SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Saturday, September 29, 2012

பிரபல பதிவராவது எப்பூடி?...

 

ஏற்கனவே இந்த தலைப்புல பலபேர் எழுதியிருந்தாலும் இயல்பாகவே நமக்கு கொஞ்சம் நக்கல் ஜாஸ்தின்றதால நானும் இதை எழுதறேன் பாஸ்...

இதப்படிச்சிட்டு யாரும் கோவப்படக்கூடாதுன்றது முக்கியமான கண்டிஷன்... இதுல குறிப்பிட்டிருக்குற எந்த விஷயமும் எந்தவித தனி மனிதர் சம்பந்தப்பட்டதும் இல்லைன்னும், கோ-இன்சிடன்ட்டா யாரோடவாவது இது லிங்க் ஆனமாதிரி தெரிஞ்சிதுன்னா அதுக்கு ‘’கதம்ப மாலை’’ பொறுப்பில்லைன்னும், அதை யாரும் சீரியசா எடுத்துக்க வேணாமுன்னும் தாழ்மையோட அறிவிச்சிக்கிறேனுங்க!!!

என்ன மாதிரியே பதிவுலகத்துல பலவித எழுத்துக் கனவுகளோட எழுத வந்தவரா நீங்க?...

‘’வாங்க பாஸ் வாங்க...கந்தர்வக்கோட்டை உங்களை அன்புடன் வரவேற்கிறது’’...!!!

எழுத வந்தீட்டீக சரி... வெறுமனே பத்தோட ஒன்னு பதினொன்னா நீங்களும் எழுதிக்கிட்டே இருக்க முடியுமா?... பெரிய பிரபல பதிவராகவேண்டாமா?... அதாங்க இங்க கச்சேரி!

தரமான பதிவுகளை எழுதிட்டு நிச்சயம் நம்மளை பதிவுலகம் அங்கீகரிக்கும்... நாமளும் பிரபல பதிவராவோம்னு நம்பிக்கிட்டு இருந்தீகன்னா... அய்யோ பாவம்... ரொம்ப அப்பாவிங்க நீங்க!

தரமான பதிவுகளை எழுதுறதால மட்டுமே நீங்க பிரபலமாக முடியாதுங்கோவ்... அதுக்கு வெளிய தெரியாத பலவழிங்க இருக்குது... எனக்குத் தெரிஞ்சதை நான் சொல்றேன். முடிஞ்சா பிக்கப் பண்ணி பொழச்சுக்கோங்க... அம்புட்டுதேன்!

முதல்ல உங்க பேரு... வெறுமனே உங்க பேர்லயோ... இல்லை டீசன்ட்டான புனைப்பெயர்லயோ எழுதுனீகன்னா... ஸாரிங்க, நீங்க இன்னும் நெறய வளரனும்!

நீங்க எந்தப்பேர்ல எழுதப்போறீகன்றதும் உங்க பப்ளிசிட்டிக்கி ரொம்ப முக்கியம் (வரலாறு முக்கியம் அமைச்சரே!)... முடிஞ்சா சொந்தமா திங்க் பண்ணுங்க... முடியாதவக கீழேயிருக்கிற பேர்கள்ல எதவேண்ணா இலவசமா யூஸ் பண்ணிக்கலாம்... காப்பிரைட்டுல்லாம் எதுவும் கிடையாது!

முயல் முக்ஸ்

புறா

காக்கா

கொசு

நாய்க்குட்டி நாராயணசாமி

மாத்தாம யோசி

பாய் போஸ் (இதான் சொந்தக்காசுல சூனியம் வச்சிக்கிறதா?!)

பாண்டு@பரண்டு

குண்டுக்கல் குணவாளன்

குறுக்கு வீதி குப்புசாமி

மேலூர் கானா குமார்

எல்லத்தான்

கிலாசபி கிருபாகரன்

வாட்டான்

கவனச்சிரியன்

வீட்டுப்பூச்சி

தலைவர் த தங்கராசு

பெரிய மனுசன்

சின்னப்பையன்

மாட்டுக்காரன்

கிராமத்தான்

ஷகிலா பானு

இவர்கள் பொய்கள்

துடைப்பாளி

சேட்டன்

அஞ்சும் புலி

அம்மாச்சி

பழைய பந்தல்

முனகு

இப்படி லிஸ்ட் நீண்டுகிட்டே போகுமுங்க. இதுக்கு மேலேயும் எழுதுனா வம்பு தும்பு ஏதாச்சும் வரலாம்ன்றதால இதுக்கு மேல நீங்களும் கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுத்து யோசிச்சிக்கோங்க பாஸ்...

