SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Wednesday, July 17, 2013

ஒரு விதவையின் காதல்...


முலைகள் தீண்டி
முன்னே வருடி
கட்டியணைத்து
காதோரம் முகர்ந்து
கழுத்தில் கடித்து
கொடுக்கும் முத்தமும்...

கட்டில் அசைந்து
கால்கள் கலந்து
இமைகள் மூடி
உதடுகள் கோர்த்து
கொலுசுகள் சிணுங்கி
இசைக்கும் சத்தமும்...

இனி என் வாழ்வில்
இருக்கவே கூடாது
னுமொரு முடிவுக்கு
உரிமையிங்கே யாருக்கு?...

உள்ளத்தின் உணர்ச்சியாய்
காதலை போற்றுவதும்-எனது
உடலின் உணர்ச்சியாய்
காமத்தை தூற்றுவதுமாய்
உங்கள் வீட்டு நியாயங்களில்
காயப்படும் என் இரவுகள்...

பருவமடைந்த காலம் தொட்டு
கன்னியாய் நான் காத்திருந்து
கல்யாண நாள் வரையிலும்
கட்டிலுக்காய் பூத்திருந்தேன்;

கல்யாணம் நடவாமலே
கன்னியாய் இருந்திருந்தால்
கட்டில் சுகம் தெரியாமலே
காலமெல்லாம் வாழ்ந்திருப்பேன்;

கல்யாணம் என்ற பெயரில்
கணவன் னும் ஆண்மகனை
இளமையின் கனவுகளை
இன்பமாய் வடிக்கவைத்து...
முதலிரவு என்ற பெயரில்
முன்னொரு நாள் நடத்திவிட்டு
மோகத்தை என் மனதில்
மூர்க்கமாய் விதைத்துவிட்டு...

இன்று நீ விதவை-இனி
இல்லை உன் வாழ்க்கை...
கணவன் அவன் சிதையோடு
உன் காமத்திற்கும் கொள்ளிவை...
என்றொரு கூட்டமிங்கே
எக்காளமிட்டு சிரிப்பதென்ன?...
ஆண்டாண்டு காலமாய் இதை
எங்கள் மேல் திணிப்பதென்ன?...


மஞ்சள் கயிறு
மரணித்த பின்னும்
என் எஞ்சிய வாழ்வினை இறுக்குமோ?...
உங்கள் கட்டுப்பாடும்
கள்ளக்காதல் பட்டமும்
என் காமத்திற்கும்தான் தெரியுமோ?...

ன்னவன் தேடும்
மங்கையென் உடலில்
எப்படி உறைக்கும்
உங்கள் கட்டுப்பெட்டி நியாயங்கள்;
கணவன் மனைவியாய்
கைகோர்த்து வாழ்வோருக்கு
எப்படி புரியும்
என் கட்டிலின் ஏக்கங்கள்?...

கணவன் இருந்தாலே
வட்டமிடும் கண்களுக்கெல்லாம்-என்
காமத்தேவைகள் நினைத்து-இனி
உள்ளூர உற்சாகம் பிறக்கும்!
உள்ளத்தை அடக்கி நடக்க
உண்மையாய் நான் விழைந்தாலும்
உடல் தேவையது அடங்காமல்-எனை
எங்கெங்கோ இழுத்துச்செல்லும்;

வெளிநாடு சென்றிருந்தாலும்
ஒரு நாளுக்கு காத்திருப்பேன்
சுடுகாடு சென்றவனுக்கு-இனி
எப்படி நான் காத்திருக்க?...

எனக்கான ஒருவனுடன்-இனி
நான் வாழவே கூடாதா?...
என் ராக்கால பெருமூச்சு
இனி தீரவே தீராதா?.......13 comments:

 1. ஒரு கம்பெண்ணின் சோகத்தை சொல்லிச் சென்ற கவிதை அருமை. காலங்காலமாய் பெண்ணினத்துக்கு இழைக்கப்பட்ட விதி இதுதானே! இனியாவது மாறினால் நல்லது. பகிர்வுக்கு நன்றி சகோ!

  ReplyDelete
 2. விதவையில் கதறலா...? காமத்தின் குமுறலா...? இதில் எது அதிகம் வரிகளில்...?

  ReplyDelete
  Replies
  1. விதவையின் கட்டுப்படுத்தமுடியாத உணர்ச்சிகள் பற்றியது மட்டும்தான் கவிதையின் கரு... மற்றபடி விதவையின் இன்னும் எத்தனையோ பிரச்சினைகளை இதில் நான் தொடவேயில்லை... இதை விதவையின் காதல்=காமம் என்றளவில் மட்டும் பாருங்கள் தலைவா...

   Delete
 3. உண்மைதாங்க எத்தனை பெண்கள் கணவனை இழந்து குடும்பத்தை முன்னேற்றி இருக்கிறார்கள்... அவர்கள் பின்னே நிச்சயம் ஒலிக்கும் இவ்வரிகள் எல்லாம்...

  ReplyDelete
 4. உண்மையை கூறிய அருமையான கவிதை.

  ReplyDelete
 5. இனி என் வாழ்வில்
  இருக்கவே கூடாது
  எனுமொரு முடிவுக்கு
  உரிமையிங்கே யாருக்கு?...///
  உரிமையில்லை யாருக்கும்.

  ReplyDelete
 6. காலம் மாறிவிட்டது முந்தி மாதிரி இப்போ இல்லை கணவன் இறந்த நாலஞ்சி மாசத்துலேயே கல்யாணம் கட்டிக்குறாங்க.

  விதவையின் கவிதை மனசை கரைத்து விட்டது...!

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. இது முப்பது வருசத்துக்கு முன்பு வரவேண்டிய கவிதை.காலம் மலை ஏறி விட்டது.சமுக சிந்தனை மாறி விட்டது. ஆனால் கவிதை பழுதில்லை. நன்றாக காம நெடியோடு உள்ளது.

  ReplyDelete
 9. ஆதர்ஷ உண்மைகள் .கேள்வியை கேட்ட பெண்ணுக்கு, பதில் அவள் உள்ளேயிருந்துதான் வரவேண்டும் .மற்றவர் சொல்லி வலியை அதிகபடுத்திட கூடாது .

  ReplyDelete
 10. Miga miga arumai Thozhare... Vazthukkal

  ReplyDelete