SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Monday, November 7, 2011

புலம் பெயர்ந்தவர்கள் உயிருக்குப்பயந்து ஒளிந்தவர்களா?-ஈழம் இன மான உணர்வா? இல்லை வெறும் இழிவா?- ஒரு பின்னூட்டத்தின் பதில்!!!

இப்பொழுதெல்லாம் இனத்திற்கும் ஈழத்திற்கும் எதிராக கருத்துரை இடுவதென்பது இணையத்தில் ஒரு ஃபேஷன் போல ஆகிவிட்டதா என்று தெரியவில்லை… அங்கே சுத்தி, இங்கே சுத்தி கடைசியில் எனது தளத்திலும் நண்பர் ஒருவர் கருத்துரையிட்டிருக்கிறார்… அவருக்கான பதிலை அவருக்கு மட்டுமே கூறியிருக்கலாம்… ஆனால் அவரைப்போன்றே இன்னும் ஏராளமானோர் தமிழினத்தில் இருப்பதால் அவருக்கான பதிலை அவரைப் போன்ற எல்லோருக்குமான பதிலாக ஒரு பதிவாகவே வெளியிடும் நிர்பந்தத்திற்கு ஆளானேன்...

எனது தளத்தில்... ‘’தமிழ்நாடு தனிநாடாகுமா?... முருகன், சாந்தன், பேரறிவாளன் ஒரு பார்வை’’ என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதன் பின்னூட்டத்தில் திரு.நெல்லை கிருஷ்ணன் என்பவர் எழுதிய கருத்துக்களும் அதற்கான எனது பதில்களும் அப்படியே கீழே... ...

