத்தையும்?...

            XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

எக்கணமும் உள்மனதில்
கடிவாளமற்ற குதிரையொன்று
கண்டபடி ஓடித்திரியும்;
எவ்வளவோ முயன்றுவிட்டேன்
நிறுத்திவிட முடியவில்லை!

ஆத்திகம்தான் இதை அடக்குமா
என்றெல்லாம் யோசித்தவனின்
இதயத்தில் கைவைத்தோரெல்லாம்
இது வெறும் இதயத்துடிப்பென்றார்;

அப்படியென்றால் ஓடட்டுமென்று
அப்படியே விட்டுவிட்டேன்;

என்றாலும் சில நாட்கள்
அதுவாக நின்று விடுமா-இல்லை
அதை இழுத்துப்பிடித்து நிறுத்தலாமா?”...
என்றபடி யோசனையொன்று
அக்குதிரை மீது சவாரி செய்யும்…!

              XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

நான் பதிவெழுத ஆரம்பித்த ஆரம்ப காலத்தில் கடவுள் நம்பிக்கையைப் பற்றி எழுதிய பதிவு இது... இப்போது வாசித்துப்பார்த்தாலும் சிறப்பாய் எழுதியிருப்பதாகவே தோன்றுகிறது... நேரமிருந்தால் ஒரு எட்டு அதையும் படித்துவிட்டுத்தான் போங்களேன்...

கதம்ப மாலை...: கடவுளா… வெறும் கல்தானா?....!

நன்றி - படங்கள்-Google


10 comments:

 1. ஓங்கிக்கத்த தோன்றினாலும்
  உள்ளுக்குள்ளேயே அடக்கிக்கொள்கிறேன்...
  “கடவுளே நீ இருக்கிறாயா?”...!!!
  >>
  எனக்கும்தான்

  ReplyDelete
 2. காப்பாற்ற வராத எந்த தெய்வத்தையும்?...
  >>
  நல்ல கேள்வி

  ReplyDelete
 3. எல்லாமே சாட்டையடிக் கவிதைகள்...
  வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 4. அப்படியே நீங்களும் ஒரு "எட்டு எட்டா" வாங்க : தெய்வம் இருப்பது எங்கே ?

  ReplyDelete
 5. முதல் வரியில் இருந்து கடைசி வரை எனக்குள்ளும் எல்லோருக்குள்ளும் இதே கேள்விகள்தான் என்ன எங்களுக்கு இதே போல அழகாய் தொகுத்து தர தெரியவில்லை.. அவ்வளவுதான்..

  ReplyDelete
 6. விளாசல் கவிதைகள்...!

  ReplyDelete
 7. அருமை அருமை எல்லாமே.கடவுள் இருந்தால் பதில் தரட்டும் !

  ReplyDelete
 8. gods your article very good but am not accepted because feeling about the god's spirt.

  ReplyDelete
 9. அருமையான வரிகள்.

  ReplyDelete
 10. அருமை கடவுள் என்ற ஒருவர் இருந்தால் இதற்கு பதில் அளிக்கட்டும்

  ReplyDelete