ரொம்ப நாள் ஆச்சு பதிவெழுதி... காங்கிரஸ் நடத்திய ராஜஸ்தான்
கோமாளி மாநாட்டைப்பத்தியே எழுதனும்னு நெனச்சேன்... சரியான நேரம் அமையாததால மிஸ் ஆகிப்போச்சு...
இப்போ எழுதியே ஆகவேண்டிய விஷயங்கள் அதிகமாயிட்டதால இந்தக்கட்டாயம்...
முதலில் காங்கிரஸ் கட்சி நடத்திய ராஜஸ்தான் மாநாடு...
என்னே பில்டப்?!!!... கட்சிக்காரர்கள் அனைவரும் ராகுலுக்கு
முக்கிய இடம் தரப்படவேண்டும் என்று வலியுறுத்தியதும், ராகுலை கட்சியின் துணைத்தலைவராக
அறிவித்ததும் அன்னை சோனியா நாட்டுக்காக தன்மகனை அர்ப்பணித்ததாக காங்கிரசார் உருகியதும்...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... யப்பா, கண்ணை கட்டிடுச்சுடா சாமீ...! இத்தோடு நில்லாமல் அன்னை சோனியாவும்,
மன்மோகனும் இந்திய வரலாற்றில் காங்கிரஸ் இந்தியாவை ஆண்ட நாட்கள் மட்டும்தான் ஊழல் குறைந்த
நாட்கள் என்றும், வலுவான லோக்பால் மசோதாவை காங்கிரஸ் கொண்டு வந்தே தீரும் என்றும் சூளுரைத்து
கிச்சு கிச்சு மூட்டியது தனிக்கதை!...(இதுக்கு ஏன்டா வெள்ளையும் சொள்ளையுமா திரியிறீய்ங்க?...
என்ற வடிவேலு டயலாக்தான் நியாபகத்துக்கு வந்தது!)
இந்த இலட்சணத்தில் காங்கிரசின் அடிப்பொடிகள் ராகுலை பிரதமர்
வேட்பாளராக அறிவித்தபிறகுதான் அவரின் பலம் நாட்டுக்குத்தெரியும் என்று ஏகத்துக்கும்
ஜால்ரா வேறு!. ஏற்கனவே பிரதமர் நாற்காலி இனி தனக்கு பாக்கியமில்லை என்று உணர்ந்த காங்கிரசின்
ஒரு முதியோர் கூட்டமும் தனக்கு கிடைக்காதது எவருக்கும் கிடைத்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில்
ராகுலைத்தான் நிச்சயமாக அடுத்த பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்று கருத்துரை
பரப்பல் வேறு! பிரதமர் நாற்காலியில் அமருவதற்கு ராகுலுக்கு ராஜீவ்-சோனியாவின் மகன்
என்பதைத்தவிர வேறென்ன தகுதியிருக்கிறது?... வேறென்ன திறமையிருக்கிறது?... வேறென்ன அனுபவமிருக்கிறது
என்பதையெல்லாம் எந்த காங்கிரஸ்காரனாவது எனக்கு விளக்கிச்சொன்னால் பரவாயில்லை!!!. நம்பமுடியாதுடா
சாமீ நம் மக்களை... ஒருவேளை ராகுலையும் பிரதமர் நாற்காலியில் அமர்த்தினாலும் அமர்த்திவிடுவார்கள்!!!
(ராகுல்தான் காங்கிரசின் உண்மையான எதிர்காலம். ஆனால் அது இப்போது இல்லை. ராகுல் அதற்காக
பயணிக்கவேண்டிய தூரம் ஏராளமிருக்கிறது).
ஷின்டேவின் காவித்தீவிரவாதம் பற்றிய பேச்சும், அதற்கு பா.ஜ.க.வின்
எதிர்வினையும் நல்ல நாடகமாகத்தான் தெரிகிறது. அது மினி சீரியலா? இல்லை மெகா சீரியலா
என்பது வரும் நாட்களில்தான் தெரியும். பா.ஜ.க.வில் கட்காரியின் இடத்தில் ராஜ்நாத்...
