SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Tuesday, December 18, 2012

சென்னைக்கருகில் ஒரு சொர்க்கம்...


ஒரு இடம். அங்கே காதலர்களும் இனிமையாக பொழுதைக்கழிக்கலாம். புதுமணத்தம்பதிகளும் இனிமையாக பொழுதைக்கழிக்கலாம். கல்யாணமானவர்களும் குழந்தைகளுடன் இனிமையாக பொழுதைக்கழிக்கலாம். நண்பர்கள் கூட்டமும் கேளிக்கை விருந்து என அவரவர் இஷ்டப்படி இனிமையாக பொழுதைக்கழிக்கலாம். வெறுமனே சைட் அடிப்பதற்காகவே சுற்றுலா செல்லும் இளவட்டங்களும் இனிமையாக பொழுதைக்கழிக்கலாம். ரூம் போட்டு காமத்தைக் களைய நினைப்பவர்களும் இனிமையாக பொழுதைக்கழிக்கலாம். வாரயிறுதிக்கொண்டாட்டங்களுக்கும் இதைவிட அருமையான இடம் சென்னைக்கருகிலிருக்கிறதா என்பது சந்தேகமே!...

பெரும்பாலும் நாம் வசிக்கும் ஊரில் உள்ள சுற்றுலாத்தலங்களின் மதிப்பு நமக்குத் தெரிவதில்லை. எங்கேயோ பல்லாயிரம் மைல் தூரத்திலிருந்தெல்லாம் ஜனங்கள் வந்து பார்த்துச்செல்வார்கள். ஆனால் நமக்கு மட்டும் அதற்கு நேரம் ஒதுக்க மனதே வருவதில்லை.

நான் பிறந்து வளர்ந்து எனது பள்ளிப்பருவம் வரை வாழ்க்கையைக்கழித்தது தமிழகத்தின் தென்கோடி மூலை. ஆனால் இதுவரை நான் குற்றாலம் சென்று குளித்ததில்லை!. ஒரு முறை வேலை மாற்றத்தின் காரணமாக மதுரையின் பிரதான மையத்தில் ஒரு வருடம் தங்கியிருந்தும் கடைசிவரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பார்க்க நேரம் ஒதுக்கவில்லை. இதேபோலத்தான் சென்னைவாசத்திற்கு மாறி பல ஆண்டுகளாகியும் சென்னைக்கருகிலேயே இருந்திருக்கிற இந்த சொர்க்கபுரியை பார்க்க கடந்த வாரயிறுதியில்தான் பாக்கியமாயிற்று.

அப்படி எந்த இடம்யா சென்னைக்கருகில்?... என்று நீங்கள் கொதிப்பது புரிகிறது.

மாமல்லபுரம் எனப்படும் மகாபலிபுரம்...

நாங்கள் நண்பர்கள் நான்குபேர் கடந்த வாரயிறுதிக்கு பாண்டிச்சேரி செல்வதாய் திட்டமிட்டிருந்தோம். வெள்ளியிரவு கிளம்பி ஞாயிறு மாலை வீடு திரும்புவதாய் ப்ரோகிராம். கடைசி நேரத்தில் அதில் இரு நண்பர்கள் நிஜாரை அவுத்ததால் எஞ்சியிருந்த நானும் எனது எக்ஸ் ஆர்மி கேப்டன் நண்பனும் ப்ரோகிராமை கேன்சல் செய்யலாம் என்று எண்ணினோம். ஆனால் எனது நண்பன் அதற்கு மனமில்லாமல் எனக்கு போன் பண்ணி ‘’மச்சி அவனுங்க வரலைன்னா என்ன?... நாம ரெண்டு பேரும் போலாம் மச்சான்...’’ என்றான். வெறுமனே இரண்டு பேர் மட்டும் போகும் வாரயிறுதி கொண்டாட்டத்தில் என்ன என்ஜாய்மெண்ட் இருக்கும் என்று எண்ணித்தயங்கினேன். அப்போதுதான் நண்பன் திடீரென பாண்டிச்சேரி வேணாம் மச்சான். நாம மகாபலிபுரம் போலாம் என்றான். அந்த ஐடியா எனக்கும் பிடித்துப்போகவே திட்டத்தை கன்ஃபர்ம் செய்தோம்.

