SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Saturday, September 29, 2012

பிரபல பதிவராவது எப்பூடி?...

 

ஏற்கனவே இந்த தலைப்புல பலபேர் எழுதியிருந்தாலும் இயல்பாகவே நமக்கு கொஞ்சம் நக்கல் ஜாஸ்தின்றதால நானும் இதை எழுதறேன் பாஸ்...

இதப்படிச்சிட்டு யாரும் கோவப்படக்கூடாதுன்றது முக்கியமான கண்டிஷன்... இதுல குறிப்பிட்டிருக்குற எந்த விஷயமும் எந்தவித தனி மனிதர் சம்பந்தப்பட்டதும் இல்லைன்னும், கோ-இன்சிடன்ட்டா யாரோடவாவது இது லிங்க் ஆனமாதிரி தெரிஞ்சிதுன்னா அதுக்கு ‘’கதம்ப மாலை’’ பொறுப்பில்லைன்னும், அதை யாரும் சீரியசா எடுத்துக்க வேணாமுன்னும் தாழ்மையோட அறிவிச்சிக்கிறேனுங்க!!!

என்ன மாதிரியே பதிவுலகத்துல பலவித எழுத்துக் கனவுகளோட எழுத வந்தவரா நீங்க?...

‘’வாங்க பாஸ் வாங்க...கந்தர்வக்கோட்டை உங்களை அன்புடன் வரவேற்கிறது’’...!!!

எழுத வந்தீட்டீக சரி... வெறுமனே பத்தோட ஒன்னு பதினொன்னா நீங்களும் எழுதிக்கிட்டே இருக்க முடியுமா?... பெரிய பிரபல பதிவராகவேண்டாமா?... அதாங்க இங்க கச்சேரி!

தரமான பதிவுகளை எழுதிட்டு நிச்சயம் நம்மளை பதிவுலகம் அங்கீகரிக்கும்... நாமளும் பிரபல பதிவராவோம்னு நம்பிக்கிட்டு இருந்தீகன்னா... அய்யோ பாவம்... ரொம்ப அப்பாவிங்க நீங்க!

தரமான பதிவுகளை எழுதுறதால மட்டுமே நீங்க பிரபலமாக முடியாதுங்கோவ்... அதுக்கு வெளிய தெரியாத பலவழிங்க இருக்குது... எனக்குத் தெரிஞ்சதை நான் சொல்றேன். முடிஞ்சா பிக்கப் பண்ணி பொழச்சுக்கோங்க... அம்புட்டுதேன்!

முதல்ல உங்க பேரு... வெறுமனே உங்க பேர்லயோ... இல்லை டீசன்ட்டான புனைப்பெயர்லயோ எழுதுனீகன்னா... ஸாரிங்க, நீங்க இன்னும் நெறய வளரனும்!

நீங்க எந்தப்பேர்ல எழுதப்போறீகன்றதும் உங்க பப்ளிசிட்டிக்கி ரொம்ப முக்கியம் (வரலாறு முக்கியம் அமைச்சரே!)... முடிஞ்சா சொந்தமா திங்க் பண்ணுங்க... முடியாதவக கீழேயிருக்கிற பேர்கள்ல எதவேண்ணா இலவசமா யூஸ் பண்ணிக்கலாம்... காப்பிரைட்டுல்லாம் எதுவும் கிடையாது!

முயல் முக்ஸ்

புறா

காக்கா

கொசு

நாய்க்குட்டி நாராயணசாமி

மாத்தாம யோசி

பாய் போஸ் (இதான் சொந்தக்காசுல சூனியம் வச்சிக்கிறதா?!)

பாண்டு@பரண்டு

குண்டுக்கல் குணவாளன்

குறுக்கு வீதி குப்புசாமி

மேலூர் கானா குமார்

எல்லத்தான்

கிலாசபி கிருபாகரன்

வாட்டான்

கவனச்சிரியன்

வீட்டுப்பூச்சி

தலைவர் த தங்கராசு

பெரிய மனுசன்

சின்னப்பையன்

மாட்டுக்காரன்

கிராமத்தான்

ஷகிலா பானு

இவர்கள் பொய்கள்

துடைப்பாளி

சேட்டன்

அஞ்சும் புலி

அம்மாச்சி

பழைய பந்தல்

முனகு

இப்படி லிஸ்ட் நீண்டுகிட்டே போகுமுங்க. இதுக்கு மேலேயும் எழுதுனா வம்பு தும்பு ஏதாச்சும் வரலாம்ன்றதால இதுக்கு மேல நீங்களும் கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுத்து யோசிச்சிக்கோங்க பாஸ்...

சரி... எந்தப்பேர்ல எழுதலாம்ன்றது மாதிரியே உங்க தளத்துக்கு என்ன பெயர் வைக்கலாம்... எப்படி உங்களை நீங்க அறிமுகப்படுத்திக்கலாம்னெல்லாம் ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு. அது கொஞ்சம் பதிவுலகத்துல சந்து பொந்தெல்லாம் பூந்து வந்தீகன்னா உங்களுக்கே தெரிஞ்சி போகும்! 

சரி... பிளாக்குக்கும் பேர் வச்சிக்கலாம். அப்புறம் என்ன?... வெறென்ன... பிரபலமாக என்ன எழுதலாம்?...

சீரியஸா சொன்னாக்கா ‘’ நீங்க எழுதுற நல்ல பதிவுகளுக்கு நடுவில் அப்பப்போ ஊறுகா மாதிரி சினிமா, கில்மா மாதிரி சமாச்சாரங்களெல்லாம் எழுதுனீகன்னா நெறய வாசகர்களை உங்கள் பக்கம் இழுக்கலாம்’’னு சொல்வேன். ஆனா இது சீரியஸ் பதிவல்ல!!!

அதுனால நீங்க பிரபல பதிவராகனும்னா கீழ்க்கண்ட விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிச்சே ஆகனும்ப்பா...


·         பதிவோட தலைப்புக்கும் பதிவுக்கும் கண்டிப்பா சம்பந்தம் எதுவும் இருக்கக்கூடாதுங்கோவ்...

·         அப்புறம்... முடிஞ்சா பதிவோட தலைப்புலேயே ‘’அந்த’’, ‘’அது’’, ‘’18++’’ அப்பிடின்ற வார்த்தையெல்லாம் யூஸ் பண்ணீகன்னா பேஜ்வியூஸ் சும்மா அள்ளுமுங்க!

·         அப்புறம் மத்த பதிவர்களோட பதிவெல்லாம் படிக்காமலேயே சும்மாவே ‘’சிறந்த படைப்பு’’, ‘’வாழ்த்துக்கள்’’, அப்பிடி இப்பிடின்னு பின்னூட்டம் போடனும். அதுலேயும் மறக்காம பின்னூட்டத்திலேயே கூச்சமில்லாம உங்களோட பதிவுக்கு லிங்க் குடுக்கத்தெரியனும்!

·         இன்னும் பேமஸாகனும்னு நெனச்சீகன்னா பிரபலமான பதிவுகளோட பின்னூட்டத்தில போயி கன்னா பின்னான்னு சம்மந்தமேயில்லாம நெகட்டிவ் கமெண்ட்ஸ் போடத்தெரிஞ்சிருக்கனும்...

·         அப்புறம் முக்கியமானது... முடிஞ்சவரைக்கும் பிரபலமாகாத ஒரு பத்து பதினைஞ்சு பேரை டார்கெட் பண்ணி அவுகளோட இ-மெயில் அனுப்பி, மொபைல் நம்பரையும் வாங்கி ஒரு குரூப் ஃபார்ம் பண்ணீட்டிகன்னு வையுங்க... நீங்கதான் பாஸ் அப்புறமா பதிவுலக பிரபலம்! (ஏன்னா உங்க குரூப் மூலமா உங்களுக்குள்ளேயே ரொட்டேஷன் முறையில் மாத்தி மாத்தி ஓட்டு போட்டுக்கலாம் பாருங்க!).

