SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Wednesday, October 10, 2012

கலைஞரும் கருப்பு காக்காவும்...!


அன்புள்ள ‘’தமிழினத்தலைவர்’’ கலைஞர் ஐயா அவர்களுக்கு...

ஐயா, உங்களைப்பற்றி நான் பதிவெழுதி வெகு நாட்களாகி விட்டது. ஏற்கனவே சமூக வலைத்தளங்கள் எல்லாம் ‘’எவ்வளவு அடிச்சாலும் தாங்குறார்யா... இவரு ரொம்ம்ம்பபபப நல்லவருய்யா’’ எனும் ரேஞ்சுக்கு உங்களைப்பற்றி போதும் போதும் எனுமளவுக்கு கருத்துக்களைக் கொட்டுவதால் நான் உங்களைப்பற்றி கடந்த சில மாதங்களாக எதுவும் எழுத விளைந்ததில்லை.

‘’தமிழர்களே... தமிழர்களே... நீங்கள் என்னைக் கடலில் தூக்கிப்போட்டாலும் கட்டுமரமாய்த்தான் மிதப்பேன். அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம். கவிழ்ந்து விட மாட்டீர்...’’ என்ற உங்கள் கரகரக்குரல் கொஞ்ச நாட்களாக அடக்கி வாசிக்கப்பட்டுக்கொண்டிருந்த உங்கள் ‘’புதுமை’’ டிவியில் இப்போது உங்களது உத்தரவின் பேரில் மீண்டும் தூசு தட்டப்பட்டிருப்பது போலத்தெரிகிறது. தற்செயலாக இதையும், இத்தோடு இல்லாமல் உங்கள் அடிவருடிகளும், அல்லக்கைகளும் கருப்புச்சட்டை அணிந்துகொண்டு துண்டுபிரசுரங்கள் விநியோகித்ததையும் பார்க்க நேர்ந்தபோது மீண்டும் உங்களைப்பற்றி ஒரு பதிவெழுதும் நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.

ஒருகாலத்தில் உங்களை ஒரு அரசியல் சாணக்கியர் என்று அனைவரும் சொல்லக்கேட்டபோது நானும் வியந்திருக்கிறேன். ஆனால் அரசியல் சாணக்கியத்தனம் என்று எண்ணிக்கொண்டு நீங்கள் எடுக்கும் சில முயற்சிகள் சமூகத்தளங்கள் பல வளர்ந்து விட்ட இந்தத் தலைமுறையில் எடுபடாது என்பது இன்னமும் உங்களுக்கு புரியவில்லையே என்று வருந்துகிறேன். உங்களது வயதும், அரசியல் வாழ்க்கையும், நீங்கள் கொடுத்த பல ஆட்சி நிர்வாகங்களும்(எல்லாம் அல்ல) நிச்சயம் வணங்கத்தக்கவை என்பதில் மாற்றுக்கருத்துக்கள் ஏதுமில்லை. தமிழர்களின் மத்தியில் உங்கள் இமேஜ் சரிந்ததற்கு உங்களது கடந்த ஆட்சியில் ஈழத்தமிழர்கள் விசயத்தில் நீங்கள் நடத்திய நாடகங்களும், நாற்காலியை கெட்டியாகப் பற்றிக்கொள்ள நீங்கள் சாதித்த மௌனங்களும்தான் காரணம் என்பது இப்போதாவது நீங்கள் உணர்ந்தீர்களா என்பது சந்தேகம்தான். உங்களது காலத்திற்கு பிறகு நாளைய சந்ததியினர்க்கான வரலாற்றில் ஒரு சகாப்தமாய் நிலைத்திருக்கவேண்டிய உங்கள் பெயர், எப்போதும் மாறாத தமிழினத்துரோகத்தின் அடையாள வடுவாக ஆறாமல் புரையோடிப்போய் நாறிக்கிடக்கிறது. உங்களது அரசியல் எதிரி அ.தி.மு.கவின் ஆட்சியில் ஆயிரம் கெடுதல்கள் நடந்தாலும் சகித்துக் கொள்ளுமளவுக்கு இன்னமும் கூட மக்கள் ஆதரவு தி.மு.க பக்கம் திரும்பாமல் இருப்பதற்கு காரணம் உங்களது தமிழினத்துரோகமும், கடந்த ஆட்சியில் உங்கள் குடும்பமும், உங்கள் அடிவருடிகளும் அடித்த கொட்டமும்தான் என்பதை புரிந்துகொள்ளும் மனநிலை உங்களுக்கு இருக்கிறதா என்பது தெரியவில்லை.