வெள்ளியன்று இரவு ஏழு மணிக்கு சென்னையிலிருந்து கிளம்புவதாய் பிளான். எனது நண்பனின் புது காரில் செல்ல முடிவெடுத்திருந்ததால் ஶ்ரீபெரும்புதூரில் வேலை பார்க்கும் அவன் நேரம் கருதி என்னை மாலையில் தாம்பரத்திற்கு வரச்சொன்னான். வீட்டிலிருந்து கிளம்பி எங்கள் ஏரியா பஸ் ஸ்டாண்டில் சென்று காத்திருந்ததில் வழக்கம் போலவே கோயம்பேடு தவிர மீதி எல்லா இடத்திற்கும் பஸ் வந்து என்னை வெறுப்பேற்றியது. எனது ராசியோ என்ன எழவோ தெரியவில்லை. எப்போது நான் பஸ்சுக்கு காத்திருந்தாலும் நான் செல்லவேண்டிய இடத்தைத்தவிர மீதி எல்லா இடத்திற்கும் பஸ்கள் வருவதே எனக்கு வாடிக்கையாகிப்போயிற்று!. கிட்டத்தட்ட அரைமணிநேர காத்திருப்புக்குப்பிறகு கோயம்பேடு செல்ல ஒரு பேருந்து வந்தது. அப்பாடா என்று ஏறி வண்டியில் அமர்ந்தால் ‘’ஏம்ப்பா வண்டி லேட்டாகும்ப்பா... இப்போ கிளம்பாது’’ என்று ஓட்டுநரின் குரல். வெளங்கிரும் என்று கடுப்புடன் காத்திருந்தேன். மீண்டுமொரு நாற்பது நிமிட காத்திருப்புக்குப்பிறகு ஒருவழியாய் வண்டி கிளம்பியது. இந்த்த்தாமதமே என்னால் குறித்த நேரத்தில் தாம்பரம் வரை செல்வதென்பது இயலாது என்று புரிந்துபோனது. நண்பனுக்கு போன் செய்து என்னை கோயம்பேடு வந்து பிக்கப்பண்ணிக்கொள்ளச்சொன்னேன். அவனும் சரி என்றான். பின்னர் சிறிது நேரத்தில் போன் பண்ணி ‘’மச்சி தப்பா எடுத்துக்காத. மதுரவாயல் பிரிட்ஜ்க்கு வந்திரேன். அங்கேயிருந்து ரெண்டு பேரும் டிராபிக்ல மாட்டாம பைபாஸ்லேயே போயிரலாம்’’ என்றான்.

வெறும் பதினாலு கிலோமீட்டர் கோயம்பேடுக்கு ஒன்றரை மணிநேரம் வண்டியை ஓட்டும் சாதனை நம்ம ஊருக்கு மட்டுமே சொந்தமானது என்பது மாநகரப்பேருந்தில் அன்றாடம் பயணிக்கும் பலபேருக்குத் தெரிந்திருக்குமென நினைக்கிறேன். ஒருவழியாய் மதுரவாயல் சென்றடைந்து ஒரு அருமையான மாலை வாக்கிங்(!) என நினைத்துக்கொண்டு நடந்தே பிரிட்ஜின் மேலே ஏறி தாம்பரம் செல்லும் வழியில் நின்று கொண்டேன். ஒரு அரைமணிநேர காத்திருப்புக்குப்பிறகுதான் நண்பன் வந்தான். புதுக்கார். ஸ்விஃப்ட் டிஸைர். ஏறி முன்சீட்டில் அமர்ந்து கொண்டேன். எங்களது பயணம் இனிதே ஆரம்பமானது.

பேசிக்கொண்டே பயணித்தோம். வண்டலூர் வழியாகச்சென்று திருப்போரூரைக்கடந்து அங்கே சிலரிடம் வழி கேட்டு ஒருவழியாய் மகாபலிபுரத்தை நெருங்கினோம். சென்னை டிராபிக்கில் மாட்டாமல் செல்ல நிச்சயமாய் இதுவொரு அருமையான ரூட். துளிகூட டிராபிக்கில் மாட்டவில்லை நாங்கள்.

மச்சான் போறவழியிலேயே சரக்கு வாங்கிக்கலாமாடா?... ஏற்கனவே டைம் ஆயிடுச்சு. நாம போயி ரூம் போட்டு அதுக்கப்புறம் சரக்கு வாங்கலாம்னா லேட் ஆகிப்போகி கிடைக்காமப்போயிரப்போவுது மச்சான். (என்னோட கவலை எனக்கு!).

நீ கவலைப்படாத மச்சி, கேண்டீன் சரக்கு ரெண்டு ஃபுல்லு எடுத்துட்டு வந்திருக்கேன்.

‘’நண்பேன்டா’’ என்று அவன் தோளைத்தட்டினேன்.

