SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Thursday, July 18, 2013

வெண்டைக்காய் சாப்பிட்டா மூளை வளருமா?...


இந்தியாவுல பொறந்த ஒவ்வொருத்தரும் சின்ன வயசுலேயிருந்தே வெண்டைக்காய் சாப்பிட்டா மூளை நல்லா வளரும்... கணக்கு நல்லா வரும்... அப்பிடின்னு கேட்டுக்கேட்டு வளர்ந்து, அதை நம்ம புள்ளக்குட்டிங்களுக்கும் சொல்லிச்சொல்லி, அவய்ங்க வேணாம் புடிக்கலன்னு சொன்னாக்கூட வெண்டைக்காய விடாம அவுங்க வாய்ல திணிச்சு ஊட்டுவோம்...

வெண்டைக்காயில உண்மையிலேயே மூளையோட வளர்ச்சிக்கோ... இல்லை நல்லா கணக்கு போடுற திறன் வர்றதுக்கோ தேவையான விஷயம் ஏதாவது இருக்கா?...

முதலில் மூளைக்கு உதவும் இரண்டு முக்கிய விஷயங்கள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.

  1)   ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்ஸ்
  2)   ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ்

இது தவிர விட்டமிண் B-12, விட்டமிண்-E மற்றும் லுயுட்டோலின் ஆகியனவும் மூளைக்கு உதவும், மூளையைக்காக்கும் முக்கிய விஷயங்கள்.

மூளையைக்காக்கும் மற்றும் ஷார்ப்பாக்கும் ஆறு உணவுகள்...

  1)   வால் நட்ஸ்
இயற்கை அன்னைக்கே தெரிந்ததாலோ என்னவோ தெரியவில்லை... இந்த வால் நட்ஸின் தோற்றமே சின்ன மூளையைப்போலத்தான் படைக்கப்பட்டிருக்கிறது.

2009ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இந்த வால் நட்ஸ் உணவில் சேர்க்கப்படும்போது அது மூளையின் வயதாகும் தன்மையை 2% வரை சீர்படுத்துவதாகவும், மூளையின் செயல்திறனை அதிகரிப்பதாகவும், மூளையின் தகவல் கையாளும் திறனை அதிகரிப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

2010ல் நடந்த ஒரு ஆய்வில் வால் நட்ஸ் தொடர்ந்து உண்ணப்படும்போது அல்சைமர் நோய் இருக்கும் மூளையில்கூட செயல்பாடுகள் முன்னேற்றம் காண்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

அல்சைமர் நோய் பாதிப்பை காட்டும் படம்...

(அல்சைமர் என்பது வயதாகும்போது மூளையில் ஏற்படும் ஒருவிதமான நோய். இது மெல்ல மெல்ல வாய் குளறலில் ஆரம்பித்து முற்றிய நிலையில் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசுமளவில் குறைந்தும், நினைவிழப்பு ஏற்படுதல் மற்றும் மூளையின் கட்டளையிடும் திறன், செயல்பாடு ஆகியன முழுவதுமாய் குறைந்தும் இறுதியாய் இறப்பு வரை இழுத்துச்செல்லக்கூடியதுமாகும்...)

  2)   கேரட்

நீண்டகாலமாகவே கேரட் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது அது கண்ணுக்கு நல்லது என்பதுதான்... அது இப்போது மூளைக்கும் மிக நல்லது என்பது கூடுதல் செய்தி.

கேரட்டில் நிறைந்திருக்கும் லுயுட்டோலின்(Luteolin) காம்பவுன்டானது வயது சம்பந்தப்பட்ட நினைவாற்றல் குறைபாடுகளை நீக்குவதிலும், மூளையின் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் தன்மையை அதிகரிப்பதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஆலிவ் ஆயில் மற்றும் பெப்பர் ஆகியவற்றிலும் இந்த லுயுட்டோலின் நிறைந்திருப்பது கூடுதல் தகவல்.

  3)   பெர்ரீஸ்

விட்டமின்கள் நிறைந்திருக்கும் பெர்ரீஸ் பழங்கள் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ளப்படும்போது நினைவாற்றல் மிக அதிகமாக அதிகரிக்கும்.

2010ம் ஆண்டில் நினைவாற்றல் குறைபாடுள்ள ஒத்த வயதினரை இரு பிரிவாகப்பிரித்து ஒரு பிரிவுக்கு மட்டும் 12 வாரங்கள் பெர்ரி பழ ஜீஸ் கொடுத்தும் ஒரு பிரிவுக்கு பெர்ரி சேர்க்காமலும் சோதிக்கப்பட்ட ஆய்வின் முடிவில், பெர்ரி உட்கொண்ட பிரிவினருக்கு நினைவாற்றல் மிக அற்புதமான அளவில் முன்னேறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இது டிப்ரஷனுக்கான அறிகுறிகளையும் வெகுவாக குறைத்திருக்கிறது.

