SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Monday, August 27, 2012

தமிழ் மணமா?... தமிழ்வெளியா?... தரமானது எது? – ஒரு சீரியஸ் பதிவு!


              இந்தத் தலைப்பில் எழுதுவதற்கு இவருக்கு என்ன தகுதியிருக்கிறது என்று உங்களில் ஒரு சிலர் நினைக்கலாம். எதனடிப்படையில் இந்தப் பதிவு எழுதப்பட்டிருக்கிறது என்றும் சிலர் எண்ணலாம்.

இது எனது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே எழுதப்பட்டதேயொழிய நான் ஒன்னும் பெரிய நாட்டாமை இல்லைங்க... தீர்ப்பை மாத்தி சொல்றதுக்கு!!!

கிட்டத்தட்ட 2011ல் இருந்துதான் நானும் ஒரு பிளாக்கர் ஆனேன். சின்ன வயசிலேர்ந்து உள்ளுக்குள்ளேயே இருந்த எழுத்துத் தாகத்துக்கு நம்ம நட்பு வட்டத்திலேர்ந்து வந்த ஒரு குரல்தான் பிளாக்கரைப்பத்தி நமக்கு கத்துக்கொடுத்திச்சு. பிளாக்கர்ல எழுத ஆரம்பிச்சதுமே அட பராவாயில்லேப்பா… ‘’டெக்னாலஜி இஸ் வெரி மச் இம்ப்ரூவ்டு’’ அப்பிடின்ற சினிமா டயலாக்தான் நியாபகத்துக்கு வந்துச்சு.

சரி… எழுத ஆரம்பிச்சாச்சு… அப்புறம் என்ன?... வாசகர்கள்?...

‘’யாருமே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துறே’’ன்னு நான் மட்டும் எழுதிக்கிட்டே இருக்கமுடியுமா?... அதுக்கும் நம்ம நட்பு வட்டம் குடுத்த ஐடியாதான் ‘’தமிழ் மணம்’’. ஆரம்பகாலத்துல தமிழ்மணத்துல மட்டும்தான் மெம்பர் ஆயிருந்தேன். எழுதினேன்… எழுதினேன்… என்னால் முடிந்ததையெல்லாம் எழுதினேன். தமிழ் மணத்துல நம்மள யாரும் சீண்டல பாஸ்!!! (அட வெக்கங்கெட்டவய்ங்களா?... இதுக்கு ஏன்டா வெள்ளையும் சொள்ளையுமா திரியிறீய்ங்கன்னு?... நீங்க கேக்குறது என் காதுல விழுது. ஆனா இதுக்கெல்லாம் பயப்படுவோமா நாங்க?.. ‘’வீரனுக்கு விழுப்புண் முக்கியம் அமைச்சரே’’ன்னு தொடர்ந்து எழுதுனேன்).

அப்புறமா நல்லா யோசிச்சேன்…(நம்புங்கய்யா!). சரி நம்ம பிளாக்கு பக்கமா பயபுள்ளைகள திருப்பனும்னா என்ன பண்ணலாம்?... சினிமா விமர்சனம் எழுதுன்னு கொஞ்ச நண்பர்கள் ஐடியா குடுத்தாய்ங்க. நமக்கு புடிக்காத… இன்னக்கு வரைக்கும் நான் கை வைக்காத ஏரியா சினிமா விமர்சனம் எழுதுறது... கொஞ்சபேரு நடிகைங்களப்பத்தி எழுதுனா நிறையபேரு படிப்பாங்கன்னு சொன்னாய்ங்க... இந்தப்பொழப்பு பொழைக்கிறதுக்கு முட்டுச்சந்துல நின்னு... பயப்படாதீங்க! நீங்க நினைக்கிறமாதிரி இல்லீங்க. முட்டுச்சந்துல நின்னு முட்டிக்கலாம்னு தோணுச்சு. என்ன பண்ணலாம்?... வாசகர்களைக்கவரும் ஐயிட்டமாவும் இருக்கனும். அதே சமயத்துல அதுவும் தரமானதா நால பேருக்கு உருப்படியா உதவுற தகவலா இருக்கனும்னு நினைச்சேன்... அப்போதான் காமசூத்திரம் கை கொடுத்துச்சு!!!