ஒவ்வொரு ரிசார்ட்டாக அலைந்து இறுதியாய் நல்ல உணவுக்காகவே ‘’மூன் ரேக்கர்ஸ்’’ல் ரூம் எடுத்தோம். ஏசி ரூம். ஒரு நாளைக்கு 1500 ரூபாய் வாடகை. இந்த இலட்சணத்தில் நீங்க ரொம்ப லக்கி சார். நார்மலி வீக்கெண்டுல ரூமே இருக்காது என்றொரு விளக்கம் வேறு இலவச இணைப்பாக கிடைத்தது எங்களுக்கு.

ரூமுக்குச்சென்று லக்லேஜ்களை வைத்துவிட்டு முதல் வேலையாய் ரூம் சர்வீஸ் ஆளிடம் டின்னரும் சைடு டிஷ்சும் ஆர்டர் பண்ணினோம். பக்கார்டி சிட்ரஸ் ரம். மிலிட்டரி சரக்கு. ரெண்டு ரவுண்டு மைல்டாக உள்ளே இறங்கியது. எனது நண்பன் வராண்டாவில் உலாத்தச்சென்றான். நான் ரூமுக்குள்ளேயே டிவி பார்த்துக்கொண்டிருந்தேன். வெளியே உலாத்திவிட்டு வந்த என் நண்பன் மச்சான் பக்கத்து ரூமுல மூணு பசங்க ஒரு பொண்ணைத்தள்ளிட்டு வந்திருக்கானுகடா... என்றான். நமக்கெதுக்குடா அந்த ஆராய்ச்சியெல்லாம்?... சரக்கை போட்டமா... சாப்பிட்டமா... தூங்குனோமான்னு இல்லாம?... என்றேன்.

ரூம் சர்வீஸ் ஆளை அழைத்து அவனிடம் மெல்ல விசாரித்தான் என் நண்பன்.

என்னப்பா?... பக்கத்து ரூமுல மூணுபேரு சேந்து ஒன்னைத்தள்ளிட்டு வந்திருக்காங்க... ஐயிட்டமா அது?

இல்லை சார். அவங்க ரெகுலர் கஸ்டமர்ஸ். இரண்டு வாரத்துக்கு ஒரு தபா வந்து தங்குவாங்க. அவங்க எல்லாரும் ஒரே கம்பெனியிலதான் வேலை பாக்குறாங்க. இதே பொண்ணும் இந்த மூணுபேரும்தான் எல்லா வாரமும் வருவாங்க. எல்லாரும் சேர்ந்து சரக்கடிப்பாங்க. நைட்டு ஃபுல்லா என்ஜாய் பண்ணுவாங்க. காலையில ரூமை காலி பண்ணிடுவாங்க... என்றான்.

எனக்கு நிஜமாகவே அதிர்ச்சி. சென்னையில் வாழ்க்கை முறை இந்த அளவுக்கு மாறிவிட்டதா?...

அந்த ரூம் சர்வீஸ் ஆள் மேலும் மேலும் அடுக்கிய தகவல்கள் மயக்கம் வரும் ரகம்.

இங்கே தங்குறதுல 90 பெர்சன்ட் ஆளுங்க இப்படித்தான் சார். டாப் ஃப்ளோர்ல ஒரு வெள்ளைக்கார கிழவி இருக்குது. ஒவ்வொரு வருஷமும் சீசனுக்கு வந்து மூணு மாசம் தங்கும். டெய்லி ஒரு பையனைக் கூட்டிட்டு வரும். அதுக்கு எப்பவுமே பதினைஞ்சு வயசுக்கு கீழேயிருக்கிற பசங்களத்தான் புடிக்கும். வயசு கூடுனவங்கள பக்கத்துலேயே சேத்துக்காது. அதேமாதிரி ஆம்பிளையும் ஆம்பிளையும், பொம்பளையும் பொம்பளையும்னு கூட வருவாங்க. இதுல ஃபாரினர்ஸ் மட்டும்தான்னு கெடையாது. நம்மூரு ஆளுங்களே நெறய இந்தமாதிரி இருக்காங்க. (அடப்பாவி! நாங்க ரூம் எடுக்கும் போதே எங்களை ஒரு மாதிரி ஏற இறங்கப்பாத்தான். இதானா அது?...) இதையெல்லாம்விட இப்போல்லாம் ஒரு பொண்ணு ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு மூனு பசங்க, ரெண்டு பொண்ணு ரெண்டு பசங்க இப்படி குரூப்பா ஒரே ரூம்ல தங்கி நடக்குற அட்டூழியம்தான் சார் ஜாஸ்தியாயிப்போச்சு. பெரும்பாலும் இந்த கம்ப்யூட்டர் கம்பெனியில வேலை பாக்குற ஆளுங்கதான் சார். மகாபலிபுரத்துல இதுக்குன்னே வர்ற கூட்டம்தான் சார் அதிகம் இப்போ.

