SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Tuesday, July 2, 2013

தொப்பையை குறைக்க எளிதான எட்டு வழிகள்...!


இன்னைக்கு பெரும்பாலும் ஆண் பெண் வித்தியாசமில்லாம இருக்கிற பிரச்சினை உடல் பருமன். அதிலும் குறிப்பா தொப்பை...

குண்டாயிருந்தாகூட தொப்பை இல்லாம இருந்தா அசிங்கமா தெரியாது. இந்த தொப்பை ஏற ஏற ஹிப் சைசும் ஏறி, துணிக்கடைக்கு போகும்போதெல்லாம் ஒரு மனக்கஷ்டம் வரும் பாருங்க... MRF டயர் மாதிரி இடுப்போட ரெண்டு பக்கமும் சதைய கட்டிக்கிட்டு படற அவஸ்தை இருக்கே... சொல்லி மாளாது!.

வாக்கிங் போறதுக்கு டைம் இல்லை. ஜிம்முக்கு போயி எக்ஸர்சைஸ் பண்றதுக்கு டைம் இல்லை. நாக்கையும் அடக்க முடியறதில்லை. ஆனா தொப்பை குறையணும்ன்ற ஆசை மட்டும் குறையறதேயில்லை. நோகாம நோன்பு கும்பிடனும்... என்ன பண்ணலாம்?...

சிக்ஸ் பேக் வேணும்னாதான் பல டஃபான எக்ஸர்சைஸ் எல்லாம் பண்ணனும். மத்தபடி வெறுமனே தொப்பையை மட்டும் குறைக்கிறதுக்கும், கட்டுபாடா வச்சிக்கிறதுக்கும்னா இருக்கவே இருக்கு நம்ம எளிதான எட்டு வழிகள்... (இதைவிடவும் எளிதான வழின்னா அது எந்த முயற்சியுமே எடுக்காம கர்ப்பமான காண்டாமிருகம் மாதிரி தொப்பைய வளர்த்துக்கிட்டு திரியறது மட்டும்தான்!!!)1) டெய்லி காலையில எழுந்து பல்ல வெளக்குனதும் மொத வேலையா ஒரு டம்ளர் மிதமான வெந்நீருல அரை எழுமிச்சம்பழத்தை பிழிஞ்சி உப்பு, சர்க்கரை எதுவும் சேர்க்காம குடிச்சிருங்க.

2) அடுத்து மிதமான சூட்டுல அரைலிட்டர் அளவு வரைக்கும் வெறும் தண்ணீரையும் குடிங்க. இதுல இருந்து குறைஞ்சது அரைமணி நேரத்துக்கு எதுவும் சாப்பிடாதீங்க. (அப்புறம் பால் சேர்க்காத பிளாக் டீ, கிரீன் டீ இப்படி ஏதாவது சாப்பிட்டு பழகிக்கிட்டீங்கன்னா ரொம்ப நல்லது. முடிஞ்சவரைக்கும் பாலை அவாய்டு பண்ணுங்க)

3) அடுத்து கொஞ்ச நேரத்துக்கு அப்புறம், குளிக்க போறதுக்கு முன்னாடி ஒரேயொரு சின்ன ஈஸியான எக்ஸர்சைஸ்... (இது நோகாம நோன்பு கும்புடுற டைப்தான்றதுனால பயப்படவேண்டாம்) ரெண்டு காலையும் சேத்துவச்சு அட்டேன்ஷன்ல நிக்கிற மாதிரி நின்னுக்கோங்க. அப்புறம் ரெண்டு கையையும் மடக்காம நேரா தலைக்குமேலே ஸ்ட்ரைட்டா தூக்குங்க. இப்போ காலோட முட்டி மடங்காம அப்படியே உடம்பையும், தலைக்கு மேலே தூக்குன கையையும் முன்பக்கமாக மடக்கி குனிஞ்சி உங்க காலோட பெருவிரலை தொடுங்க. ஒருசில விநாடிகளுக்கு அப்புறமா அப்படியே கையை தலைக்கு மேல நீட்டுனமாதிரியே நேரா நிமிருங்க. (ஒரு நாளைக்கு நூறு தடவை இப்படி செய்யனும். காலையில ஐம்பது, சாயந்திரம் ஐம்பது... இப்பிடி பிரிச்சிகூட செய்யலாம். காலோட முட்டி மடங்காம செய்யறதுதான் இதுல ரொம்ப ரொம்ப முக்கியமான சமாச்சாரம்...)