·         அது மட்டும் இல்லைங்க... ஆரம்பத்துல கொஞ்ச நாளைக்கு பல கம்ப்யூட்டர் மூலமா பல ஐடி வச்சிக்கிட்டு உங்களுக்கு நீங்களே ஓட்டு போட்டும் பிரபலமாகலாம்னு சொல்றாய்ங்க!

·         எல்லாத்தவிட முக்கியமானது நீங்க தரமா மாசத்துக்கு ஒரு பதிவுன்னு எழுதுனாக்க வேலைக்கே ஆகமாட்டிங்க. டெய்லி ஒரு பதிவு கண்டிப்பா போட்டே ஆகனுங்க. உங்க வீட்டுல நாய் குட்டி போட்டது, செடியில பூ பூத்தது, பிச்சைக்காரனுக்கு சோறு போட்டது, பொண்டாட்டி துணியெல்லாம் துவைச்சுப்போட்டதுன்னு ஒன்னு வுடாம பதிவுல எழுதிட்டீகன்னு வையுங்க... உங்களையும்கூட ஆஹா ஓஹோன்னு அதகளப்படுத்துவாங்க போங்க...!!!

·         அப்புறமா எங்கே சுண்டல் சாப்பிட்டாலும், பஜ்ஜி சாப்பிட்டாலும் எண்ணெயப் பிழிஞ்சிட்டு கீழே போடறதுக்கு முன்னாடி மறக்காம அந்தப் பேப்பர்ல என்ன இருக்குன்னு படிச்சிப்பாத்தீகன்னா ஏகப்பட்ட பதிவு போடலாமுங்க! அதுதான் ஹிட்டோ ஹிட்டாவும் ஆவுமுங்க!!!

·         முடிஞ்சாக்க... உங்க மதம்தான் சூப்பரு... உங்க ஜாதிதான் சூப்பரு... அப்பிடின்னு கெளப்பி வுட்டீகன்னு வையுங்க... அப்புறம் என்ன... ஃப்ரீ பப்ளிசிட்டிதான் போங்க!

·         இல்லைன்னா ஒரு குறிப்பிட்ட மதத்தோட ஆளு மாதிரி நீங்க பேரு வச்சிட்டு எழுதுனாலும் ஆட்டோமேட்டிக்கா ஒரு பெரும் கும்பல் வந்து அவுகளே நீங்க என்ன எழுதுனாலும் சரி... என்ன ஏதுன்னே பாக்காமலேயே ஓட்டைப்போட்டு உசரத்துல தூக்கி வுட்டுறவாக!

·         வேலை வெட்டிக்கு போகலன்னாகூட பரவாயில்லை. ஆனா புதுப்படம் ஒன்னு வுடாம ரிலீஸ் ஆன அன்னைக்கே பாத்துப்புட்டு விமர்சனம் எழுதுனீகன்னா டாப்புதான்ங்க. (நெறயப்பதிவருங்க இப்போல்லாம் ரிலீஸ் ஆகி, முத ஷோவுக்கு டிக்கெட் வாங்கி படம் பாத்துட்டு வந்து, அவசர அவசரமா டைப் பண்றதுக்குள்ள எவனாவது முந்திக்கிறானுகன்னு சொல்லி பிரிண்ட் போடுற இடத்துக்குள்ளேய நுழைய அனுமதி கெடக்குமான்னு அலைஞ்சிட்டிருக்காகளாம்!)

·         அப்புறமா முக்கியமான விஷயம்... நம்மளைத்தவிர எவனாவது உருப்படியா தரமான பதிவு எதாச்சும் எழுதிட்டான்னு வையுங்க... எப்புடியாவது அவனை மேல வர வுடாம பாத்துக்கனுங்க! அப்புறம் மைனஸ் ஓட்டை எப்போ, எங்கே, எப்படி யூஸ் பண்ணனும்னு தெளிவா தெரிஞ்சி வச்சிக்கிட்டீகன்னா அதுவும் நீங்க பிரபலமாகிற வழிதாங்கோவ்!

·         அப்புறம் மறக்காம பார்ப்பானியம், பார்ப்பன், ஆரியம், ஈழம், விடுதலைப்புலிகள், தமிழர்கள் இந்த மாதிரி வார்த்தைகளெல்லாம் முடிஞ்ச வரைக்கும் யூஸ் பண்ணனும்ன்றது ரொம்ப முக்கியமுங்க!

·         ஒருவேளை நீங்க பெண்ணாக இருந்தால் ‘’ஆணாதிக்கத் திமிரை அடக்குவோம்’’, ‘’பெண்ணியம்’’ அப்பிடி இப்பிடின்னு அடிச்சி வுட்டீகன்னா பெண்கள் ஆதரவு சும்மா அள்ளும் போங்க! அப்பிடியே கவிதை எழுதும்போது புரட்சின்ற பேர்ல சும்மா நாலு கெட்டவார்த்தையை தூயதமிழ்ல சேத்து எழுதிப்புட்டீகன்னா ஆம்பிளைங்க கூட்டம்கூட அள்ளும் போங்க!

·         எல்லாத்தை வுட முக்கியம்... இங்கிலீஷ் வூட்டுப்பையன், அறிவாளிப்பையன், புழங்காதவன், குடும்பன், புடவச்சாமி இப்படி யாராவது கொஞ்சபேரு உங்களை எடக்கு மடக்கா கலாய்க்கிற அளவுக்கு பதிவெழுதனும். அப்புறமா அவுகெல்லாம் கழுவி கழுவி ஊத்துனாலும் ஒன்னுமே நடக்காத மாதிரி துடைச்சிப் போட்டுட்டு, உருப்படாத விசயங்களையே தொடர்ந்து எழுதனும். அப்பிடி மட்டும் பண்ணிப்புட்டீகன்னா நீங்கதாங்க டாப்போ டாப்பு!!!
 
அய்யோ... நம்ம ஸ்டார்ட் பண்ணோம்னா நிக்காம வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்குவோம்ன்றதால இத்தோட நிறுத்திக்கிறது உத்தமம்னு தோணுது. கரெக்ட்தானே?
 
எப்பிடியோ... பல பிரபல பதிவர்களை உருவாக்கப்போற விஷயத்துக்கு நானும் சில யோசனைகளை சொல்லியிருக்கேன்னு நெனச்சாக்க புல்லரிக்குது போங்க!

எப்பூடி?...

 

Sunday, September 23, 2012

‘’பாரதப்பிரதமர்’’ – அடுத்த தகுதி யாருக்கு?...


இந்தப்பதிவின் மற்றுமொரு சிறப்பு(என்பார்வையில்)... இது எனது 100வது பதிவு. இதுவரை எனக்கு ஆதரவளித்த அனைத்து தோழமைகளுக்கும், பதிவுலகத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...

 வழக்கம் போல ஒரு அரசியல் பல்டி. இந்தமுறை மம்தா பானர்ஜியால் அடிக்கப்பட்ட பல்டி இது. ஊடகங்களுக்கு ஒரு வாரத்திற்கு பரபரப்பு செய்திகள் கிடைத்ததை தவிர உருப்படியாய் ஒன்றும் நடக்கப்போவதில்லை என்பது அரசியல் தெரிந்த நடுநிலையாளர்களுக்கு முன்னமே புரிந்திருக்கும். கூட்டணியில் எவரோ ஒருவருக்கு திடீரென்று நாட்டு மக்களின் மீது பாசம் வரும். உடனே ஆதரவு வாபஸ் நாடகங்கள் அரங்கேறும். பணப்பெட்டி மற்றும் பதவி வியாபாரம் சூடுபிடிக்கும். பேரம் முடிந்ததும் வேறொரு கட்சி ஏதாவது மத்திய அரசை தாங்கிப்பிடிக்கும். இதுதான் காலம் காலமாய் நமது அரசியல் கட்சிகளால் காப்பாற்றப்பட்டு வரும் எழுதப்படாத அரசியல் விதி (இதையே ஒருசில கட்சிகள் அரசியல் சாணக்கியத்தனம் என்பது நமது தலையெழுத்து!).