யப்பா, போதும்டா சாமீ உன் விளக்கம்னு நெனச்சிக்கிட்டு பீச்சுக்கு ஒரு வாக் போயிட்டு வரலாம்னு நண்பனை அழைத்தேன். அவன் ரூம் சர்வீஸ் ஆளிடம் தொடர்ந்து கதை கேட்கும் ஆர்வத்தில் மூழ்கியிருந்ததால் வரவில்லை. நான் மட்டும் கிளம்பி கடற்கரைக்குச்சென்றேன். மகாபலிபுரம் கடற்கரையில் பௌர்ணமி நிலவில் காதலியுடன் கைகோர்த்து அமர்வதுபோல சொர்க்கம் வேறேதும் இருக்கமுடியாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நான் வந்தது பௌர்ணமி இல்லையென்றாலும் அது நிச்சயமாய் உண்மைதான் என்று உணருமளவுக்கு இருந்தது அந்தக்கடற்கரையும், கடற்காற்றும், தூரத்தில் தெரிந்த கடற்கரைக்கோவிலும். ஆங்காங்கே ஃபாரீனர்ஸ் ஜோடி ஜோடியாய் அமர்ந்திருந்தனர். சில வெளிநாட்டுப்பெண்மணிகள் கஞ்சா இழுத்துக்கொண்டிருந்ததை காற்று காட்டிக்கொடுத்தது. பௌர்ணமி நிலவில் இந்த இடம் இன்னும் கூடுதல் சொர்க்கம் என்பது நிச்சயம்.

சிறிது நேரத்திற்கு மௌனமாய் உணர்ச்சிகளற்று கடலையே வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். ரூமுக்குத்திரும்பியதும் நண்பன் ஆர்டர் பண்ணியிருந்த டின்னரை ரசித்துச்சாப்பிட்டேன்.

நான் சிக்கனைத்தவிர வெறெதுவும் விரும்பிச்சாப்பிடுவதில்லை என்பதால் எனக்கு சிக்கன் 65, சில்லி சிக்கன் மற்றும் ஒரு சிக்கன் ஃபிரைடு ரைஸ். நண்பனுக்கு எறா 65, பீஃப் ப்ரை மற்றும் சிக்கன் ஃபிரைடு ரைஸ்.

மகாபலிபுரம் நீங்கள் போனீர்களென்றால் கட்டாயம் சாப்பிட வேண்டிய இடம் ‘’மூன் ரேக்கர்ஸ் ரெஸ்டாரெண்ட்’’. மிஸ் பண்ணாதீர்கள் மக்களே.

அதிகாலையிலேயே என்னை எழுப்பினான் நண்பன்.

மச்சி எழுந்திரு... பீச்சுக்கு வாக்கிங் போலாம்...

டேய் காலையில அஞ்சு மணிக்கு பீச்சுக்கா?... ஏன்டா இப்படி படுத்துறே?...

வா மச்சி... என்னக்கி போகப்போறோம். ஒரு நாள்தானே?...

எழுந்து முகத்தை மட்டும் கழுவிவிட்டு கிளம்பத்தயாரானோம். நமது வீக்கெண்டு டிரிப்புகளின் ஸ்பெஷலாட்டி ஒன்று உண்டு. அதை மறக்க முடியுமா?... எழுந்தவுடன் பல் கூட தேய்க்காமல் கட்டிங் போடுவது. ஆளுக்கு ரெண்டு பெக் போட்டோம். மெல்ல நடந்து கடற்கரையைச் சென்றடைந்தோம்.

அற்புதம்... விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் அந்தக்கடற்கரையும், தூரத்தில் தெரிந்த கடற்கரைக்கோவிலும், ஆங்காங்கே கடலை ரசித்துக்கொண்டிருந்த மற்றும் குளித்துக்கொண்டிருந்த ஃபாரீனர்ஸ்சும், கைகோர்த்து உலவிக்கொண்டிருந்த இந்திய ஜோடிகளும் அந்த கடற்கரையை வேறொரு உலகமாய் காட்டிக்கொண்டிருந்தது. கேமரா எடுத்துச்செல்ல மறந்திருந்தமையால் அந்தக்காலைப்பொழுதை செல்போனிலேயே கிளிக்கிக்கொண்டேன்.
 