இதனால் நாட்டுக்கும், பா.ஜ.க.வுக்கும் இரண்டுக்குமே எந்த பிரயோஜனமும் இல்லை. மத்தியில்
அடுத்த ஆட்சி பா.ஜ.க.வாக இருந்தாலும் சரி... காங்கிரசாக இருந்தாலும் சரி... ஒன்று மட்டும்
நிச்சயம். யார் ஆட்சிக்கு வந்தாலும் இனி ஊழலின் அளவுகோல் மட்டும் குறையப்போவதேயில்லை.
நெத்தியில் மட்டுமில்லாமல் முகமெல்லாம் நாமம் போட்டுக்கொள்ள தயாராகிக்கொள்ளுங்கள் மக்களே!!!
அடுத்து தி.மு.க.வின் அடுத்த தலைமைக்கான அறிவிப்பும், அதன்
எதிர்வினைகளும்...
ஒருவழியாக பெரியவர் பதவியில் இருந்து விலகாவிட்டாலும் அடுத்த
தலைமை ஸ்டாலின்தான் என்று சூசகமாக அறிவித்து எல்லாருடைய பொறுமைக்கும் முற்றுப்புள்ளி
வைத்தார். அழகிரி தரப்புக்கு மட்டும்தான் இது கசப்பேயொழிய நிதர்சனத்தை ஆராய்ந்தால்
தி.மு.க.வுக்கான எதிர்காலத்திற்கு இது சரியான முடிவுதான் என்றே தோன்றுகிறது. ஒருவேளை
கடைசிவரை கருணாநிதி தனக்குப்பிறகான தலைமையைப்பற்றி அறிவிக்காமல் திடீரென மறையும் சூழல்
உருவானால் அதன் பிறகு தி.மு.க பிளவுபட்டு சிதறிப்போவதை யாராலும் தடுக்கமுடியாத சூழல்
உண்டாகியிருக்கும். அம்மாவின் எதிர்பார்ப்பும், நினைப்பும் கூட அதுதான். ஆனால் இப்போது
அது காப்பாற்றப்பட்டிருக்கிறது. கருணாநிதிக்கு பின்னாலான காலத்தில் கட்சி ஸ்டாலினால்
வழிநடத்தப்படும். அழகிரியின் எதிர்வினைகள் நிச்சயம் பெரிதான பாதிப்பு எதையும் ஏற்படுத்தப்போவதில்லை.
இப்போதே அழகிரியின் பெரும்பாலான கைத்தடிகள் ஸ்டாலினுக்கு
குடைபிடிக்க ரெடியாகிவிட்டது. ஒருசிலர் மட்டும்தான் இன்னமும்கூட அண்ணன் இல்லையென்றால்
தி.மு.க என்றொரு கட்சியே இருக்காது என்று பில்டப் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால்
உண்மை நிலவரம் வேறு.
ஸ்டாலின் திடீரென ஏதோவொரு மாவட்டத்தில் சாம்ராஜ்யம் செய்து
கட்சியில் வளர்ந்துவிடவில்லை. அவரது வளர்ச்சி படிப்படியானது. பல்வேறு அரசியல் அனுபவங்களும்
நிறைந்தது. தன்னை முழுநேர அரசியல்வாதியாக மட்டுமே அறிமுகப்படுத்திக்கொண்டவர் அவர்.
அவருக்கும் சில மைனஸ்கள் இருக்கலாம். ஆனால் தி.மு.க.வின் அடுத்த தலைமை ஸ்டாலின் Vs
அழகிரி என்றொரு பட்டியலிட முயன்றால் ஸ்டாலினின் இடத்தை அழகிரியால் ஏணி வைத்தும் எட்டிப்பிடிக்க
இயலாது என்பது நிதர்சனம்.
நான் தி.மு.க.வை வெறுப்பவன் என்ற போதிலும் எனது வாய்ஸ் ஸ்டாலினுக்குத்தான்!.