இருந்தாலும் மத்தியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்து ஆட்சி கவிழப்போகும் ஆபத்தில் இருப்பதாக ஊடகங்கள் அலறியதும் எனக்குள் ஒரு பொறி... சரி, ஆட்சி கவிழ்ந்தாலும் சரி... கவிழாவிட்டாலும் சரி... எப்படியும் கண் மூடி கண் திறப்பதற்குள் 2014 வந்துவிடும். பாரதத்தின் அடுத்த பிரதமராகும் தகுதி யாருக்கு என்று ஒரு சின்ன அலசல் பார்த்துவிடலாம் என்று தோன்றியது.

அரசியல் என்றாலே... அது பவருடன் கூடிய பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறி வெகுகாலம் ஆகிவிட்டது. பதவிக்கு வரும் முன் சோத்துக்கு சிங்கியடித்துக் கொண்டிருந்த நமது லோக்கல் கவுன்சிலர்கள் பலரின் இன்றைய சொத்துமதிப்பை ஆராயத்தொடங்கினால் இதயநோய் மருத்துவமனைகள் எல்லாம் ஹார்ட் அட்டாக் நோயாளிகளால் நிரம்பிவிடும் அபாயம் உண்டாகலாம்!!!

கவுன்சிலர்களின் பிசினெஸ் மட்டுமே இப்படியென்றால்... எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், பிரதம மந்திரி என்று நீளும் பட்டியலின் பிசினெஸ் எந்த அளவில் இருக்கும் என்பது சாமான்யன்கள் பலபேருக்கு எள்ளளவும் தெரியாத ரகசியங்கள்தான்.

சரி... இன்னக்கு நிலைமைக்கு காமராஜ், கக்கன்ஜியை எல்லாம் கல்லறையிலிருந்து எழுப்பிக்கொண்டு வரமுடியாது. (போஸ்டர்களில் வேண்டுமானால் துளிகூட வெட்கமில்லாமல் ‘’வாழும் காமராஜரே’’... ‘’மீண்டும் வந்த கக்கன்ஜியே’’ என்றெல்லாம் அடைமொழி போட்டுக்கொள்ளலாம்!)

அதனால் பிரதமர் பதவிக்கு அடுத்த தகுதி யாருக்கு என்று அலசும்போது இருக்கிற திருடர்களில் நல்ல திருடன் யார் என்றுதான் அலசமுடியுமே ஒழிய நம்முடைய இறுதி முடிவில் நோ... நோ... இவர் மீது அந்தக்குற்றச்சாட்டு... இந்தக்குற்றச்சாட்டு என்று விவாதிக்கமுடியாது என்பதும் கணக்கில் கொள்ளப்பட வேண்டிய இந்தக் கட்டுரைக்கான அடிப்படை விதி!

முதல்ல நம்ம அண்ணன் ‘’மண்’’மோகன் சிங்... சாரிப்பா... டங்க் சிலிப் ஆயிடுச்சு... மன்மோகன்சிங்!

அவரே பாவம்... ‘’முதல்ல ஒரு அஞ்சு வருஷம்தான்னு சொன்னாங்க. நானும் நம்பிப்போனேன்... ஆனா மறுபடியும் ஒரு அஞ்சு வருஷம்... மூச்சுத்திணற திணற சமாளிச்சாச்சு’’ அப்படின்னு வடிவேலு மாதிரிதான் அவரு மனசுலேயும் டயலாக் ஓடிட்டிருக்குன்றது சத்தியமா நெசமுங்க. அதுமட்டுமில்லாம காங்கிரஸ் மறுபடியும் அவருக்கு சீட் கொடுத்தாலும் நாட்டு மக்கள் அய்யாவை நம்பி இன்னொரு வாட்டியும் நாட்டை ஒப்படைப்பாங்களான்றது டவுட்டுதான்ங்க. ஏன்னா 2ஜி, 3ஜி, காமன்வெல்த், சில்லறை வணிகம், பெட்ரோல் டீசல் விலை, மவுனச்சாமியார்ன்னு அய்யாவோட ரேட்டிங் வரலாறு காணாத அளவுக்கு எகிறிக்கிடக்கு. அதுனால இவரோட பத்து வருஷ ‘’சாதனை’’களைப் பாராட்டி நாமே கவுரவமா இவரை லிஸ்ட்ல இருந்து தூக்கிரலாமுங்க.
 
யப்பா... ஆளை வுடுங்கடா சாமீ...!

காங்கிரசுல அடுத்து யாரு?... மன்மோகனுக்கு வெடிவச்சிட்டு எப்படியாவது பிரதமர் ஆகிறனும்னு துடிச்சிட்டிருந்த ‘’பொருளாதாரப்புலி’’ நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜியை பிரதமர் இல்லம் என் பையனுக்காக புக் பண்ணி வச்சிருக்கேன். அதுனால நீ குடியரசுத்தலைவர் மாளிகையை எடுத்துக்கோன்னு சொல்லி சோனியா மேடமே கச்சிதமா காரியத்தை முடிச்சிட்டாக... அடுத்து யாரு?... அவுக இல்லாட்டி அவுக புள்ளையாண்டன்தான் காங்கிரசோட அடுத்த லிஸ்ட். அதைத் தவிர காங்கிரசோட வெறெந்த கோமாளியையும் நாட்டு மக்கள் ஏத்துக்க மாட்டாகன்றது நம்ம மேடம்ஜிக்கு நல்லாவே தெரியுமுங்கோவ்!
ஏற்கனவே நான் எழுதுன சில பதிவுகள்ல காங்கிரசோட ''சாதனை''களை தொகுத்து வழங்கியிருக்கேன்...
கதம்ப மாலை...: ஊழல் மேல் ஊழல்… நாம வெட்கம் கெட்ட ஆட்கள்!

சரி, அப்போ மேடம்ஜியே பிரதமர் பதவிக்கு நிப்பாகளா? அதெப்படிங்க முடியும்? அதான் ஏற்கனவே முதவாட்டியே சர்ச்சை வந்தப்ப வீராப்பா அந்தப்பதவிய தூக்கி அய்யா மன்மோகனுக்கு குடுத்திட்டாகல்ல?...!

அப்போ மீதியிருக்கிறது இளங்காளை திருவாளர் ராகுல்ஜிதான்! ராகுல்ஜி காங்கிரசோட பி.எம் கேன்டிடேட்டா மட்டும் பாத்தா அவுக கட்சிக்காரக எல்லாம் வேணா ஆஹா ஓஹோன்னு சொல்லலாம். அதேமாதிரி பாமர ஜனங்களோட பார்வையிலேயும் ராகுல்ஜிக்கு கொஞ்சம் வாய்ஸ் இருக்கலாம். ஆனா ஒரு நடுநிலைமையாளனா பாத்தா பாரதப்பிரதமர்ன்றது எவ்வளவு பெரிய பதவி... அதுக்கு இந்த சின்னவரோட தகுதி எந்தளவுக்கு சரியா இருக்கும்ன்றது டவுட்டுதாங்க. (‘’டேய் அதுக்கு நீ சரிப்படமாட்டடா’’ன்னு கடைசிவரைக்கும் எதுக்குன்னே சொல்லாத வடிவேலு காமெடிதான் நம்ம நெனப்புக்கு வருது!).

படிச்சவன்லாம் பெரும்பாலும் ஓட்டு போட போவமாட்டான்னு ஒரு நெலமை நம்ம நாட்டுல இருந்தாலும் இப்போதைய காலகாட்டத்தில படிச்சவங்ககிட்டகூட கண்டிப்பா ஓட்டு போடனும்னு ஒரு விழிப்புணர்ச்சி இருக்கிறது சின்னய்யாவுக்கு பின்னடைவுதான். அதுமட்டுமில்லாம இந்த அன்னா ஹசாரே ஆளுங்க வேற ஏற்கனவே காங்கிரசுக்கு எதிரா தீயா வேலை செய்ஞ்சிட்டு இருக்காய்ங்க. இந்த நிலைமைல குருவி தலையில பனங்காய வச்ச கதையா ராகுல்ஜிதான் பிரதமர் வேட்பாளர்னு காங்கிரஸ் அறிவிச்சுதுன்னா... சாரிங்க... நம்மோட அலசல்ல ராகுல்ஜி ரிஜெக்டடு... அம்புட்டுதேன் சொல்லமுடியும்!

