SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Thursday, September 1, 2011

தமிழ் நாடு தனி நாடாகுமா?... முருகன், சாந்தன், பேரறிவாளன்-ஓர் பார்வை

பேரறிவாளன், சாந்தன், முருகன்... கொஞ்ச நாட்களாய் இந்த மூன்று பெயர்களும் தமிழின உணர்வாளர்களுக்கு மட்டுமல்ல… நல்ல முறையில் மக்களாட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவுக்கும் பெரும் மன உளைச்சலையும், மனப்போராட்டத்தையும் உண்டு பண்ணிக்கொண்டிருக்கும் விஷயமாகும். இந்த மூன்று பேர்களின் தூக்குதண்டனையும், மத்தியிலும் மாநிலத்திலும் பல காங்கிரஸ் கோமாளிகளின் கருத்துக்களும் சூட்டைக் கிளப்பிக்கொண்டிருக்கும் நிலையில் இதைப்பற்றிய ஒரு கண்ணோட்டத்தையும், தமிழக மக்களை நம்பி முதல்வரம்மா எடுக்கவேண்டிய முன்னெடுப்புகளையும் பற்றிய பதிவுதான் இது.

சமீபத்தில் நடந்த ஒரு போராட்டத்தில் வைகோ மத்திய அரசை எச்சரிக்கும் விதமாக ‘’தொடர்ந்து தமிழர்களை புறக்கணித்து தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளாக மத்திய அரசு எடுத்துவந்தால் 1947 இந்தியாவுக்கு சுதந்திரம் போல 2047 தமிழகத்திற்கான சுதந்திரமாக மாறக்கூடும்’’ என்று முழங்கியிருக்கிறார். (போகிறபோக்கைப் பார்த்தால் தமிழர்களுக்கு கொஞ்சகொஞ்சமாக சூடு சொரணை வர ஆரம்பித்திருப்பதால் வைகோவின் பேச்சு நிஜமானாலும் ஆகலாம்!!!)

முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி அணுகுமுறை இந்தமுறை ஆரம்பத்திலிருந்தே அமர்க்களமாக உள்ளது. தொடர்ந்து தி.மு.க.வின் ஊழல் முதலைகளை களிதின்ன அனுப்பிக்கொண்டிருப்பதை தி.மு.க.வைத்தவிர இதுவரை எவருமே எதிர்க்கவில்லை. நடுநிலைமையான மீடியாக்களும்கூட தவறென்று சொல்லவில்லை. எல்லோருக்குமே தெரியும் அந்த ஆப்புகள் சரியானதுதான் என்பது. ஒவ்வொரு விஷயத்தையும் மக்கள் பார்வையில் முதல்வர் கையாண்டு கொண்டிருக்கும் நிலையில் மத்திய அரசின் குள்ளநரித்தனத்தால் இப்போது பேரறிவாளன், முருகன்,சாந்தன் ஆகிய மூவரின் கருணைமனுக்கள் ஏறத்தாழ 11ஆண்டுகளுக்குப்பிறகு ஜெயலலிதாவின் ஆட்சிகாலத்தில் குடியரசுத்தலைவரால் நிராகரிக்கப்பட்டு அவர்களைத் தூக்குக்கு அனுப்பும் திட்டம் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. முதலில் அவர்களைக்காக்க தன் கைகளில் எதுவுமில்லை என்று மறுத்த முதல்வர் தமிழின உணர்வாளர்களின் எழுச்சியைப்பார்த்து அவர்களின் தூக்குதண்டனைக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்.