அடப்பாவிகளா?... காமசூத்திரத்தை கொஞ்சம் அட்ராக்டிவ் டைட்டிலோட எழுதுனதுதான் தாமதம்... சும்மா கொசகொசன்னு குமிஞ்சுப்புட்டாய்ங்க பயபுள்ளைங்க அதப்படிக்கிறதுக்கு. அதுமட்டுமாய்யா?... காமசூத்திரம் பத்தி நான் எழுதுன பதிவுகளெல்லாமே தமிழ் மணத்துல ‘’இன்றைய சூடான இடுகைகள்’’ பகுதியில நம்பர் ஒன்னுக்கு போயிடுச்சியா (இன்னக்கி வரைக்கும் டெய்லி சராசரியா ஒரு 200பேராவது வந்து காமசூத்திரம் மட்டும்தான் படிக்கிறாய்ங்கய்யா நம்ம பிளாக்கில!!! எனக்கே ஒரு கட்டத்துல அடப்பாவிகளா விட்டா நம்மள செக்ஸ் எழுத்தாளர்னு முத்திரையே குத்திருவாய்ங்களோன்னு பயம் வந்திச்சிய்யா!. அதுமட்டுமில்லாம நம்ம தளத்துல ஜாயின் பன்னலாம்னு நினைக்கிற பலபேர் நம்ம தளத்துல இருக்குற காமசூத்திரக் கட்டுரைகளைப் பாத்துட்டு உடனே அந்த எண்ணத்த அழிச்சிருவாய்ங்க போல... இவ்வளவுக்கும் காமத்தை பத்தி நான் எழுதினதெல்லாமே சரியான வரைமுறைகளோட கலவி பற்றிய கல்வியறிவாகத்தான் இருக்குன்றது அதப்படிக்கிற யாரும் உணரலாம்)

என்னடா இது?... நாம கஷ்டப்பட்டு எவ்வளவோ தரமான பதிவுல்லாம் எழுதுனோம். அதையெல்லாம் சீண்டாத கூட்டம் காமசூத்திரம் எழுதினவுடனேயே இப்புடி டகால்னு டாப்புக்கு கொண்டு போயிட்டாய்ங்களேன்னு நானே வெறுத்துப்போயி ‘’ தூத்தேறி... இனியும் எழுதனுமா பிளாக்கரில்’’ அப்பிடின்னு கூட ஒரு பதிவு எழுதுனேன்.  அப்புறமாத்தான் வெகு சில பதிவுலக நண்பர்கள் பதிவுலகத்தப்பத்தி எனக்குப்புரிய வைச்சாய்ங்க. (அதுல முக்கியமானவர்... இன்னக்கி வரைக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்குறவரு... நம்ம ‘’மெட்ராஸ் பவன்’’ சிவக்குமார்.) பதிவுலகத்துல நிலைக்கனும்னா வாசகர்களைக் கவருகிற சமாச்சாரங்களை அவ்வப்போது தொட்டுக்க ஊறுகாய் போல கொடுத்து நாம எழுத நினைக்கிற முக்கியச் சமாச்சாரங்களையும் கூடவே எழுதிட்டு இருக்கனும்னு எனக்கு புரிய வைச்சாங்க. அது மட்டுமில்லாம... நாமளும் முடிஞ்சவரைக்கும் எல்லாப்பதிவர்களோட எழுத்துக்களையும் படிச்சி பின்னூட்டம் இடுறது… அவங்களை நம்ம பிளாக்க நோக்கி இழுக்குமென்ற பெரிய விஷயத்தை சின்ன வார்த்தைகளில் எனக்கு கத்துக்கொடுத்தாங்க.