நமக்கு தெரிஞ்சி ஒன்னு மன்மோகனையே காங்கிரஸ் மறுபடியும் பிரதமர் வேட்பாளரா முன்னிறுத்தும். இல்லாட்டி அன்னை சோனியாவே பிரதமர்னு அறிவிச்சு நின்னாகன்னா காங்கிரஸ் ஏதோ தலை தப்புமான்னு பாக்கலாம். மத்தபடி பிரதமர் பதவிக்கு தகுதியானவர்னு சர்ட்டிபிகேட் குடுக்குற அளவுக்கு காங்கிரசுல பெருசா எந்த அறிவுஜீவியும் இல்லைன்றதுதான் நெசமோ நெசம் சாமீ...!

சரி, காங்கிரஸ் கதைதான் இப்புடி. எதிர்கூடாரத்துல என்ன சங்கதின்னு எட்டிப்பாத்தாக்க அங்க ஓரளவுக்கு தகுதியான ஆளுங்க இருந்தும் ஏகப்பட்ட வீக்பாயிண்டுங்க.

பிரதான எதிர் கூடாரத்துல அத்வானி, நிதின் கட்காரி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, நரேந்திர மோடின்னு லிஸ்ட் பெருசா இருந்தாலும் உட்கட்சி விவகாரம், ஆர்.எஸ்.எஸ் தலையீடுன்னு பிரதமர் வேட்பாளர் தேர்வுல அவுக தலையில அவுகளே மண்ணள்ளிப் போட்டுக்கபோற சமாச்சாரங்கள் நெறய இருக்கு. பி.ஜே.பிய பொருத்தவரைக்கும் காங்கிரசுக்கு எதிரான மக்கள் மனசு அவுகளுக்கு வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்துனாலும்... பிரதமர் வேட்பாளரா பி.ஜே.பி யாரை நிறுத்தப்போறாகளோ அதவச்சிதான் முடிவுன்றது சாமான்யனுக்கும் தெரிஞ்ச சமாச்சாரம். இன்னைய சூழல்ல வாஜ்பாய் மாதிரி ஒரு தலைவர் நல்ல உடல் நலத்தோட இருந்து, பி.ஜே.பியும் அவுகளை பிரதமர் வேட்பாளரா அறிவிச்சாகன்னா காங்கிரஸ் என்ன குட்டிக்கரணம் போட்டாலும் ஜெயிக்க முடியாதுன்றது எல்லாருக்கும் தெரியும். ஆனா பி.ஜே.பியில நெலம அப்பிடியில்லை. வாஜ்பாய் அரசியல்ல இருந்து ஒதுங்கிட்டாக. அத்வானிக்கு நடுநிலைமையான ஆளுன்னு பேரு இல்லை. அதுமட்டுமில்லாம பழையமாதிரி வாய்ஸ் மக்கள்கிட்டேயும் இல்லை... அவுக கட்சிக்குள்ளேயும் இல்லை. அதுனால அவுகளும் ரிஜெக்டுதான்.

அப்புறமா நிதின் கட்காரி... பெரிசா நாடு பூராவும் மக்கள் செல்வாக்குள்ள சக்தியா இன்னமும் ரீச் ஆகலைன்றதால அவுகளும் ரிஜெக்டுதான்.  அடுத்து சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி... இவுகளையெல்லாம் கட்சிக்குள்ளேயே வளர விடமாங்கன்றதும், பிரதமர் வேட்பாளர் அளவுக்கு இவுகளுக்கு தகுதி இருக்குதான்றதும் சந்தேக லிஸ்ட்தான்.

அடுத்து யாரு?... நாடு பூரா பரபரப்பா எதிர்பார்த்திட்டிருக்கிற பி.ஜே.பி ஹீரோ... நரேந்திரமோடி! இவரு சாதனைகள் ஆஹா ஓஹோன்னு இணையதளங்கள்லேயும் இளைய சமுதாயத்திலேயும் பரவிக்கிடந்தாலும், இந்துத்வா மதச்சாயம் இவரோட மெயின் வீக் பாயிண்ட்டுன்றது மறுக்க முடியாத நெசம். ஆனாலும் காங்கிரசை எதிர்த்து பி.ஜே.பி தாக்கு பிடிக்கனும்னா நரேந்திரமோடி மட்டும்தான் அவுகளுக்கு இருக்கிற ஒரே சான்ஸ்ன்றதும் பி.ஜே.பி புரிஞ்சிக்க வேண்டிய முக்கிய சமாச்சாரம். இதவிட்டுப்புட்டு... ஆர்.எஸ்.எஸ் சொல்லிச்சு, கட்சி கமிட்டி முடிவு பண்ணிச்சு, அப்பிடி இப்பிடின்னு இவுக வேற யாரையாவது பிரதமர் வேட்பாளரா நிறுத்துனாக்க... அது காங்கிரசுக்கு பி.ஜே.பி யே வெற்றி விட்டுக்கொடுத்து தன் தலையில தானே கொள்ளிக்கட்டைய எடுத்து சொறிஞ்சிக்கிட்ட சமாச்சாரமாத்தான் ஆகிப்போகும். பாக்கலாம்... 2014ல பி.ஜே.பி காரக என்ன முடிவு எடுக்கிறாகன்னு?...

இந்தக்கட்டுரைப்படி பாத்தாக்க முழு மனசோட ஆதரிக்கலேன்னா கூட நம்மளோட கருத்தும் நரேந்திரமோடிக்கு ஒரு தடவை சான்ஸ் குடுத்து பாத்தாக்க தப்பில்லைன்னுதான் தோணுது. நீங்க என்ன நெனக்கிறீக?...

இந்த ரெண்டு கூடாரத்தையும் தவிர்த்து மத்த கூட்டணிக்கூடாரமுன்னு பாத்தாக்க பிரதமர் கனவுல இருக்கிறது... செல்வி.மாயாவதி, செல்வி.ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, முலாயம்சிங். இந்த நாலுபேருக்கும் கனவிருந்தாலும் அதையெல்லாம் நாம ‘’கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்’’ அப்பிடின்னு பாடிட்டு ரிஜெக்ட் பண்ணிட்டு போயிட்டேயிருக்கனுமேயொழிய பிரதமர் பதவிக்கு இவுகளையெல்லாம் கற்பனையில கூட கம்பேர் பண்ணி எழுதி ரிஸ்க் எடுக்கக்கூடாதுங்கோவ்...!!!

ஆனாலும் இதே மாதிரி ஒரு கூட்டணிக் கூடாரத்துல இன்னொருத்தரும் இருக்காருங்க. பீகார் முதல்வர் ‘’நிதிஷ்குமார்’’. நம்ம கட்டுரையோட முடிவு ஹீரோவும், நம்ம சாய்ஸ்ம்கூட இவருதாங்க. இவரு ஒருங்கினைந்த ஜனதா தளம் கட்சி சார்பாக முதலமைச்சரா இருக்காரு. இவரு இருக்கிறது பி.ஜே.பி கூட்டணியிலதான்றது கவனிக்கவேண்டிய முக்கிய விஷயம்.

நாடு முழுவதுமான மக்கள் செல்வாக்கு இவருக்கு முழுமையா இல்லாம இருக்கலாம். ஆனா ‘’பாரதப்பிரதமர்’’ என்ற பதவிக்கான திறமையையும், தகுதியையும் மட்டும் பாத்தாக்க இப்போதைய அரசியல் தலைவர்கள்ல இவருதான் டாப் லிஸ்ட் சாய்ஸ்ன்றது எத்தனை பேருக்குத் தெரியும்னு தெரியலை. லாலுவும், ராப்ரியும் வெறும் சாணி தட்டுற ஊரா, திருட்டுக் கும்பலோட ஊரா வச்சிருந்த பீகாரை, அந்த ஜனங்க இவருகிட்ட ஒப்படைச்சதுக்கு அப்புறமா என்னமா மாத்தியிருக்காரு மனுஷன்?...