சரி... எந்தப்பேர்ல எழுதலாம்ன்றது மாதிரியே உங்க தளத்துக்கு என்ன பெயர் வைக்கலாம்... எப்படி உங்களை நீங்க அறிமுகப்படுத்திக்கலாம்னெல்லாம் ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு. அது கொஞ்சம் பதிவுலகத்துல சந்து பொந்தெல்லாம் பூந்து வந்தீகன்னா உங்களுக்கே தெரிஞ்சி போகும்! 

சரி... பிளாக்குக்கும் பேர் வச்சிக்கலாம். அப்புறம் என்ன?... வெறென்ன... பிரபலமாக என்ன எழுதலாம்?...

சீரியஸா சொன்னாக்கா ‘’ நீங்க எழுதுற நல்ல பதிவுகளுக்கு நடுவில் அப்பப்போ ஊறுகா மாதிரி சினிமா, கில்மா மாதிரி சமாச்சாரங்களெல்லாம் எழுதுனீகன்னா நெறய வாசகர்களை உங்கள் பக்கம் இழுக்கலாம்’’னு சொல்வேன். ஆனா இது சீரியஸ் பதிவல்ல!!!

அதுனால நீங்க பிரபல பதிவராகனும்னா கீழ்க்கண்ட விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிச்சே ஆகனும்ப்பா...


·         பதிவோட தலைப்புக்கும் பதிவுக்கும் கண்டிப்பா சம்பந்தம் எதுவும் இருக்கக்கூடாதுங்கோவ்...

·         அப்புறம்... முடிஞ்சா பதிவோட தலைப்புலேயே ‘’அந்த’’, ‘’அது’’, ‘’18++’’ அப்பிடின்ற வார்த்தையெல்லாம் யூஸ் பண்ணீகன்னா பேஜ்வியூஸ் சும்மா அள்ளுமுங்க!

·         அப்புறம் மத்த பதிவர்களோட பதிவெல்லாம் படிக்காமலேயே சும்மாவே ‘’சிறந்த படைப்பு’’, ‘’வாழ்த்துக்கள்’’, அப்பிடி இப்பிடின்னு பின்னூட்டம் போடனும். அதுலேயும் மறக்காம பின்னூட்டத்திலேயே கூச்சமில்லாம உங்களோட பதிவுக்கு லிங்க் குடுக்கத்தெரியனும்!

·         இன்னும் பேமஸாகனும்னு நெனச்சீகன்னா பிரபலமான பதிவுகளோட பின்னூட்டத்தில போயி கன்னா பின்னான்னு சம்மந்தமேயில்லாம நெகட்டிவ் கமெண்ட்ஸ் போடத்தெரிஞ்சிருக்கனும்...

·         அப்புறம் முக்கியமானது... முடிஞ்சவரைக்கும் பிரபலமாகாத ஒரு பத்து பதினைஞ்சு பேரை டார்கெட் பண்ணி அவுகளோட இ-மெயில் அனுப்பி, மொபைல் நம்பரையும் வாங்கி ஒரு குரூப் ஃபார்ம் பண்ணீட்டிகன்னு வையுங்க... நீங்கதான் பாஸ் அப்புறமா பதிவுலக பிரபலம்! (ஏன்னா உங்க குரூப் மூலமா உங்களுக்குள்ளேயே ரொட்டேஷன் முறையில் மாத்தி மாத்தி ஓட்டு போட்டுக்கலாம் பாருங்க!).