உண்மையிலேயே மனதாரக்கூறுகிறேன்… தமிழினத்தலைவர்… மூத்த அரசியல்வாதி… அரசியல் சாணக்கியர் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் கருணாநிதி போன ஆட்சியில் நாற்காலியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தமிழர்களுக்காக எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றாமல் போன துரோகத்தோடு ஒப்பிடும்போது ஜெயலலிதா எவ்வளவோ மேல் என்றுதான் கூறவேண்டும். ஏற்கனவே இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். இப்போது இரண்டாம் முறையாக தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். ஆனால் அவர் தீர்மானம் நிறைவேற்றியவுடனேயே மத்திய அரசின் புதிய கோமாளி ஒன்று தமிழக அரசின் தீர்மானம் எங்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்று பேட்டியளிக்கிறது. இங்கே தமிழகத்தில் காங்கிரஸ் அரைவேக்காடுகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் தூக்கலிடவில்லையென்றால் தமிழகத்தில் தீவிரவாதம் தலையெடுக்கும். ஆகவே ராஜீவ்காந்தியைக் கொன்ற அவர்கள் மூவரையும் உடனடியாக தூக்கிலிட்டு தமிழகத்தை அமைதிப்பூங்காவாக மாற்றவேண்டும் என்று வாய்கிழிய முழங்குகின்றனர். முட்டாள்கள்… ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் என்று இந்த மூவரையும் கூறுகிறார்களே… நான் ஏற்கனவே எனது மற்றொரு கட்டுரையில் கேட்ட கேள்வியையே இங்கே மீண்டும் கேட்கிறேன்… எப்படி ராஜீவ் காந்தியின் மரணத்தின் போது அவரும், அவருடைய மெய்க்காப்பாளர்களும், சில போலீஸ்காரர்களும், பொது மக்களும் மட்டுமே இறந்து போயினர். ஒரு கட்சியின் தேசியத் தலைவர் தமிழகத்தில் வந்து குண்டு வெடிப்பில் சிக்கி இறக்கும் நிகழ்வில் எந்தவொரு அரசியல்வாதியும் (காங்கிரசைச் சேர்ந்தவர்களும்கூட) அவருடன் நடந்து சென்று இறந்து போனதாய்ச் செய்திகள் இல்லாத மர்மம்தான் என்ன? இதற்கான பதிலையும் காங்கிரஸ் கோமாளிகள் முழங்குவார்களா?!

ஏற்கனவே நளினியின் விடுதலை மீதான கேள்விக்கு ‘’நளினியின் வீடு அமைந்திருக்கும் ஏரியாவில் அரசியல்வாதிகள் மற்றும் உயரதிகாரிகளின் வீடுகளும் இருப்பதால் நளினியை விடுதலை செய்வது ஆபத்தானது’’ என்று கருணாநிதி அரசு அளித்த கோமாளித்தனமான பதிலால் இன்னமும் சிறைக்குள் வாடுகிறார் நளினி. அவரது வீடு அமைந்திருக்கும் ஏரியாதான் அவரது விடுதலை மறுப்புக்கு நிஜமான காரணமென்றால் அவரை விடுதலை செய்யுங்கள். உடனடியாக உங்கள் கோமாளிகள் இல்லாத நாட்டிற்கேகூட அவரது குடியிருப்பை மாற்றிக்கொள்வார். அதேபோல ஒவ்வொரு முறை தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போதும் இந்தியாவிலிருந்து யாரோவொரு அதிகாரி ஒருநாள் பயணமாக ராஜபக்சேவை சந்தித்து விருந்துண்டு வரும் வேலையை மட்டும் கச்சிதமாகச் செய்கிறார்கள். மத்திய அரசின் பழிவாங்கும் தனத்தை இது போன்ற நிகழ்வுகள் மூலம் பட்டவர்த்தனமாய் அறிய முடிகிறது. காங்கிரசுக்கு இன்னமும் புரியவில்லை. கருணாநிதிக்கு சென்ற சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் வழங்கிய தீர்ப்புதான் வரும் மாநிலங்களவைத் தேர்தலில் மத்தியில் காங்கிரசுக்கும் வழங்கப்படப்போகிறது என்பதே நிஜம். என்ன செய்தாலும் தமிழன் சொரணை கெட்டுக்கிடப்பான் என்று மத்திய அரசும், அக்கம் பக்கத்து மாநில அரசுகளும் போடும் ஆட்டம் இனி கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்களாலேயே அடக்கப்படும்.

