SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Saturday, September 15, 2012

பில்லி, சூனியம், ஏவல் – நெசந்தானா?...


சும்மா நெட்ல ப்ரௌஸ் பண்ணிட்டு இருந்தப்போ இப்படி ஒரு சமாச்சாரத்தை பார்க்க நேர்ந்தது...

‘’பில்லி, சூனியம், ஏவல்‘’... என்னாடா இது?... இன்னுமா இந்த ஊரு இதையெல்லாம் நம்புதுன்னு கொஞ்சம் உள்ளே போயித்தான் பார்ப்போமேன்னு பாத்தா... யப்பப்பா... வெளங்கிருவாய்ங்காடா முழி பிதுங்கி போச்சு!

சின்ன வயசுல இந்த மாதிரி நெறைய சமாச்சாரம் கேள்விப்பட்டிருப்போம்... எதாவது திருடு போயிடுச்சுன்னா ஊருல எல்லாரையும் கூப்புட்டு வார்னிங் நடக்கும்... திருடுனவன் மரியாதையா ஒத்துக்கிட்டு திருடுனதையெல்லாம் திருப்பி குடுக்கலன்னா... முட்டை சுத்தி வைச்சுருவோம். அப்புறம் திருடுனவன் இரத்த வாந்தி எடுத்து செத்துருவான்னு மிரட்டுவாங்க... சில நேரத்துல இதுக்கு பயந்து திருடனவன் ஒத்துக்கிட்ட கதைங்களும் உண்டு.

அதே மாதிரி இப்போகூட பூசணிக்காய்ல குங்குமத்தை வச்சு நடு ரோட்டுல போட்டு உடைச்சி, பைக்காரன்லாம் வழுக்கி விழறதைப்பாக்கலன்னா நம்ம ஆளுங்களுக்கு தூக்கம் வர்றதில்லை... டேய் உன் கடையில வியாபாரம் நல்லா நடக்கனும்னா... தரம், விலை, கஸ்டமர்க்கு மரியாதை குடுத்து நடந்துக்கிறது எப்படி எத்தனையோ விஷயங்கள் இருக்குது... அதையெல்லாம் விட்டுட்டு நீ உடைக்கிற பூசணிக்காய்லதான் உன் வியாபாரம் பெருகி நீ கோட்டீஸ்வரனா ஆவேன்னா...உலகத்துலேயே பூசணிக்காய்தான்டா விலை உயர்ந்த பொருளா இருக்கும்னு இந்த பயபுள்ளைகளுக்கெல்லாம் நடுமண்டையில நச்சக்குன்னு கொட்டி யாராவது சொன்னா தேவலைப்பா...

எழுமிச்சம் பழத்தை ஜீஸ் போட்டு குடிச்சா அதுல விட்டமின் சி இருக்குது. அதில்லாம அது உடம்பு சூட்டையும் தணிக்கும். தலைல தேய்ச்சும் குளிக்கலாம். ஆனா குங்குமம் தடவி ரோட்டுல போடறது... வண்டி டயர்ல வச்சு நசுக்குறது... மிளகாயோட எழுமிச்சம்பழத்தையும் சேத்து கட்டி வீட்டு வாசல்ல, கடையில, வண்டியிலன்னு ஒரு இடம் விடாம கட்டித்தொங்கவிடறது... அடப்பாவிங்களா, உங்க அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லையாடா?... நல்லவேளைடா... பொண்டாட்டி, புள்ளைங்க கழுத்துல எல்லாம் எழுமிச்சம் பழத்தையும் மொளகாயையும் கட்டித்தொங்கவிடாம விட்டு வச்சிருக்கீங்களே... ரொம்ப சந்தோசம்டா சாமீ!!!

தினமலர் பத்திரிக்கை இதைப்பத்தி ஒரு புத்திசாலிமான செய்தியைப் போட்டுருக்காய்ங்க...  

எழுமிச்சம் பழத்தை வண்டியில கட்டித் தொங்க வுடுறதாலயும், வண்டி சக்கரத்துல நசுக்குறதாலயும் வண்டியை விபத்துக்குள்ளாக்கும் தீய சக்திகளையெல்லாம் அது அழிச்சு காப்பாத்துமாம்... யம்மாடியோவ் எழுமிச்சம் பழத்துக்கு இவ்வளவு பவரா?!!! டேய் நீங்க மக்களுக்கு விழிப்புணர்ச்சியை உண்டாக்க வேண்டிய மீடியாத்துறையில இருக்கீங்கடா... இப்படி மக்கள் மண்டையில மசாலா அரைக்கிற வேலைய செய்யாதீங்கடான்னு யாராவது உரக்கச்சொன்னாலும் தினமலர்க்கு கேக்குமா என்னன்னு தெரியலை?...