எவ்வளவு சீக்கிரம் பெரியவர் ரிட்டைர்டு ஆகி, ஸ்டாலின் கைகளில் பொறுப்பை ஒப்படைக்கிறாரோ
அவ்வளவு சீக்கிரம் கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லது என்பதை அவரும், தி.மு.க.காரர்களும்
புரிந்துகொண்டால் சரி. ஆல் தி பெஸ்ட் ஸ்டாலின் அவர்களே! உங்களிடம் அடுத்த தலைமுறைக்கான
ஆட்சியை எதிர்பார்க்கலாம் என்று நம்புகிறேன். காலம்தான் பதில் சொல்லவேண்டும். பார்க்கலாம்.
அடுத்து கமலோட விஸ்வரூபம் திரைப்படம்...
எங்கே சென்று கொண்டிருக்கிறது கருத்துச்சுதந்திரம்?... எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே நான் பார்த்த பெரும்பாலான தீவிரவாதம் சம்பந்தப்பட்ட திரைப்படங்களில் இஸ்லாமியர்களைத்தான் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டிருந்தது. அதுபோலவே நிஜத்திலும் உலக அளவில் பிரபலமான பல தீவிரவாதத்தாக்குதல்கள் புனிதப்போர் என்ற பெயரில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டதாகவே தகவல்கள் நிறைந்திருப்பதாய் தோன்றுகிறது. உண்மையிலேயே தீவிரவாதம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்பது விவரம் அறிந்தவர்களுக்குப்புரியும்.
உதாரணமாக பல தமிழுணர்வாளர்கள் தீவிரமாக ஆதரிக்கும் விடுதலைப்புலிகள் சிங்களவர்களைப் பொறுத்தமட்டில் தீவிரவாதிகள்.
அதேப்போல மக்கள் பிரச்சினைகளுக்காக போராட நினைக்கும் மாவோயிஸ்ட்கள் மற்றும் நக்சல்கள் நமது அரசாங்கம் மற்றும் சட்டத்தின் பார்வையில் தீவிரவாதிகள்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களிடம் கேட்டீர்களேயானால் ஒவ்வொருவர் பார்வையில் ஒவ்வொருவர் தீவிரவாதிகளாக விளைபடுவது உங்களுக்குப்புரியலாம்.
சேகுவாராவும், பிடல் காஸ்ட்ரோவும் பல மக்களுக்கு கடவுளர்கள்.ஆனால் அவர்களும் ஒரு சில நாட்டினர்க்கு தீவிரவாதிகள்தான்.
துப்பாக்கி திரைப்படத்திற்கு எதிர்ப்பு வலுத்தபோதே இது தவறான சூழல்... எதிர்காலத்தில் கருத்துச்சுதந்திரத்தின் கழுத்து நசுக்கப்படுவதற்கான ஆரம்ப அடித்தளம் இது என்றுதான் எனக்குத்தோன்றியது. அது இப்போது கொஞ்ச கொஞ்சமாக விஸ்வரூபம் விஷயம் மூலம் வேறூன்ற ஆரம்பித்திருக்கிறது. நான் கிருத்துவர்களும், இந்துக்களும் உலகமகா யோக்கியர்கள்... இஸ்லாமியர்கள் மட்டுமே தீவிரவாதிகள் என்ற கூட்டத்தை சேர்ந்தவனல்ல. தீவிரவாதம் என்பது எந்தவிதமான போர்வையில் யாரால் செய்யப்பட்டாலும் அது மனிதகுலத்திற்கு எதிரானது என்பது மட்டுமே எனது நிலைப்பாடு.
இன்று இஸ்லாமியர்கள் ஒவ்வொரு திரைப்படத்திற்குள்ளும் மூக்கை நுழைக்க ஆரம்பித்திருப்பது இனி எதிர்காலத்தில் சென்சார் கமிட்டிக்கு பதில் ஒவ்வொரு மதத்தைச்சேர்ந்தவர்களையும், ஒவ்வொரு ஜாதியைச்சேர்ந்தவர்களையும் வைத்து ஒரு கமிட்டி அமைத்து அவர்களிடம் அனுமதி வாங்கிவிட்டுத்தான் படத்தை ரிலீஸ் செய்யவேண்டும் என்ற நிலையை உண்டாக்கினாலும் உண்டாக்கலாம்.