கடற்கரை ஓரத்தில் ஒரு பெரிய பாறையில் சிறிய மாடம் போல செதுக்கப்பட்டிருந்தது. அது அந்தக்காலத்தில் கலங்கரை விளக்கம் போல கரையை அடையாளப்படுத்துவதற்காக விளக்கு ஏற்ற உபயோகப்படுத்தப்பட்டதாய் இருக்கும் என்ற என் நண்பனின் வாதமும் கொஞ்சம் ஏற்புடையதாகத்தான் தோன்றியது.
 
சூரியன் தன் முகத்தை முழுவதுமாய் காட்டியபிறகு ரூமுக்குத்திரும்பினோம். குளித்து முடித்து ரெடியாகி வெளியே கிளம்பத்தயாரானோம். வழக்கம்போல மீண்டும் ரெண்டு பெக். இரவில் முழுவதும் நிரம்பிப்போயிருந்த பார்க்கிங்கில் இப்போது எங்கள் காரைத்தவிர வேறெந்த வண்டியுமில்லை. இங்கே பெரும்பாலும் ‘’ஓர் இரவு’’ நாடகங்கள்தான் போல!.  

நேராக அடையாறு ஆனந்தபவன் மகாபலிபுரம் பிரான்ஞ்ச். செல்ஃப் சர்வீஸ் என்று நாலைந்து இடங்களில் தொங்கிய போர்டை பார்த்ததும் பணத்தைச்செலுத்தி தேவையானதை வாங்கிக்கொண்டு காலை உணவை முடித்தோம். பல நேரங்களில் ஏன் ஜனங்கள் சரவணபவன், ஆனந்த பவன் மற்றும் இன்னபிற குறிப்பிட்ட ஹோட்டல்களில் மொய்க்கிறார்கள் என்பது அந்த காலை உணவின் ருசியிலேயே தெரிந்து போனது.

அன்றைய நாட்பொழுது முழுவதையும் மகாபலிபுரத்தைச் சுற்றிப்பார்க்கவென்று ஒதுக்கினோம்.

மகாபலிபுரத்தின் ஊருக்கு வெளியிலும் உள்ளேயும் இன்னமும் சிற்பக்கலைஞர்களும், சிற்பக்கூடங்களும் வாழ்வது அதிசயம்தான். எங்கு திரும்பினாலும் கண்ணைக்கவரும் அழகிய வேலைப்பாடுமிக்க சிற்பங்கள். நீங்கள் கலா ரசிகரென்றால் (மானாட மயிலாட கலா இல்லைங்க! நான் சொல்ல வந்தது கலை) ஒரு நாள் முழுவதும் மகாபலிபுரத்திலிருக்கும் தற்காலச்சிற்பங்களை ரசிப்பதிலேயே செலவிடலாம். மன்னர்கால வேலைப்பாடுகளுக்கு இணையாக இன்னமும் சிற்பங்கள் உருவாகிக்கொண்டிருப்பது மகாபலிபுரத்தின் தனிச்சிறப்புதான்.

முதல் பயணம் கலங்கரை விளக்கம். அட அதாங்க லைட் ஹவுஸ்...

லைட் ஹவுஸ் அமைந்திருக்கும் இடத்தைச்சுற்றி முற்றிலும் பாறைகள். கடற்கரையை ஒட்டிய இடத்தில் இப்படி பாறைகளிலிருப்பதே அறிவியல் ஆச்சர்யம்தான். உள்ளே நுழைந்ததும் முதலில் கண்ணில் பட்டது ஒரு பெரிய பாறை உச்சியில் அமைக்கப்பட்ட ஒற்றை அறைக்கோவில்தான். பாறைகளில் அமைக்கப்பட்ட கைப்பிடியற்ற படிக்கட்டுகளில் ஏறி மேலேச்சென்றோம்.

மாமல்லபுரத்தின் மொத்த அழகும் அங்கிருந்து டாப் வியூவில் பார்க்கலாம். கண்கள் பூக்கும் கொள்ளையழகு. ஆங்காங்கே புதர்களுக்குள் பதுங்கியிருக்கும் காதல் ஜோடிகளையும் இந்த இடம் காட்டிக்கொடுத்துவிடுகிறது. (எல்லா டூரிஸ்ட் ஸ்பாட்டையும் காதலர்களின் ஸ்பாட்டாக நம்மாட்கள் மாற்றிக்கொண்டிருப்பது கொஞ்சம் விபரீதமான போக்காகத்தான் தெரிகிறது!).