1951ல பொறந்த இவருக்கு அரசியல்வாதி அப்பிடீன்றது மட்டும் இல்லாம சமூக சேவகர், விவசாயவிஞ்ஞானி, இன்ஜினீயர்ன்ற முகங்களும் உண்டு. (NIT-பாட்னால எலெக்ட்ரிகல் இன்ஜினீயரிங் முடிச்சிருக்காரு இவரு) இவரோட முக்கியச்சாதனைகள் என்ன தெரியுமா?... முற்றிலும் சிதைஞ்சி போயிருந்த பீகார் ரோடுகளையெல்லாம் பளபளன்னு மாத்திருக்காரு. பல பாலங்கள் கட்டப்பட்டிருக்கு. ஒரு லட்சம் ஆசிரியர்களை புதுசா பணியிலமர்த்தியிருக்காரு. பிரைமரி ஹெல்த் சென்டர்கள்ல கிராமங்கள் வரைக்கும் கண்காணிச்சு டாக்டர்களோட அட்டெண்டன்சை உறுதிப்படுத்தியிருக்காரு. பீகார்னாலே கொள்ளைக் கும்பல்தான் நியாபகத்துக்கு வர்ற அளவுக்கு இருந்த நிலைமைய மாத்தி சட்டம் ஒழுங்க முழு கண்ட்ரோல்ல கொண்டு வந்திருக்காரு...

ஒரு மாநிலத்தோட வளர்ச்சிக்குத் தேவையான சாலை வசதி, மருத்துவ வசதி, கல்வி, சட்டம் ஒழுங்கு இவ்வளவையும் அதாள பாதாளத்துல கிடந்த ஒரு மாநிலத்தில சீர்படுத்தி கொண்டு வந்ததுன்றது எவ்வளவு கஷ்டமுன்னு கொஞ்சம் ஆழமா யோசிக்கிறவகளுக்குத்தான் புரியும்.

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை எலெக்ட்ரானிக் வெர்ஷனாக(ஜன்காரி ஸ்கீம்) மாற்றிய பெருமையும், கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை தொலைபேசி வழியில்(இ-சக்தி) தெரிந்து கொள்ளும் திட்டத்தை அறிமுகப்படுத்திய பெருமையும் இவரையேச்சாரும். 2005ல் முதல்வராக பதவியேற்ற இவர் ஆசிரியர் பணியிடங்களுக்கும், போலஸ் பணியிடங்களுக்கும் வேலைவாய்ப்பை உறுவாக்கி அதிகப்படுத்தியிருக்கிறார். அனைத்து மாவட்ட நீதிபதிகளும் கலந்துகொள்ளும் வகையில் கட்டாய வாராந்திர மீட்டீங் இவருடைய அரசில் நடத்தப்பட்டு வழக்குகள் விரைவாய் முடிந்து குற்றங்கள் பெருகாமல் இருக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பள்ளி மாணவிகளுக்கு சைக்கிளும் உணவும் வழங்கிய இவருடைய திட்டத்தால் பீகாரில் பெண் கல்வி அதிகரித்த புள்ளிவிவரங்கள் கணக்கிடப்பட்டிருக்கின்றன. (இந்த சைக்கிள் திட்டத்தில் ஊழல் நடந்ததாய் புகாரும் உண்டு!) இலவச மருந்துகள் வழங்கும் திட்டமும் கிராம்ப்புற ஹெல்த் ஸ்கீம்களும் இவருடைய ஆட்சியில்தான் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வெற்றியும் அடைந்திருக்கிறது. விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கும் திட்டமும் தேசிய வங்கிகளின் மூலமாக விரைந்து செயல்படுத்தப்பட்டிருக்கிறது.

GSDP எனப்படும் உற்பத்தி மற்றும் பொருளாதார குறியீட்டின் வளர்ச்சியில் பீகாரை இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தை பிடிக்கச்செய்தது நிதிஷ்குமாரின் சாதனையே. அதுமட்டுமில்லாமல் அதிக வரி கட்டுவோர் மாநில வரிசையிலும் கிழக்கிந்திய பிராந்தியத்தில் பீகார்தான் முதலிடத்தில் இருக்கிறது.

2010ம் வருட நடந்த தேர்தலிலும் பி.ஜே.பியுடனான கூட்டணியில் நிதிஷ்குமார் தனிப்பெரும்பான்மை பலத்தில் மீண்டும் முதல்வராக ஆட்சியிலமர்ந்திருக்கிறார். எவ்வித வன்முறையும் இல்லாமல் அமைதியாக நடந்த இந்தத்தேர்தலில் 25 இடங்கள் கைப்பற்றினால்தான் எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்கும் என்ற நிலையில் வெறும் 22 இடங்கள் மட்டுமே பிடித்து லாலுவின் கட்சி மண்ணைக் கவ்வியிருப்பதே இவருடைய முதல் ஐந்தாண்டுகால மக்களாட்சிக்கான சான்றாக எடுத்துக்கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் பீகாரின் தேர்தல் வரலாற்றிலேயே இந்தத் தேர்தலில்தான் முதன் முறையாக பெண்களும், இளைய சமுதாயமும் அதிகளவில் வாக்களித்திருக்கின்றனர் என்பதும் இவருடைய நல்லாட்சிக்கான ஒரு சான்றே.

இவருக்கு வழங்கப்பட்டிருக்கும் விருதுகள் என்னென்ன தெரியுமா?...

1) XLRI - Jamshedpur "Sir Jehangir Gandhi Medal" for Industrial & Social Peace 2011

2) MSN Indian of the year 2010"

3) NDTV- Indian of the year– Politics, 2010

4) Forbes "India's Person of the Year", 2010

5) CNN-IBN "Indian of the Year Award" – Politics, 2010

6) NDTV-Indian of the year – Politics, 2009

7)Economics Times "Business reformer of the Year 2009"

8)'Polio Eradication Championship Award' 2009, by Rotary Internationals

9)CNN-IBN - Great Indian of the Year – Politics, 2008

10)The Best Chief minister according to the CNN-IBN and Hindustan Times State of the Nation Poll 2007.

நரேந்திர மோடிக்கான வாய்ப்புகள் அதிகமிருந்தாலும் பி.ஜே.பி மனது வைத்தால் கூட்டணியில் இருக்கும் நிதிஷ்குமாரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம். ஆனால் அது அரசியலில் நிகழ சாத்தியமில்லை என்பது நிச்சயம்.

‘’பாரதப்பிரமர்’’ – அடுத்த தகுதி யாருக்கு?...

நம்ம சாய்ஸ்சில் ரேஸில் முந்துவது...

முதலிடம் ;- திரு.நிதிஷ்குமார்
 
 

இரண்டாமிடம் ;- திரு.நரேந்திரமோடி


மூன்றாமிடம் ;- சாரிங்க... இது நம்ம லிஸ்ட்டில் இன்னமும் காலியிடம்தான்!!!

 

Saturday, September 22, 2012

வயது வந்தவர்களுக்கு மட்டும்...!

இது ஆபாசத்தை பரப்பும் நோக்கில் போடப்பட்ட பதிவல்ல.

அத்துடன் கண்டிப்பாக இது வயது வந்தவர்களுக்கான பொழுதுபோக்கு மட்டுமே...!!! அதுனால சின்னப்பசங்க யாராவது இதைப்படிச்சிட்டு இருந்தீங்கன்னா கெட் அவுட் ப்ளீஸ்...

நெட்டுல சும்மா ப்ரௌஸ் பண்ணிட்டு இருந்தப்போ பல விதமான புகைப்படங்களை பார்க்க நேர்ந்தது. அட வித்தியாசமா இருக்குப்பா... இதை நம்ம ஆளுங்களோட ஷேர் பண்ணியே ஆகனும்னு தோணுச்சு...

லேடீஸ்லாம் இதுக்கு மேல தொடராதீங்கம்மா... அப்புறம் கோவப்படப்போறீக!

சரி... இப்போ டேக் ஆஃப்...

முதல்ல இண்டர்நெட் கேர்ள் ஃபிரண்டு பத்தின போட்டோஸ்...