உங்கள் அரசியல் வாழ்வில் நீங்கள் எவ்வளவோ தோல்விகளை சந்தித்தும் ஃபீனிக்ஸ் பறவைபோல மீண்டு வந்திருக்கிறீர்கள். ஆனால் கடந்தமுறை நீங்கள் பெற்ற தோல்வி எளிதில் மீளமுடியாத அதளபாதாளம் என்பதை நீங்கள் அறிவீர்களா?... ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக தமிழக மக்களின் மனநிலை இன்று இருந்தாலும்கூட அதற்கு மாற்றாக மீண்டும் தி.மு.கவை சிந்திக்க இங்கே எவரும் தயாரில்லை. ஒருவேளை வரப்போகிற தேர்தல்களில் உங்கள் இருவருக்கும் மாற்றாக மூன்றாம் சக்தி எதுவும் மக்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும் அது பெரும்பாலும் ஜெயலலிதாவுக்கே சாதகமாக இருக்குமேயொழிய தி.மு.க பக்கம் திரும்புவதற்கு வழியில்லை ஐயா. இந்த இலட்சணத்தில் நீங்கள் ஏதோ விஜயகாந்த்தோடு கூட்டணி வைத்துக்கொள்ள முயல்வதாக வேறு செய்திகள் உலவுகிறது. விஜயகாந்த் உங்கள் இருவருக்கும் மாற்றான மூன்றாம் சக்தி என்று நம்பிக்கொண்டிருந்த மக்களுக்கு அது இல்லை என்பது விளங்கி வெகுகாலமாகிவிட்டது. அதனால் ஒருவேளை நீங்கள் விஜயகாந்த்தோடு கூட்டணி வைத்தாலும் அது மீண்டும் உங்கள் அரசியல் சாணக்கியர் பட்டத்துக்கு வைக்கப்பட்ட கரும்புள்ளியாகவே மாறிப்போகும் அபாயமுண்டு என்பதை உணர்ந்துகொள்ளுங்கள் ஐயா...

ஈழப்போரின் உச்சக்கட்டத்தின்போது வெறுமனே அரைநாள் உண்ணாவிரதத்தோடு வெற்றி வெற்றி என்று முழங்கிவிட்டு வீட்டுக்குச்சென்றுவிட்டீர்கள். இப்போது சாமரங்கள் பறிபோனபின்னர் டெசோவை தூசு தட்டி மாநாடு நடத்தினீர்கள். சரி அதாவது உங்களுடைய தன்மானத்துக்கு இழுக்கில்லாமல் நடத்த முடிந்ததா உங்களால்?... டெசோவின் அடிமட்ட கொள்கை, ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் எல்லாவற்றையும் நீங்களே மறந்து சோனியாவின் கோபத்துக்கு ஆளாக மனமில்லாமல் மாநாட்டின் பேரைக்கூட மாற்றி மாற்றி கும்மியடித்து கேலிக்கூத்தாக்கி முடித்தீர்கள். தமிழக சட்டசபையும் மத்திய அரசின் குடுமியும் உங்கள் கைகளில் இருந்தபோது மௌனம் சாதித்துவிட்டு இப்போது இழந்த உங்கள் தமிழின அடையாளத்தை தூக்கி நிறுத்துவதற்காக டெசோ நடத்தியதோடு இல்லாமல் அதன் தீர்மானங்களை வேறு ஐ.நா சபைக்கு அனுப்பப்போவதாக கேள்விப்பட்டேன். முதலில் எனக்குகூட என்னடா இது?... இவர் போட்ட தீர்மானத்தை ஐ.நா சபைக்கு அனுப்பப்போவதாக சொல்கிறாரே?... இவரையும் இவருடைய கட்சியையும் ஐ.நா சபைக்கு யாரென்று தெரியுமா?... என்று எண்ணினேன். அப்புறம்தான் எனக்கும் நியாபகம் வந்தது ஐயா... உங்கள் கட்சியைத்தான் 2ஜி ராசா உலகம் வியக்கும் அளவுக்கு பிரபலபடுத்தியிருக்கிறாரே... அதனால் ஐ.நா சபைக்கு நிச்சயம் உங்கள் கட்சியை பற்றிய பரிச்சயம் இருக்கும் என்பதால் நீங்கள் நம்பி அனுப்பலாம் ஐயா…!!!

ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக தி.மு.க இயக்கம் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தும் என்று முதலில் அறிவித்து, பின்னர் சுதாரித்துக்கொண்டு (ஏற்கனவே ஈழத்தமிழர்களுக்காக நீங்கள் நடத்திய உண்ணாவிரதமும், மனிதச்சங்கிலியும் உங்கள் நியாபகத்திற்கு வந்ததோ என்னவோ தெரியவில்லை!) தி.மு.க தொண்டர்கள் கருப்புச்சட்டை அணிந்து கொண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராக துண்டுப்பிரசுரம் விநியோகிப்பார்கள் என்று அறிவித்தீர்கள். அத்தோடு நில்லாமல் நீங்களும் உடனே கருப்புச்சட்டை அணிந்து காட்சியளித்தீர்கள்! தமிழக மக்களின் நல்வாழ்வு மீது என்னே உங்கள் கரிசனம்?!!!