அங்கிருந்தே லைட்ஹவுஸையும் புகைப்படம் எடுத்துவிட்டு இறங்கினோம். அந்தப்பாறைக்கோவிலின் கீழ்ப்பகுதி அதைவிட அற்புதம். ஒரே பாறையை குடைந்து செதுக்கப்பட்ட ஒரு குகைக்கோவிலின் மேற்புறப்பகுதியில்தான் அந்த ஒற்றையறைக்கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை கீழே வந்து பார்த்த பிறகுதான் புரிந்துகொண்டேன்.
 

இந்தக்குகைக்கோவிலுக்குள் இருக்கும் சில அழகான சிற்பங்கள் உங்கள் பார்வைக்காக...
 


 
 அங்கிருந்து உள்செல்லும் பாதை பாறைகளுக்கு நடுவில் அழகாய் அமைக்கப்பட்டிருக்கிறது. லைட் ஹவுஸை தாண்டிச்சென்றால் மீண்டும் அதேபோல ஒரே பாறையில் குடைந்து செதுக்கப்பட்ட ஒரு குகைக்கோயில். ஆனால் இதில் பல சிற்பங்கள் செதுக்கப்பட்டு அகற்றப்பட்டிருக்கின்றன. என்ன காரணமென்று தெரியவில்லை. ஒருவேளை வில்லங்கமான விஷயம் ஏதாவது இருந்திருக்கலாம் என்பது எனது கணிப்பு.

 
அங்கிருந்த இன்னும் பல சிற்பங்களையும் கண்டுகளித்தபிறகு அடுத்த பயணம் கடற்கரைக்கோயில்.

நுழைவுக்கட்டணம் வித்தியாசமாய்த்தெரிந்தது. இந்தியர்களுக்கு ரூபாய் பத்து கட்டணம். வெளிநாட்டவர்க்கு ரூபாய் 250 கட்டணம். இரண்டு பத்து ரூபாய் டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தோம். அங்கே செக்யூரிட்டி 2:2 வாக வந்திருந்த ஒரு ஜோடியை மடக்கி அதில் பெண்களை மட்டும் இந்தியர்களில்லை என்று சந்தேகப்பட்டு வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. அந்த ஆண்கள் தமிழில் பேசி செக்யூரிட்டியின் சந்தேகத்தை தீர்க்க முயன்றபோதும் அந்தப்பெண்கள் தமிழும் தெரியாமல் வேறு இந்திய மொழிகளும் பேசாமல் ஆங்கிலத்திலேயே பீட்டர் விட்டுக்கொண்டிருந்ததால் செக்யூரிட்டி தொடர்ந்து அவர்களை நம்பவில்லை. எங்களது டிக்கெட்டை காமித்துவிட்டு உள்ளே நடந்தோம். மீண்டுமொரு செக்யூரிட்டி கேட். அதன் வாயிலில் இந்தக்கடற்கரைக் கோவிலைப்பற்றிய அரைகுறைத்தகவல்கள். நான் புதிதாய்த்தெரிந்து கொண்ட ஒரு விஷயம் இந்தக்கடற்கரைக்கோவில் உலக பாரம்பரியச் சின்னங்களில் ஒன்று என்ற ஆச்சர்யமான தகவல்!.
 
 
அங்கிருந்து அடுத்த பயணம் பஞ்ச ரதங்களை நோக்கி. வழியில் ஒருவரிடம் ‘’அண்ணா இந்த ஒரே கல்லுல யானையெல்லாம் இருக்குமே அது எங்கயிருக்குண்ணா?...’’ என்று வழிகேட்டுச்சென்றடைந்தோம். மகாபலிபுரத்தின் உள்ளே நீங்கள் காரில் சுற்றுவதென்றால் பத்து ரூபாய் நோட்டுகள் நிறைய வைத்துக்கொள்ளுங்கள். அங்கங்கே 15, 20, 25 என வசூலித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

பஞ்ச ரதங்கள் மற்றும் ஒரே கல்லில் செதுக்கிய யானை மற்றும் சிங்கத்தின் சிற்பங்கள் அற்புதம். குழந்தைகளோடு பார்க்கவேண்டிய இடம் இது.