மத்திய அரசு முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு முட்டுக்கட்டையாகவே தொடர்ந்து சில நடவடிக்கைகளை எடுப்பதாக நடுநிலையாளர்களால் விவாதிக்கப்படுகிறது. இவ்வளவு நாள் இல்லாத அவசரமாய் திடீரென இப்போது கருணைமனுக்களை நிராகரித்து தூக்கு தண்டனையை நிறைவேற்ற துடிப்பதே ஜெயலலிதாவின் ஆட்சிக்கு கரும்புள்ளி வைத்து தமிழின ஆதரவாளர்களை ஜெயலலிதாவுக்கு எதிராக திருப்புவதற்கான முயற்சியாகத்தான் பார்க்கப்படுகிறது. ஒருவேளை ஜெயலலிதா அந்த மூன்று பேரின் தூக்குதண்டனைக்கு எதிராக ஏதாவது பலமான நடவடிக்கை எடுத்தால் அரசியல் சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி ஜெயலலிதாவின் ஆட்சி கலைக்கப்படும் வாய்ப்பும் இருப்பதாக முதல்வருக்கே செய்தி அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நேரத்தில் முதல்வரம்மா ஒன்று மட்டும் மனதில் கொண்டால் போதுமானது… தமிழர்கள் என்றென்றும் நன்றி மறவாதவர்கள். தமிழர்களுக்கான நடவடிக்கையாக நீங்கள் எத்தகைய முடிவுகளையும் தமிழர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து தைரியமாக எடுக்கலாம். ஒருவேளை தமிழர்களுக்காக நீங்கள் எடுக்கும் நடவடிக்கையால் உங்கள் ஆட்சி கலைக்கப்பட்டால் மீண்டும் வரும் தேர்தலில் நூறு சதவிகித வெற்றியுடன் உங்களை ஆட்சிப்பொறுப்பில் அமர்த்தவேண்டியது தமிழர்கள் எங்கள் ஒவ்வொருவரின் கடமை. யார் யாரையெல்லாமோ தமிழினத்தலைவர்களாக நம்பி மோசம் போனவர்கள் நாங்கள். இப்போது தமிழினத்திற்காக பாடுபடுவீர்கள் என்று உங்கள் மீது நம்பிக்கை பிறந்திருக்கிறது. தமிழர்களுக்காக பாடுபடும் தலைமைக்குப்பின் நிற்க வேண்டுமென்பது ஒவ்வொரு தமிழனும் கற்றுத்தரமாலேயே கற்றுக்கொண்ட விஷயமாகும். முதல்வரம்மா… நீங்கள் தமிழர்களுக்கான முடிவெடுக்கும் சந்தர்ப்பங்களில் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் இந்திராகாந்தி போன்ற தைரியத்தோடு முடிவெடுங்கள்.

தமிழர்களுக்காக உண்மையாய் போராடும் எவர் பின்னாலும் தமிழன் நிற்பான். தமிழகமும், தமிழர்களும் மத்திய அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால் வைகோ கூறியது போல நாம் 2047 வரைகூட காத்திருக்கத்தேவையில்லை. அதற்கு முன்னரே அதற்கான விதைகள் அதாகவே முளைக்கப்போவதுதான் காலத்தின் கட்டாயம். காலமாற்றமும் தமிழின உணர்வும் தமிழர்களுக்கு நியாயம் வழங்குமா?... இல்லை…தமிழ்நாட்டை தனிநாடாக்குமா?... பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்…

தொடர்ந்து பேசலாம்…

14 comments:

 1. எம் மக்களுக்காக இவ்வளவு தூரம் துடிக்கும் ஒவ்வொரு தமிழக குடிமகனுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்

  நன்றி தலைவா.

  ஒரு நன்றியுள்ள தமிழன்
  யாழ்ப்பாணம்.

  ReplyDelete
 2. ஜெயலிதாவை அசைக்கப் பார்த்தவர்கள் இப்போது ஆடிப்போயிருக்கிறார்கள். கரு நாய் நிதி என்னும் ஊழல் முதலையைப்போல எல்லாரும் மத்திய அரசுக்கு துதி பாடுவார்கள் என்று மனப்பால் குடித்த காங்கிரஸ் கட்சிக்கு ஜெயாவின் மருந்து ஜீரணம் பண்ணமுடியாத அளவுக்கு கசப்பாக இருக்கிறது. தமிழ் நாட்டில் போட்ட ஒரு தீர்மானம் காஷ்மீர் வரை தாக்குகிறது.ஜெயாவை விமர்சித்த வாய்கள் இப்போது பூட்டு போட்டுக்கொண்டு விட்டன.

  ReplyDelete
 3. நல்ல கண்ணோட்டம்.தமிழனுக்கு சூடு சுரணை இப்போதுதான் வந்துள்ளது.தமிழன் என்றால் இ.வா என்ற நிலையை மாற்றியே ஆகவேண்டும்.