இன்னா கத்துக்கிட்டு இன்னா பிரயோஜனம்?... நாம எதிர்பார்க்காத பதிவெல்லாம் ஹிட் ஆச்சுது. நான் ரொம்ப கஷ்டப்பட்டு (!) தகவல்களைப் புரட்டி, திரட்டி எழுதுன பதிவெல்லாம் பதிவுலக டிராபிக்ல சிக்கி காணாமப்பூடுச்சுப்பா.

நம்மளும் விடாம... கவிதைகள் எழுதுனோம். அரசியல் எழுதுனோம். சமூக அவலங்களையும், அலட்சியங்களையும் எழுதுனோம். பெண்ணுரிமையப்பத்தி எழுதுனோம், கடவுள்ன்ற பேருல நடக்குற மூட நம்பிக்கைகளப்பத்தி எழுதுனோம். அட... சுதந்திரம் ஒரு சாபக்கேடான்னு கூட எழுதுனோம்ப்பா.
கதம்ப மாலை...: சுதந்திரம் ஒரு சாபக்கேடா? – மகாத்மா செய்தது சரிதானா?
 (நிஜமாவே இன்னக்கி வரைக்கும் நான் எழுதுனதுல நம்மள பென்ட்ட கழுட்டுனது இந்தப்பதிவுதான்ப்பா. இதுக்கான தகவல்களை மட்டும் கிட்டத்தட்ட இரண்டு மாசமா திரட்டினேன்)


என்ன எழுதுனாலும் சுவத்துல வீசுன பந்து திரும்பி வந்த கதைதான்ப்பா!!! நம்ம ‘’பிலாசபி பிரபாகரன்’’கூட நம்மள பத்தி ஒரு பதிவுல நல்லாவே எழுதுனாருப்பா. சும்மா சொல்லக்கூடாது. அவரோட பக்கத்துல என்னப்பத்தி எழுதுனதுல நெறைய புது வாசகர்கள் கிடைச்சாங்கப்பா நமக்கு. http://www.philosophyprabhakaran.com/2011/10/17102011.html

சரி... இப்போ… இந்தக் கட்டுரைக்கான தலைப்புக்கு வருவோம்.

தமிழ்வெளியா?... தமிழ் மணமா?... தரமானது எது?...

நான் முதல்ல சேர்ந்தது தமிழ் மணத்துலதான். ஆனா அதுல ஒரு கும்பலே ஒன்னா கூடி அரசாங்கத்தோட ‘’நமக்கு நாமே திட்டம்’’ மாதிரியே ஒரு திட்டத்தோட திரியிறாய்ங்க. தனியாளா அதுல நீந்தி ஜெயிக்கிறதுன்றது அவ்வளவு சுலபம் இல்லீங்க. ( கோட்டா சீனிவாசராவ் பேசுற ‘’ தம்பி... அரசியல்ன்றது ஒரு கடல் மாதிரி... இங்க ஏகப்பட்ட சுறாவும், திமிங்கலமும் பசியோட சுத்திட்டிருக்கும்...‘’ ன்ற டயலாக் ‘’ஹிக்கீக்கீக்கீக்கீக்கீ’’ ன்னு அவரோட சிரிப்போடவே உங்க நியாபகத்துக்கு வந்தா அதுக்கு நான் பொறுப்பாளியில்லை!!!)

தமிழ்மண ஓட்டுப்பட்டையிலதான் தமிழ்மணத்தில் பதியப்படும் பதிவுகளின் தலையெழுத்து நிர்ணயிக்கப்படுதுன்றது கொஞ்சம் உறுத்தலான சமாச்சாரம்தான்றதுல என்னய மாதிரியே நெறைய பேருக்கு உடன்பட்ட கருத்திருக்கும்னு நம்புறேன். ஏன்னா பெரும்பாலும் பாக்கிறப்ப ‘’இன்றைய சூடான பதிவுகள்’’ லேயும் ‘’இன்றைய வாசகர் பரிந்துரைகள்’’ லேயும் ஒரே ஐயிட்டங்கள்தான் ஆட்டம் போடுதுன்றது எத்தன பேரு கவனிச்சிருப்போம்னு தெரியலை... பின்னூட்டங்கள் இடப்படும் பதிவுகள் வலது பக்கம் டிஸ்பிளே ஆவுறது கொஞ்சம் பரவாயில்லை. இருந்தாலும் இதிலேயும் விளையாடுறவய்ங்க இருக்காங்களான்றது நமக்கு தெரியாதுங்கோ!.