எனது கணிப்பு சரியாக இருந்தால் அடுத்து காதலை மையமாக வைத்து வரும் திரைப்படங்களை, இப்போது காதல் திருமணங்களை எதிர்த்து கருத்திட்டுக்கொண்டிருக்கும் பா.ம.க. கட்சி கடுமையாக எதிர்க்கலாம்!!!.
அதேபோல இனிவரும் காலங்களில் அரசியல்வாதியை ஊழல்வாதியாக, வில்லனாக சித்தரிக்கும் திரைப்படங்களை சட்டமன்றங்களிலும், பாராளுமன்றத்திலும் தீவிர அமளியில் ஈடுபட்டு அரசியல்வாதிகளே எதிர்க்கலாம்!!!
இந்தியன் தாத்தா போன்ற திரைப்படங்களை ஒட்டுமொத்த அரசு ஊழியர் சங்கங்களும் சேர்ந்து எதிர்க்கலாம்!!!.
பெண்களை கூடுதல் கவர்ச்சியில் காட்டும் திரைப்படங்களை தடைசெய்யக்கோரி பெண்கள் வீதிக்கு வரலாம்!!!.
எல்லாவற்றுக்கும் மேலாக குப்பத்திலும், புறநகரிலும் ரவுடிகளும்,அடியாட்களும் இருப்பதுபோல காட்டப்படும் திரைப்படங்களை இனி ஒரிஜினல் ரவுடிகளேகூட எதிர்க்கலாம்!!!.
உண்மையிலேயே இஸ்லாம் என்ற மதத்தைப்பற்றி தவறான கருத்துக்களை யார் திரைப்படமிட்டாலும் அது தடைசெய்யக்கூடிய ஒன்றே என்பதில் மாற்றுக்கருத்துக்களில்லை.ஆனால் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டுவதால் திரைப்படத்தை தடை செய்யவேண்டும் என்பது சரியான முடிவல்ல. திரைப்படம் என்பது பெரும்பாலும் உலக நிகழ்வுகளை ஒத்ததாகவே அமைவது இயற்கை. நான் பார்த்த பெரும்பாலான ஒரிஜினல் வீடியோக்களில் இஸ்லாமியத்தீவிரவாதிகள் பத்து பதினைந்து பேர் யாராவது ஒரு பயணக்கைதியை பிடித்து அவர் கைகளை பின்னால் கட்டி முட்டிபோட வைத்து இரண்டுபேர் அவரை அழுத்திப்பிடித்துக்கொள்ள ஒருவன் மட்டும் ‘’அல்லாஹ் அக்பர்...அல்லாஹ் அக்பர்...’’ என்று முழக்கமிட்டுக்கொண்டே ஆட்டை அறுப்பதுபோல ஒரு பெரிய கத்தியால் மனிதனில் தலையை அறுப்பதை பார்த்திருக்கிறேன். (இந்த வீடியோக்கள் ஏ.ஆர்.முருகதாஸோ, கமல்ஹாசனோ இயக்கியது இல்லை!!!) உலகம் முழுவதும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏராளம். அதிலெல்லாம் பரவாத மனப்பான்மையா மக்களிடம் துப்பாக்கி படம் பார்ப்பதாலோ... இல்லை விஸ்வரூபம் படம் பார்ப்பதாலோ மட்டும் வந்துவிடப்போகிறது.
இஸ்லாமியச்சகோதரர்களே உலகம் வெகு வேகமான வளர்ச்சியில் பயணித்துக்கொண்டிருக்கிறது.வெறுமனே துப்பாக்கி படத்தாலும், விஸ்வரூபம் படத்தாலும் மட்டுமே இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று மக்கள் எடுத்துக்கொள்ளப்போவதில்லை. அதேபோல இந்தப்படங்களையெல்லாம் தொடர்ந்து தடைசெய்துவிட்டாலும்கூட இஸ்லாமியர்கள் யாரும் தீவிரவாதிகளே அல்ல என்றும் மக்கள் நினைத்துவிடப்போவதில்லை. உலகளவில் என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அதுதான் மக்களிடம் வேகமான கம்யூனிகேஷன் வளர்ச்சியில் உடனடியாக மீண்டும் மீண்டும் வந்தடையும். இதை நாமோ,கமல்ஹாசனோ, இல்லை எவருமோ மாற்றிவிடமுடியாது.