1 – 25 of 200 Older ›



உங்கள் வயது எனக்கு தெரியாது சாய்ரோஸ் ஆனால் எனக்கு தெரிந்து 1983 முதல் ஈழ பிரச்னை தீவிரமடைந்தது முதல் வைகோ அவ்வபோது இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு இருக்காது என்பார், தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும என்பார்.துப்பாக்கிகளின் சத்தத்தை சங்கீதமாக நினைப்பவர்கள் நாங்கள் என்பார். இப்போது இந்திய விடுதலை 2047ல் நூற்றாண்டுகளை கொண்டாடும்போது இந்தியாவில் தமிழ்நாடு இருக்காது என்கிறார். ஒன்றும் நடக்காது. 2047 ல் இவர் இருப்பாரா? இல்லையேல் நானோ நீங்களோ இருப்போமா? ஏன் நீங்கள் ஐநா மூவர் குழு அறிக்கையை முழுமையாக படித்ததில்லையா? www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf இந்த பகுதியை download செய்து படியுங்கள். குறிப்பாக 65 மற்றும் 115 வது பக்கங்களை படியுங்கள். புலிகளின் அராஜகம் தெரிய வரும்.www.spur.asn.au/prominent_tamil_leaders_killed.htm இந்த பகுதியை படியுங்கள். இது ஆஸ்திரேலியா நாட்டின் வலைத்தளம்.அதனால் ஈழ பிரச்சனையில் தமிழகத்தில் வெறிக்கூச்சல் போடுபவர்கள், உயிருக்கு பயந்து மேற்கத்திய நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே ஓடிபோய் வாழ்கையை வளமாக்கி கொண்டவர்கள் (இவர்களுக்கு பெயர் புலம்பெயர்ந்தவர்கள்) இவர்களின் பார்வையில் மட்டும் உங்களை போன்றவர்கள் ஈழ பிரச்சினையை பார்க்கின்றனர். ஆனால் ஆரம்பம் முதல் இந்த பிரச்சனையின் பல்வேறு பரிணாமங்களை அறிந்தவர்கள், புரிந்தவர்கள் அதாவது கிட்டதட்ட நாற்பது வயதை கடந்தவர்கள் தமிழகத்தில் நிறையவே உண்டு. அதனால்தான் இது போன்ற பிரச்சனைகளை கிளப்பும் கட்சிகளுக்கு தமிழகத்தில் வாக்கு வங்கி பெரிதாக இல்லை. ஆரம்பத்தில் ஒரு பெரிய இயக்கத்தில் இருந்தும், 18 ஆண்டுகள் தனி இயக்கம் நடத்தியும் 2% கூட வாக்கு வங்கி இல்லாதவர்களின் மிரட்டல் இந்திய இறையாண்மையை சீண்ட கூட முடியாது. ராஜீவ் காந்தி மரணத்தின் போது காங்கிரஸ் தலைவர்கள் யாரும் உடன் இல்லை என்பது இருக்கட்டும். இந்த மூவரை தவிர இந்த செயலில் ஈடுபட்ட சிவராசன், சுபா போன்றவர்கள் பெங்களுரு அருகே கொனனகுண்டே என்ற இடத்தில சுற்றிவளைக்கப்பட்ட போது தற்கொலை செய்து கொண்டார்களே, எந்த புலி ஆதரவாளரும் சேர்ந்து சாகவில்லையே. பிரபாகரன் கூட மண்டை பிளந்த நிலையில் தனியாக குட்டையில் இருந்து பிணமாக எடுக்கப்பட்டார். போர் தீவிரமடைந்த போது போது இங்குள்ள வாய்ச்சொல் வீரர்கள் தத்தமது தொண்டர்களுடன் சென்று பிரபாகரனோடு சேர்ந்து போரிட்டு சாகவில்லையே அது ஏன்? ஜெயலலிதா எப்படி உங்களை ஆதரிப்பார்? இந்த கொலைகார கும்பலின் கொலை பட்டியலில் 1991 முதல் அவர் பெயரும் இருந்து வந்தது. அதனால்தான் அவருக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டது. நிச்சயம் உங்கள் கோரிக்கை நிறைவேறப்போவதில்லை. அன்று நடந்தது RDX குண்டு வெடிப்பு. பேரறிவாளன் மற்றும் சாந்தன் இருவர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் இதோ. ரெண்டு பாட்டரி வாங்கி கொடுத்தது மட்டும் குற்றச்சாட்டு அல்ல Sivarasan, who planned the operation in Madras from January 1990, left for Jaffna in February 1991 and returned to India in March 1991 with enough gold to finance the operation. In February 1991, V Siriharan, alias Thass, alias Indu Master, alias Murugan, an LTTE expert in explosives, arrived in Madras. Meanwhile, it was reported that G Perarivalan, alias Arivu, a computer wizard and an expert in electronics and the brother-in-law of Jayakumar, designed the belt bomb, with Murugan's guidance. Six grenades containing cyclonite explosives, known as C4-RDX, each fitted with 2,800 splinters of 2 mm were secretly flown from Singapore. Arivu held them in a denim belt using a silver wire connected to the nine-volt battery and two goggle switches to detonate it. The whole device was enclosed in a casing of Trinitrotoluene (TNT). Dhanu and her stand in Subha were both members of the women's wing. மேலும் நாம் கருதுவது போல் பாட்டரி என்பது சாதாரண கடைகளில் கிடைக்கும் கடிகாரம், PEN TORCH விளக்குகளில் பயன்படுத்தும் உருளை வடிவ பாட்டரி அல்ல. இந்த வகை பாட்டரி சதுர வடிவில் அக்காலத்தில் குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே கிடைக்க கூடியது. குறிப்பாக இறக்குமதி செய்யப்படும் ரிமோட் பொம்மைகளில் கிடைக்கும். மேலும் இந்த அறிவு உங்கள் பாஷையில் அறியாத சிறுவனாக இருக்கும் போதே கொலைக்கு முன்பு யாழ்ப்பாணம் சென்று தங்கி புலிதலைவரை சந்தித்து வந்திருக்கிறார். சென்னையில் இருந்து கொண்டு சாத்தானின் படைகள் என்ற புத்தகத்தை அச்சிட்டு பிரிட்டனில் அச்சிட்டதாக நாடகமாடியிருக்கிறார். இந்த அப்பாவியை பற்றி இந்த கொலையை விசாரித்த விசாரணை அதிகாரி பல்வேறு தகவல்களை தெரிவித்து இருக்கிறார்.உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான். தப்பு செய்தவன் தண்டனை பெறுவான். இம்மூவரும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். நீதி வெல்லும்.
By நெல்லை கிருஷ்ணன் on தமிழ் நாடு தனி நாடாகுமா?... முருகன், சாந்தன், பேரற... on 11/6/11