இப்பல்லாம் பயபுள்ளைக இண்டர்நெட்லயே ஃபிகரை பாக்குறது, சாட் பண்றது, டேட்டிங் போறதுன்னு ஸ்பீடா இருக்கானுக... ஆனா அதே இண்டர்நெட் சாட்ல இந்த மாதிரி ஆபத்துக்களும் (ஆப்புகளும்) இருக்குன்றது புரிஞ்சிக்கோங்கடோய்...!!!

 

 

 
 
 
யம்மாடியோவ்... இதப்பாத்ததுக்கு அப்புறமாவது பயபுள்ளைக நெட் கேர்ள் ஃபிரண்டுங்களுங்ககிட்ட உஷாராவாய்ங்களா மாட்டாங்களா?...
 
 
 
அப்புறம் இந்த போட்டோஸ்ல க்ராப் (crop) அப்பிடின்னு ஒரு ஆப்ஷன் இருக்குது. அதே ஆப்ஷனை வச்சு என்னென்ன பண்ணலாம்னு ஒரு ரவுண்டு வந்தப்போ மேல இருக்குற படங்கள் மட்டுமில்லாம இன்னும் கொஞ்சம் ஐயிட்டங்களும் மாட்டுச்சு... அதையும் பாத்திரலாமா?... (என்னா வில்லத்தனம்?...)
 

 
 
 
 
ச்சீய்ய்... இப்படி கூடவா யோசிப்பாய்ங்க?...

 
 


சரி... இதுவரை க்ராப் போட்டோஸ் பாத்தாச்சு... இப்போ அடுத்ததா போட்டோ எடுக்குறப்ப தற்செயலா போட்டோல பின்னாடி மாட்டுன வில்லத்தனங்களை பாப்போமா?....!!!!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
ச்ச்ச்சீய்ய்... இப்படில்லாம் கூடவா போட்டாவுல சிக்குவாய்ங்க...!!!
 
நம்ம கூகுள் பத்திகூட ரூம் போட்டு உக்காந்து யோசிச்சி எவனோ ஒரு பயபுள்ள போட்டோ எடுத்திருக்கான்... கடைசியா அதையும் பாத்திருங்க... அசந்து போயிருவீக...
 
 
 
என்னங்க... எல்லா போட்டாவையும் பாத்தீகளா?... இது சும்மா ஒரு அடல்ட்ஸ் பொழுதுபோக்குதானேயொழிய வேறெதுக்காகவும் இல்லைங்க... அதனால போட்டாவெல்லாம் பாத்து முடிச்சிட்டு கடைசியில சேய் இதையெல்லாம் கூடவா பதிவுல போடுவாய்ங்கன்னு மூஞ்சை சுழிச்சிட்டு நடிச்சிட்டு போயிராதீங்க பாஸ்...!!! ஜஸ்ட் பாத்தோமா... டைம் பாஸ் பண்ணோமான்னு என்ஜாய் பண்ணிட்டு போயிட்டே இருக்கனும்... ஓகே?...
 
வுடு ஜீட்...

 

Tuesday, September 18, 2012

பதிவுலகமும்... குழாயடிச்சண்டையும்...


அல்லாருக்கும் வணக்கமுங்கோ...

அய்யய்யோ... நான் ஏதோ ஊர் பாஷையில ‘’அல்லா’’ருக்கும்னு சொல்லிப்புட்டேன்... உடனே ஏய் இவன் இஸ்லாமியப் பதிவர்டா... விடக்கூடாதுடா இவனைன்னு காதை சொறியறேன்... மூஞ்சை நக்குறேன்னு யாராவது பதிவு போட்டிரப்போறீங்க சாமீ...

இன்னொரு கும்பல்லேயிருந்து உடனே அதுக்கு எதிரா... ‘’டேய் இவன் நம்ம ஆளுடா... தமிழ்மணத்துல ஓட்டைப்போட்டு இவனை டாப்புக்கு தூக்கி வுடுங்கடா’’ன்னு கெளம்பிரப்போறாய்ங்க...!!!

தாய் புள்ளையா பழகிட்டு நல்லாத்தானேய்யா இருந்தீக... என்னய்யா திடீருனு ஒரு பத்து நாளா சந்தைக்கடை சிரிப்பா சிரிக்குது... சென்னை பதிவர் சந்திப்பு... அப்படி இப்படின்னு... ஆஹா ஓஹோன்னு பரபரப்பு அடங்குறதுக்குள்ளாவே ஒருத்தருக்கு ஒருத்தர் உரச ஆரம்பிச்சிட்டீகளே... பூனையை ரொம்ப நாளா மடியில கட்டிட்டு இருக்க முடியாம வெளிய குதிச்சிடுச்சா?... இல்லை இது சும்மா வெறும் புகைதானா?...

எனக்கு முன்னாடியே தெரிஞ்சிபோச்சுய்யா... நான் எழுத ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லேயே இது எனக்கு நல்லாவே புரிஞ்சிபோச்சுய்யா... அதுவும் தமிழ்மணத்துலதான் இந்த மாதிரி கூடிக்கும்மியடிக்கிற அட்டூழியமெல்லாம் நடக்குதுன்னும் தெரிஞ்சிக்கிட்டேன்... அப்பவே அரசல் புரசலா நான் தெரிஞ்சிக்கிட்ட விஷயத்தால 2011 மே மாசத்துலேயே ‘’பதிவர்களின் தொடரும் கடமைகள்’’னு ரொம்ப அக்கறையோட பாத்து பாத்து ஒரு பதிவு எழுதினேன்... இன்னக்கி அதை நானே திரும்பப் படிக்கும்போது இப்போ நடந்திட்டிருக்கிற குழாயடிச்சண்டைக்கு அன்னைக்கே நான் எழுதுனது ரொம்பப் பொருத்தமாத்தான் இருக்குது. அதை பலபேர் படிக்காம வுட்டுருப்பீக... ப்ளீஸ் கொஞ்சம் படிங்க... அதுவும் வாசகர்களைவிட பதிவு எழுதுற மேதாவிக எல்லாம் தயவு செய்ஞ்சி இதப்படிங்கய்யா... இதப்படிச்சதுக்கு அப்புறம் கீழே மறுபடியும் தொடர்ந்து எழுதுறேன்...

சத்தியமா இது என் பழைய பதிவுகளுக்கான பப்ளிசிட்டி இல்லை சாமீ... நல்ல மாட்டுக்கு ஒரு சூடுன்னு சொல்லுவாக... ஆனா நான் நிறைய சூடு போட்டும் அது செவிடன் காதுல ஊதுன சங்கு மாதிரி ஆகிப்போச்சு... நமக்கெல்லாம் எதையும் நேரா யோசிச்சிதான் பழக்கமுங்க!!!

 கதம்ப மாலை...: பதிவர்களின் தொடரும் கடமைகள்...

 தேர்தல் முடிந்து, முடிவுகளும் தெரிந்து புது அரசு(சையு)ம் அரியணையில் (ற்)றியாகிவிட்டது. ஒவ்வொரு பதிவரும் ஒவ்வொரு விதமான எழுத்து நடையில் நமது ப்ளாக்கர் சமூகம் சமுதாய உணர்வு கொண்டதென்பதை உலகுக்கு நிருபித்துக் கொண்டே இருக்கிறோம்.

நம்மில் பலர் சிறு வயதிலிருந்தே சமூக மாற்றத்திற்கான ஏக்கத்துடனே வளர்ந்து, வாழ்க்கை சக்கரத்தின் வேகச் சுழற்சியில் வேவ்வேறு பாதையில் சிதறிப்போன போதும் நமது சிந்தனைப் புரட்சிகளுக்கு மேடையமைத்த ப்ளாக்கர்ஸ் தளத்தின் மூலம் இப்போதுதான் ஒன்று படமுடிந்திருக்கிறது. நம்மில் எத்தனையோ பேரின் சமூகம் மீதான மனக்குமுறல்களை ப்ளாக்கர்ஸில் மட்டுமே வெளிப்படுத்த முடிந்திருக்கிறது. இணையதள எழுத்துச் சுதந்திரம் இன்னமும் இடைஞ்சல்களின்றி காக்கப்பட்டு வருவது நமக்கு கிடைத்த முதல் வரமென்பதை மறுப்பதற்கில்லை. மாறிவரும் காலவளர்ச்சியில் இணையதள வாசகர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவது நம்மைப் போன்ற பதிவர்களுக்கான மற்றுமொரு வரப்பிரசாதமாகும்.