சட்னிக்கு தேங்கா வாங்க காசில்லாம எவ்வளவோ குடும்பங்கள் கஷ்டப்பட்டுட்டிருக்கு. ஆனா ஒரு பக்கம் ரோட்டுலேயும், கோயில்லேயும் ஆயிரக்கணக்கான தேங்காயை உடைச்சித்தள்ளிட்டு இருக்கோம். எவனோ ஒரு பரதேசிப்பய எப்பவோ தேங்காய் வியாபாரம் சரியா நடக்காம இப்படிப்பட்ட விஷயங்களை மக்கள்ட்ட பரப்பியிருப்பான்னு நெனக்கிறேன். தேங்காயை உடைக்கிறதால என்னதான்யா நடக்குது?... எதுக்குய்யா ஆண்டாண்டு காலமா உடைச்சிட்டு வர்றோம்?...

இதையெல்லாம்கூட சகிச்சிக்கலாம்யா... ஆனா இந்த ‘’பில்லி, சூன்யம், ஏவல்’’... இன்னமும் நெறைய பேரு இந்த வார்த்தைகளுக்கு பயப்படுறானுங்க... இதுல படிச்சவன், படிக்காதவன்னு பாகுபாடே கிடையாதுன்றது இன்னமும் சிறப்புச்செய்தி!

ஏவல்ன்றது எதாவது ஒரு தீயசக்தியை நாம பழிவாங்க நெனக்கிற ஒரு  ஆளு மேல ஏவிவிட்டு அவன் வாழ்க்கைய கெடுத்து குட்டிச்சுவராக்கிறதாம்... சூனியம்ன்றது நாம பழிவாங்க நெனக்கிற ஆளோட ஏதாவது ஒரு உடையையோ, இல்லை முடியையோ எடுத்து அத வச்சு மந்திரம் பண்ணி அவனோட வாழ்க்கைய கெடுக்கிறது... இதுல பலவகைகள் இருக்காம்... மந்திரம் பண்ண தகடை எதிராளியோட இடத்துல புதைச்சிட்டா அது அவனை ஆட்டிப்படைச்சிருமாம்... இல்லை எதிராளி மாதிரியே பொம்மை செஞ்சு அதுல எதிராளிக்கு பண்ண நெனக்கிற சூன்யத்தையெல்லாம் பண்ணி அவுங்களை முடக்கிப்போடலாமாம்...

ஒருத்தருக்கு யாராவது சூன்யம் வச்சிட்டா... அவன் வியாபாரம் நொடிஞ்சி போயிருமாம்... அவன் ஆரோக்கியம் எல்லாம் காலியாகி அவனுக்கு என்ன வியாதின்னே தெரியாம உடம்பு பாடா படுத்துமாம்... எந்தவிதமான மருத்துவ செக்கப்புகள் செய்தாலும் எல்லாம் சரியாத்தான் இருக்குன்னு ரிசல்ட் வருமாம்... அப்புறமா அதுக்குச் சரியான ஒரு மந்திரவாதிகிட்ட போயி அந்தச் சூன்யத்தை எடுத்தாத்தான் எல்லாம் சரியாகுமாம்... என்னமா பிஸினெசை டெவலப் பண்ணியிருக்கானுக...

இதவிடக்கொடுமை... நரபலி சமாச்சாரங்கள்... புதையல் கிடைக்கும்னு சொல்லி தலைப்புள்ளைங்களை பலிகொடுக்கிறது... வயசான பணக்கார கிழங்களுக்கு ஆயுசு கெட்டியாகும்னு சொல்லி பதினாறு வயசுப்பொண்ணை கல்யாணம் பண்றது... பிஸினெஸ்ல பெரிய ஆளா ஆகனும்னு பெத்த புள்ளைங்களையே பலி கொடுக்கிறது... வீட்டுல இருக்கிற தரித்திரத்தை எடுக்கிறேன்னு பச்சப்புள்ளைங்கள பலிகொடுக்கிறது... என்னய்யா காட்டுமிராண்டித்தனம் இதெல்லாம்?... இந்த மந்திரம், மயிருன்னு மக்களை கெடுத்துட்டு இருக்குற பரதேசிங்களையெல்லாம் அப்பப்போ களையெடுத்திருந்தா எவ்வளவோ பச்ச உயிருங்க பொழச்சு வாழ்ந்திருக்குமேய்யா?...