நீங்கள் வித்தியாசமாய்த்தான் யோசித்திருக்கிறீர்கள்... ஆனால் உங்கள் கூட்டங்கள் கருப்புச்சட்டை அணிந்து கொண்டு களத்தில் திரிந்ததைப் பார்க்கையில் சாதாரண மக்களுக்கெல்லாம் அவர்கள் தி.க காரர்களாகவே காட்சியளிப்பார்கள் என்பது முன்னமே உங்கள் சிந்தனைக்கு எட்டவில்லையா?... தி.க.விலிருந்து முன்னேறுவதற்காக உருவாக்கப்பட்ட உங்கள் கழகம், உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நீங்களே எதிர்பார்க்காத அளவுக்கு முன்னேற்றியதால் நிச்சயம் உங்களுக்கது திராவிட ‘’முன்னேற்ற’’ கழகம்தான்!

என்னவொன்று... நீங்கள் கொஞ்சம் சுதாரித்திருந்தால் கருப்புச்சட்டைக்கு பதில், கருப்புவேட்டி அணியச்செய்திருக்கலாம். ஒருவேளை அதுவும் ஐயப்பசாமி பக்தர்கள் போல காட்சியளிக்கலாம். ஆகவே உங்கள் கழக கண்மணிகளை கருப்புவேட்டியும், சிவப்பு சட்டையும் அணிய வைத்திருப்பீர்களேயானால் அதை வீதியில் பார்க்கும் மக்கள் தி.மு.க காரங்க ஏதோ செய்யுறாங்கப்பா என்று உங்கள் கட்சிக்காவது விளம்பரம் கிடைத்திருக்கும் ( நீங்கள் உளியின் ஓசை படம் பார்த்திருப்பீர்கள். ஆனால் என்றாவது நேரமிருந்தால் கொஞ்சம் கரகாட்டக்காரன் படத்தின் காமெடி சீன்களை மட்டுமாவது பாருங்கள். அதில் செந்தில் ‘’அண்ணே... எல்லாம் ஒரு விளம்பரம்தாண்ணே’’... என்று சொல்லுவது உங்களுக்கு மிகவும் பிடித்தாலும் பிடிக்கலாம்... வடை போச்சே...!).

ஐயா... உங்கள் அடிவருடிகள் நீங்கள் என்ன செய்யச்சொன்னாலும் உடனே செயல்படுத்த தயாராய்த்தான் இருக்கிறார்கள். ‘’ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா?’’ என்ற பழமொழிக்கேற்ப பதவியிலும் பணத்திலும் சம்பாதித்து ருசி கண்ட உங்கள் ஆட்கள் மீண்டும் எப்போதுடா ஆட்சிக்கு வருவோம்... ஆட்டத்தை எப்போது ஆரம்பிப்பது என்று காய்ந்து போய் கிடப்பதால் நீங்கள் என்ன செய்யச் சொன்னாலும் செய்யத்தான் செய்வார்கள். ஆனால் நீங்கள் செயல்படுத்தவேண்டியது அது அல்ல... செய்த தவறுகளுக்கு மனமார பிராயச்சித்தம் தேட என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். வெறுமனே அரசியல் பல்டிகள் அடித்துக்கொண்டிராமல் உங்கள் இறுதிக்காலத்தில் தமிழர்களின் மனதில் அசைக்கமுடியாத வரலாற்றை பதித்துவிட்டுச்செல்ல என்ன செய்யலாம் என்று யோசியுங்கள்... தி.மு.க உண்மையிலேயே திராவிடர்களுக்கான கழகம்தான் என்று நிரூபியுங்கள்.

உங்களால் முடியாதது என்று எதுவுமே இல்லை ஐயா... அது உங்களுக்குத்தெரியுமோ இல்லையோ... எனது ஏழாவது வயதிலேயே தமிழகத்தின் தென்கோடித்தொகுதியில் உங்கள் கட்சிக்கொடியை நெஞ்சில் குத்திக்கொண்டு ஓட்டுபோட வருவோர் போவோரிடமெல்லாம் ‘’அண்ணேன் உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க... அக்கா உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க’’ என்று கெஞ்சிய எனக்குத் தெரியும். உங்களைப்போன்ற போர்க்குணமும், உங்களைப்போன்ற விமர்சனங்களை எதிர்கொள்ளும், ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் இந்தியாவில் வேறெந்த அரசியல்வாதியிடமும் நிச்சயமாயில்லை என்பது நிதர்சனமான உண்மை ஐயா. அதனால்தான் உங்களை விமர்சிக்கும் அளவுக்கு ஜெயலலிதாவையோ வேறெந்த அரசியல்வாதியையோ விமர்சிக்கும் தைரியம் இங்கே வெகுபலருக்கு இல்லை!