  ReplyDelete
 4. Jayavai inuma intha makkal namburanga ?

  ReplyDelete
 5. லூசு அந்த மூன்று பேரும் ராஜீவ் மட்டும் அல்ல கூடவே 15 தமிழர்களை கொன்றவர்கள். அவர்கள் நிரபராதி என டி ஆர் பட க்ளைமேக்ஸ் போல காமேடி பண்ணாதே. போய் வேலையை பாரு

  ReplyDelete
 6. அது எப்படி அந்த மூன்று பேரையும் தூக்கில் போட்டால் தமிழ் நாடு தனிநாடாகும். நீ தான் தனி நாடு கொடுப்பதற்க்கான அதிகாரியா?? தூக்கில் போட்டுதான் பார்போமே தனி நாடு வருதா இல்லையான்னு.உன்னை மாதிரி எவ்வளவு டுபாக்கூர் நாட்டில் இருக்கு.

  ReplyDelete
 7. நச்சு பதிவு சகோ

  சூடு சொரணை இல்லாத சில அனானிமஸ் ஜென்மங்கள் இப்படித்தான் வந்து பின்னூட்டம் இடும். சொந்த பெயரைக்கூட சொல்ல பயப்படும் இவர்கள் ஒரு கணக்கே இல்லை

  பாராட்டுகள்

  ReplyDelete
 8. அன்புள்ள Anonymous Friend, தனிநாடு கொடுப்பதற்கான அதிகாரம் எனக்கில்லைதான். ஆனால் லிபியாவில் கடாஃபியை கொன்றவர்கள் எப்போதாவது நினைத்திருப்பார்களா... தங்களுக்கு இப்படியொரு அதிகாரம் கிடைக்குமென்று?... நான் டுபாக்கூரோ இல்லை... டி.ஆர்.ராஜேந்தரோ இல்லை. எந்தக்கட்சியையும் சாராத, எவருடைய ஆதரவையும் எதிர்பார்க்காத just like that எனது கருத்துக்களைப்பதிவிடும் ஒரு சாமான்யன் மட்டுமே நான். முடிந்தால் ஆரோக்கியமான விவாதம் பண்ணுங்கள். அதைவிட்டுவிட்டு வெறுமனே அடுத்தவர்களை கலாய்க்கும் விதத்தில் கருத்திட்டு உங்கள் நேரத்தையும் எங்கள் நேரத்தையும் வீணடிக்காதீர்கள்...