இதைவிட கொடுமை என்ன தெரியுமா?... இதையெல்லாம் பத்தி இண்டர்நெட்ல மேய்ஞ்சிட்டு இருந்தப்போ பல வெப்சைட்களை பாத்தேன்யா...

 ''உஜிலாதேவி''ன்னு ஒரு வெப்சைட்...  இதுல பில்லி, சூனியம், ஏவல்லாம் நிஜம்தான்னு போட்டிருக்கு. அதுக்கும் ஏகப்பட்டபேரு தனக்கு எவனோ பில்லி சூனியம் வச்சிருக்கதாவும் அதை எடுக்கனும்னும் ஜடியா வேற கேட்டிருக்கானுக. அதுக்கு இந்த வெப்சைட் முதலாளியும் தன்னை தொடர்புகொள்ளுமாறு சொல்லியிருக்காரு... இதோட ஃபாலோவர்ஸ் எத்தனை தெரியுமா?... நாம் பார்க்கும்போது 1475... இப்போ 1496... இதாவது பரவாயில்லைய்யா...

இன்னொரு தளத்தை பார்த்தேன்...

சித்தர்கள் டாட் காம்... இதோட ஃபாலோவர்ஸ்... மயக்கம் போட்டுறாதீங்க... ஜஸ்ட் 4032...

பில்லி, சூனியம், ஏவல் - உண்மைன்னு சொல்ல இன்னும் எத்தனை ஆயிரம் வெப்சைட்டுங்க இருக்குதோ... நமக்கு தெரியாது... அதெல்லாம் பொறுமையா படிக்கிற அளவுக்கு நமது அறிவும் உணர்வும் இடம் குடுக்கலைய்யா...

மொத்தத்துல ஒண்ணு மட்டும் நல்லாத்தெரியுது... நம்மாளுங்க எவ்வளவு படிச்சாலும் , எவ்வளவு உசந்தாலும், மூட நம்பிக்கைகளை விட்டு ஒரு நாளும் வெளிய வர மாட்டாய்ங்க... அது மட்டும் கன்ஃபர்ம்யா!!! இப்போகூட உங்களுக்கு பிடிக்காதவன் எவனாவது இருந்தான்னா அவனை நீங்க ஈசியா மிரளவைக்கலாம்... எப்படின்னு கேக்குறீங்களா?... ஒரு கிலோ மைதா மாவையும், கோதுமை மாவையும் கலந்து பிசைஞ்சி, அதுல ஒரு பொம்மை செஞ்சு, அதுக்கு குங்குமப்பொட்டெல்லாம் வைச்சு, அதுல கொஞ்சம் குண்டூசியைக்குத்தி அதை எடுத்துட்டு போயி ராத்திரியோட ராத்திரியா நம்மாளு வீட்டு வாசல்ல போட்டீங்கன்னா போதும்... அவ்வளோதான் கதை முடிஞ்சுது... அதப்பாத்திட்டு நம்மாளு மைண்டு டிஸ்டர்ப் ஆகியே நாசமாப்போயிருவான்...

நான் ஒன்னும் நாத்திகவாதியில்லை... இந்தக் கட்டுரையை சரியாகப்புரிந்து கொள்ளாதவர்கள் இதை ஆன்மீகத்துக்கு எதிரான கட்டுரையாக நினைத்தாலும் கவலையில்லை... கண்ணை மூடிக்கொண்டு மூடநம்பிக்கைகளை நம்புவதும், பரப்புவதும் செய்ய முடியாத சாமான்யன் மட்டுமே நான்...

நம்மள பொறுத்த வரைக்கும்... பில்லியாவது பல்லியாவது?... ஏவலாவது வவ்வாலாவது?ன்னு நக்கல் பண்ணிட்டு போயிட்டேயிருப்போம்...

இவ்வளவு காலமா இந்த மூடத்தனத்தையெல்லாம் முடிஞ்ச வரைக்கும் அழியாம, தலைமுறை தலைமுறையா பாதுகாத்து பரப்பியாச்சு... ஆனா இன்னமும் இண்டர்நெட் வழியாவும் இதப்பரப்பி அடுத்த தலைமுறையையும் கெடுத்து குட்டிச்சுவரா ஆக்கிறதுன்றது ரொம்ப தப்புங்க... நாம இன்னும் நிறைய திருந்தனும் மக்களே...  