தமிழ் மணத்துல சேர்ந்த ரொம்ப நாளைக்கு அப்புறம்தான் இண்டர்நெட்ல அதே மாதிரி நெறைய்ய தளங்கள் இருக்கிறதை தெரிஞ்சிக்கிட்டேன். அப்புறமாத்தான் நான் தமிழ்வெளியிலேயும், இண்ட்லிலேயும், தமிழ் 10லேயும் சேர்ந்தேன். (இன்னும்கூட எவ்வளவோ தளங்கள் இருந்தும் எனக்கு தெரிஞ்சது இவ்வளவுதான் பாஸ்).

தமிழ் மணத்துல அமுங்கிப்போன என்னோட பல இடுகைகள்ல ஒரு சில இண்ட்லியில ஹிட்டாச்சு. 

ஒரு சில தமிழ் 10-ல் ஹிட்டாச்சு.

பல இடுகைகள் தமிழ்வெளியில் ஹிட்டாச்சு.

ஆனாலும் ஒரு விஷயம் நான் கஷ்டப்பட்டு எழுதுன பல இடுகைகள் எதுலையுமே ஹிட்டாகலைய்ங்க... (செம பல்பு!!!)

அதுனால… சகலவிதமானவங்களுக்கும் நான் சொல்ல வர்றது இன்னான்னா...

தரமானது தமிழ்வெளியா? இல்லை தமிழ் மணமா?ன்றது அவங்க கையில இல்லை. பதிவர்கள் கையிலேயும், இந்த மாதிரி தளங்களைப்படிக்கும் வாசகர்கள் கேயிலேயும்தான் தரத்தை நிர்ணயிக்கும் காரணிகள் இருக்கின்றதுதான் நெசம்! (உடனே உங்க உள்ளங்கைய உத்துப்பாத்துட்டு எங்க கையில ஒன்னுமேயில்லையேன்னு காமெடி பண்ணாதீங்க பாஸ்... ஏன்னா இது ஒரு சீரியஸ் பதிவு(!). கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோமோ?....)

தமிழ் மணத்தின் ஓட்டுப்பட்டைகளில் சிலர் குழுவாய் கும்மியடித்து தங்கள் தரத்தை தாங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம்.(எல்லாரையும் சொல்லவில்லை. ஹிட் லிஸ்ட்டில் இடம்பிடிக்கும் பல பதிவுகள் நிஜமாவே அதற்கான தகுதியுடையவைகளே) அதேப்போல பல பதிவர்களின் பல தரமான பதிவுகள் ஓட்டுப்பட்டை குழுக்களின் கும்மிகளில் வாசகர்களைச் சென்று சேராமல் காணாமலே போயிருக்கலாம். (சாமி சத்தியமா எனக்கானதா மட்டும் இதைச்சொல்லலைங்க... அவ்வ்வ்வ்வ்...) ஆனால் அதற்காக தமிழ் மணத்தின் தரத்தைப்பற்றி பேச எந்த உரிமையும் எவருக்கும் இல்லை என்பது தமிழ் மணத்திற்கு இருக்கும் வாசகர்களின் எண்ணிக்கையையும் ஆதரவையும் வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

அதேப்போலத்தான் தமிழ் வெளிக்கும்... ஓட்டுப்பட்டைகள் இல்லாததாலும் படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தரவரிசைகள் நிர்ணயிக்கப்படுவதாலும், தமிழ்வெளி தமிழ் மணத்தை விட தரமானது என்று தீர்ப்பு சொல்லும் உரிமை எவருக்குமில்லை. (ஏய்... என்னதான் சொல்ல வர்றே நீயின்னு நீங்க முறைக்கிறது தெரியுது!)

