SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Sunday, December 9, 2012

CORRUPTIONS – 2012, டாப்-10 லிஸ்ட்


2012 முடியப்போவுது. ( நான் சொல்றது சத்தியமா டிசம்பர்-21யை இல்லீங்கோ... வருஷம் முடியப்போவுதுன்னு சொன்னேன்! ) சரி, இந்த வருஷத்து நிகழ்வுகளை பாக்கலாம்னு இண்டர்நெட்டை கிண்டுனா திடீருன்னு ஊழல் ஹிட் லிஸ்ட் கண்ணுல பட்டுச்சு. நீங்களும் தெரிஞ்சிப்பீங்களேன்னு இதையும் பதிவா போடுறேன் மக்காஸ்!

முதல்ல நல்லதைக் கொஞ்சம் பாக்கலாம்!. அதாவது ஊழல் குறைவா இருக்கிற நாடுகளோட டாப்-10 பட்டியல்.

உலகத்துல இருக்கிற 182 நாடுகள்ல (182தானா?...) ஊழல் குறைவா இருக்கிற டாப்-10 லிஸ்ட்தான் இதுவே தவிர ஊழலே இல்லாத நாடுன்னு எதுவுமே இல்லைன்றது இந்தியர்களான நமக்கெல்லாம் கொஞ்சம் ஆறுதலான விசயமுங்கோ. அதேமாதிரி இந்த டாப்-10 லிஸ்ட்ல இந்தியா இருக்குமான்னு ஆசைப்பட்டு தேடுனீகன்னா... உங்களுக்கு என்னால ஒரேயொரு டயலாக்தான் சொல்லமுடியும்... ‘’நீ இன்னும் நெறைய வளரனும் தம்பீ!!!.

ஊழல் குறைவா இருக்கிற நாடுகள்ல ரொம்ப வருஷமாவே முதலிடத்துல இருக்கிறது

No-1: டென்மார்க்

அதுக்கப்புறமா இந்த லேண்டு, அந்த லேண்டுன்னு நெறய லேண்டுங்கதாப்பா இருக்குது.

2ம் இடம் : ஃபின்லாந்து

3ம் இடம் : நியூஸிலாந்து

4ம் இடம் : ஸ்வீடன்

5ம் இடம் : (இது எந்த ஊர்?...) சிங்கப்பூர்

6ம் இடம் : ஸ்விட்சர்லாந்து

7ம் இடம் : ஆஸ்திரேலியா

8ம் இடம் : நார்வே

9ம் இடம் : கனடா

10ம் இடம் : நெதர்லாந்து

(இதுல சிங்கப்பூர்லேயும், கனடாலேயும் நம்ம பயபுள்ளைக நெறயபேரு இருந்தும் எப்படி இதெல்லாம் ஊழல் குறைஞ்ச நாடுகளோட பட்டியல்ல டாப்லிஸ்ட்ல வந்துச்சு?...!!!)

சரி, இப்போ டாப்-10 ஊழல் நாடுகள்...

கண்டிப்பா இதுல இந்தியா இருக்கும்னு நம்புனீகன்னா... சாரி மக்காஸ்... நம்மள விட ஜெகஜால கில்லாடிங்க பல நாடுகள்ல இருக்கானுக...!!!

ஊழல் கிங்... முதலிடம் மகுடம் சூடும் நாடு – சோமாலியா... (அடப்பாவிகளா... வறுமையிலதான் முதலிடம்னு நெனச்சா ஊழல்லேயுமா?!!!)

அப்புறமா அடுத்தடுத்து பயபுள்ளைக நீ, நான்னு போட்டிதான் போங்க!

2ம் இடம் : வடகொரியா

3ம் இடம் : மியான்மர்

4ம் இடம் : ஆஃப்கானிஸ்தான்

5ம் இடம் : உஸ்பெகிஸ்தான்

6ம் இடம் : துர்க்மெனிஸ்தான் (இப்படியெல்லாம் ஒரு நாடு இருக்கா?!!!)

