SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Tuesday, July 16, 2013

ஆண்களுக்கும் நிப்பிள் இருப்பது ஏன்?...

டீன் ஏஜ் வயசுல இருந்தப்போ எங்க ஃபிரண்ட்ஸ் சர்க்கிள்ல இருந்த எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் கேட்டுக்கிட்ட மிகப்பெரிய டவுட்டு “மாப்பிளே... ஏன்டா ஆம்பிளைங்களுக்கும் நிப்பிள் (மார்புக்காம்புகள்) இருக்குது?”... அப்பிடின்றது... (நாட்டுக்கு ரொம்ப முக்கியம் இதுன்னு உங்கள்ல யாராவது கோவப்படலாம்!!! ரொம்ப சில்லியான விஷயமாகூட இது தெரியலாம்...) ஆனா ஏன் இருக்குதுன்னு நம்மள்ல எத்தனை பேருக்குத்தெரியும்... என்னதான் மேட்டர்ன்றதை தெரிஞ்சு வச்சிக்கிறதல தப்பு ஒன்னும் இல்லையே?...

ஆம்பிளைக்கும் பொம்பளைக்குமான முக்கியமான உடலமைப்பு வித்தியாசங்கள் என்னான்னா... மார்பு, பிறப்புறுப்பு மற்றும் கர்ப்பப்பை. இதுல இந்த மார்பு மட்டும் ஆம்பிளைப்புள்ளைங்களுக்கும், பொம்பளைப்புள்ளைங்களுக்கும் ஒரு வயசு வரைக்கும் ஒரே மாதிரிதான் இருக்குது. பொம்பளைப்புள்ளைங்க பருவமடைஞ்ச பின்னாடிதான் மார்பு ஒரு இனப்பெருக்கத்திற்கான உறுப்பா... அதாவது குழந்தைக்கு பாலூட்ட தகுதியான விதத்தில வளர ஆரம்பிக்குது. (அதப்போய் ஆதி காலத்திலயிருந்தே ஒரு செக்ஸியான சமாச்சார உறுப்பா நம்மாளுங்க மாத்திப்புட்டாய்ங்க!!!) சரி... பொம்பளைங்களுக்குத்தான் குழந்தைகளுக்கு பாலூட்டறதுக்காக ஆண்டவன் அதை படைச்சிருக்கான். ஆனா எந்த பிரயோஜனமும் இல்லாம ஆம்பிளைங்களுக்கும் நிப்பிள் எதுக்கு இருக்கு?...
எங்களோட டீன் ஏஜ் பருவ கொஸ்டின் இத்தனை வருஷம் கழிச்சு திடீர்னு என் நியாபகத்தைத்தட்டுனதுல சிரிச்சிக்கிட்டே விடையைத்தேடுனேன்... ரொம்ப ஆச்சர்யமான ஆனா பலபேருக்கும் தெரியாத விஷயமாத்தான் இருந்திச்சு அதோட காரணம்... நீங்களும் தெரிஞ்சிக்கிட்டீங்கன்னா எப்பவாவது உபயோகப்படலாம்...(அண்ணே... எல்லாம் ஒரு ஜென்ரல் நாலெட்ஜ்தாண்ணே...!!!)

ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னான்னா... நாம ஆம்பிளையா இருந்தாலும் சரி, பொம்பளையா இருந்தாலும் சரி... முத முத நம்ம அம்மாவோட கருவுல உருவாகறப்போ நாம எல்லாருமே பொண்ணாத்தான் உருவாகுறோமாம்...!

கர்ப்பப்பையில உருவாகி வளர்ற கருவானது முதல் சில வாரங்களுக்கு நிப்பிள் போன்ற உறுப்புகளோடு சேர்ந்து ஒரு பொம்பளைப்புள்ளைக்கான அடித்தளத்தை (Female Blueprint) ஃபாலோ பண்ணிதான் வளருதாம். கரு உருவான அறுபது நாளுக்கு அப்புறமாத்தான் டெஸ்ட்டோஸ்ட்ரோன்ற ஹார்மோன் வேலை செய்ய ஆரம்பிச்சு (அதிலும் குறிப்பா “Y” குரோமோசோமோட உருவான கருவுல) இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் மூளை ஆகியவற்றின் செல்களில் மாற்றத்தை உண்டு பண்ணுகிறதாம். அதனால அதுக்கு அப்புறம்தான் ஆண் கரு ஆணாகவும், பெண் கரு பெண்ணாகவும் வளர ஆரம்பிக்குதாம்.

ஆனாலும் ஆரம்பத்துலேயே எல்லாக் கருவும் நிப்பிள் போன்ற சமாச்சாரத்தோடவே பெண்ணாவே இருக்கிறதால ஆண் கருவா மாறின பிறகும் அந்த நிப்பிள் மறையாம அப்படியே இருக்குதாம்...

சிம்பிளா சொன்னாக்கா...
Nipples are a vestige of our early, gender-bending days in the womb.”

(vestige 
1. A visible trace, evidence, or sign of something that once existed but exists or appears no more.
2. Biology A rudimentary or degenerate, usually nonfunctioning, structure that is the remnant of an organ or part that was fully developed or functioning in a preceding generation or an earlier stage of development)

யப்பாடா... எம்முட்டு பெரிய டவுட்டு இத்தன நாள் கழிச்சு கிளியர் ஆகியிருக்குது?...!!! அப்பிடின்ற பெருமூச்சு எனக்கு மட்டும் இல்லை... இதை படிக்கிற உங்கள்லேயும் நெறயபேருக்கு இருக்குத்தானே?...!!!

நன்றி - பல்வேறு இணையதளங்களிலிருந்து ஆராய்ந்தது(!!!)...9 comments:

 1. கிளியர் ஆகிவிட்டால் சரி...!

  ReplyDelete
 2. பரிணாமம் இருக்கிறது என்பதுவும், எங்க ஏக இறைவன் படைப்பில் எல்லாமே மிகச் சரியாகப் படைக்கப்பட்டுள்ளது என்ற நம் சகோக்களின் கூற்றுகள் இதில் அடிபடுகிறதோ?

  ReplyDelete
  Replies
  1. என்னா சார் நீங்க?... தருமி அப்பிடினு பேர் வச்சிக்கினு, நாரதர் வேலை பாக்குறீங்களே... நமக்கு என்னாத்துக்கு சார் அவ்வளோ டீப்ப்ப்... ஆராய்ச்சியெல்லாம்...

   Delete
 3. புதிய தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 4. எனக்கு இது புது தகவலாதான் இருக்கு.

  ReplyDelete
 5. good matter


  sivaparkavi

  ReplyDelete