நேரம் மதியம் இரண்டறையைத்தாண்டியிருந்ததால் நேராக ரூமுக்குத்திரும்பினோம். எனது நண்பன் மூன் ரேக்கர்ஸின் கிச்சனுக்குச்சென்று மதிய உணவுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு வந்தான். மீண்டும் மிலிட்டரி சரக்கைத்திறந்தோம். ரூம் சர்வீஸிலிருந்து மதிய உணவு வந்தது. ஒரு பெரிய மீனை முழுதாக தட்டில் வைத்து அதன் மேல் கொஞ்சம் மசாலா ஊற்றி தக்காளி சிலைஸ், வெள்ளரிக்காய், கேரட், புதினா இலைகளென இன்னபிற அலங்காரங்களும் செய்து எடுத்து வந்திருந்தார்கள்.

மச்சி நான் சிக்கன் மட்டும்தான் விரும்பிச்சாப்பிடுவேன்னு தெரியும். அப்புறம் ஏன்டா இவ்வளவு பெரிய மீனை ஆர்டர் பண்ணியிருக்கே?... என்றேன்.

இங்கே ஃபேமசே மீனை இப்படிச்சமைச்சிக்குடுக்குறதுதான்.. நீ சாப்பிட்டுப்பாரு தெரியும் என்றான்.

நானும் கொஞ்சூண்டு மீனைப்பிய்த்து தின்றுபார்த்தேன். ஆஹா என்னா டேஸ்ட்டுப்பா?... துளிகூட நாற்றமில்லை. உண்மையிலேயே அருமையான சுவை.

மூன் ரேக்கர்ஸ்சின் ஸ்பெஷாலிட்டி அது. உங்களுக்கு வேண்டிய மீனை நீங்களே தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்யலாம். உங்களது ஆர்டருக்குப்பிறகுதான் அது சமையலறைக்கேப்போகும். சமையலறையில் மீனை துண்டு துண்டாக வெட்டாமல் முழு மீனாகவே சுத்தம் செய்யப்பட்டு நீராவியில் அவிக்கப்படுகிறது. அதன் பின்னர் அதை ஒரு தட்டில் வைத்து அதின் மூன் ரேக்கர்ஸ்சின் ஸ்பெஷல் மசாலாவை ஊற்றி அலங்கரித்துக்கொடுக்கிறார்கள்.

நாங்கள் வாங்கிய மீனின் அளவு கிட்டத்தட்ட முக்கால்கிலோ இருக்கும். சமையலுடன் சேர்த்து அதன் விலை ரூபாய் 500. (இது 750லிருந்து பேரம் பேசி குறைக்கப்பட்ட விலை. இங்கே திறமையிருந்தால் பேரம் பேசலாம்)

மதியம் சாப்பாட்டுக்கு பிறகு ஒரு குட்டித்தூக்கம். மாலையில் 5மணி வாக்கில்ல எழுந்து வராண்டாவுக்குச்சென்றோம். எதிரே ரெஸ்ட்டாரண்டில் ஆண்களும் பெண்களுமாய் கிட்டத்தட்ட பதினாறு பேர் கொண்ட ஒரு குரூப் எவ்வித பேதமுமின்றி பீர் அருந்திக்கொண்டு அரட்டையடித்துக் கொண்டிருந்தது. அதிலிருந்த பையன்கள் மற்றும் பெண்கள் எவருக்குமே வயது 24க்கு மேலிருக்காது. இந்தியர்களின் வாழ்க்கைமுறை வெகுவேகமாய் மாறிக்கொண்டுதானிருக்கிறது. சனிக்கிழமை இரவுகள் என்பது இன்றைய இளைய சமுதாயத்திற்கு வேறு உலகமாய் காட்சியளிக்கிறது. அந்த குரூப் கிட்டத்தட்ட இரவு பத்தரை மணிவரை தொடர்ந்து அரட்டையும், பீருமாய் நகர்த்திக்கொண்டேயிருந்தது. அதில் ஒரு சில பெண்கள் அவ்வப்போது எழுந்து சென்று வாந்தியெடுப்பதும், அவர்களை மற்ற பெண்கள் கைத்தாங்கலாய் அழைத்து வருவதும் அங்கே சர்வ சாதாரணமாய் நடந்தது. சரி நமக்குத்தேவையில்லாத விஷயமது. இரவு உணவுக்கு கிச்சனுக்குச்சென்று உயிரோடிருந்த நண்டுகளில் ஒன்றை செலக்ட் செய்து ஆர்டர் செய்தோம்.