  ReplyDelete
 9. நெல்லை கிருஷ்ணன்November 6, 2011 at 8:06 AM

  உங்கள் வயது எனக்கு தெரியாது சாய்ரோஸ் ஆனால் எனக்கு தெரிந்து 1983 முதல் ஈழ பிரச்னை தீவிரமடைந்தது முதல் வைகோ அவ்வபோது இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு இருக்காது என்பார், தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும என்பார்.துப்பாக்கிகளின் சத்தத்தை சங்கீதமாக நினைப்பவர்கள் நாங்கள் என்பார். இப்போது இந்திய விடுதலை 2047ல் நூற்றாண்டுகளை கொண்டாடும்போது இந்தியாவில் தமிழ்நாடு இருக்காது என்கிறார். ஒன்றும் நடக்காது. 2047 ல் இவர் இருப்பாரா? இல்லையேல் நானோ நீங்களோ இருப்போமா? ஏன் நீங்கள் ஐநா மூவர் குழு அறிக்கையை முழுமையாக படித்ததில்லையா? www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf இந்த பகுதியை download செய்து படியுங்கள். குறிப்பாக 65 மற்றும் 115 வது பக்கங்களை படியுங்கள். புலிகளின் அராஜகம் தெரிய வரும்.www.spur.asn.au/prominent_tamil_leaders_killed.htm இந்த பகுதியை படியுங்கள். இது ஆஸ்திரேலியா நாட்டின் வலைத்தளம்.அதனால் ஈழ பிரச்சனையில் தமிழகத்தில் வெறிக்கூச்சல் போடுபவர்கள், உயிருக்கு பயந்து மேற்கத்திய நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே ஓடிபோய் வாழ்கையை வளமாக்கி கொண்டவர்கள் (இவர்களுக்கு பெயர் புலம்பெயர்ந்தவர்கள்)இவர்களின் பார்வையில் மட்டும் உங்களை போன்றவர்கள் ஈழ பிரச்சினையை பார்க்கின்றனர். ஆனால் ஆரம்பம் முதல் இந்த பிரச்சனையின் பல்வேறு பரிணாமங்களை அறிந்தவர்கள், புரிந்தவர்கள் அதாவது கிட்டதட்ட நாற்பது வயதை கடந்தவர்கள் தமிழகத்தில் நிறையவே உண்டு. அதனால்தான் இது போன்ற பிரச்சனைகளை கிளப்பும் கட்சிகளுக்கு தமிழகத்தில் வாக்கு வங்கி பெரிதாக இல்லை. ஆரம்பத்தில் ஒரு பெரிய இயக்கத்தில் இருந்தும், 18 ஆண்டுகள் தனி இயக்கம் நடத்தியும் 2% கூட வாக்கு வங்கி இல்லாதவர்களின் மிரட்டல் இந்திய இறையாண்மையை சீண்ட கூட முடியாது. ராஜீவ் காந்தி மரணத்தின் போது காங்கிரஸ் தலைவர்கள் யாரும் உடன் இல்லை என்பது இருக்கட்டும். இந்த மூவரை தவிர இந்த செயலில் ஈடுபட்ட சிவராசன், சுபா போன்றவர்கள் பெங்களுரு அருகே கொனனகுண்டே என்ற இடத்தில சுற்றிவளைக்கப்பட்ட போது தற்கொலை செய்து கொண்டார்களே, எந்த புலி ஆதரவாளரும் சேர்ந்து சாகவில்லையே. பிரபாகரன் கூட மண்டை பிளந்த நிலையில் தனியாக குட்டையில் இருந்து பிணமாக எடுக்கப்பட்டார். போர் தீவிரமடைந்த போது போது இங்குள்ள வாய்ச்சொல் வீரர்கள் தத்தமது தொண்டர்களுடன் சென்று பிரபாகரனோடு சேர்ந்து போரிட்டு சாகவில்லையே அது ஏன்? ஜெயலலிதா எப்படி உங்களை ஆதரிப்பார்? இந்த கொலைகார கும்பலின் கொலை பட்டியலில் 1991 முதல் அவர் பெயரும் இருந்து வந்தது. அதனால்தான் அவருக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டது. நிச்சயம் உங்கள் கோரிக்கை நிறைவேறப்போவதில்லை. அன்று நடந்தது RDX குண்டு வெடிப்பு. பேரறிவாளன் மற்றும் சாந்தன் இருவர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் இதோ. ரெண்டு பாட்டரி வாங்கி கொடுத்தது மட்டும் குற்றச்சாட்டு அல்ல Sivarasan, who planned the operation in Madras from January 1990, left for Jaffna in February 1991 and returned to India in March 1991 with enough gold to finance the operation. In February 1991, V Siriharan, alias Thass, alias Indu Master, alias Murugan, an LTTE expert in explosives, arrived in Madras. Meanwhile, it was reported that G Perarivalan, alias Arivu, a computer wizard and an expert in electronics and the brother-in-law of Jayakumar, designed the belt bomb, with Murugan's guidance. Six grenades containing cyclonite explosives, known as C4-RDX, each fitted with 2,800 splinters of 2 mm were secretly flown from Singapore. Arivu held them in a denim belt using a silver wire connected to the nine-volt battery and two goggle switches to detonate it. The whole device was enclosed in a casing of Trinitrotoluene (TNT). Dhanu and her stand in Subha were both members of the women's wing. மேலும் நாம் கருதுவது போல் பாட்டரி என்பது சாதாரண கடைகளில் கிடைக்கும் கடிகாரம், PEN TORCH விளக்குகளில் பயன்படுத்தும் உருளை வடிவ பாட்டரி அல்ல. இந்த வகை பாட்டரி சதுர வடிவில் அக்காலத்தில் குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே கிடைக்க கூடியது. குறிப்பாக இறக்குமதி செய்யப்படும் ரிமோட் பொம்மைகளில் கிடைக்கும். மேலும் இந்த அறிவு உங்கள் பாஷையில் அறியாத சிறுவனாக இருக்கும் போதே கொலைக்கு முன்பு யாழ்ப்பாணம் சென்று தங்கி புலிதலைவரை சந்தித்து வந்திருக்கிறார். சென்னையில் இருந்து கொண்டு சாத்தானின் படைகள் என்ற புத்தகத்தை அச்சிட்டு பிரிட்டனில் அச்சிட்டதாக நாடகமாடியிருக்கிறார். இந்த அப்பாவியை பற்றி இந்த கொலையை விசாரித்த விசாரணை அதிகாரி பல்வேறு தகவல்களை தெரிவித்து இருக்கிறார்.உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான். தப்பு செய்தவன் தண்டனை பெறுவான். இம்மூவரும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். நீதி வெல்லும்.