4) அடுத்து குளிச்சிட்டு (குளிக்கிறதும், குளிக்காததும் அவங்கவங்க சொந்த விருப்பம். அதுக்கும் தொப்பையக்குறைக்கிற ஆலோசனைக்கும் சம்மந்தம் இல்லீங்கோ!!!) காலை உணவா நீங்க சாப்பிட வேண்டியது ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி... இல்லாட்டி ஒரு கப் கெல்லாக்ஸ் இல்லாட்டி முளை கட்டுன பச்சைப்பயிர். இத்தோட உங்களுக்கு விருப்பமான ஏதாவது பழங்களை சேத்துக்கலாம். முடிஞ்சவரைக்கும் இதுலேயும் பாலையும், சர்க்கரையையும் அவாய்டு பண்ணிருங்க.

5) ஆபிஸ் போறவரா இருந்தாலும் சரி... இல்லை வீட்லேயே இருக்கிறவரா இருந்தாலும் சரி... ஒரு நாளைக்கு உங்களோட ஸ்நாக்ஸ் டைம் இரண்டு வேளையாத்தான் இருக்கனும். காலையில பதினொன்னு டூ பதினொன்றரைக்குள்ள ஒரு தடவையும், சாயந்திரம் நாலு டூ ஆறு மணிக்குள்ள ஒரு தடவையும் ஸ்நாக்ஸ் சாப்பிடலாம், முடிஞ்சவரைக்கும் எண்ணெய் பலகாரங்களையும், பேக்கரி ஐயிட்டங்களையும் தவிர்த்துடுங்க. பழங்கள், பிஸ்கட்ஸ், வெஜிடபுள் சாலட், முளைகட்டுன பச்சைப்பயிர் போன்ற ஐயிட்டங்களை ஸ்நாக்ஸ் டைமுக்கு சாப்பிடறது ரொம்ப நல்லது. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்... இந்த ரெண்டு தடவையைத்தவிர உங்க உடம்புக்குள்ள வேறெப்பவும் எந்த ரூபத்துலேயும் ஸ்நாக்ஸ் உள்ள போகக்கூடாது. (அப்படியும் ஏதாவது திங்கனும்னு உங்க வாயும் மனசும் அலைபாய்ஞ்சுச்சின்னா... உங்க தொப்பையை ஒரு வாட்டி குனிஞ்சு பாத்துட்டு, ஒவ்வொரு தடவையும் நீங்க உங்க தொப்பைய நெனச்சி ஃபீல் பண்ணதெல்லாம் நெனச்சி பாத்துக்கோங்க!!!)

6) ஒரு நாளைக்கு குறைஞ்சது எட்டு டம்ளருக்கு (3 முதல் 4லிட்டருக்கு) குறையாம தண்ணி குடிங்க. ஒவ்வொரு முறை தாகம் எடுக்கும்போதும் சும்மா ஒரு டம்ளர் தண்ணியில நாக்கை நனைக்காம, மினிமம் அரைலிட்டர் குடிங்க. இதனால அடிக்கடி ஒன் பாத்ரூம் போகவேண்டியது வரும். ஆனா தொப்பையை குறைக்கிற உங்க முயற்சியில அது ஒன்னும் பெரிய கஷ்டம் இல்லீயே?... குடிக்கிற தண்ணியில சோம்பு போட்டு நல்லா ஊறவச்சோ, இல்லை கொதிக்க வைச்சு ஆற வெச்சோ குடிக்கிறது உங்க தொப்பை குறையிற வேகத்தை இன்னும் அதிகப்படுத்தி தொப்பையை கட்டுக்குள்ள வைக்கிறதுக்கு ரொம்ப உதவுமுங்க...!.