ஞாயிறு காலையில் 5மணிக்கே ரிட்டர்ன் பிளான் பண்ணியதால் மாலையிலேயே ஏதாவது ஷாப்பிங் செய்யலாம் என்று கடைத்தெருவுக்குச்சென்றேன். சில ஆயிரங்களை செலவு செய்து ஆடைகள் வாங்கி வீட்டுக்குச்சென்று மனைவியிடம் வாங்கிக்கட்டிக்கொண்டதுதான் மிச்சம். மக்களே... மாமல்லபுரம் செல்லுங்கள். உங்களுக்கு விருப்பப்பட்ட விதத்தில் ரசித்து என்ஜாய் பண்ணிவிட்டு வாருங்கள். ஆனால் ஷாப்பிங் மட்டும் அங்கே தேவையற்றது என்பதை மறக்காமல் மனதில் கொள்ளுங்கள். மூன் ரேக்கர்ஸ்க்கு எதிரிலேயே ஆயுர்வேதிக் மசாஜ் சென்டரும் இருக்கிறது. விருப்பப்பட்டவர்கள் மசாஜ் செய்து கொள்ளலாம்.

ரூமுக்குத்திரும்பியதும் மீண்டும் சிலபல பெக்குகளை உள்ளே தள்ளிவிட்டு நண்டு, கடம்பா, சிக்கன் என சுவைத்துவிட்டு பில்லைக்குளோஸ் செய்தோம். உணவு மட்டும் கொஞ்சம் காஸ்ட்லிதான் என்பதை மறுப்பதற்கில்லை. வெள்ளி இரவு 9.30 முதல் சனி இரவு 10.30 வரையிலான இருவருக்குமான செலவு சரக்கு தவிர்த்து ரூபாய்- 6300.

பலவிதமான அனுபவங்களோடு எங்களது மாமல்லபுர டிரிப்பை முடித்து விட்டு ஞாயிறு அதிகாலையில் வீடு திரும்பினோம்.

காதலர்களாக இருந்தாலும் சரி, குடும்பஸ்தராக இருந்தாலும் சரி, பேச்சிலர்ஸாக இருந்தாலும் சரி... உணவு, கேளிக்கை, உல்லாசம் என ரிலாக்ஸ் செய்ய விரும்புபவர்களுக்கு நிச்சயம் மாமல்லபுரம் ஒரு சொர்க்கம்தான் என்பதை சென்று ஒரு நாள் தங்கி அனுபவித்தால் நீங்களும் உணரலாம்.

என்ஜாய் மக்களே...!!!

 

13 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. அருமையான தகவல் நண்பரே..சில வேலை நான் இந்தியா வரும் போது எங்கே போகலாம் என்று (தண்ணிப் பார்டிக்கு தான்) மண்டையைப் பீய்த்து கொள்வோம்,,மதுரை ,திருச்சி,கன்னியாகுமாரி காரைக்கால் என சில இடங்களில்
  லாட்ஜ் நன்றாக இருந்தால் உணவு நன்றாக இருக்காது ,உணவு நன்றாக இருந்தால் லாட்ஜ் கருமாந்திரமாய் இருக்கும்
  காஸ்ட்லி பற்றி நாங்கள் கவலைப் படுவது இல்லை (பணத்திமிரு) அனால் குவாலிட்டி இருக்க வேண்டும் என்று நினைப்போம்,,ஆனால் பெரும்பாலும் அது கிடைப்பது இல்லை ,அடுத்த முறை(ஆகஸ்டு
  முடிந்தால் உங்களையும் கூப்பிடுகிறோம்) இந்தியா வந்தால் என்ஜாய் பண்ன ஒரு சிறந்த தகவலை தந்திருக்கிறீர்கள் ,, மிக்க நன்றி ! ! !

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வரவு நல்வரவு ஆகுக. மறக்காமல் கூப்பிடுங்கள். ஆகஸ்ட்டில் கும்மியடிப்போம்...

   Delete
 3. உண்மைதான் அருகில் உள்ள இடங்களின் மதிப்பு நமக்கு தெரிவதில்லை ... அருமையான பதிவு

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ராஜா.. நன்றி

   Delete
 4. ஆஹா! நிறைய விஷயங்களை தெரிந்துக்கொண்டேன் நண்பரே! பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 5. Moonrakers Restaurant, I spend some more days there their food is really very good. thank you !

  ReplyDelete
 6. very good write up... thanks...

  ReplyDelete
 7. interesting to read

  ReplyDelete
 8. நான் மிகவும் ரசிக்கும் இடம் மகாபலிபுரம்.., அதை பற்றிய மேலதிக தகவல்களுக்கு மிக்க நன்றி

  ReplyDelete