அன்பு நண்பர் திரு.நெல்லை கிருஷ்ணன் அவர்களுக்கு, உங்களது நீண்ட விவாதங்களையும், சான்றாக நீங்கள் அளித்த இணைய முகவரிகளையும் அலசிவிட்டு உங்களுக்கான பதிலை எழுதுகிறேன்... முதலில் ஒன்றை தெளிவுபடுத்துகிறேன்... நான் தமிழின தீவிர உணர்வாளன் மட்டுமேயொழிய விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் அல்ல... உங்களது பின்னூட்டத்தில் ஐ.நா அறிக்கையை முழுமையாக படித்ததில்லையா என்று என்னைக்கேட்டிருந்தீர்கள்….. அதுவும் குறிப்பாக பக்கங்கள் 65ம்,115ம் படிக்குமாறு வினவினீர்கள்… உங்கள் வழிகாட்டலுக்கு நன்றி… அதே அறிக்கையை நானும் படித்தேன்… அதன்பின்தான் புரிந்தது… பலபேர் அவரவர் நிலைப்பாடுகளுக்கேற்ப அந்த அறிக்கையிலிருந்து தங்களுக்கு சாதகமான விஷயங்களை மட்டும் தங்கள் விவாதங்களுக்கான பின்புலமாக கூட்டு சேர்த்துக்கொள்கிறார்கள் என்பது… இவ்வளவு விரிவாக விவாதம் பண்ணும் நீங்கள் அதே அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் அப்பாவி பொதுமக்களின் மீது வீசப்பட்ட க்ளஸ்ட்டர் மற்றும் பாஸ்பரஸ் குண்டுகள்… சிங்களப்படையினரால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட தமிழ்ப்பெண்கள்… மருத்துவமனையின் மீதுகூட சிங்கள இராணுவத்தால் குண்டு வீசப்பட்ட நிகழ்வுகள்… பெற்றோரை இழந்த பிஞ்சுக்குழந்தைகள்கூட ஊனமாகித் தவிக்கும் கொடூரங்கள்… இதெல்லாம் படிக்காமல் மனசாட்சியைக் கழற்றிவைத்துவிடுவீர்களா?... முதலில் உங்களது விவாதங்களை ஒரு வேளை நிஜமான ஆரோக்கியமான விவாதமாய் இருக்குமோ என்று நம்பினேன்… ஆனால் நீங்கள் சான்றாய் சுட்டிக்காட்டிய பல விஷயங்களையும் உட்சென்று ஆராய்ந்தபிறகு உங்கள் மீது ‘’நீங்களும் ஒரு சராசரி காங்கிரஸ் கட்சிக்காரராய்த்தான் இருக்கவேண்டும்’’ என்ற எண்ணம் வருகிறது.