  ReplyDelete
 10. நெல்லை கிருஷ்ணன்November 6, 2011 at 8:10 AM

  பேரறிவாளன் மற்றும் முருகன் என்று வாசிக்கவும். பேரறிவாளன் மற்றும் சாந்தன் என்று தட்டச்சு செய்யப்பட்டுள்ளது.

  ReplyDelete
 11. உங்களின் அந்த தமிழ் நாடு தனி நாடு பற்றிய கட்டுரை கண்டேன் பின்னூட்டம் இட்ட அந்த மூஞ்சி தெரியாத பதிவர் உண்மையில் மூன்றாம் பாலினமாக இருக்கலாம் ஈழம் என்பது/ விடுதலைப்புலிகள் தீவிரவாத அமைப்பு அல்ல விடுதலைப் போராட்டம். மாவோ சொல்லுகிறார் நான் என்ன ஆயுதம் எடுக்கவேண்டும் என என் பகைவன்தான் தீர்மானிக்கிறான் என்கிறார் . ஆக விடுதலைப்புலிகள் திட்டமிட்டு ஆயுதம் எந்த வில்லை ஆயுதம் எந்த வைக்கப் பட்டார்கள். உலக விடுதலைப் போரட்டங்களை துல்லியமாக ஆய்வுக்கு எடுத்துக் கொண்டால் ஈழத்தின் போராட்டம் புரிய வரும் இசுரேல் போராட்டம் குறிப்பாக இட்லர் வெரட்டி வெரட்டி வேட்டையாடிய போதும் தங்க லுக்குள் சிறப்பான வலைதளத்தை உண்டாக்கி கொண்டவர்கள் ஆனால் இன்று ஈழத் தமிழர் பிரிந்து கிடக்கிறார்கள் என்பது வேதனையான செய்தி . இருப்பினும் மறைமுகமாக பின்னூட்டம் இடுகிறான் நேரடியாக கொள்கைரீதியாக மொத வேண்டுமே தவிர கோழைத்தனத்திற்கு நாம் நமது கொள்கையை மாற்றிக் கொள்ள கூடாது என்பது.....

  ReplyDelete
 12. அன்புள்ள நெல்லை கிருஷ்ணன் அவர்களுக்கு, உங்கள் பின்னூட்டத்திற்கான பதிலை ஒரு பதிவாகவே எழுதியிருக்கிறேன்...படியுங்கள்.. விரும்பினால் தொடர்ந்து விவாதியுங்கள்... நான் ரெடி...

  ReplyDelete
 13. நெல்லை கிருஷ்ணன்,

  நீங்கள் எவ்வளவு சொன்னாலும் புரிந்துகொள்ளப் போவதில்லை, உலகம் முழுக்க தனிநாடு கிடைத்தால் சாதிப்போம் என்று மக்கள் நினைக்கும் காலகட்டத்தில், நம் சந்ததி எப்படி போனாலும் பரவாயில்லை அவர்களை யார் மிதித்து அடிமையக்கினாலும் பரவாயில்லை, இப்பொழுது நான் நன்றாக வாழ வேண்டும் என்று நினைக்கும் உங்களைபோல் ஒரு சிலரே தன்மைபிக்கை இல்லாமல், தன்மானம் இல்லாமல், இன உணர்வு இல்லாமல், இந்தியாவிற்கும் பயன்படாமல், தமிழ் நாட்டிக்கும் பயன்படாமல், வாய்ப்பு கிடைத்தால் திருடலாம் என்று நினைக்கும் அரசியல் கும்பல்களால்த்தான் தமிழினம் இப்படி இவ்வளவு காயப்பட்டுக் கிடக்கிறது