ப்ளாக்கர்ஸ் தளம் ஒரு சக்திமிக்க சமூக மறுமலர்ச்சிக்கான மேடையாய் மாறத் துவங்கியிருக்கிறது. ப்ளாக்கர்கள் நாம் சமூகத்தின் சிந்தனைகளைத் தூண்டும், சமுதாய மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை படைத்த கூட்டமாய் உலகத்தின் பார்வையில் மதிக்கப்படத் தொடங்கியிருக்கிறோம். ஆரோக்கியமான வளர்ச்சியை எட்டிக் கொண்டிருக்கும் இந்த வேளையிலாவது எழுத்துச் சுதந்திரத்தை எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் நமக்கென்று சில வரைமுறைகளையும் கடமைகளையும் வகுத்துக் கொள்வதில் தவறேதும் இருப்பதாய் தெரியவில்லை. வரைமுறையின்றி செய்யப்படும் எந்தவொரு செய்கைகளும் பிறரை முகம் சுளிக்க வைப்பதாய் மாறக்கூடுமென்பதால் வரைமுறைகளென்பது நம்மை நாமே செப்பனிட்டுக் கொள்ள நிச்சயமாய் உதவக்கூடும்.

வரைமுறைகள் என்பது இதைத்தான் எழுதவேண்டும், அதை எழுதக்கூடாது என்பன போன்றதல்ல. ஒவ்வொரு ப்ளாக்கருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு. ஒரு சிலர் சினிமாவை மிக நேர்த்தியாய் விமர்சிப்பார்கள். இது படத்தை பார்க்கும் சாமான்யனுக்கும் நல்ல சினிமா என்பது எப்படியிருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாய் இருக்கும். ஒரு சிலர் வாழ்க்கையின் மிகச்சாதாரண நிகழ்வுகளைக்கூட வெகு நகைச்சுவையாய் எல்லோரும் விரும்பும் வண்ணம் எழுதுவார்கள். ஒரு சிலர் கவிதைகளின் வழியே இலக்கியம் வளர்ப்பார்கள். ஒரு சிலர் சிறுகதைகள் எழுதக்கூடும். ஒரு சிலர் பல்வேறு ஊடகங்களில் தாங்கள் ரசித்தவற்றை பிறரும் ரசிக்க அப்படியே ப்ளாக்கரில் எடுத்து எழுதுவார்கள். பெரும்பான்மை ரகத்தார் சமுதாய விழிப்புணர்வு கட்டுரைகள், அரசியல் அலசல் கட்டுரைகள் என்று புரட்சி மேடையில் பயணிப்பார்கள். இன்னும்சமையல் குறிப்புகள், மருத்துவக்குறிப்புகள், சட்ட உதவிகள், பயண அனுபவங்கள் என்று எண்ணற்ற வகையான எழுத்துக்களும் ப்ளாக்கர்ஸில் உண்டு.

எந்தவொரு ஊடகமும் பொழுதுபோக்கு அம்சங்களின்றிப் போனால் சாமான்யன் வரை சென்றடையும் வெற்றியை ஈட்டுவதென்பது இயலாத காரியமே. எப்படி வெறும் அரசியல் மற்றும் சமுதாய விழிப்புணர்வுக் கட்டுரைகள் மட்டுமே எல்லாவித வாசகர்களையும் கவருவதாக இருக்காதோ அப்படித்தான் ஒவ்வொரு வகை எழுத்துக்களுமே. வெறும் கவிதைகளாகவோ, வெறும் சிறுகதைகளாகவோ இல்லை வெறும் சினிமா விமர்சனம் மட்டுமாகவோ இருந்தால் ப்ளாக்கர்ஸ் இந்தளவு வளர்ச்சியை எட்டியிருக்குமா என்பது கேள்விக்குறியே. எந்தவொரு துறைக்கும், எந்தவொரு பிரிவுக்கும் பதிவுகளை எழுதும் வண்ணம் நம்மில் பல திறமைசாலிகளிருப்பதே ப்ளாக்கர்ஸ் உலகத்தின் வெற்றிக்கான காரணமாகும்.

மிகச்சிறந்த வெற்றியில் பயணித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் வெறுமனே ‘’லவ் பண்ணுவது எப்படி?’’, ‘’கடலை போடுவது எப்படி?’’, ‘’கேரளா பிகரை மடிப்பது எப்படி?’’, ‘’மலையாளிப் பெண்களுக்கு மனசு பெரிசு’’, ‘’பல்லு விளக்குகிறேன்’’, ‘’வாய் கொப்பளிக்கிறேன்’’ என்பன போன்ற கட்டுரைகளை மட்டுமே எழுதி ப்ளாக்கர்ஸ் மீதான சமூகப் பார்வையைக் கெடுத்துக் கொண்டிருக்காமல் அவ்வப்போது உருப்படியான விஷயங்களையும் கொஞ்சம் எழுதுங்கள்.

இதுவரை ஆளுங்கட்சியை பெரும்பான்மையாய் விமர்சித்து எழுதி, நாம் விரும்பிய ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொண்டதோடு முடிந்து விடவில்லை நமது வேலைகள். இனிவரும் காலங்களில் ப்ளாக்கராய் நமது முக்கிய கடமை புது அரசுக்கும், அதன் அரசிக்கும் கூட மிகச்சிறந்த கடிவாளமாய் நமது விமர்சனங்களை எடுத்து வைப்பதுதான். ஆளுங்கட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டி விமர்சிக்கும் அதே நேரத்தில் ஆளுங்கட்சியின் நல்ல திட்டங்கள் ஏதேனுமிருப்பின் அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் அரசியல் எழுதும் ஒவ்வொரு பதிவரின் கடமையாகும்.

நாம் எழுதும் எந்தவொரு பதிவானாலும் அதை வெளியிடும் முன் கீழ்க்காண்பவற்றை ஒரு முறை உறுதிபடுத்திக் கொண்டு வெளியிடுவது நிச்சயமாய் நல்லதொரு ப்ளாக்கரின் கடமை என்பதை மறுப்பதற்கில்லை.

#
உங்கள் பதிவில் தனிமனித விமர்சனம் ஏதுமில்லை.
(
கருணாநிதி, ஜெயலலிதா, சோனியா காந்தி போன்ற எந்தவொரு அரசியல்வாதியையும் அரசியல் சார்ந்து விமர்சித்தல் தவறில்லை. அதே போல் எந்தவொரு நடிகர் நடிகைகளையும் சினிமா சார்ந்து விமர்சித்தல் தவறில்லை. ஆனால் அவர்களுடைய தனிமனித வாழ்க்கையை விமர்சித்தல் நாகரீகமற்றது என்பது என் தாழ்மையான கருத்து)

#
உங்கள் பதிவில் படிப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும் அநாகரிகமான வார்த்தைகள் ஏதுமில்லை.

#
உங்கள் பதிவில் எவரொருவர் பற்றிய செய்தியிலும் அவரை மரியாதையில்லாது விளிக்கும் ஒருமையில் எழுதிய சொற்கள் ஏதுமில்லை.

#
உங்கள் பதிவில் எழுதப்பட்ட விஷயம் ஏதோவொரு வகையில் வாசகனுக்கு பயனளிக்குமே ஒழிய உருப்படியில்லாத குப்பைச் செய்திகள் ஏதுமில்லை.
(
கவிதை மற்றும் சிறுகதை என்றால் இலக்கியம் வளர்க்கும். படிக்கும் வாசகனின் மனதில் நிறைவைத் தரும். சினிமா விமர்சனம் சாமான்யனுக்கு நல்ல சினிமாவை மட்டும் பார்க்கவும் உருப்படியில்லாத சினிமாக்களைத் தவிர்த்து அவன் பணத்தை வீணாகாமல் மிச்சப்படுத்தவும் உதவும். அரசியல் மற்றும் சமுதாய விழிப்புணர்வுக் கட்டுரைகள் என்றால் சமூக மாற்றத்துக்கு உதவும். இப்படி எந்த வகைப் பதிவானாலும் ஏதோவொரு வகையில் சாமான்யனுக்கும் சமூகத்துக்கும் உதவும் வகையில் இருத்தல் மேலானது).