ராஜீவ் காந்தியின் மரணத்தை நான் எனது பல்வேறு கட்டுரைகளில் விடுதலைப்புலிகளின் மாபெறும் தவறு என்றுதான் முன்னிறுத்தியிருக்கிறேனேயொழிய அதைச்சரியென்று சொல்லவரவில்லை. ராஜீவ் காந்தி மரணத்தின் போது எந்த காங்கிரஸ்காரனும் இறக்கவில்லை என்பது நான் எழுப்பிய சந்தேகம் மட்டுமேயொழிய அவர்கூடச்சேர்ந்து எல்லா காங்கிரஸ் தலைவரும் சாகவேண்டும் என்று எழுதவில்லை… ஒரு கட்சியின் தேசியத்தலைவர் இறக்கும்போது, குண்டு வெடிக்கும் தருணத்தில் மட்டும் அந்தக் கட்சிக்காரர்கள் ஒருவர்கூட அவர் அருகில் இல்லாமல் குண்டு வெடித்தபிறகு அவரது உடலை அடையாளம் கண்டு… துணியால் போர்த்தி… என்று எல்லாம் செய்தார்களே எப்படி? ஒருவேளை குண்டு வெடிக்கப்போவதும் ராஜீவ் இறக்கப்போவதும் முன்னரே தெரிந்து அரசியல்வாதிகள் அவர் அருகில் போகாமல் ஒதுங்கிக்கொண்டார்களா என்ற ரீதியில் நான் கேட்ட கேள்விக்கு சிவராசன், சுபா போன்றோர் தற்கொலை செய்து கொண்டபோது எந்தப்புலி இயக்கத்தினரோ…ஆதரவாளரோ உடன் சேர்ந்து சாகவில்லையே என்ற அர்த்தமில்லாத தர்க்கத்தை எழுப்பியிருக்கிறீர்கள்… பிரபாகரன் மண்டைபிளந்து தனியாகத்தானே உயிர்விட்டு கிடந்தார்… இங்குள்ள தமிழின ஆதரவாளர் எவரும் பிரபாகரனோடு சேர்ந்து சண்டையிட்டுச்சாகவில்லையே என்று கேட்டிருந்தீர்கள்…. தமிழர்கள் கொத்துக்கொத்தாய் மாண்டாலும், தமிழக மீனவர்கள் நித்தம் நித்தம் செத்துப்பிழைத்தாலும் எந்தவித சொரணையுமின்றி வீண்விவாதம் செய்யும் கூட்டமும் தமிழகத்திலேயே பரவிக்கிடக்கிறதே… பிரபாகரனோடு யாரும் சாகவில்லை என்று கருத்துரை சொன்ன நெல்லை கிருஷ்ணரே… ஈழ விடுதலைப்போராட்டத்தில் இதுவரை இழந்த பல லட்சம் உயிர்களும் பிரபாகரன் என்ற ஒற்றைத்தலைமையின் வழிக்காட்டலில் போராடி மாண்டவர்கள்தான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்…

அதேப்போல புலம்பெயர்ந்த தமிழர்களைப் பற்றியும் உயிருக்குப் பயந்து மேற்கத்திய நாடுகளில் ஓடி ஒளிந்து சம்பாதித்து தங்கள் வாழ்க்கையை வளமாக்கிக்கொண்டவர்கள் என்று எழுதியிருக்கிறீர்கள்… மிகத்தவறு நண்பரே… ஒரு இனத்திற்கான சுதந்திரப் போராட்டத்தில் அந்த இனத்தைச் சேர்ந்த அத்தனை பேருமே களத்தில் நின்று போராடி மடியவேண்டும் என எந்த முட்டாளும் சொல்லமாட்டான்… திறமையானவர்கள் தங்கள் இனத்திற்கான போராட்டத்தில் பின்னால் நின்று உதவுவார்கள்… நீங்கள் குறிப்பிட்ட புலம் பெயர்ந்தவர்களும் அப்படித்தான்… தாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தின் ஒருபகுதியை தங்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு கொடுத்து பலப்படுத்துபவர்கள்தான் புலம் பெயர்ந்தவர்கள்… என்றாவது தங்களுக்கென தனிச்சுதந்திரநாடு கிட்டாதா?… தாங்கள் இறக்கும்முன் தங்கள் சுதந்திர மண்ணில் ஒருமுறையாவது கால்வைப்போமா என்று ஏங்கிக்கொண்டிருப்பவர்கள்தான் புலம் பெயர்ந்தவர்கள்… அவர்களைப்பற்றிய உங்கள் தவறான கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