இது எல்லாவற்றுக்கும் மேலாக இப்போது இது போன்ற பிரச்சினைகளை ஓட்டு வங்கிக்காக கண்டும் காணாமல் விடும் அரசியலும், இதை தனிப்பட்ட ஒரு குறிப்பிட்ட தயாரிப்பாளரின் பிரச்சினையாக பார்த்து ஒதுங்கி நிற்கும் திரையுலகமும் எதிர்காலத்தில் இதற்கு கொடுக்கப்போகும் விலை மிக அதிகம் என்பது யதார்த்தம்... மற்றபடி விஸ்வரூபம் ரிலீஸ் ஆனாலும் சரி, இல்லை நிர்ந்தர தடை விதிக்கப்பட்டாலும் சரி... அது அவரவர் தலைவிதியேயொழிய என்னை பாதிக்க அதில் ஒன்றுமில்லை!!!
அடுத்து லேட்டஸ்ட் நியூஸ்... கருணாநிதி கட்டிய புதிய தலைமைச்செயலகத்தை மருத்துவமனையாக மாற்றிய அம்மாவின் நடவடிக்கைக்கு ஆதரவான கோர்ட் தீர்ப்பு. மக்கள் பணத்தில் மாறி மாறி கும்மியடிக்கிறார்கள். நடக்கட்டும் பரவாயில்லை. ஆனால் மீண்டும் ஒருமுறை அம்மா நம் பணத்தை செலவழித்து அந்தக்கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றியபிறகு எதிர்காலத்தில் தி.மு.க ஆட்சிக்கு வரும் காலகட்டங்களில் மறுபடியும் நம் பணத்தை செலவழித்து அதை மீண்டும் தலைமைச்செயலகமாக மாற்றாமலிருந்தால் சரி! பார்க்கலாம். காலம்தானே எல்லாவற்றுக்கும் பதில் கூற முடியும்...
pothikitu poda
ReplyDeletenee pothikkittu poda avr nallathaithaane solliyirukkaar
DeleteI accept with you for விஸ்வரூபம்.
ReplyDeleteகொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு பொண்ணுக்கு மரண தண்டனை கொடுத்தாங்க எந்த நாயாவது அத கேட்டதா?
ReplyDeleteஉங்க மதத்துல இப்படித்தான் கொல்ல சொல்லிருக்கா?
அது தாண்ட தீவிரவாதம் அத முதல்ல உங்க அமைப்பெல்லாம் சேர்த்து கேளுங்க
முட்டா பயலுகளா
your review about vishvaroopam super
ReplyDeleteஇந்தியாவில் முஸ்லிம் தீவிரவாதத்திற்கு காரணமே இந்து தீவிரவாதம் தான். அத்வானி பாபர் மசூதி இடிப்பு மூலம் ஆரம்பித்து வைத்தது இது. அத்வானி, பால் தாக்கரே, மோடி செய்தது எல்லாம் இந்து தீவிரவாதம் தான். அதை பற்றி படம் எடுக்க கமலால் முடியுமா? அப்படி எடுத்தால் அதற்கு தான் சென்சார் போர்ட் அனுமதி அளிக்குமா?
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஇஸ்லாமிய தீவிரவாதம்! இந்து தீவிரவாதம்! சரியா?
ReplyDeletehttp://www.sinthikkavum.net/2013/01/blog-post_25.html
விஸ்வரூபம் கமலஹாசனின் பரிணாம வளர்ச்சி!
http://www.sinthikkavum.net/2013/01/blog-post_2139.html
இஸ்லாமிய தீவிரவாதம்! இந்து தீவிரவாதம்! சரியா?
ReplyDeletehttp://www.sinthikkavum.net/2013/01/blog-post_25.html
விஸ்வரூபம் கமலஹாசனின் பரிணாம வளர்ச்சி!
http://www.sinthikkavum.net/2013/01/blog-post_2139.html