SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Sunday, July 14, 2013

கவிதை மாலை - பதிவுலகம் 08 to 13-07-2013வரை


பதிவுலகில் சென்ற வாரத்தில் நான் படித்ததில் என்னைக்கவர்ந்த சில கவிதைகளை இங்கே அறிமுகப்படுத்தியே ஆகவேண்டும்...

நான் படித்தவைகளில் சிறந்தவைகளை மட்டுமே இதில் வரிசைப்படுத்துகிறேனேயொழிய நான் தவறவிட்ட நல்ல கவிதைகளும் நிச்சயம் இருக்கலாம்...(உங்களுக்குத்தெரிந்து அப்படி எதாவது இருந்தால் எனக்குத்தெரிவியுங்கள் ப்ளீஸ்... அதே போல நான் அளித்திருக்கும் தரவரிசை கவிதைகளுக்கு மட்டுமேயொழிய அதன் படைப்பாளிகளுக்கு அல்ல... அதுமட்டுமில்லாமல் இந்த தரவரிசை எனது ரசனையின் அடிப்படையில் மட்டுமே...)

என்னைக்கவர்ந்ததில் முதலிடம் பெண்குழந்தையை தோளில் சுமக்கும் ஒரு அப்பாவின் மனநிலையை வடித்த இந்தக்கவிதைதான்...
அவள் உலகம் என்று எளிமையான தலைப்பு வைத்தாலும் இந்தக்கவிதையின் அர்த்தங்களும், நடையும், வார்த்தை கோர்ப்பும் மிக அருமையானவை...

என் உலகம்
என் தோள் மேல் ஏறி
தன் உலகம் பார்க்கிறது!
என்று ஆரம்பமே அமர்க்களப்படுத்தியிருக்கிறார் இதன் படைப்பாளி கவிரூபன்...

தவறவிடாமல் கண்டிப்பாய் முழுக்கவிதையையும் படியுங்கள்...

                                                 ------------ X -------------
நான் ரசித்த கவிதைகளில் இரண்டாமிடத்தைப்பிடித்தது பூங்குழலி என்ற பெயரில் பூச்சரம் என்ற வலைத்தளத்தில் எழுதியிருந்தது...
மழையைப்பற்றி எத்தனையோ கவிதைகள் படித்திருப்போம்... மழையைப்பற்றி கவிதை எழுதாத கவிஞர்களே இருக்கமுடியாது எனலாம்... (நான்கூட எழுதியிருக்கிறேன்!)

ஆனாலும் இந்த மழைக்கவிதை கொஞ்சம் வித்தியாசமானதுதான் என்றால் மிகையல்ல...

பகலில் பெய்யும் மழையைத்தான் பெரும்பாலும் ரசித்து கவிதைகள் இருக்கும்... ஆனால் வித்தியாசமானதொரு கோணத்தில் இரவுப்பொழுதின் மழையை கவிதையாய் வடித்திருப்பது இதன் வித்தியாச அம்சம்...

ஏதுமில்லா
ஒற்றை இரவில்
விழித்தே கிடந்தேன் நான்
கண்மூட மறுத்து
சோம்பலில் சுகித்திருந்தேன்
வேடிக்கை பார்த்திருந்தது
வெறுமை

கருத்திருந்தது வானம்
கண்சிமிட்டி  காணாமல் போயின
நட்சத்திரங்கள்
என் தலை வருடிக்  கடந்தது
நிலா
என் கன்னம் கிள்ளிப் போனது
காற்று

தொடர்ந்து படிக்க ஆவலைத்தூண்டுகிறதா?... கிளிக்குங்கள்...
                                                    ------------- X -------------

எனது ரசனையில் மூன்றாமிடத்தைப்பிடித்தது மனதின் ஒரு பயணத்தை புதுக்கவிதைக்கே உரித்தான எழுத்துப்பாங்குடன் எடுத்துக்கூறிய
அகல் (வெளி) என்ற கவிதைதான்...

