SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Tuesday, July 9, 2013

மல்லிகைப்பூ ‘’அதுக்கு’’ மட்டும்தானா?...‘’மல்லிகைப்பூ’’ என்றாலே இந்தியர்களாகிய, அதுவும் குறிப்பாக தென்னிந்தியர்களாகிய நமக்கு நினைவில் வருவது ‘’அந்த’’ சமாச்சாரம்தான்.

காலம் காலமாக ஒரு ஆண் தன் மனைவியை சமாதானப்படுத்த அல்லது வசியப்படுத்த ‘’மல்லிகைப்பூவும் அல்வாவும்’’ என்று நமக்கு போதிக்கப்பட்டு வந்ததன் விளைவுதான் அது. அதேபோல ஒரு மனைவியும் தனது ஆசையை குறிப்பால் கணவனுக்கு உணர்த்தவும், கணவனின் "அந்த" உணர்ச்சியை தூண்டவும் மல்லிகைப்பூதான் சிறந்தது என்ற சமுதாய பயிற்றுவிப்பில் வளர்ந்ததால் மல்லிகைப்பூவின் குணாதிசயங்களை நாம் காமம் என்ற எல்லையைத்தாண்டி பெரும்பாலும் உணர்ந்திருக்கவில்லை.

அதேபோல மல்லிகைப்பூவின் மற்றொரு சிறப்பம்சம் இது மாலை ஆறு மணியிலிருந்து எட்டு மணிக்குள்ளாகவே மலரும் தன்மை கொண்டது. முன்னிரவில் ஃபிரெஷாக மலருவதும், இதன் அதீத மயக்கும் மணமும் இதை நம்மிடையே ‘’அந்த’’ சமாச்சாரத்திற்கான மலராக மாற்றி வைத்திருப்பதன் முக்கிய காரணமாக இருக்கலாம். இன்றளவும் நமது கலாச்சாரத்தில் மல்லிகைப்பூ இல்லாத முதலிரவை பார்ப்பது அபூர்வம்தான்!.

சரி... உண்மையிலேயே மல்லிகைப்பூவுக்கு காம உணர்வுகளை தூண்டும் தன்மையிருக்கிறதா?... அறிவியல் பூர்வமாக அது நமது ஹார்மோன்களை தூண்டுவது நிஜம்தானா?... அல்லது வெறுமனே அது பெண்களிடமுள்ள துர்நாற்றங்களை ஆண்கள் ‘’அந்த’’ நேரத்தில் உணர்ந்து முகம் சுளிக்காமல் இருக்க பெண்களால் சூட்டிக்கொள்ளப்படும் மலரா?... கேள்விகள் நிறைய இருக்கலாம். ஆனால் பதில்?...

முதலில் மல்லிகைப்பூவை பற்றி சில அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.
மல்லிகைப்பூச்செடி ஆலிவ் குடும்பத்தைச்சேர்ந்த தாவர வகையாகும். மல்லிக்கைப்பூவில் எத்தனை வகையிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?... நமக்கு தெரிந்து குண்டு மல்லி, ஜாதி மல்லி, மதுரை மல்லி... என்று ஒரு ஐந்தாறு வகைகளை அடுக்கலாம். ஆனால் உண்மையில் மல்லிகைப்பூவில் 200வகைகள் உள்ளது என்பது விக்கிபீடியா தரும் ஆச்சர்யசேதி!.

சரி... மல்லிகைப்பூவின் பூர்வீகம் எதுவாக இருக்கும்?...
ஆசியா (அதுவும் குறிப்பாக தெற்கு ஆசியா), ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இவைகள்தான் மல்லிகைப்பூவின் வரலாற்றுப்பூர்வீகங்கள். ஆனால் இருநூறு வகையில் ஒரு வகை மட்டும் ஐரோப்பாவை பூர்வீகமாகக்கொண்டதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது. மற்றவகை மல்லி எல்லாம் ஐரோப்பாவை பூர்வீகமாகக்கொள்ளாவிட்டாலும் இன்று ஐரோப்பாவில் பலவிதமான மல்லி விளைவிக்கப்படுகிறதாம்.

சரி... இதன் பெயர்க்காரணம் என்னவாக இருக்கும்?...
ஜாஸ்மின் என்ற வார்த்தை யாசாமின் (Yasameen) என்ற பெர்சியன் வார்த்தையிலிருந்து தோன்றியிருக்கிறது யாசாமின் என்றால் கடவுளின் பரிசு (Gift from God) என்று அர்த்தம்!. (அரேபி மற்றும் லத்தின் மொழியிலும் இதுதான் அர்த்தமாம்).