7) மத்தியான சாப்பாடு நீங்க என்னவேணா ஃபுல் கட்டு கட்டிக்கோங்க... தப்பேயில்லை. ஆனா ராத்திரி சாப்பாடு எக்காரணத்தைக்கொண்டும் மூக்குமுட்ட தின்னாதீங்க. குறிப்பா ராத்திரிக்கு நான் வெஜ் கூடவே கூடாது(சாப்பாட்டுல மட்டும்தாங்க!!!). ராத்திரிக்கு ஒரு ஃபுரூட் ஜூஸோ, இல்லை ஏதாவது பழமோ, இல்லை ரெண்டு சப்பாத்தியோ, இல்லை வெஜிடபிள் சாலட்டோ சாப்பிடறது ரொம்ப நல்லது. முடியாதவங்க அட்லீஸ்ட் என்ன சாப்பிட்டாலும் அரைவயிறு சாப்பிட்டுட்டு, சாப்பிட்ட உடனே படுக்காம ஒரு அரை மணி நேரம் கழிச்சி தூங்கப்போங்க. (அதேமாதிரி ராத்திரி தண்ணியடிக்கிற பழக்கமிருக்கிறவங்க எக்காரணத்தைக்கொண்டும் சைடு டிஷ்க்கு எண்ணையில பொறிச்ச அயிட்டங்களையும், நான் வெஜ்ஜையும் சேக்காதீங்க. அவிச்ச பயிர்களையும், ஃபுரூட் மற்றும் வெஜிடபிள் சாலட்டையும் வைச்சே தண்ணியடிச்சி பழகுங்க.) சாப்பாட்டுல வாரத்துக்கு ரெண்டு தடவையாவது சுரைக்காய், பப்பாளிக்காய், முட்டைகோஸ் போன்றவற்றை சேர்த்துக்கிறதும், டெய்லி ராத்திரி ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடறதும் தொப்பையை குறைக்க உதவும்னு சில சமையல் குறிப்புங்க சொல்லுதுங்க. இது எல்லாத்தவிட முக்கியம் எப்பவுமே டயட்ன்ற பேர்ல பட்டினி கிடக்கக்கூடாது. அதேமாதிரி டைம் மாறி மாறி சாப்பிடாம தினமும் ஒரே நேரத்தில சாப்பிடனும்.

8) எட்டாவது ஐடியா என்னான்னா... மேலே சொன்ன ஏழு ஐடியாவையும் தவறாம ரெகுலரா ஃபாலோ பண்ணனும். சும்மா ரெண்டு நாளோ, ரெண்டு வாரமோ பண்ணிட்டு ரிசல்ட்டு இல்லைன்னு விட்டுட்டீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பாளியில்லைங்க. குறைஞ்சது ஒரு ரெண்டு மாசமாவது இதை ஃபாலோ பண்ணினீங்கன்னா அப்புறமாத்தான் உங்க தொப்பையில ஏற்படுற மாற்றங்கள் உங்களுக்கு சந்தோஷத்த குடுக்கிற அளவுக்குத்தெரியும். மத்தபடி விட்லாச்சார்யா படம் மாதிரி ஒரே நாள்ல தொப்பைய குறைச்சிரலாம்னு நெனச்சி இதப்படிச்சிருந்தீகன்னா “ஐயாம் வெரி சாரி”... எல்லாம் தலையெழுத்துப்படிதான் நடக்கும்... வரட்டுமா?...!!!