சொம்பு இல்லாம, ஆலமரம் இல்லாம... அட ஜனங்க கூட்டம் கூட இல்லாம இந்த நாட்டாமை சொல்ற தீர்ப்பு என்னான்னா... தமிழ் மணமாகட்டும், தமிழ்வெளியாகட்டும்... தமிழ்ப்பதிவர்களுக்காக இருக்கிற எல்லாத்தளங்களுமே சிறப்பானதுதான். ஏன்னா இந்த மாதிரி தளங்கள் இல்லேன்னா நம்மள மாதிரி பதிவர்களுக்கு வாசகர்களைச் சென்றடையும் வழிகள் மிகச்சொற்பமாகிவிடும். அதேமாதிரி இந்த மாதிரி தளங்களுக்கும் நம்மள மாதிரி பதிவர்களும், வாசகர்களும் இல்லேன்னா எல்லாமே புஷ்வானம்தான்.

அதனால இருக்கிற தளங்களையும், பதிவர்களையும், வாசகர்களையும் குறை சொல்றத வுட்டுப்புட்டு தரமான பதிவுகளை எழுதி மேன்மேலும் வாசகர்களைக்கவர்ந்து நமது எழுத்து வட்டங்களை விரிவுபடுத்துவோம்... வெல்வோம்...!

 

11 comments:

 1. ஹஹஹா அருமையான அடி :)

  ReplyDelete
 2. நல்லாத் தான்யா போட்டு வாங்கயிருக்கீக....

  ReplyDelete
 3. நாட்டாமை தீர்ப்ப மாத்தாத ........

  ReplyDelete
 4. தமிழ்மணத்துக்கும் எனக்கும் கொஞ்சம் வாய்க்கால் தகராறு .....

  ReplyDelete
 5. தலையைச் சுத்தி மூக்கைத் தொட்டு மீண்டும் ஒரு ரவுண்டு வந்தது போலிருக்கு. :)

  வலைப்பூவின் சிறு விளக்கத்தில் சொல்லிய கருத்தும் ஒரு வகையான கவர்ந்திழுப்பே என்று நினைக்கின்றேன்.

  எனக்குத் தெரிந்த ஒரு ஆசிரியை இது குறித்துச் சொல்லும் போது “இன்று இல்லையென்றாலும் என்றாவது என் பதிவு எவரேனும் ஒருவருக்காவது பயன்படும்.. அன்று என் பதிவிற்காய் நான் செய்த உழைப்பு எனக்கே தெரியவரும்.. அதற்குண்டான மரியாதையும் அப்பதிவிற்கு கிடைக்கும்” என்று.

  அவர்கள் வழியிலே நானும் பயணிக்கின்றேன்.. நகலெடுத்தன்றி

  நன்றி

  ReplyDelete
 6. இப்படியுமா?..

  ReplyDelete
 7. Dear Sivahari and Thangam Pazhani, Thanks for your comments... and தங்கம் பழனி... இப்படியும்தான்!!!

  ReplyDelete
 8. // நம்பர் ஒன்னுக்கு போயிடுச்சி//
  பயந்து ஒன்னுக்கு போற அளவுக்கு அம்புட்டு பயங்கர திகில் பதிவுகளையா எழுதினீங்க.

  ReplyDelete
 9. நல்ல பதிவுகளை அனைவரும் வரவேற்க வேண்டும் என்பது என் கருத்து.. நீங்கள் சொல்வது போல நல்ல பதிவுகள் இது போன்ற நிகழ்வுகளால் பின்னுக்கு தள்ள படுகிறது.. அனைவரும் ஒத்த கருத்துடன் செயல் பட வேண்டும்..

  ReplyDelete
 10. எந்த திரட்டியிலும் நான் சேர்ப்பது இல்லை. அறிமுகமானவர்கள் வருகிறார்கள் . மற்றபடி பிரபலம் ஆகி என்ன பண்ண போறோம்னு விட்டுட்டேன்...

  ReplyDelete