உஷார் மக்களே... ‘’பஜார்ல உஷாரா இல்லேன்னா நிஜார அவுத்துருவாங்கன்னு’’ ஒரு வழக்குமொழி உண்டு... அவ்வளவுதான் நம்மளால சொல்ல முடிஞ்சது!!!

 

6 comments:

 1. உங்கள் தளத்தை இன்றுதான் படித்தேன் நன்றாக இருக்கிறது, வரலாறு, அறிவியல் இரண்டையும் கலக்கி கொடுக்கிறீர்கள், உண்மையில் நல்ல ஆக்கபூர்வமான விஷயங்களை கொடுத்தால் நம் மக்கள் படிக்க மாட்டார்கள் அதனால்தான் நம்ம ஊடகங்கள் எப்போதும் சினிமா காரர்கள் பின்னாடி போகிறார்கள்
  உங்கள் தளத்தை பார்வையிடுவது சிலரானாலும் அவர்கள் சிந்திக்க தெரிந்தவர்கள், சான்றோர்கள் அதிகம் பேர் வரவேண்டும் என்பதற்காக நீங்களும் குழம்பிய குட்டைக்குள் மீன் பிடிக்க வேண்டாம்.
  உங்களை போன்று கலையரசன் ஒருவர் இருக்கிறார் kalaiy.blogspot.com உலக வரலாறுகளை மிக தெளிவாக எளிமையாக கொடுப்பதில் சிறந்தவர், அவர் தளத்திற்கும் சிலரே வருவர்.
  ஆனாலும் உங்கள் தளங்கள் காலத்தை தாண்டி நிற்கும். வரும் சந்ததியனருக்கு அறிவியல் வரலாறை அள்ளி கொடுக்கும் பொக்கிஷங்கள்
  மற்ற தளங்களில் வரும் பதிவுகள் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பின் குப்பைகளாக மாறி விடும். கவலை வேண்டாம் தொடருங்கள் உங்கள் பணியை
  இதோடு facebook link கொடுங்கள் முகநூல வாசகர்களுக்கு முடிந்த அளவு சென்று சேர்க்க என்ன முடிந்த அளவு செய்கிறேன்

  ReplyDelete
 2. ராஜபக்சே விற்கு இது மாதிரி எதாவது வைத்தால் பரவாயில்லை.
  அப்புறம் பார்பனுக்கு இது மாதிரி செய்து அவன் கொட்டத்தை அடக்க வேண்டும்.
  அவர்களின் மனு தர்மத்தை உலகில் எங்காவது ஏற்று கொள்வார்களா? வெட்க கேடான விசயத்தை பரப்பி சக மனிதரை இழிவு செய்யும் அவர்களுக்கு இது மாதிரி செய்து ஆப்பு வைக்க வேண்டும்.
  இதெல்லாம் நடக்குமா... கடவுளை போல இல்லாத ஒன்றை எப்படி செய்வது. வேண்டுமானால் இதை செய்யும் ஆள் நன்றாக பணம் பண்ணுவான்.

  ReplyDelete
 3. நாட்டில கிடைக்காதா தீவிரவாதிங்க, சமூக விரோதீங்க மேல எல்லாம் சூனியம் வச்சு பிடிக்கலாம்.......... அத பன்னுவானுன்களா?! அருமையா எழுதியிருக்கீங்க. உங்க டெம்ப்ளேட்டு, எழுத்துகளும் ஒரே மாதிரி இருப்பதால் இடுக்கைகள் பெயரைப் படிக்க மிகவும் சிரமமா இருக்கு. பதிவில் பயன்படுத்தும் ஃபாண்ட் கலர் அடிக்கிறது, அதன் கலரும் அதன் பின்னணியும் மேட்ச் ஆகவில்லை. விரும்பினால் சரி செய்யலாம்.

  ReplyDelete
 4. hello onnum theriyalana mudittu summa irukkanum...yellam therinja maathiri oru article vera....vengayam

  ReplyDelete
 5. தலை வலியும்,வயறு வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்.அடுத்தவர்களுக்கு வந்தால் அது இளக்காரம் தான்.

  ReplyDelete
 6. தலை வலியும்,வயறு வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்.அடுத்தவர்களுக்கு வந்தால் அது இளக்காரம் தான்.

  ReplyDelete