மனமென்னும் பெரும்
காட்டுக்குள்
என் பயணம்

இருளை விலக்க
ஒளியைத்தேடுகிறேன்

என்று ஆரம்பித்து வெகு அழகாய் கச்சிதமாய் முடிக்கப்பட்டிருக்கிறது கவிதை..

கோவை மு.சரளா அவர்கள் எழுதியது...
                                                ------------- X -------------

அடுத்த இடம் நம்ம கவிதைவீதி சௌந்தரின் 
அன்புள்ள காலனுக்கு...! ஒரு அவசரக் கடிதம்...! எனும் கவிதைக்குத்தான்...

அதன் சில வரிகள்...

பூமியில் விழுந்துவிட்டேன்
முளைப்பதற்காக
ஆனால் ஈரப்பதத்தை எதிர்பார்த்து
சுருங்கிப்போகிறது என்சுயநினைவு...!

வறுமையின் ஏக்கத்தை, இயலாமையை மிக அழகாக எடுத்துரைத்து சோகமாய் முடிந்திருக்கும் கவிதை...
                                               ---------------- X -----------------

அடுத்த இடமும் மழைக்கவிதைக்குத்தான்...

நீலக்குடை என்ற பெயரில் மழையில் அழுவதாக உவகைப்படுத்தப்பட்டிருக்கும் இந்தக்கவிதையும் இதன் உள்ளத்தின் உணர்ச்சிகளை எழுதியிருக்கும் முதல் கவிதையும் மிக அருமைதான்...

முதல் கவிதையின் சில வரிகள்...

இனி அபாயமில்லை
என்ற நிம்மதியுணர்வை
அடையாளம் காணாமல்
முழுநேரக் கவலையில்
என்னை புதைத்துக் கொண்டேன்
....................................

 தொடர்ந்து வந்த மழைக்கவிதையின் சில வரிகள்...
சாலையோரக் குட்டைகளில்
சேரும் என் கண்ணிரின் வெள்ளத்தை
யாரும் அருந்தப் போவதில்லை
என்ற ஆறுதல் எனக்கு
..........................................
 இந்தத்தளத்தில் சென்று நீலக்குடை என்ற கவிதையைத்தேடிப்படியுங்கள்...
                                             -------------------- X -------------------

அடுத்த இடம்  தூரிகைச்சிதறல் கவிக்காயத்ரிக்கு... இந்தக்கவிதையை முழுதுமாய் புரிந்து கொள்வதற்கு குறைந்தது நான்கைந்து முறையாவது நீங்கள் படித்தே ஆகவேண்டும் என்றாலும் கவியின் அர்த்தமும், நடையும் வெகு சிறப்பு....


காதல் 
காதலென்ற சொல்லிலில்லை...
காதல் கொண்டோர்
காதலை
காதலுடன்
காதலுக்கு 
காதலாய் உணர்த்த..
காதல் 
காதலின் காதலை
காதலுடன் உணர்வதே காதல்..!!
 
                                                    ------------------ X -----------------

அடுத்த இடம் 
பெண்டிர் மட்டும் என்ற தலைப்பில் ஸ்ரவானி என்பவர் எழுதியிருப்பது...
ஆண்களிடம் ஏமாறும் பெண்ணின் மனநிலையை வெகு அழகாய் வெகு நிறைவாய் எழுதியிருக்கிறார்...

சில வரிகள் உங்கள் பார்வைக்கு...