உப்பு தின்றவன் தண்ணீர் குடிப்பான். தப்புசெய்தவன் தண்டனை பெறுவான் என்று எழுதியிருந்தீர்கள்… தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை… அதுவும் கடுமையான தண்டனைகள் அளிக்கப்படவேண்டும் என்பதுதான் எனது பார்வையும். அப்போதுதான் நமது பாரதத்திருநாட்டில் குற்றங்கள் குறையும்… ஊழல்கள் குறையும்… ஆனால் ராஜீவ் காந்தியைக் கொன்றது இந்த மூவர் மட்டும்தானா?.. இந்தியாவில் இவர்களுக்குப் பின்னால் வேறேதும் அரசியல் சக்திகள் இல்லையா?... இருபது வருடங்களுக்கும் மேலாக கடும்சிறை தண்டனை அனுபவித்து தங்களது இளமையையே தொலைத்து நிற்கும் இந்த மூவருக்கும் இன்னமும் மரணதண்டனை விதித்து மனித குலத்தில் இன்னமும் நாகரீகம் வளரவில்லை என்பதை நிரூபிக்கவேண்டுமா?... என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடைதேடிக்கொள்வதில் தவறேதும் இருப்பதாய் தோன்றவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக நண்பர் நெல்லை கிருஷ்ணன் அவர்களே… தயவு செய்து நீங்கள் சுட்டிக்காட்டிய அதே ஐ.நா அறிக்கையை நீங்கள் முதலில் முழுவதும் படியுங்கள். சிங்கள அரசால் அப்பாவித்தமிழினம் எப்படியெல்லாம் வேரறுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் படியுங்கள். போருக்குப்பின்னாலான தமிழினத்தின் நிலையும் அதே அறிக்கையில் அளவிடப்பட்டிருக்கிறது. வெறுமனே ஏதோ இரண்டு பக்கங்களை மட்டும் சாட்சிக்குச் சேர்த்துக்கொண்டு மனசாட்சியை கழற்றி வைத்துவிட்டு வீண் விவாதம் செய்து மற்றவர்கள் மனதையும் புண்படுத்தாதீர்கள்…

ஈழம் என்பது ஒரு குறிப்பிட்ட இன மக்களின் சுதந்திரப் போராட்டக்களம். அதைக் கொச்சைப்படுத்தி தீவிரவாதமாய், தீவிரவாதிகளாய் சித்தரிக்க மேலும் மேலும் முயலாதீர்கள்...

இவ்வளவு விரிவாய் கருத்துரையிடும் நீங்கள், இன்றும் சிங்களத்தாரால் அல்லல்படும் தமிழக மீனவர்கள் நிலையில் என்ன கருத்து வைத்திருக்கிறீர்கள்?... தமிழகத்தில் ஈழ ஆதரவு பேசும் எந்தக்கட்சிக்கும் வாக்கு வங்கியிருக்காது என்பதை மட்டும் கூறி அதனால் ஈழம் மீதான இனவுணர்வு நிலைப்பாடே தவறானது என்று நீங்கள் சுட்டிக்காட்ட நினைப்பது ஏற்கத்தக்கதல்ல. தமிழர்களிடமும், தமிழக அரசியல் கட்சிகளிடமும் இல்லாத ஒற்றுமையும், ஆட்சியின் மீது கொண்ட பற்றுக்காக தமிழினத்திற்கு ஒரு சிலர் விளைத்த துரோகமும், தமிழ்நாட்டிலேயே தமிழின உணர்வுக்கு எதிராக ஒரு கூட்டம் கருத்திடுவதும்தான் ஈழத்திற்கு எதிரான தமிழகத்தின் தடைக்கற்கள்.

நீங்கள் கூறிய மற்றொரு ஆஸ்திரேலிய வலைத்தளத்தில் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர்களின் பட்டியல் இருந்தது. அந்தப்பட்டியலை மட்டுமே பார்க்காமல் அந்தப்பட்டியலில் இருந்த ஒவ்வொருவரும் தமிழினத்திற்கு எதிராய் இழைத்த துரோகம் என்னவென்பதையும் அலசினால்தான் நியாயம் யார் பக்கம் என்பது புரியும்.

மற்றபடி ‘’மூவரும் தண்டிக்கப்படுவார்கள். நீதி வெல்லும்.’’ என்றெல்லாம் நீங்கள் முழங்கியிருப்பது காங்கிரஸ் கட்சியின் இளங்கோவன் போலவே உள்ளது.