  தலைவர் உயிருடன் இருக்கும்போது பேச எழாத நாவுகள் எல்லாம் இப்பொழுது விஷம் கக்கும் பாம்பாய் மாறி உண்மை உணர்வாளர்களை காயப் படுத்த முயச்சிகிறது

  இந்திய இறையாண்மையை பற்றி பேசும் நீங்கள் அதை வைத்து இதுவரை என்ன செய்திருகிறீகள்? காஸ்மீர் பிரச்சனை இந்திய பிரச்சனைதானே நீங்கள் ஏன் ஆயுதம் எடுத்து செல்லவில்லை, உங்களுக்கு இந்தியன் என்ற உணர்வு இல்லையா?

  ஆஸ்த்திரேலியாவில் இந்தியர்களை தாக்கியபோது நீங்கள் அங்கு சென்று அவர்களை ஏன் தாக்கவில்லை?

  புலிகள் என்பது தமிழின ராணுவம், உலகத்தால் அங்கீகரிக்கப் படாத ஆனால் தீவிரவாதம் இல்லை என்று உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப் பட்ட இன்றும் பல நாடுகளால் பாராட்டப்படுகிற ஒரு முன்னணி எடுத்துகாட்டு ராணுவம் அதன் உயிர்நாடி "பிரபாகரன்" அதன் தாரக மந்திரம் "தமிழ் ஈழம்"

  அரசியல் சதியில் பின்னப்பட்டு இழைக்கப் பட்ட துரோகத்திற்கு காரணம் இந்த இந்தியா? ராஜீவ் கொலைக்கு முக்கியகாரணம் புலிகள் அல்ல இந்த இந்தியாவில் இருக்கும் பெரும் புள்ளிகள் தான். புலிகள் வெறும் ஆயுதம் மட்டுமே, ராஜீவின் மீது புலிகளுக்கு இருந்த கோபத்தை சில நரிகள் பயன்படுத்திக் கொண்டன. ராஜீவ் கொலை விசாரணையை முழுதும் முடித்துவிட்டர்களா என்று நீங்கள் கேட்க வில்லையா? அப்படி என்றால் நீங்கள் உண்மையான இந்தியர் இல்லையா? குற்றம் செய்தவனுக்கு தண்டனை இல்லையா?

  நீங்கள் சுயநலமாக இருந்தால் அதை உங்களுடனும் உங்கள் குடும்பத்துடனும் வைத்துக் கொள்ளுங்கள். இன உணர்விக்கோ, திய உணர்விக்கு அதை கொண்டுவந்து தமிழின துரோகியகதீர்கள்

  இந்த இந்திய இறையாண்மை வெறும் அறுபதுவருட உணர்வு, தமிழின உணர்வு ஆயிரம் ஆயிரம் வருடம் தண்டி இருப்பது. இத்தனை வருட தமிழ் உணர்வே இல்லாத உங்களிடம், வெறும் அறுபது வருட இந்திய இறையாண்மை உணர்வு மட்டும் எப்படி இருந்துவிடும்?

  இந்த சுயநலமும் பொறாமையும் இருக்கும் வரை

  ReplyDelete
 14. tamilnaadu thani naadu endru pesuvathil artham illai tamil naatilirunthu thaan india piranthathu, aanaal mukia vishyam ethirkaala nilaigalai paarthaal tamil naadu thanithu vid padum endru thaan therikirathu, enendraal sutrilum nathi neergalai thadupathu epadi endru thaan andai manilangal muyarchikindrana, itharkku matia arasu entha vakanayaana uruthiyaana seythiaium tharavillai, jeya karunanidi ivargalai bol kollai adikka thangalaal mudiaya villaye endru thaan matiya arasangam ninayikirathu, eneva tamilnaadu thaninaadu enbathil udanpadillai, tamilnaade indiaavai aalkirathu enbathu thaan unmai, pakistaanukku tamilargale emangal, inimel seenargalukkum evan vaal aatinaalum otta narukkuvom, viduthalaipuligal ean tamilnaatai kolaikalamaga thereduthanar, ingulla arasial vaathi evanum udavinaana, allathu avargalukku velinaatu sakthigal kooli koduthathaa, ooti vitavanukke vishathai koduthaal tamil naadu summa vidaathu,

  ReplyDelete