SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Monday, September 26, 2011

தமிழர்கள் நாமென்ன உயிரா? வெறும் மயிரா?...

அமைதிப்படையென்ற பெயரில்
அழிந்ததும் நம் உயிர்தான்;
கற்புகளின்றி ஈழத்தில்
சிதைந்ததும் நம் உயிர்தான்;

ராஜீவ் காந்தி கொலைக்களத்தில்
போனதும் நம் உயிர்தான்;
கொலைக்குற்ற நீதியுடன்
போராடுவதும் நம் உயிர்தான்;

இலங்கைத்தமிழர் விஷயத்தில்
முத்துக்குமரன் ஈந்ததும் நம் உயிர்தான்;
மூன்று தமிழர் உயிர் காக்க
செங்கொடி இழந்ததும் நம் உயிர்தான்;

முள்ளிவாய்க்கால் கொடூரத்தில்
மாண்டதும் நம் உயிர்தான்;
முள்வேலி சித்திரவதையில்
மாள்வதும் நம் உயிர்தான்;

நாள்தோறும் கடலுக்குள்
இழப்பதும் நம் உயிர்தான்;
காவிரியும் கிடைக்காமல்
கொடுப்பதும் நம் உயிர்தான்;

தமிழர்கள் என்றால்
வெறுப்பாய் இளப்பமாய்
கன்னடனும் தெலுங்கனும்
மலையாளத்தானும் பார்த்ததுபோக
மத்திய அரசாங்கமும்
சிங்களனுடன் கைகோர்த்தும்
மானம்கெட்டு ஈனப்பிறவியாய்
அரசியலுக்கும் சினிமாவுக்கும்
இன்னமும் பல்லக்குத்தூக்கி
எத்தனைகாலம்தான் அடிமாடாய்
வாழ்ந்து மாள்வது?

இனத்துரோகிகள் பலபேர்
வீழ்ந்து கொண்டிருக்கும் தமிழினத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கும் வரையிலும்
தமிழர்களின் உயிரை
மதிக்காத மத்திய அரசு
ஒருபோதும் நம்மை
மயிராய்க்கூட மதிக்காது;

தமிழினத்தையும் தாய்மொழியையும்
காக்கும் கடமை நமக்கிருப்பதாய்
நம்பக்கூடிய தமிழர்கள் மட்டும்
ஒருமுறையாவது சிந்தியுங்கள்…
நாள்தோறும் பல வழியில்
பலவிதமாய் வீழ்ந்து கொண்டிருக்க
தமிழர்கள் நாமென்ன உயிரா?...
இல்லை வெறும் மயிரா?...

4 comments:

  1. நல்ல இருக்கு அண்ணா

    ReplyDelete
  2. நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும்
    திட்டி கொள்ளுங்கள்,
    உரைக்காது இங்கு எவருக்கும்..
    எவ்வளவு தான் நடந்தாலும்
    நாங்கள் சத்தம் போட்டு சொல்வோம்...
    'மங்காத்தாடா '

    ReplyDelete
  3. நல்லாயிருக்கு ப்ரதர்... ஏற்கனவே மங்காத்தா பட கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் நடந்ததை டி.வி.ல பாத்தேன்... very good.. keep it up!!!

    ReplyDelete
  4. சூர்யாஜீவா சொன்னது போலவே அந்த படம் வ்ந்ததும் தமிழ்மணத்தில் திறந்தாலே மங்காத்தா,மங்காத்தா,ஆத்தாதாம்.கூடங்குளம்,மீனவன்சாவுல்லாம் தூசியா போயிடிச்சு இங்கே,பின்னே கன்னடனும் தெலுங்கனும்,மலையாளியும் தண்ணி எப்படி கொடுப்பான்.எவன் எவனையோ இவர்கள் உயிராய் நினைத்து பாலாபிக்ஷேகம் செய்வது பார்த்தால் ம..ராகத்தான் மற்ற விடயங்களை இவர்கள் நினைப்பது புரிகிறது.பிறகு எப்படிங்க?---- இ.வளவன்.

    ReplyDelete