மல்லிகைப்பூவுக்கு பெருமை தேடித்தரும் சில சமாச்சாரங்கள்...
1)  பல நாடுகளிலும் மல்லிகையின் பெயர் இன்றளவும் பெண்களுக்குச்சூட்டப்பட்டு பெண்கள் மல்லிகையோடு ஒப்பிடப்படுகிறார்கள்.
2) சிரியாவின் தலைநகர் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான டமாஸ்கஸ் மல்லிகைப்பூ நகரம் அதாவது City of Jasmine என்றுதான் அழைக்கப்படுகிறது.
3) 1987ல் அதிபரை மாற்ற துனிஷியாவில் நடந்த போராட்டமும், 2011ல் நடந்த துனிஷியா புரட்சியும் ‘’ஜாஸ்மின் ரிவோலுஷன்ஸ்’’ என்றே அழைக்கப்படுகிறது.
4) 2011ல் சீனாவில் நடந்த போராட்டத்திற்கு (2011 Chinese Pro democracy Protest) மல்லிகைப்பூவையே சின்னமாக வைத்திருந்தார்கள்.
5)  தாய்லாந்தில் மல்லிகைப்பூதான் தாய்மையின் அடையாளமாக, உருவகமாக உபயோகப்படுத்தப்படுகிறது.
6) இந்தோனேஷியாவில் 1990ல் மல்லிகைப்பூ தேசியமலராக ஏற்றுக்கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்டது.
7) பாகிஸ்தானில் யாஸ்மின் என்றழைக்கப்படும் மல்லிகைப்பூதான் தேசிய மலர்.
8) 1935ம் ஆண்டிலிருந்து பிலிப்பைன்ஸ்க்கும் மல்லிகைப்பூதான் தேசிய மலர்.

மல்லிகைப்பூவின் பயன்கள் நாம் நினைப்பதுபோல வெறுமனே அதன் நறுமணத்துடன் மட்டுமே முடிந்துவிடவில்லை. அதன் பயன்களை வரிசைப்படுத்தும்போது உங்களுக்கும் நிச்சயம் ஆச்சர்யம் ஏற்படலாம்.

Jasmine sambac என்ற வகை மல்லிகை எந்தெந்த நாட்டில் என்னென்ன நோய்களுக்கு மருந்தாக உபயோகப்படுத்தப்படுகிறது என்ற தகவல் கீழே:
   Abdomen - China
   Head Ache - China, Malaysia, Iraq
   Anesthetic - China
   Anodyne - China
   Antiemmenagogueue - Samoa
   Asthma - Phillipines
   Collyrium - Iraq, Malaya
   Conjunctivitis - China
   Decongestant - Iraq, Malaya
   Dermatosis - Malaya
   Dysentery - China
   Fever - Iraq
   Fracture - China
   Insomnia -China
   Lactifuge - Asia
   Lotions - Iraq
   Sapraemia - Malaya
   Sedative - China
   Skin - Asia
   Sore - China
   Tumor - China
   Tumor (Breast) - India
   Venereal – Malaya
மல்லிகைப்பூவின் மருத்துவ உபயோகங்கள் பிரமிப்பாக இல்லை?...

மல்லிகைப்பூ பெரும்பாலும் ‘’மல்லிகைப்பூ டீ’’ மற்றும் ‘’மல்லிக்கைப்பூ எண்ணெய்’’ ஆகிய இரு தயாரிப்புகளில் அளப்பரிய நன்மைகளை நமக்கு வழங்குகிறது.

மல்லிகைப்பூ டீ...

நம்மில் பெரும்பாலானோர் கிரீன் டீ பற்றி அறிந்து உபயோகித்து கொண்டிருக்கலாம். அதே போன்றதுதான் இந்த மல்லிகைப்பூ டீயும். சீனாவில்தான் இந்த மல்லிகைப்பூ டீ மிகப்பிரபலமாக, பரவலாக உபயோகப்படுத்தப்படுகிறதாம்.