மேலே சொன்ன ஐடியாவெல்லாம் இளந்தொப்பைக்கும், மீடியம் தொப்பைக்கும்தான் பொருந்தும். மத்தபடி நாள்பட்ட தொப்பைக்கெல்லாம் நம்மகிட்ட வைத்தியமில்லீங்க...

நாம சொன்னமாதிரி நடந்துக்கிட்டீகன்னா... உங்களுக்கு சிக்ஸ் பேக் வருதோ... இல்லையோ... அட்லீஸ்ட் டீசண்ட்டா டிரஸ் பண்ணிட்டு போற அளவுக்கு தொப்பை குறைஞ்சு கட்டுக்குள்ள இருக்கும்ன்றது கேரண்ட்டிங்க...!!!
மாங்கு மாங்குன்னு எக்ஸர்சைஸ் பண்ண முடியாதவக... ஸ்ட்ரிக்ட் டயட்ல இருக்க முடியாதவக... இவுகளுக்காகத்தான் இந்த ஐடியாவெல்லாம்... நோகாம நோன்பு கும்பிட்டுதான் பாருங்களேன்... ஆல் தி பெஸ்ட் சாமியோவ்...!!!16 comments:

 1. எளிமையான அருமையான
  அனைவருக்கும் கடைபிடிக்க முடிந்த
  விஷயங்கள்தான்
  பயனுள்ள பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. கடைபிடிப்பதில்தான் இருக்கிறது பிரச்சனைகள்...

  ஆனால் நல்ல விஷயங்கள் சொல்லியிருக்கீங்க நல்லது

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் சகோ... பலரும் தொடர்ந்து கடைபிடிக்காமல் பாதியிலேயே சிலவற்றை மீறுவதுண்டு. உண்மையிலேயே தொப்பை குறைய ஆசையிருந்தால் தொடர்ந்து கடைபிடிக்கும் மனக்கட்டுப்பாடும் மிக அவசியம்.

   Delete
 3. அருமை.

  சொல்லிப்பார்க்கிறேன். ஆனால் சந்தேகக் கேஸ்தான்:(

  ReplyDelete
 4. மிக்க நன்றிகள். நீங்கள் சொன்னதில் பல ஏற்கனவே செய்து வருகின்றேன். மிச்சத்தையும் சேர்த்துக்க வேண்டியது தான்.

  ReplyDelete
 5. ஓக்கே ரைட்டு. குறையலைன்னா?!

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக குறையும்... ஏனென்றால் இது எனது அனுபவப்பாடம்...

   Delete
  2. எனக்கு ரொம்ப தேவை பாஸ் பாக்கலாம்

   Delete
 6. super post..thanks

  ReplyDelete
 7. very useful message in a easy way.keep it up

  ReplyDelete
 8. // ஒரு நாளைக்கு குறைஞ்சது எட்டு லிட்டருக்கு குறையாம தண்ணி குடிங்க.//

  தொப்பை குறையிதொ இல்லையொ Hyponatremia நோய் வருவது உறிதி. 2-3 லீட்டருக்கு மெல் தண்ணி குடிப்பது ஆபத்தில்தான் முடியும்.

  இடைகுறைய ஆசைப்பட்டால் இதை பரிச்சித்துப்பார்க்கலாம்!!!5:2!!!

  FORBES MAGAZINE
  //The UK's Hot New 5:2 Diet Craze Hits The U.S. - Weight Loss Miracle?//

  http://www.forbes.com/sites/melaniehaiken/2013/05/17/hot-new-fasting-diet-from-europe-hits-the-u-s/

  BBC
  http://www.bbc.co.uk/programmes/b01lxyzc

  WIKI
  http://en.wikipedia.org/wiki/5:2_diet

  ReplyDelete
 9. actualla a long sitting will cause for the thoppai... hence, should not sit in a place for long....


  http://sivaparkavi.wordpress.com/

  ReplyDelete
 10. i want to know wild animals food, sound and home in tamil for my child school activity

  ReplyDelete