2009ம் ஆண்டு நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவில் ஆண்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்திருக்கும் புளு பெர்ரி மற்றும் ஸ்ட்ரா பெர்ரி பழங்கள் வயதாகும் தோற்றத்துடன் சம்பந்தப்பட்ட செல்களில் ஏற்படும் ஒருவித ஸ்ட்ரெஸ்சை குறைப்பதிலும், மூளையின் சிக்னல் திறனை அதிகரிப்பதிலும் அரும்பங்கு ஆற்றுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

  4)   மீன்

ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் நிறைந்திருக்கும் பலவகை மீன்கள் உணவில் சேர்க்கப்படும்போது மூளையின் செயல்திறன் குறைபாடுகள் குறைவதாக கண்டறியப்பட்டிருக்கிறது. (மீன் எண்ணெய் மாத்திரை போன்ற சப்ளிமெண்ட் ஐயிட்டங்கள் உபயோகமற்றவை என்றும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.

2005ம் ஆண்டு 65 வயதுக்கு மேற்பட்டவர்களை வைத்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவில் வாரத்துக்கு இரண்டு முறை மீனை உணவில் சேர்க்கும் பழக்கமுடையவர்களுக்கு மூளை செயல்திறன் குறைபாடு 13% வரை குறைந்த்தும், வாரத்துக்கு ஒரு முறை மீனை உணவில் சேர்ப்பவர்களுக்கு 10%வரை குறைந்ததும் கண்டறியப்பட்டிருக்கிறது.

விட்டமின் B-12 நிறைந்திருக்கும் சில மீன்களை உண்ணும்போது அது அல்சைமர் நோய்க்கு எதிராக போராடுவதாகவும் சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

  5)   காஃபி மற்றும் டீ
காப்பியும் டீயும் வெறுமனே நாம் காலையில் குடிக்கும் பானங்கள் மட்டும் இல்லை. அவை அல்சைமர் நோய் தாக்காமல் தடுக்கவும், செயல்திறன் குறைபாட்டை குறைக்கவும் பெருமளவு உதவுவதாக பலவித ஆய்வு முடிகளும் அறிவித்திருக்கின்றன.

காப்பி குடிக்கும் பழக்கம் அல்சைமர் நோயை வராமல் தடுக்கவும், வரும் வாய்ப்பை குறைக்கவும் உதவுதாக சில ஆராய்ச்சிகளின் முடிவுகள் தெரிவித்திருக்கின்றன.

நினைவு மற்றும் தகவல்கள் சோதனை ஆராய்ச்சிகளில் டீ குடிப்பவர்கள் டீ குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களைவிட அற்புதமாக செயல்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

  6)   ஸ்பினாச் எனப்படும் பசலைக்கீரை

சின்ன வயதிலிருந்து நமது அம்மாக்கள் கீரை சாப்பிடுவது உடம்புக்கு நல்லது என்று அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளச்சொல்லி வற்புறுத்துவார்கள். இந்தக்கீரையில் விட்டமின் C மற்றும் E நிறைந்திருக்கிறது.

விட்டமின் Eயை உடம்பில் வழங்கி செய்யப்பட்ட ஆராய்ச்சியில் மூளை மற்றும் நெர்வ் திசுக்கள் 500 முதல் 900% வரை வளர்ச்சி கண்டிருப்பதும், மூளையிலிருந்து உடம்பு முழுக்க தகவல்களை அனுப்புவதை கட்டுப்படுத்தும் டோபோமைன் என்ற திரவம் சுரப்பது அதிகரிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

சரி, இப்போ வெண்டைக்காய் சமாச்சாரத்துக்கு வருவோம். வெண்டைக்காய் சாப்பிட்டா மூளை வளருமா?...
மூளைக்கு பலன் தரும் சத்துக்கள் என்னென்ன என்பதை பார்த்தாகிவிட்டது. இப்போது வெண்டைக்காயில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்பதை பாருங்கள்.

வெண்டைக்காய் - Nutrition Facts
Amount Per  100 grams
Calories 33
·  % Daily Value*
Total fat 0.2 g
0%
Saturated fat 0 g
0%
Polyunsaturated fat 0 g
Monounsaturated fat 0 g
Cholesterol 0 mg
0%
Sodium 7 mg
0%
Potassium 299 mg
8%
Total Carbohydrate 7 g
2%
Dietary fiber 3.2 g
12%
Sugar 1.5 g
Protein 1.9 g
3%

Vitamin A
14%
Vitamin C
38%
Calcium
8%
Iron
3%
Vitamin B-6
10%
Vitamin B-12
0%
Magnesium
14%
Vitamin E                  
  0%

*Per cent Daily Values are based on a 2,000 calorie diet. Your daily values may be higher or lower depending on your calorie needs


இப்போது வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளருமா?... கணக்கு நல்லா வருமா?... என்பதையெல்லாம் நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்!!!...

