SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Tuesday, March 19, 2013

நெசமாவே திருந்திட்டாரா கலைஞரய்யா?...ஒருவழியா கண்கெட்டபொறவு சூரியநமஸ்காரம் மாதிரி ஐ.மு.கூ விலிருந்து கலைஞரய்யா வெலகிட்டாராமே?... இது நெசந்தானா சாமீ?... இன்னும் கொஞ்சபேரு இதக்கூட அரசியல் சாணக்கியரின் நாடகந்தான்னு சந்தேகப்படுறாகளே... ஒருவேளை அப்பிடியும் இருக்குமா என்ன?...

ஏன் சாமீ?... இந்த ஐ.மு.கூ... ஐ.மு.கூ ன்னு சொல்றாகளே, அப்பிடீன்னா என்ன சாமீ?... ஐக்கிய முட்டாள்கள் கூட்டணியா சாமீ?...ன்னு வெவரமில்லாம படிச்ச அண்ணாச்சி ஒருத்தர்கிட்ட கேட்டுப்புட்டேன்ங்க... அவரு விழுந்து விழுந்து சிரிச்சிக்கிட்டே அப்படிகூட சொல்லலாம்ப்பா... தப்பேயில்லைன்னு சொன்னாருங்க!!!

கலைஞரய்யா தமிழினத்துக்கே ஏதோ துரோகம் பண்ணிட்டாருன்னு நாலைஞ்சு வருஷமா ரொம்பப்பேரு பேசிக்கிறாக... அவரு மட்டும் 2008 இல்லை... 2009லேயே இந்த ஐ.மு.கூவிலிருந்து வெலகியிருந்தா தமிழர்கள் அவரை தலமேல தூக்கிவெச்சு கொண்டாடி அப்பவே மறுபடியும் 40சீட்டையும் அவருக்கே வாங்கிக்கொடுத்திருப்பாக... ஆனா அப்பல்லாம் கண்டும்காணாம நாக்காலிய கெட்டியா புடிச்சிக்கிட்டு கெடந்திட்டு அவரோட தமிழினத்தலைவர் வரலாற்றுல சாணிய பூசிட்டாராம்!!!

சரி, போனது போகட்டும் சாமீ... இப்போதான் டெசோவ தூசுதட்டி மீண்டும் தமிழினத்தலைவர் முகமூடிய மாட்டிட்டாருல்ல?... அப்புறம் என்ன, தமீழீழம் வாங்கிக்குடுத்துட்டு தன்னோட வரலாற்றுல பதிஞ்ச கறைய கழுவிட்டுத்தான் தலைவர் போய்ச்சேருவார்னு சொன்னாக்க பல பயலுவ நம்பாம சிரிச்சானுவ... தலைவரும்தான் சலிக்காம எத்தனை நாடகம் போட்டாரு?... ஆனாலும் பயபுள்ளக நம்புனாகளா?... கலைஞர் உண்மையிலேயே செய்ஞ்ச பாவத்துக்கு பிராயச்சித்தம் செய்ய நெனச்சாக்க மத்திய அரசிலேயிருந்து வெலகவேண்டியதுதானேன்னு ஏட்டிக்கு போட்டி கொக்கி கேள்வி கேட்டாவுனுக...

 அவரும் எவ்வளவு நாள்தான் வலிக்காதமாதிரியே நடிப்பாரு?... இப்போ அவருக்கு என்ன தோணுச்சோ... இல்ல என்ன வேணுமோ தெரியல?... ஒருவழியா பொங்கியெழுந்து மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்கி கூட்டணியிலிருந்து வெலகிப்புட்டாரு. ஆனாலும் எசமான் ப.சிதம்பரம் இதனால மத்தியஅரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை... மத்தியஅரசு பெரும்பான்மை பலத்துடனே உள்ளதுன்னு உடனடியா பேட்டி கொடுத்துருக்காரு. ஒருவேளை இதத்தான் நேத்தக்கி கூடிப்பேசிட்டு இன்னக்கி கூவுறாவளோன்னு கொஞ்சபேருக்கு டவுட்டுங்களாம். எல்லாத்தையும் சந்தேகப்பட்டா எப்பூடி?...