மல்லிகைப்பூ டீ அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்...
மல்லிகைப்பூ டீயிலிருக்கும் ஆன்ட்டிஆக்ஸிடன்ட் குணத்தால் இது கேன்சருக்கு ஒரு சிறந்த தீர்வாக பயனளிக்கும். அதுமட்டுமில்லாமல்
Aging எனப்படும் வயதான தோற்றத்தை குறைக்கவும் இது சிறந்த உபயோகமாகும்.

மல்லிகைப்பூ டீ உபயோகிக்கும் மக்களுக்கு ஹார்ட் அட்டாக் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

காலரா, பேதி போன்ற நோய்களுக்கு மல்லிகைப்பூ டீ வீட்டிலேயே நிவாரணமளிக்கும் சிறந்த மருந்து. அதுமட்டுமின்றி மல்லிகைப்பூ டீ Cold எனப்படும் ஜலதோஷத்தை தடுக்க வல்லது.

மல்லிகைப்பூ டீ நம் உடலில் இருக்கும் பல கெட்ட பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழிப்பதோடு, நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கும் பெருமளவு உதவுகிறது.

மல்லிகைப்பூ டீ நம் உடலின் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து கட்டுப்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல் உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதிலும், நீரழிவு நோய் மற்றும் ப்ரைன் ஸ்ட்ரோக் போன்றவை வராமல் தடுப்பதிலும் பெரும்பங்கு வகிக்கிறது.

மல்லிகைப்பூ டீயினால் தினமும் மவுத் வாஷ் எனப்படும் வாய் கொப்பளித்தலை செய்து வருவது பல் சம்பந்தப்பட்ட எந்தவித நோய்களும் வராமல் காக்கும்.

மல்லிகைப்பூ டீ அருந்துவது நமது உடலில் சமச்சீரான அளவில் கலோரி எரிக்கப்பட்டு உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கு பெருமளவு உதவும்.
மல்லிகைப்பூ டீ அருந்துவது கேஸ்டிக் அல்சர் எனப்படும் நோயை வராமல் தடுக்கும் மிகச்சிறந்த உபாயமாகும்.

இது மட்டுமில்லாமல் அலெர்ஜியை தடுக்கவும், இரத்த உறைதல் எனப்படும் ரிஸ்க்கை குறைக்கவும், இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் மல்லிக்கைப்பூ டீ அருந்துவது நல்ல பயனளிக்கும் என்பது மருத்துவ நிரூபணங்கள்.

அடுத்து மல்லிகைப்பூ எண்ணெயின் உபயோகங்கள்...
வாசனைத்திரவியம் மற்றும் சோப்புகள் தயாரிப்பதில் இந்த மல்லிகைப்பூ எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது.

குழந்தை பிறப்பு உபயோகங்கள்;
மல்லிகைப்பூ எண்ணெய் எனெர்ஜி லெவலை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது என்பதால் இதனால் ஏற்படும் ஒருவிதமான சந்தோஷமான மனநிலை பெண்களின் கர்ப்ப காலத்துக்கு மிகச்சிறந்தது.

அதேபோல பிரசவ வேகத்தை அதிகரிப்பதிலும், பிரசவ வலியை குறைப்பதிலும் மல்லிகைப்பூ எண்ணெயின் பங்களிப்பு அபரிதமானது என்பது ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்ட உண்மை.

மல்லிகைப்பூ எண்ணெய் ஒரு பெண் முதன்முதலில் தாயாகும்போது அவளது தாய்ப்பால் சுரப்புகளை சரியான அளவில் கட்டுக்குள் வைத்திருப்பதில் பெருமளவு உதவுகிறது.

தோல் மற்றும் சுவாசப்பயன்கள்;
மல்லிகைப்பூ எண்ணெயை சுவாசம் சம்பந்தப்பட்ட மருத்துவ பயனுக்கு உபயோகப்படுத்தும்போது இருமல் மற்றும் தொண்டை அடைப்பை குறைப்பதிலும், Laryngitisன் அறிகுறிகளை குறைப்பதிலும் பெரும்பங்கு வகிக்கிறது.

மல்லிகைப்பூ எண்ணெயை தோலில் தடவும்போது தசைவலிகளும், டென்ஷனும் குறைவதை உடனடியாக உணரலாம்.

தசைபிடிப்பு, முட்டிவலி மற்றும் இன்னபிற உடல் வலிகளினால் உண்டாகும் வலிகள் மல்லிகைப்பூ எண்ணெய் தடவுவதால் நிச்சயம் குறையும்.