ஆனால் வெண்டைக்காயின் அளப்பரிய பலன் மற்றொன்று இருக்கிறது...

நீரிழிவு நோய் எனப்படும் சுகர் பிரச்சினையை கட்டுக்குள் வைத்திருப்பதிலும் குறைப்பதிலும் வெண்டைக்காய் மிக அருமையாக செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

உபயோகிக்கும் முறை
ஒரு வெண்டைக்காயை எடுத்து அதன் இரு புற முனைகளையும் நறுக்கிவிட்டு எஞ்சிய பகுதியை இரு துண்டுகளாக வெட்டி ஒரு டம்ளர் நீரில் அந்த இரண்டு துண்டுகளையும் ஒரு இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் எழுந்ததும் அந்தத்தண்ணீரை பருகிவிட்டு அந்த வெண்டைக்காய் துண்டுகளையும் தின்று வந்தால் சுகர் பிரச்சினையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படுவதாக உபயோகிக்கும் பலராலும் உணரப்பட்டிருக்கிறது.

ஆகவே மக்களே... வெண்டைக்காயோ... கத்தரிக்காயோ... எந்தக்காயாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக வேகவைத்து அதன் சத்துக்களை வீணடிக்காமல் முடிந்த வரை பச்சையாகவோ இல்லை அரை வேக்காடாகவோ உண்பதுதான் சிறந்த பலன்களைத்தரும் என்பதையும் தெரிந்து கொண்டு உங்கள் குழந்தைகளின் மூளைத்திறனையும் செயல்பாட்டையும் அதிகரிக்க விரும்பினால் வெறுமனே வெண்டைக்காயை பொறித்து பொறித்து அவர்கள் வாயில் திணித்துக்கொண்டிருக்காமல் மேற்கூறிய உணவுகளையும் ரெகுலராக உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொடுங்கள்...
நமது நாளைய சந்ததியினர்க்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை கொடுப்பதைவிட தலையாய கடமை நமக்கு வேறென்ன இருக்கமுடியும்?...


6 comments:

 1. நீரிழிவு - நோய் அல்ல... சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் எதுவென்றாலும் அளவே... நார்ச்சத்து உள்ளவை உட்பட... ஆனாலும் என்னதான் நடைப்பயிற்சி + சாப்பிடுவதில் கட்டுப்பாடு என்றாலும் மனம் சந்தோசமோ திருப்தியோ இல்லையென்றால் அனைத்தும் வீண்... இது ரத்தக் கொதிப்பு (BP) உள்ளவர்களுக்கும்...!

  எந்த காய்கறி ஆனாலும் முதலில் நாம் சாப்பிட்டு கற்று, குழந்தைகளுக்கும் சாப்பிடும் படி சுவையாக செய்து (கற்றுக்) கொடுப்போம்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் தலைவா... வீட்டில் பெரியவர்கள் சாப்பிடும்போதுதான் அதை சிறுவயதிலிருந்தே பார்த்து வளரும் குழந்தைகளும் தங்கள் உணவுப்பழக்கமாக மனதில் பதித்துக்கொள்வார்கள்... குழந்தை வளர்ப்பில் நல்லதோ கெட்டதோ... எதுவாகயிருப்பினும் அதன் ஆரம்பம் பெற்றோரிடம்தான்....

   Delete
 2. மூளை இருக்குறவங்களுக்குதான் இதுலாம் யூஸ் ஆகும். நான் போய்ட்டு அடுத்த பதிவுக்கு வந்து படிச்சுக்குறேன்

  ReplyDelete
  Replies
  1. ஆஹா தங்கச்சி மொத்தமா குடும்பத்தை கப்பலேத்தியாச்சு, இனி எனக்கு இங்கே என்ன வேலை ? அடுத்த பதிவில் பார்ப்போம்.

   Delete
 3. வெண்டைக்காய் சாப்பிட்டால் வயிறு சுத்தமாகும் என்றும் சொல்வார்கள், அதாவது மோஷன் சரியாக வெளியேறும்.

  ReplyDelete
 4. நல்ல பகிர்வு....

  வெண்டக்காய் மட்டுமல்ல காய்கறிகளை அதிகம் சேர்த்தால் உடம்புக்கு நல்லதுதானே...

  ReplyDelete