காதல் மழை பொழியும் என 
கண்மூடி கரம் நீட்டி தலை 
உயர்த்தி அடங்கா ஆவலுடன் 
காத்து நின்ற வேளையிலே
அமிலமழை தான் பொழிந்ததென்ன
 எனை உயிரோடு பொசுக்கியதென்ன

http://sravanitamilkavithaigal.blogspot.in/2013/07/blog-post.html
                                                            ------------- X -------------

முந்தைய வாரம் நான் மிகவும் ரசித்த ஒரு குட்டிக்கவிதையையும் இங்கே கண்டிப்பாய் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்... இது முந்தைய தேதியில் எழுதப்பட்டது என்பதால் போட்டிக்குள் நுழையாத போனஸ்...

http://vijaykavithaigal.blogspot.in/2013/07/2.html

கடை வாசல் முன்பு 
சுடிதார் இறுக்கி பிடித்து 
பெருக்கும் பெண்களின் 
கைகளில் இருக்கிறது 
ஆண்களின் பார்வை ............

உலகத்திலேயே 
நீளமான 
அகண்ட 
மைதானம் இருக்கிறதென 
அவமானப்பட்டுக் கொள்ளலாம் 
காவிரி பார்த்து .............

எல்லாக்கவிதைகளையும் படிச்சு ரசிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்... மீண்டும் அடுத்த ஞாயிறன்று இதே போன்றதொரு தொகுப்பை பார்க்கலாம்...15 comments:

 1. http://karaiyorakaatru.blogspot.com/

  ReplyDelete
  Replies
  1. சூப்பர் கவிதைகள்... அடுத்த வாரத்திலிருந்து சேர்த்துக்கொள்கிறேன்... மிக்க நன்றி.

   Delete
 2. முதலில் நல்லதொரு தொகுப்பிற்கு பாராட்டுக்கள்... அனைத்து தளங்களும் சிறந்த கவி தளங்கள்... ஒரு தளம் மட்டும் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. மேலே MF Niroshan அவர்களின் தளமும் படத்துடன் சுருக் நறுக் வரிகளுடன்...! (சமீபத்தில் தான் எனக்கு அறிமுகம்)

  உங்களின் தேடல் தொடரவும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. என் நெஞ்சார்ந்த நன்றிகள் தனபாலன் -உங்களின் இந்த அன்பிற்கு .பூங்குழலி என்பது என் இயற்பெயரே

  ReplyDelete
 5. அனைத்தும் அழகான கவிதைகள் ..
  கவிதை வரிகள் தொடரட்டும் ..

  ReplyDelete
 6. நன்றி சாய்ரோஸ் என் கவிதையை ரசித்தமைக்கு...........தொடர்ந்து நீங்கள் ரசிக்கும் கவிதைகளின் கருத்துகளை இப்படி வெளியிட்டு படைப்பாளிகளை ஊக்குவிக்கும் அரும்பணி ஆற்ற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள். தங்கள் பூங்காவனத்தில் தூரிகையில் பூத்த மலரையும் கொண்டு அலங்கரித்தமைக்கு நன்றி...

  ReplyDelete
 8. மழைக் கவிதைகள் அனைத்தும் அருமை...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. இந்தப்பதிவு என் மற்ற சில பதிவுகளைப்போல அவ்வளவாய் வாசகர் வட்டத்தை சென்றடையவில்லைதான்.... இருப்பினும் நல்ல படைப்புகள் விமர்சனமின்றி,பாராட்டுக்களின்றி பெரும்பான்மை வாசகர் வட்டத்தை சென்றடையாது போனால் அதன் வலி எப்படிப்பட்டதென்று எனக்குத்தெரியும்....
  ஆதலால் எனக்கு நேரம் கிடைக்கும் வரையிலும், என்னால் முடிந்த வரையிலும் இந்தப்பணியை வாரவாரம் தவறாமல் செய்வது என்று சத்திய முடிவெடுத்திருக்கிறேன்...
  இந்தப்பதிவை வாசித்தவர்களுக்கும், ஆதரித்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
  அன்புடன்,
  சாய்ரோஸ்

  ReplyDelete
 10. வணக்கம்
  இன்று வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூ அறிமுகம்மாகியுள்ளது சென்று பார்க்கவும் http://blogintamil.blogspot.com/2013/09/blog-post_3.html?showComment=1378165049455#c4515847910923155297வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete