SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Wednesday, July 13, 2011

லஞ்சம் கொடுக்காம காரியம் சாதிக்கனுமா?...


ஊழலை ஒழிக்கனும்னும், லஞ்சத்தை ஒழிக்கனும்னு நாமெல்லாம் வாய்கிழிய கத்திட்டிருக்கோம். ஊழல் கதைய விடுங்க… இந்த லஞ்சத்தை ஒழிக்கிறது நடக்கிற காரியமான்னு நெனச்சிப்பாத்தா உதட்டைப் பிதுக்கிறத தவிர உருப்படியா ஒன்னும் தோனலை.

நம்ம நாட்டைப் பொறுத்தவரைக்கும் லஞ்சத்தை ஒரு குற்றமா பாக்கிற நெலமை மாறி, லஞ்சத்தை காரியம் வேகமா ஆகிறதுக்கான ஸ்பெஷல் ஃபீஸா அங்கீகரிச்சு வாழப்பழகியாச்சு. பைசாவை நகட்டலைன்னா இங்க அரசு ஆபீஸ்ல ஒரு துரும்புகூட அசையறதில்ல. லஞ்சம் வாங்குறவன் “அவங்க கொடுக்கிறதாலதான் வாங்குறோம்”னும், லஞ்சம் கொடுக்கிறவன் “அவங்க கேக்கிறதாலதான் கொடுக்கிறோம்”னும் குத்தம் சொல்லியே காலம் கடந்துபோச்சு.

இயக்குனர் ஷங்கர் ஒரு படத்தில அழகா ஒரு டயலாக் வச்சிருப்பார். ‘’வெளிநாடுகள்லேயும் லஞ்சம் இருக்கத்தான் செய்யுது. ஆனா அங்கெல்லாம் கடமையை மீறுறதுக்கு மட்டும்தான் லஞ்சம் வாங்குறாங்க. ஆனா இங்கே… கடமையைச் செய்யறதுக்கே லஞ்சம் கேக்குறீங்களடா?’’ன்னு சொல்ற அந்த டயலாக் எம்புட்டு நெசம்னு கொஞ்சம் யோசிச்சாதாங்க விளங்கும்.

சரி, நம்ம நாட்டுல நம்மளமாதிரி படிச்ச பருப்புங்கல்லாம் லஞ்சம் கொடுக்கிறத நிப்பாட்டுனாக்கா லஞ்சத்தை ஒழிச்சிரலாமா?... சும்மா காமெடி பண்ணாதீங்கன்னு நீங்க சொல்றது எனக்கும் கேக்குதுங்க. அதான் உண்மையும் இல்லையா?...

அவசரமா ஆபீசுக்கோ, இல்லை ஆபீசுக்கு லீவு போட்டுட்டு ஏதோவொரு பெர்சனல் வேலைக்கோ, கார்லயோ இல்லை பைக்லயோ போயிட்டுருக்கோம்னு வைங்க… அப்போபாத்து எங்கயாவது ஒரு டிராபிக்போலீஸ் நிப்பாட்டுவாங்க. (அதுவும் ஒவ்வொரு மாசமும் 20ம்தேதிக்குமேலதான் இவங்க வேட்டை வீரியமாயிருக்கும். சம்பளம் வாங்குற மொத பத்துநாள் பெரிசா யாரையும் கண்டுக்கமாட்டாங்க! மாசக்கடைசிலதான் பேருக்கு கொஞ்சம் கேஸ் புடிக்கவும், செலவுக்கு காசு தேத்தவும் புல் பிசியாயிடுவாங்க.) நாம எல்லா டாகுமெண்ட்சையும் கரெக்டா எடுத்துக்காட்டுனாலும், கறக்கனும்னு முடிவுல இருந்தாக்கா ஏதொவொரு ரூல்ஸ் பேசுவாங்க. அப்போ நாம என்ன பண்ணமுடியும்?. அவங்ககிட்ட வாதாடி, டைமை வேஸ்ட் பண்ணி, நாம போற வேலைய விட்டுப்புட்டு நீதி,நேர்மைன்னு கோர்ட்லபோயி ஃபைன் கட்டுறேன்னு சொல்லுவோமா?... இல்லை அவன் கேக்குற அம்பதோ, நூறோ குடுத்துட்டு பொழப்ப பாக்கப்போவோமா?

யதார்த்தம் என்னான்னு கேட்டீங்கன்னா… ஒரு நாள் ஆபீசுக்கு போடுற லீவுக்கு நாம இழக்கிற துட்டு இவனுங்க கேக்குற லஞ்சத்தைவிட பல மடங்கு இருக்கும். அன்னைக்கு பொழப்புகெட்டுப்போயி இன்னொரு நாளும் லீவு போடவேண்டிய நெலமை வந்துருமோன்னு பயந்து, ஆளை விட்டாச் சரின்னு அவங்க கேக்குற காசை அழுதுட்டு இடத்தைக் காலி பண்ணுவோம்ன்றதுதான் யதார்த்தம். இது தப்பு… அவங்களுக்கு லஞ்சம் தராம, நீதிக்காக போராடனும்னு இப்போதைய காலகட்டத்துல நாம பேசினா அதைக்கேக்கிறவன் வாயால சிரிக்கமாட்டான்…!!!

இது மாதிரி அனுபவத்தை நம்மில் பல பேர் பல ரூபத்தில வாழ்க்கைல சந்திச்சிருப்போம். ஆனா எத்தனைபேரு இந்த மாதிரியான பல சந்தர்ப்பத்துல லஞ்சம் தரமாட்டேன்னு நீதிக் கொடியப் பிடிச்சிருப்போம்னு நம்ம மனசாட்சிக்கே தெரியும். லட்சத்துல ஒருத்தரக்கூட அடையாளம் காட்டமுடியாதுன்றதுதான் நெசம். அப்புறம் என்னாத்துக்கு நாமெல்லாம் லஞ்சத்தை ஒழிக்கனும்னு வாய்கிழிய வாதாடனும்?...

இன்னிக்கி நம்ம நாட்டுல லஞ்சமேயில்லாத ஏதாவதொரு அரசுத் துறையைக் காட்டமுடியுமா?... லஞ்சம் வாங்காத அதிகாரிங்களைக்கூட இங்கொன்னும் அங்கொன்னுமா பாத்திரலாம். ஆனா லஞ்சமேயில்லாத அரசு அலுவலகத்தை எந்த ஊர்லயாவது, யாராவது பாத்தீங்கன்னா அதை உடனே நாம கின்னஸ் சாதனைக்கு தெரியப்படுத்தனும்… மறத்திராதீங்க!

கொடுக்கிறத கொடுத்து வேலைய சீக்கிரம் முடிச்சிக்கனும்னு நெனக்கிற மக்களும், கொடுக்கிறது கொடுத்தாதான் வேலைய முடிச்சிக் கொடுக்கனும்னு நெனக்கிற மாக்களும் இருக்கிறவரைக்கும் லஞ்சம் கொடுக்காம காரியமாகனும்னா அது கனவுல மட்டும்தான் நடக்கும்!!!

அதனால லஞ்சம் கொடுக்காமல் காரியமாகனும்னு சும்மா காமெடி பண்ணிட்டுத் திரியாம போயி பொழப்பப் பாருங்க…!

தொடர்ந்து பேசலாம்…

4 comments:

 1. இன்னிக்கி நம்ம நாட்டுல லஞ்சமேயில்லாத ஏதாவதொரு அரசுத் துறையைக் காட்டமுடியுமா?... லஞ்சம் வாங்காத அதிகாரிங்களைக்கூட இங்கொன்னும் அங்கொன்னுமா பாத்திரலாம். ஆனா லஞ்சமேயில்லாத அரசு அலுவலகத்தை எந்த ஊர்லயாவது, யாராவது பாத்தீங்கன்னா அதை உடனே நாம கின்னஸ் சாதனைக்கு தெரியப்படுத்தனும்… மறத்திராதீங்க!// unmaithane

  ReplyDelete
 2. நல்ல கருத்துகளை பதிவு செய்து இருக்கிறீர்கள் இன்றைய தேவை ஒட்டிய கருத்துகள் உளம் கனிந்த பாராட்டுகள் தொடருங்கள் ......

  ReplyDelete
 3. திரு.மாலதி அவர்களுக்கு, உங்களின் 'மாலதியின் சிந்தனையில்' அடுத்த கவிதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்... இப்போது உங்கள் பாராட்டுக்கு நன்றி!

  ReplyDelete
 4. அருமையான கருத்துக்கள்... உண்மையில் நினைத்துப் பார்த்தால் இதுதான் கோர நிஜம்.. இது குறித்து விஜய் டிவி யில் நடந்த ஒரு விவாதத்தில் திரு மனுஷ்ய புத்திரன் சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது. “அநியாயமான தாமதத்தால் நமக்கு ஏற்படும் இழப்பு பற்றிய சிறு பிரக்ஞை கூட இல்லாமல் அரசு ஊழியர்கள் நடந்துகொள்கிறார்கள்.”

  இதுதான் மக்கள் லஞ்சம் கொடுக்க முனைவதும், அவர்கள் லஞ்சம் வாங்க வைப்பதும்..

  பகிர்வுக்கு நன்றி..

  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete