SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Tuesday, January 31, 2012

என்ன கொடுமை சார் இது?...

காலை நேரத்தில் பேருந்தின் கூட்டத்தில் நசுங்கி... வியர்த்து... விறுவிறுத்து... அலுவலகமோ... இல்லை பள்ளிக்கூடமோ சென்ற அனுபவம் நம்மில் பலபேருக்கு நிச்சயம் இருக்கும். ஆனால் பலவருடமாய் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் அந்தக்கொடுமைகள் இன்றளவும் மாறவில்லையென்பதை எப்படி எடுத்துக்கொள்ளவென்று தெரியவில்லை. எத்தனை அரசாங்கங்கள் மாறினாலும்... எவ்வளவு கட்டணத்தை ஏற்றினாலும்... பேருந்துகளின் எண்ணிக்கையை உயர்த்தினாலும்... கூட்டநெரிசல் என்பது நாம் கும்பிடாமலே வாங்கி வந்த வரம்போல நம் தலைக்கு மேல் உட்கார்ந்து சிரித்துக்கொண்டேதானிருக்கிறது.

நான் தினந்தோறும் வேலைக்குச்செல்லும் வழியில் தினமும் நான் பார்க்கும் காட்சிதான் இந்தப்படத்திலிருப்பது. "SAFETY" என்ற ஒற்றை வார்த்தை மேலைநாடுகளில் தாரகமந்திரம். ஆனால் நம்நாட்டில் இன்னமும் அது தலைகீழ்தான்... மனித உயிரின் மதிப்பு... விதிகளை மதிக்காத மனப்பாங்கு கொண்ட நமக்கும், சொந்த மக்களின் மீதே பல ஜாலியன் வாலாபாக்குகள் நடத்திக்கொண்டிருக்கும் நமது அரசாங்கங்களுக்கும் எப்போதுதான் விளங்கப்போகிறதோ தெரியவில்லை...

இலவச பஸ் பாஸ் வழங்கும் அரசாங்கங்கள் பள்ளி நேரத்தில் மட்டுமாவது மாணவர்களுக்கென அந்தந்த வழித்தடத்தில் தனிப்பேருந்துகளை இயக்கலாம்.

செய்யாத பட்சத்தில்... பள்ளிக்கு நேரத்திற்கு செல்ல வேண்டி விபரீதங்களைப்பற்றி கவலைப்படாமல் இப்படி தொங்கிக்கொண்டு செல்லும் நாளைய அரசர்களைக்குறை சொல்வதா?... இல்லை சரியான பேருந்து வசதி செய்து கொடுக்காமல் எந்தக்கட்டிடத்தை மாற்றலாம்?... எந்த மந்திரியை மாற்றலாம்?... என்று யோசனை செய்து கொண்டிருக்கும் அரசாங்கத்தைக்குறை சொல்வதா?... இல்லை... சிக்னலுக்கு சிக்னல் லாரிகளிடம் பிச்சையெடுத்துக்கொண்டு இதைப்போன்ற பயணங்களை ஒழுங்குபடுத்தாத... கண்டும் காணாமலிருக்கும் அதிகாரிகளைக்குறை சொல்வதா?...

யாரைக்குறை சொன்னாலும் விபரீதங்கள் நடந்தபின்னும் விழித்துக்கொள்ளாத, எந்தவொரு விபரீத விபத்துக்களையும் ஓரிருவாரம் பரபரப்புச்செய்தியாக்கிவிட்டு பாடம் கற்றுக்கொள்ள மறக்கும் நம் மனோபாவங்கள் மாறும்வரை இங்கே எதுவும் மாறப்போவதில்லை என்பதே நிஜம்!!!

No comments:

Post a Comment