·         அது மட்டும் இல்லைங்க... ஆரம்பத்துல கொஞ்ச நாளைக்கு பல கம்ப்யூட்டர் மூலமா பல ஐடி வச்சிக்கிட்டு உங்களுக்கு நீங்களே ஓட்டு போட்டும் பிரபலமாகலாம்னு சொல்றாய்ங்க!

·         எல்லாத்தவிட முக்கியமானது நீங்க தரமா மாசத்துக்கு ஒரு பதிவுன்னு எழுதுனாக்க வேலைக்கே ஆகமாட்டிங்க. டெய்லி ஒரு பதிவு கண்டிப்பா போட்டே ஆகனுங்க. உங்க வீட்டுல நாய் குட்டி போட்டது, செடியில பூ பூத்தது, பிச்சைக்காரனுக்கு சோறு போட்டது, பொண்டாட்டி துணியெல்லாம் துவைச்சுப்போட்டதுன்னு ஒன்னு வுடாம பதிவுல எழுதிட்டீகன்னு வையுங்க... உங்களையும்கூட ஆஹா ஓஹோன்னு அதகளப்படுத்துவாங்க போங்க...!!!

·         அப்புறமா எங்கே சுண்டல் சாப்பிட்டாலும், பஜ்ஜி சாப்பிட்டாலும் எண்ணெயப் பிழிஞ்சிட்டு கீழே போடறதுக்கு முன்னாடி மறக்காம அந்தப் பேப்பர்ல என்ன இருக்குன்னு படிச்சிப்பாத்தீகன்னா ஏகப்பட்ட பதிவு போடலாமுங்க! அதுதான் ஹிட்டோ ஹிட்டாவும் ஆவுமுங்க!!!

·         முடிஞ்சாக்க... உங்க மதம்தான் சூப்பரு... உங்க ஜாதிதான் சூப்பரு... அப்பிடின்னு கெளப்பி வுட்டீகன்னு வையுங்க... அப்புறம் என்ன... ஃப்ரீ பப்ளிசிட்டிதான் போங்க!

·         இல்லைன்னா ஒரு குறிப்பிட்ட மதத்தோட ஆளு மாதிரி நீங்க பேரு வச்சிட்டு எழுதுனாலும் ஆட்டோமேட்டிக்கா ஒரு பெரும் கும்பல் வந்து அவுகளே நீங்க என்ன எழுதுனாலும் சரி... என்ன ஏதுன்னே பாக்காமலேயே ஓட்டைப்போட்டு உசரத்துல தூக்கி வுட்டுறவாக!

·         வேலை வெட்டிக்கு போகலன்னாகூட பரவாயில்லை. ஆனா புதுப்படம் ஒன்னு வுடாம ரிலீஸ் ஆன அன்னைக்கே பாத்துப்புட்டு விமர்சனம் எழுதுனீகன்னா டாப்புதான்ங்க. (நெறயப்பதிவருங்க இப்போல்லாம் ரிலீஸ் ஆகி, முத ஷோவுக்கு டிக்கெட் வாங்கி படம் பாத்துட்டு வந்து, அவசர அவசரமா டைப் பண்றதுக்குள்ள எவனாவது முந்திக்கிறானுகன்னு சொல்லி பிரிண்ட் போடுற இடத்துக்குள்ளேய நுழைய அனுமதி கெடக்குமான்னு அலைஞ்சிட்டிருக்காகளாம்!)

·         அப்புறமா முக்கியமான விஷயம்... நம்மளைத்தவிர எவனாவது உருப்படியா தரமான பதிவு எதாச்சும் எழுதிட்டான்னு வையுங்க... எப்புடியாவது அவனை மேல வர வுடாம பாத்துக்கனுங்க! அப்புறம் மைனஸ் ஓட்டை எப்போ, எங்கே, எப்படி யூஸ் பண்ணனும்னு தெளிவா தெரிஞ்சி வச்சிக்கிட்டீகன்னா அதுவும் நீங்க பிரபலமாகிற வழிதாங்கோவ்!

·         அப்புறம் மறக்காம பார்ப்பானியம், பார்ப்பன், ஆரியம், ஈழம், விடுதலைப்புலிகள், தமிழர்கள் இந்த மாதிரி வார்த்தைகளெல்லாம் முடிஞ்ச வரைக்கும் யூஸ் பண்ணனும்ன்றது ரொம்ப முக்கியமுங்க!