தலைவருக்குத்தான் எவ்வளவு சோதனைங்க?...

ஏட்டிக்கு போட்டி எழுதுற பத்திரிக்கைங்க மற்றும் சமூக வலைத்தள இளைஞருங்க...

ஸ்டாலினா? அழகிரியா?ன்னு அதுவேற ஒருபக்கம்...

குஷ்பூவுக்கும் தலைவருக்கும்னு கழகக்கண்மணிங்க கண்ணக்கசக்குற அளவுக்கு கசிஞ்ச செய்திங்க ஒரு பக்கம்...

எல்லாத்தையும் தாண்டி தலைவர் ஒரு முடிவு எடுத்துருக்காருன்னா சும்மாவா?...

 கலைஞரை நம்புங்க சாமீங்களா!!!... அவுகதான் மத்திய அரசுக்கு 21ம் தேதிவரை டைம் இருக்குதுன்னு சொல்லியிருக்காகல்லே?... அதுக்குள்ள அவரோட திரைக்கதைல வேற எதாவது திருப்பம் வராலாம்லே?...

தலைவர் வெலகுறதா சொன்னதுதான் தாமதம்... உடனே தி.மு.க தொண்டருங்கல்லாம் அங்கங்கே பட்டாசு வெடிச்சு கொண்டாடுறானுவ... இருக்காதே பின்னே?... எத்தன நாளக்கித்தான் அவுகளும் இலங்கை வெவகாரத்தில கேள்வி கேக்குறவன்கிட்டயெல்லாம் தலைய குனிஞ்சு நிப்பாய்ங்க?... அதான் இப்போ அம்புட்டு சந்தோஷம் அவகளுக்கெல்லாம்...

யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு இப்போ தமிழ்நாடு முழுக்க மாணவர் சக்தி களமிறங்கியிருக்கிறது ஆரோக்கியமான வெசயமுங்க... இனத்துக்கான பாசம் அடுத்த தலைமுறைகிட்ட இருக்கிறதுன்றது மக்கள் மட்டுமில்லே... அரசியல்வாதிகளும் மனசில நிறுத்திக்கவேண்டிய விசயம் இது!... அதே மாதிரி இப்போ மாணவசக்திய அடக்கி ஒடுக்காம அழகா கையாளுற ஆளும்கட்சியையும் கண்டிப்பா பாராட்டனுமுங்க... ஏன்னா முத்துக்குமரன் செத்தப்போ திரண்ட மாணவர்சக்திய எப்படி அடக்குனாங்கன்னு எல்லாருக்கும் நல்லாவே தெரியுமுங்க...

சோனியா அம்மையார் நம்ம நாட்டையே இத்தாலிக்கு அடகு வைச்சிட்டு இருக்காராமே?... நம்ம மீனவனுங்க எத்தனைபேரு செத்தாலும் கவலையேபடாத அவருக்கும், அவரோட காங்கிரஸ் அரசுக்கும் வரப்போற தேர்தல்ல சாவுமணி அடிக்கிற வேலைய ஒவ்வொரு தமிழனும் மறக்காம மனசில வைச்சிக்கனும்ன்றதுதான் ஒரு பாமரனா என்னோட கவலையெல்லாம்...

மத்தபடி கலைஞரய்யா நெசமாவே திருந்திட்டாரா?... தமிழினத்துமேல அவருகாட்டும் பாசம் இப்போவாவது நெசந்தானா?ன்றதெல்லாம் நமக்கு தெரியாதுங்க.

ஆனா நெசமா இருக்கனும்னு வேண்டிப்போமுங்க... அவரோட கடைசிகாலத்துலயாவது அரசியல் நாடகம் நடத்தாம நெசமாவே தமிழினத்துக்காக ஏதாவது செய்ஞ்சிட்டு போனாக்க நம்ம இனத்துக்கும் அவரு பேருக்கும் புண்ணியமாப்போவுங்க... ஏன்னா அவருமேல ஆயிரம் பழி இருந்தாலும் தமிழினத்துக்காக பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுக்கிறது அவரால மட்டும்தான் முடியும்ன்றது பல பேருக்கு புரிஞ்சிக்க மறுக்கிற நெசம்... இப்போ அவரு ஆதரவ வாபஸ் வாங்கினதால ஒரு மண்ணும் நடக்கப்போறதில்ல... மத்திய அரசு அது இஷ்டப்படிதான் நடக்கும்னு நெனக்கிறவக இருக்கலாம். அதுதான் நெசம்னுகூட சொல்லலாம். ஆனாலும் அவரு ஆதரவை இப்பவாவது வாபஸ் வாங்குனாரேன்னு நாம சந்தோஷப்பட்டுக்கலாம். தப்பேயில்லேய்ங்க!!!...