#
உங்கள் பதிவு எந்த விஷயமான படைப்பானாலும், நடுநிலைமையான கருத்துக்களோடு இருக்கிறதே ஒழிய ஒரு தலைப்பட்சமான கருத்துக்கள் ஏதுமில்லை.

#
உங்கள் பதிவு எதிலிருந்தாவது எடுத்து எழுதப்பட்டதானால் அதைப்பற்றித் தெரிவிக்காமல் மறைக்கப்பட்ட விவரம் ஏதுமில்லை.

மேற்கூறிய விஷயங்கள் அனைத்தையும் ஒவ்வொரு பதிவின் போதும் ஒவ்வொரு பதிவரும் கடைப்பிடித்தலைக் கடமையாக நிறைவேற்றும் பட்சத்தில் வேகமான வளர்ச்சியிலிருக்கும் நம் ப்ளாக்கர்ஸ் சமூகம் இன்னும் மரியாதைக்குரிய நிலையைச் சென்றடையும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பது சத்தியமான நிச்சயம்.

பின்குறிப்பு :- ஆரோக்கியமான விமர்சனங்களும் விவாதங்களுமின்றி வெறுமனே நக்கல், நையாண்டித்தனம் செய்து கொண்டிருக்கும் பின்னூட்டப் புலிகளை நான் பதிவர்களாகவே கருத்தில் கொள்ளாததால் அவர்களைப் பற்றி எழுதத் தேவையில்லாததாகவே உணர்கிறேன்.

என்ன படிச்சீகளா?... நான் எதுவும் தப்பா எழுதலேன்னு நெனக்கிறேன்... நான் அன்னக்கி எழுதினது இன்னக்கி நெலமைக்கு கூட பொருத்தமா இருக்கிற மாதிரி பண்ணி வச்சிருக்கிற நம்ம பதிவுலக அண்ணாச்சிங்க மற்றும் அக்காங்களுக்கெல்லாம் நம்மளோட வணக்கமுங்க...!!!

 இப்போ வெகு சமீபத்திலகூட பதிவுலக போக்கப்பாத்து மனசு வெறுத்துப்போயி ஒரு பதிவு எழுதினேன்... கோவிச்சுக்காமா அதையும் ஒரு வாட்டி படிச்சிறீகளா?...

 கதம்ப மாலை...: தமிழ் மணமா?... தமிழ்வெளியா?... தரமானது எது? – ஒரு சீரியஸ் பதிவு!

சரி... இப்போ என்னங்கிறீங்களா?... நான் சொல்லித்தான் தெரியனுமா உங்களுக்கெல்லாம்?...

நாமெல்லாம் ஒரே குடும்பம்ய்யா... எழுத்தாளர் குடும்பம்ய்யா... அதுவும் பத்திரிக்கை மாதிரி இல்லாம முழு எழுத்துச் சுதந்திரத்தோட உலா வர்ற குடும்பம்ய்யா இது... (அன்புடையீர்... குருவி கட்டும் கூட்டுக்குள்ளே குண்டு வைக்கலாமா?... நாமெல்லாம் சண்டையிட்டால் சர்ப்பம்தான் கர்ப்பம் தரிக்குமா? இல்லை... எறும்புதான் கரும்பு திங்குமா?...’’ அப்படீன்லாம் கலாய்க்கக்கூடாதுங்கோ!!!)

யாரோ என்னமோ எழுதிட்டு போறாய்ங்கய்யா... ஒருத்தருக்கு சரின்னு படுறது இன்னொருத்தருக்கு தப்பா படலாம்... அதுக்காக வரிஞ்சி கட்டிக்கிட்டு ஒருத்தர் மேல ஒருத்தர் சாக்கடைய அள்ளி வீசனுமா?...

நம்மளோட எழுத்து என்ன?... அதை மட்டும் அழகா சொல்லிட்டு போலாமே?... ஒருத்தர் தன்னோட மதத்தை பத்தி எழுதுனா... நீயும் உன்னோட மதத்தைப்பத்தி எழுது. அதவுட்டுப்புட்டு அவனோட மதத்தை தாக்கி எழுதி உன்னோட தரத்தை நீயே ஏன்யா குறைச்சிக்கனும்?... நீ பண்ற ஒவ்வொரு எதிர்வினையும் உனக்கு பிடிக்காத பதிவைக்கூட பாப்புலர் லிஸ்ட்ல கொண்டுபோய் பலபேருக்கு ரீச் ஆகுறதுன்றது எப்பய்யா புரிஞ்சிக்கப்போறீக?...

இவ்வளவு நாள் கும்பல் கும்பலா ஒன்னு கூடி புதுசா உருப்படியா எழுதுற எவனையும் மேல வந்திராம பாத்துக்கிட்டீக... இன்னக்கி உங்க கும்பல்களுக்குள்ளேயே மதத்தை வைச்சு ஒரு கும்பலை பிரிச்சிப்புட்டீக... அடுத்து சாதிய வச்சும் பிரிப்பீகளோ என்னவோ தெரியலை?...!

என்னாத்துக்குய்யா இந்த அசிங்கமெல்லாம்?... அண்ணாந்து படுத்துட்டு காரித்துப்புனா நம்ம மூஞ்சிதான்யா நாறிப்போகும்... உலகம் முழுக்க பதிவுலகத்தை உத்துப்பாத்திட்டிருக்கிற காலம்யா இது... இன்னமும் ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்கிட்டு அதுக்கு அவுங்கங்க கும்பல் ஓட்டு போட்டு தமிழ்மணத்துல டாப்ல வர்ற வச்சு... ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு அக்காவும் அண்ணனும் மாறி மாறி திட்டிக்கிட்டதுதான் தமிழ்மணத்துல சூடான பதிவுகள் வரிசைல டாப் 2ல இருக்குது...(என்ன கொடுமை சரவணன் இது?...!!!)

போதும்யா இந்த அசிங்கமெல்லாம்... சில குரூப்பீஸம் இருக்கத்தான் செய்யுது பதிவுலகத்துல... அதுக்காக அள்ள அள்ளக் குறையாத புதையல் மாதிரி விதவிதமான எழுத்துக்கள் குவிஞ்சி கிடக்கிற பதிவுலகத்தில அதையெல்லாம் வுட்டுப்புட்டு இந்த சண்டைங்களுக்கு முக்கியத்துவம் குடுத்து அத டாப் லிஸ்ட்ல வேற வர வச்சு உலகம் முழுக்க பரப்பனுமா இந்த அசிங்கத்த?...

பலபேரு நடுநிலைமையோடு இந்த மாதிரி புகைச்சலை நமக்கென்ன என்ற ரீதியில் கண்டுகொள்ளாமல் இருப்பதும் மிகத்தவறே... இந்த மாதிரி சண்டைகளும், அதை நம்மை மாதிரி பதிவர்கள் கண்டுக்காம இருப்பதும் ‘’சொந்தக்காசுல சூனியம் வச்சிக்கிற கதைதான்றதை புரிஞ்சிக்கனுங்கோ’’...!

ஜால்ரா போட்டே உசுப்பேத்ற அல்லக்கைகளும்... ஆதிக்க சக்தி குரூப்புகளும் அவங்களாவே திருந்தனும்... இல்லை பதிவுலகத்தில சக்தி மிக்கதா இருக்கிற தமிழ்மணம்தான் அவுகளை திருத்தனும்...

பாக்கலாம்... இந்த குழாயடிச்சண்டையில இன்னும் என்னென்ன ரகசிய(நாத்த)மெல்லாம் வெளிய வரப்போவுதோ?... தமிழ்மணமே நீயே துணை!!!