·         ஒருவேளை நீங்க பெண்ணாக இருந்தால் ‘’ஆணாதிக்கத் திமிரை அடக்குவோம்’’, ‘’பெண்ணியம்’’ அப்பிடி இப்பிடின்னு அடிச்சி வுட்டீகன்னா பெண்கள் ஆதரவு சும்மா அள்ளும் போங்க! அப்பிடியே கவிதை எழுதும்போது புரட்சின்ற பேர்ல சும்மா நாலு கெட்டவார்த்தையை தூயதமிழ்ல சேத்து எழுதிப்புட்டீகன்னா ஆம்பிளைங்க கூட்டம்கூட அள்ளும் போங்க!

·         எல்லாத்தை வுட முக்கியம்... இங்கிலீஷ் வூட்டுப்பையன், அறிவாளிப்பையன், புழங்காதவன், குடும்பன், புடவச்சாமி இப்படி யாராவது கொஞ்சபேரு உங்களை எடக்கு மடக்கா கலாய்க்கிற அளவுக்கு பதிவெழுதனும். அப்புறமா அவுகெல்லாம் கழுவி கழுவி ஊத்துனாலும் ஒன்னுமே நடக்காத மாதிரி துடைச்சிப் போட்டுட்டு, உருப்படாத விசயங்களையே தொடர்ந்து எழுதனும். அப்பிடி மட்டும் பண்ணிப்புட்டீகன்னா நீங்கதாங்க டாப்போ டாப்பு!!!
 
அய்யோ... நம்ம ஸ்டார்ட் பண்ணோம்னா நிக்காம வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்குவோம்ன்றதால இத்தோட நிறுத்திக்கிறது உத்தமம்னு தோணுது. கரெக்ட்தானே?
 
எப்பிடியோ... பல பிரபல பதிவர்களை உருவாக்கப்போற விஷயத்துக்கு நானும் சில யோசனைகளை சொல்லியிருக்கேன்னு நெனச்சாக்க புல்லரிக்குது போங்க!

எப்பூடி?...

 

13 comments:

 1. உங்ககிட்ட கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு.

  யாருக்கும் பயப்பட வேண்டாம். பிரபலங்கள் கையாளுற சூட்சுமங்களைப் போட்டு உடையுங்க.

  என்னை மாதிரி புதுப் பதிவர்கள் உங்க பின்னாடி அணிவகுத்து நிற்போம்.

  வாழ்க நீங்கள்.

  வளர்க உங்கள் பொதுப்பணி!

  ReplyDelete
  Replies
  1. வுடுங்க பிரதர்... கலக்கிரலாம்!!!

   Delete
 2. கடுப்பேத்துறாங்க மைலார்ட்...

  ReplyDelete
 3. க... க...க ... போ....

  தற்போது நீங்களும் மிக மிக பிரபல பதிவராயிட்டிங்க...

  ReplyDelete
 4. :-)...அய்யோ... வேணாம் சாமி! பிரபலங்கள் லிஸ்ட்ல நம்மள சேத்திராதீக ப்ளீஸ்!!!

  ReplyDelete
 5. அடங்க கொக்க மக்கா.. நடத்துங்க..

  ReplyDelete
 6. ஹீ ஹீ.. தம்பி ஏற்கனவே பிரபல பதிவரா இருக்குற நாங்க இன்னும் பிரபலமா ஆகறதுக்கு என்ன பண்ணனும்ன்னு சொல்லலியே?

  ReplyDelete
  Replies
  1. கவலையே படாதீங்க அப்புபூ... கூடிய சீக்கிரமா போட்டுருவோம்...!!!

   Delete
 7. பிரமாதமான பதிவு. ரொம்ப ரொம்ப உபயோகமா இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஆங்!!!!... ரொம்ப ரொம்ப உபயோகமா இருக்குமா?!!! என்ன சார்... பதிவை படிச்சிட்டுதான் கமெண்ட் போட்டீங்களா?... இல்லை சும்மா கலாய்க்கிறீங்களா?...

   Delete