நீங்கள் மனமார ஆற்றவேண்டிய கடமைகள் எவ்வளவோ இருக்கிறது. அதைவிடுத்து வெறுமனே அறிக்கை விடுவதிலும், உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதுவதிலும், மனிதச்சங்கிலி... கருப்புச்சட்டை அது இது என்று வீண்காரியங்கள் செய்வதிலும் உங்கள் இறுதி வரலாற்றை வீணடிக்காதீர்கள் ஐயா... இன்னமும் கூட உங்களுக்கான வாசல்கள் இருக்கின்றன. அதைத்திறப்பதும்... இல்லை வெளியேயே நின்று கொண்டிருப்பதும் உங்கள் கைகளில்தான் ஐயா இருக்கிறது.

எங்கள் தெருவிலும் உங்கள் ஆட்கள் கருப்புச்சட்டை அணிந்து துண்டுப்பிரசுரங்களை கைகளில் திணித்து கடந்துபோனார்கள். தற்செயலாக வானத்தைப்பார்த்தேன்... காக்காக்கூட்டம் இங்கும் அங்குமாய் பறந்து கொண்டிருந்ததை ஏனோ என்னால் எழுதாமல் இருக்க இயலவில்லை!!!

வணக்கத்துடன் சிறுவயதில் உங்களை நெஞ்சில் குத்திய ஒரு அப்பாவித்தமிழன்...

 

10 comments:

 1. சில வரிகள் சிந்திப்பதற்கு, சில வரிகள் சிரிப்பதற்கு, சில வரிகள் ஆதங்கப்படுவதற்கு.....நடுநிலையாளர்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பு.

  ReplyDelete
  Replies
  1. நான் எழுதியதை மிகச்சரியான அர்த்தத்தோடு புரிந்து கொண்டிருக்கிறீர்கள்... மிக்க நன்றி!

   Delete
 2. வெறுமனே அரைநாள் உண்ணாவிரதத்தோடு வெற்றி வெற்றி //
  போர் முடிந்த பின்னர்தானே உண்ணாவிரதம் முடித்தவர் ? அவரை திட்டாதிங்க சார்.... சிறந்த குடும்ப நிரவாகிகளுள் ஒருவர்.
  http://varikudhirai.blogspot.com/2012/10/blog-post.html

  ReplyDelete
 3. rose, neeyellam thalaivarukku advice panra alavukku avaru onnum kettu poidala, moodittu ippo ulla pirachinaigala ketka kuda thuppilaatha naaye, unnoda athanai oottaiyum moodittu poi unga "velai" ya mattum paaru.....

  ReplyDelete
  Replies
  1. தோடா... வந்துட்டாரு! நான் இறங்குனேன்னா உன்னை விட சாக்கடைடா!... But... உன் லெவல்ல இறங்கிவர எனக்கு விருப்பமில்லை. உங்கள் தலைவருக்கு அட்வைஸ் பண்ணுமளவுக்கு எனக்கு வயதுமில்லை... அனுபவமுமில்லை... ஆனால் அட்வைஸ் வேறு... விமர்சனம் வேறு. வரைமுறை மீறிய சொற்களை நான் எங்கேயும் பயன்படுத்துவதில்லை. உங்கள் தலைவரைப்பற்றி சமூகத்தளங்களில் உபயோகப்படுத்தப்படும் கீழ்த்தரமான வார்த்தைகளை படித்தீர்களேயானால் உங்களுக்கு இன்னும் BP ஏறும்போல!!! நான் யாருக்கும் கூஜா தூக்குவதுமில்லை... யாருக்கும் அறிவுரை கூறுவதுமில்லை... இது எனது தளம்... எனது எழுத்து... வரைமுறைகளோடு கூடிய எழுத்து! முடிந்தால் விவாதம் செய்... முடியவில்லையென்றால் என்னைச்செய்ய சொன்ன அதே வேலையை நீ செய் நண்பா!!!

   Delete
 4. please read this abi appa dmk sombu

  ReplyDelete
 5. mothathula nee ellathaiyum moodu nu artham... puriyuthaa pannadaaa....

  ReplyDelete
  Replies
  1. ஹா... ஹா...ஹா.. உன்னோட செம காமெடிடா பன்னாட!... போடா போய் உன் போதைக்கு ஊறுகாயா வேற எவனாவது சிக்குறானான்னு பாருடா பரதேசி...

   Delete
 6. ammaaam ivan(L) nadu ninailyaalarthaaan (!!!!!)

  ReplyDelete
 7. intha naathari laam ezuthulannu evan eval alutha? un velaiya mattum paaru parathesi....

  ReplyDelete