SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Thursday, July 25, 2013

காம(குட்டி)க்கவிதைகள்...

கொஞ்சநாட்களாய் பதிவுலகில் நிறைய குட்டிக்கவிதைகளை படித்தேன். நானும் ஏற்கனவே நிறைய குட்டிக்கவிதைகளை எழுதியிருந்தாலும், இந்த குட்டிக்கவிதைகளிலும் நமது தளத்தின் ஸ்பெஷலை அடிப்படையாக வைத்து எழுதினால் என்ன என்றொரு எண்ணம்... சரி எழுதித்தான் பார்ப்போமே என்று முயற்சித்திருக்கிறேன்... மற்றபடி ரசிக்கும்படி இருக்கிறதா?... இல்லையா?... என்பது இதைப்படிக்கும் உங்கள் கருத்துக்களில்தான்!!!
குமரியாய் களைந்தேன்,
குழந்தையைக்கண்டேன்,
மடியினில் துவண்டாய் மலர்போல்,
மயக்கத்திலிருந்தது நீயா?... நானா?...!

               XXXXXXXXXXXXXXXXXXXXXXX

முத்தத்தில் தொடங்கி
மொத்தத்தையும் பெற நினைத்தேன்நீயோ
முத்தத்தை மட்டுமே
மொத்தமாய் நினைத்து
வெட்கத்தோடு முடித்துக்கொண்டதேன்?...

               XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

பூவில் தேன் உண்ணும் வண்டுகளுக்கும்
கார்த்திகை மாத ஆண் நாய்க்கூட்டத்திற்கும்
வித்தியாசம் காட்டாத உன் பார்வை
என்னுள் ஏதோ செய்யத்தான் செய்கிறது...

               XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

அடுத்த வீட்டு பருவப்பெண்...
எதிர் வீட்டு ஆண்ட்டி...
என ஏகத்துக்கும் வெறிநாயாய்
அலையும் மனது
உன்னிடம் மட்டும் ஏன்
குட்டி நாயாய் வாலாட்டிக்கிடக்கிறது?...!

                XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

காதல் புனிதம் என்று
புரிய நினைத்தாலும்
என் கனவுகளில் மட்டும்
அவ்வப்போது வெளிப்பட்டுவிடுகிறது
உன் மீதான காமம்...!

                XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

முற்றும் துறக்கும்
முதலிரவு மீதான ஏக்கம்
காத்திருக்குமா என்று தெரியவில்லை
நம் கல்யாணம் ஆகும் நாள் வரை!...

                XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX


நைட்டியுடன் குனிந்து
கோலமிடும் பெண்களிடம்
நிமிர்ந்து நிற்கும் - என்
பிறர்மனை நோக்கா பேராண்மை
கவிழ்ந்து போன கப்பலாய்தான் ஆகிறது!...

       XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

நன்றி-படங்கள்-Facebook


11 comments:

  1. "மயக்கத்திலிருந்தது நீயா?... நானா?...!"
    அந்த குழப்பம் சொல்லிவிடுகிறது கள நிலவரத்தை. ரசித்தேன்

    ReplyDelete
  2. முத்தம் அருமை...

    ReplyDelete
  3. 12 மணிக்கு மேல கவிதை எழுதுனிங்கலா

    ReplyDelete
  4. மிக நல்ல முயற்ச்சி தொடருங்கள்

    ReplyDelete
  5. நல்லது...! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. இன்னும் எதிர்பார்க்கிறோம் உங்களிடமிருந்து

    ReplyDelete
  7. கடைசிக்கவிதை கொஞ்சம் ம்ம்...அழகு !

    ReplyDelete
    Replies
    1. ம்ம் ம்ம் ம்ம்

      Delete
  8. கவிதைகள் அருமை.

    ReplyDelete
  9. விரகதாபம் - எழும்பி நிற்கும் கவிதைகள் ம்ம்ம்ம்ம் அழகு....!

    ReplyDelete
  10. மிகவும் அருமை நண்பரே

    ReplyDelete