மல்லிகைப்பூ எண்ணெயை தோலில் தடவும்போது அது பிசுபிசுப்பான சருமத்தை நீக்கி, உலர்வாகவும், மிருதுவாகவும் சருமத்தை வைத்திருக்கும்.

மல்லிகைப்பூ எண்ணெய் தோலின் எலாஸ்ட்டிசிட்டியை அதிகரிப்பதால், சருமத்திலிருக்கும் தழும்புகள், ஸ்ட்ரெச் மார்க்ஸ் போன்றவற்றை குறைக்கலாம்.

செக்ஸீவல் சப்போர்ட்ஸ்;
மல்லிகைப்பூ எண்ணெயின் அமைதியாக்கும் குணத்தினால் பெரும்பாலான மக்களால் இது பலவிதமான செக்ஸீவல் குறைபாட்டை நீக்க உபயோகப்படுத்தப்படுகிறது.

குறிப்பாக மல்லிகைப்பூ எண்ணெய் உபயோகப்படுத்துவது விரைவாக விந்து வெளியேறுதலை தடுக்கவும், ஆண்மைக்குறைவை குறைக்கவும் பெருமளவு உதவுவதாக பல்வேறு விதமான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சிலர் தங்களது உடம்பின் செக்ஸீவல் ரெஸ்பான்சை அதிகரிக்கவும், காமத்தில் தங்கள் விருப்பம்போல இயங்கவும் மல்லிகைப்பூ எண்ணெயை உபயோகப்படுத்துவதும் உண்டு.

சரி... இந்த மல்லிகைப்பூவின் மருத்துவ பயன்களை எப்படி அடைவது?...
1) மல்லிகைப்பூ எண்ணெயில் வேபர் தெரபி
2) மல்லிகைப்பூ எண்ணெயில் மஸாஜ்
3) மல்லிகைப்பூ எண்ணையை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்கலாம்.
4) மல்லிகைப்பூ டீ குடிப்பது
5) அரோமாதெரபி தயாரிப்புகளை உபயோகிக்கலாம். அதாவது மல்லிகைப்பூ சோப், மல்லிகைப்பூ பாத் ஆயில், மல்லிகைப்பூ ஷாம்பூ போன்றவற்றை உபயோகிப்பது.
6) மல்லிகைப்பூ எண்ணெயை நமது மற்ற வழக்கமான சோப், பாத் ஆயில், ஷாம்பூ போன்றவற்றில் கலந்து உபயோகிக்கலாம்.

மல்லிகைப்பூவில் இப்படி எண்ணிலடங்கா விஷயங்களும், பயன்களும் இருக்கும்போது அதை நாம் இனிமேலும் வெறுமனே ‘’அந்த’’ விஷயத்திற்கான மலராய் மட்டும் பார்க்கும் பார்வை மாறும் என்று நம்புகிறேன்.

மற்றபடி கட்டுரையின் தலைப்புக்கான பதில் என்னவென்று கேட்டீர்களேயானால்...
மல்லிகைப்பூவில் காமத்தை தூண்டும் உட்பொருட்கள் அடங்கியிருக்கிறதோ இல்லையோ... எப்படியிருந்தாலும் நமது பெண்கள் தழையத்தழைய புடவை கட்டிக்கொண்டு தலைநிறைய மல்லிகைப்பூ வைத்துக்கொண்டு வரும்போதும், அதன் வாசத்தை நுகரும்போது நமது உடம்பில் ஜிவ்வென்று ஒரு ஏற்றம் வருகிறதே... அது நிஜம்தானே?...

அப்புறமென்ன மக்களே... வீட்டுக்கு போகும்போது மறக்காம ஒரு நாலு முழம் மல்லி வாங்கிட்டு போங்க... சந்தோஷமா இருங்க!!!


3 comments:

 1. அம்மாடா, எம்மாம் பெரிய பதிவு. படிச்சு முடிக்கறதுக்குள்ள மூச்சு வாங்கிட்டுதே?

  ReplyDelete
 2. வணக்கம்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_9.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 3. மல்லிகைப் பூவுக்குப் பின்னால இம்பூட்டு மகத்துவங்கள் இருக்குதா... ஆத்தாடி!ன்னு (என்) மூக்கு மேல விரல வெக்கற மாதிரி தகவலத் தந்து அசத்திட்டீங்க அம்மணி! பிரமாதம்!

  ReplyDelete