7ம் இடம் : சூடான்

8ம் இடம் : ஈராக்

9ம் இடம் : ஹெய்ட்டி

10ம் இடம் : வெனிசுலா


(எப்பாடா... ஒரு வழியா அனொவ்ன்ஸ் பண்ணி முடிச்சாச்சு )

2ஜி ஊழல், காமன்வெல்த் ஊழல், ஃபோபர்ஸ் ஊழல், பங்குபத்திர ஊழல்... இந்த ஊழல், அந்த ஊழல்னு எவ்வளவோ பண்ணியும் நம்ம நாட்டை டாப்-10 லிஸ்ட்ல இடம்புடிக்க வைக்க முடியலேன்னு நம்மாளுக பலபேரு வருத்தப்பட்டு கெடக்குறாகளாம்!!!

ஊழல் நெறஞ்ச நாடுகளோட வரிசையில இந்தியாவோட இடத்தை தெரிஞ்சிக்க பலபேரு ஆர்வமா இருப்பீகன்னு நெனக்கிறேன்.

நமக்கு கெடச்சுது 94வது இடம்தாங்கோ... (பெட்டர் லக் நெக்ஸ்ட் இயர் மக்காஸ்!!!)

டாப் 10 நாடுகள் மாதிரியே டாப்-10 ஊழல் தலைகளோட லிஸ்ட்டும் இருக்கு. அதையும் பாத்திரலாமா?...

டாப்-10 ஊழல் தலைகள்...

முதலிடம் மகுடம் சூடும் தலை – முகம்மது சுகார்தோ

இந்தோனேஷியன் பிரசிடெண்ட் (1967-1998)

ஊழல் அளவு – 35 பில்லியன் US டாலர் ( மில்லியனுக்கு 6பூஜ்யமும், பில்லியனுக்கு 9பூஜ்யமும் போட்டு கணக்கு போட்டுக்கொள்ளுங்கள். ஒரு அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட 54ரூபாய் )


2.
President of the Philippines (1972–1986)
5 to 10 billion
3.
President of Zaire (1965–1997)
5 billion
4.
Sani Abacha
President of Nigeria (1993–1998)
2 to 5 billion
5.
President of Serbia/Yugoslavia (1989–2000)
1 billion
6.
President of Haiti (1971–1986)
300 to 800 million
7.
President of Peru (1990–2000)
600 million
8.
Pavlo Lazarenko
Prime Minister of Ukraine (1996–1997)
114 to 200 million
9.
Arnoldo Alemn
President of Nicaragua (1997–2002)
100 million
10
Joseph Estrada
President of the Philippines (1998–2001)
78 to 80 million

Source: Transparency International Global Corruption Report 2004. www.transparency.org/pressreleases_archive/2004/2004.03.25.gcr_relaunch.html.

கணக்குப்போட்டுப்பாத்தாக்க முதல் நாலு பேரைத்தவிர மத்தவனுங்க செய்ஞ்சிருக்கிறதெல்லாம் டாப்லிஸ்ட்க்கு தகுதியே இல்லாதது. ஒருவேளை இந்த லிஸ்ட்டை எடுத்தவங்க இந்தியாவை மறந்திட்டாங்கன்னு நெனக்கிறேன். இல்லேன்னா இன்னக்கி பல வார்டு கவுன்சிலர்களே பத்தாவது இடத்துக்கு ஈகுவலா இருப்பாங்கன்றது நெசமோ நெசம்!

அதுமட்டும் இல்லாம இந்தியாவையும் இந்த லிஸ்ட்ல கொண்டு வந்தாக்க முதல் பத்து இடம் மட்டுமில்லாம, முதல் 100 இடங்களைக்கூட நம்ம பயபுள்ளைக ஃபுல்லா ஆக்கிரமிச்சிருவாங்கன்னு கன்ஃபார்மா நம்பலாமுங்கோ!!!

 

2 comments:

 1. ஹா ஹா ஹா !!!! இந்தியா இன்னும் வளருனும்கோ!
  வளர்ந்து வரும் நாடுதானே எப்படி அடுத்தடுத்த வருடங்களில் முதலிடத்தை பிடித்துவிடும், ஆனால், ஊழல் தலைகள் லிஸ்ட் தவறு என்று நினைக்கிறேன். அப்பறம் இந்த ஸ்விஸ் உழல் இல்லாத நாடு என்றால் நம்ப முடியவில்லை.

  அருமையான பகிர்வு.

  ReplyDelete
 2. நல்ல ஒரு தகவல் உங்கள் பதிவில்.
  மிக்க நன்றி.

  ReplyDelete