தமிழினத்திற்கு தமிழினமே எதிரி என்பது கொஞ்சம் கொஞ்சமாக வெளிறிக்கொண்டிருக்கிறது... சரியான வழிகாட்டும் இன, மத, அரசியல் சார்பற்ற தலைவர் ஒருவர் தமிழினத்திற்கு கிடைக்கும்வரை இங்கொன்றும் அங்கொன்றுமாய் சிதறிக்கிடக்கும் தமிழின உணர்வாளர்கள் ஒருங்கிணைந்து செயலாற்றுவதும், ஈழத்திற்கான குரலை தமிழகத்திலிருந்து எழுப்புவதும் சாத்தியமில்லாமல் இருக்கலாம். ஆனால் காற்று எப்போதும் ஒரே திசையில் வீசாது. விடுதலைக்கான காலம் எவராலும் கணக்கிடமுடியாத போராட்ட அளவுகோல்…

தொடர்ந்து பேசலாம்...

8 comments:

  1. உப்பை தின்றவன் தண்ணி குடிப்பான் என்று கூறுவது ராஜீவ் காந்தி மரணத்துக்கும் பொருந்தும் அல்லவா... வீண் விவாதம் தோழர்... நேரம் தான் வீண்...

    ReplyDelete
  2. நெல்லை கிருக்ஷ்ணன் போன்ற அறிவுகொழுந்துகளுடன் விவாதம் செய்வது வீண்வேலை.தர்மத்தின் வாழ்வை சூது கவ்வும்,பின் தர்மமே வெல்லும்.ஈழத்தை காலம் வென்று தரும்.அந்த இலக்கை தொடர்வார்கள் சந்ததி தமிழர்கள்.

    ReplyDelete
  3. மூவருக்கு மட்டுமல்ல...தூக்கு தண்டனையே கூடாது என்பதுதான் சரி...அது நாகரிக சமுதாயம் செய்யக் கூடாதது. இந்த மூவருக்கும் அது பொருந்தும். மக்களிடம் பிரச்சாரம் இதைப் பற்றியே இருக்கவேண்டும்.
    ஆனால் இங்கே பரப்புரை நடந்து கொண்டிருப்பது இம்மூவரும் உத்தமர் என்று. அதனால்தான் மக்களிடம் எந்தவிதமான பெரும் எதிர்வினையும் எழும்பவேயில்லை...

    ReplyDelete
  4. நெல்லை கிருஷ்ணன்,

    நீங்கள் எவ்வளவு சொன்னாலும் புரிந்துகொள்ளப் போவதில்லை, உலகம் முழுக்க தனிநாடு கிடைத்தால் சாதிப்போம் என்று மக்கள் நினைக்கும் காலகட்டத்தில், நம் சந்ததி எப்படி போனாலும் பரவாயில்லை அவர்களை யார் மிதித்து அடிமையக்கினாலும் பரவாயில்லை, இப்பொழுது நான் நன்றாக வாழ வேண்டும் என்று நினைக்கும் உங்களைபோல் ஒரு சிலரே தன்மைபிக்கை இல்லாமல், தன்மானம் இல்லாமல், இன உணர்வு இல்லாமல், இந்தியாவிற்கும் பயன்படாமல், தமிழ் நாட்டிக்கும் பயன்படாமல், வாய்ப்பு கிடைத்தால் திருடலாம் என்று நினைக்கும் அரசியல் கும்பல்களால்த்தான் தமிழினம் இப்படி இவ்வளவு காயப்பட்டுக் கிடக்கிறது

    தலைவர் உயிருடன் இருக்கும்போது பேச எழாத நாவுகள் எல்லாம் இப்பொழுது விஷம் கக்கும் பாம்பாய் மாறி உண்மை உணர்வாளர்களை காயப் படுத்த முயச்சிகிறது

    இந்திய இறையாண்மையை பற்றி பேசும் நீங்கள் அதை வைத்து இதுவரை என்ன செய்திருகிறீகள்? காஸ்மீர் பிரச்சனை இந்திய பிரச்சனைதானே நீங்கள் ஏன் ஆயுதம் எடுத்து செல்லவில்லை, உங்களுக்கு இந்தியன் என்ற உணர்வு இல்லையா?

    ஆஸ்த்திரேலியாவில் இந்தியர்களை தாக்கியபோது நீங்கள் அங்கு சென்று அவர்களை ஏன் தாக்கவில்லை?