ஏற்கனவே நம்ம ஐயாவுக்கு நான் எழுதுன கடுதாசி இதுதாங்க...


வவுறெரிஞ்சி கெடக்குற தமிழினத்தோட வவுத்துல தலைவர் கலைஞர் நெசமாவே பால் வார்ப்பாரா?... இல்லே வழக்கம்போல ஏதோவொரு நாடகம் போட்டு மறுபடியும் ஒருமுறை தமிழினத்துக்கு பால் ஊத்துவாரா?ன்னு... பொறுத்திருந்துதான் பாக்கனுமாமே... ஆமாங்களா?...


13 comments:

 1. இதே சூட்டோடு கட்சி பேதம் மறந்து அனைவரும் ஒன்று சேர்ந்து போரடினால் தமிழன் வாழ்வு பெறுவான். செய்வார்களா?

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது மிகச்சரி... ஆனால் அப்படியொரு நிலை தமிழகத்தில் இருந்திருந்தால் நம் இனம் இவ்வளவு சரிவுகளை கண்டிருக்க வாய்ப்பேயில்லையே?...

   Delete
  2. நடந்தது நடந்தவையாக இருக்கட்டும் .இனிமேலாவது முயற்சி பண்ணலாமே?

   திரு சாய்ரோஸ் .

   Delete
 2. கணனியில் அழிந்த கோப்புக்களை துல்லியமாக மீட்டெடுப்பதற்கு ----- http://mytamilpeople.blogspot.in/2013/03/recover-deleted-files-from-hard-disk.html

  ReplyDelete
 3. கணனியில் அழிந்த கோப்புக்களை துல்லியமாக மீட்டெடுப்பதற்கு ----- http://mytamilpeople.blogspot.in/2013/03/recover-deleted-files-from-hard-disk.html

  ReplyDelete
 4. கணனியில் அழிந்த கோப்புக்களை துல்லியமாக மீட்டெடுப்பதற்கு ----- http://mytamilpeople.blogspot.in/2013/03/recover-deleted-files-from-hard-disk.html

  ReplyDelete
 5. ///நெசமாவே திருந்திட்டாரா கலைஞரய்யா?...////

  இப்படியொரு எண்ண மீனுக்காக போட்ட தூண்டில் தான் ஏல இந்த நாடகம்..........

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்களா சாமீ?... இருக்கலாமுங்க... யார் கண்டா?... இந்த பதவி ஆசை படுத்துற பாடு இருக்கே.... கட்டையில போறப்பகூட காலை விடாதாம்... ம்ம்ம்... என்னத்த சொல்ல?...

   Delete
 6. nalla pathivu..... alagaa solli irukeengal vaalththukkal.

  http://www.sinthikkavum.net/2013/03/blog-post_19.html
  கருணாநிதி ஹீரோவா? சீரோவா? padichchu parungal

  ReplyDelete
 7. நாலு வருஷம் சம்பாதிச்சாச்சு. இன்னும் ஒரு வருஷம்தானே இருக்கு.போனா போகட்டும் போடா.

  ReplyDelete
 8. எல்லாமே நாடகத்தில் ஒரு பகுதி, பொறுத்திருந்து பாருங்கள் கலைஞரின் சாணக்கியம் தெரியும்.

  ReplyDelete
 9. வரப்போகும் பாராளுமன்ற
  தேர்தலை முன்னிட்டே
  இத்தனை கூத்தும்,!!

  பிறகு..??..
  ..............
  பிறகென்ன !!
  பதவியை கேட்டு வாங்க டெல்லி நோக்கி
  பறக்கவேண்டியதுதான்.
  தமிழனாவது மண்ணாங்கட்டியாவது..

  ReplyDelete