    புலிகள் என்பது தமிழின ராணுவம், உலகத்தால் அங்கீகரிக்கப் படாத ஆனால் தீவிரவாதம் இல்லை என்று உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப் பட்ட இன்றும் பல நாடுகளால் பாராட்டப்படுகிற ஒரு முன்னணி எடுத்துகாட்டு ராணுவம் அதன் உயிர்நாடி "பிரபாகரன்" அதன் தாரக மந்திரம் "தமிழ் ஈழம்"

    அரசியல் சதியில் பின்னப்பட்டு இழைக்கப் பட்ட துரோகத்திற்கு காரணம் இந்த இந்தியா? ராஜீவ் கொலைக்கு முக்கியகாரணம் புலிகள் அல்ல இந்த இந்தியாவில் இருக்கும் பெரும் புள்ளிகள் தான். புலிகள் வெறும் ஆயுதம் மட்டுமே, ராஜீவின் மீது புலிகளுக்கு இருந்த கோபத்தை சில நரிகள் பயன்படுத்திக் கொண்டன. ராஜீவ் கொலை விசாரணையை முழுதும் முடித்துவிட்டர்களா என்று நீங்கள் கேட்க வில்லையா? அப்படி என்றால் நீங்கள் உண்மையான இந்தியர் இல்லையா? குற்றம் செய்தவனுக்கு தண்டனை இல்லையா?

    நீங்கள் சுயநலமாக இருந்தால் அதை உங்களுடனும் உங்கள் குடும்பத்துடனும் வைத்துக் கொள்ளுங்கள். இன உணர்விக்கோ, திய உணர்விக்கு அதை கொண்டுவந்து தமிழின துரோகியகதீர்கள்

    இந்த இந்திய இறையாண்மை வெறும் அறுபதுவருட உணர்வு, தமிழின உணர்வு ஆயிரம் ஆயிரம் வருடம் தண்டி இருப்பது. இத்தனை வருட தமிழ் உணர்வே இல்லாத உங்களிடம், வெறும் அறுபது வருட இந்திய இறையாண்மை உணர்வு மட்டும் எப்படி இருந்துவிடும்?

    இந்த சுயநலமும் பொறாமையும் இருக்கும் வரை

    ReplyDelete
  5. //தலைவர் உயிருடன் இருக்கும்போது பேச எழாத நாவுகள் எல்லாம் இப்பொழுது விஷம் கக்கும் பாம்பாய் மாறி உண்மை உணர்வாளர்களை காயப் படுத்த முயச்சிகிறது// ஏன் அப்போது விமர்சனங்கள் அதிகமாக எழவில்லை...பேசினால் கொன்றுவிடுவேன் என்கிற சித்தாந்தம் உள்ளவனுக்கு எப்படி பெரும்பாலான மக்களின் மனமொத்த ஆதரவு கிடைக்கும்.நீங்கள் யாரை பின்பற்றுகிறீர்களோ பிறகு உங்கள் குணாதிசயங்களும் அதைப்போலவே இருக்கும். பிரபாகரன் தலைவன் என்றால் ‘பேசினால் கொன்னே போடுவேன்...என்றுதான் சொல்வீர்கள். அந்த பதிலில் இருக்கிறது விடுதலைப்புலிகளின் தோல்விக்கான காரணம். யாழ் தமிழன், இலங்கைத் தமிழன், மலையகத் தமிழன், இலங்கை முஸ்லிம் தமிழன்...இவர்களை கருத்தொற்றுமைக்கு கொண்டு வரமுடிந்ததா...எத்தனை பிரிவுகள் ஐயா...ஒரே ஒரு குறிக்கோள் உள்ள ஒரு இயக்கத்தையே சரியாக வழிநடத்தாத கூட்டம் கேள்வி கேட்கிறது பலதரப்பட்ட மக்கள் மொழியால், மதத்தால் புவியியல் வேறுபாடுகளால் ஆனவர்களைப் பார்த்து ‘உங்கள் இந்தியா எப்படி இருக்கிறது பார்த்தாயா என்று?’

    ReplyDelete
  6. I agree every word of your comments.

    Bharathi, Dallas, Tx

    ReplyDelete