SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Thursday, May 19, 2011

நாதாறிப்பயலுக...! – ஒரு அப்பன்காரனின் புலம்பலும் அடாவடிப்பயலின் பதில்களும்!


இன்னைக்கு 18 லயிருந்து 25 வயசு ரேஞ்சுல ஊருக்குள்ள சுத்திட்டிருக்கிற பல நாதாறிப் பயலுகளோட அப்பன்காரன் மனசுல காத வச்சு கேட்டீங்கன்னா இதாங்க அவங்களோட ஹா(ர்)ட் புலம்பல்ஸா இருக்கும். அதுக்கு அவங்க புள்ளைங்க ரியாக்சன் என்னென்றதும் பக்கத்துலயே இருக்குங்க!

"மவனே… ஒருவொரு செமஸ்டருக்கும் விதவிதமா பேரு சொல்லி காலேஜ்ல கட்டணும்னு என் காசெல்லாம் புடுங்குறியேடா… இந்த ஐடியாவெல்லாம் நீ மட்டும்தான் தனியா யோசிக்கிறியா? இல்ல… ஒரு கும்பலாத்தான் கும்மியடிக்கிறீங்களான்னு தெரியலியே?"

("அய்யே… நீ மட்டும் யோக்கியமாவா இருந்துருக்கப்போறே. நீ படிக்கும் போதும் இதெல்லாம் பண்ணியிருக்கத்தான் செஞ்சிருப்பே. அப்படியில்லைன்னா நீ சரியான பழமா இருந்திருப்பே. அதுக்கு நான் என்ன பன்றது?")


"ஒவ்வொரு செமஸ்டர் ரிசல்ட் வரும்போதும் எத்தன பேப்பர் பாஸுன்னு மட்டும் சொல்றியே… ஒரு வாட்டியாவது எத்தன பேப்பர் ஃபெயிலுன்னு சொல்றியா? செமஸ்டர்ல ஆறு பேப்பர் ஃபெயில்னு சொல்றதவிட ‘’இரண்டு பேப்பர் பாஸுப்பா’’ன்னு சொல்ற டெக்னிக்க எங்கடா கண்டுபுடிச்சீங்க?"

("அடடடடா… எவன்தான் இந்த எக்ஸாம், ரிசல்ட் இதெல்லாம் கண்டுபுடிச்சான்னு தெரியலியே… மவனே அவன் மட்டும் என் கைல மாட்டுனான்… சங்குதான்டி!")


"மார்க்கெட்ல புதுசு புதுசா வர்ற செல்போனப் பாத்துட்டு, அப்பப்போ என் காச புடுங்கி உன் செல்போன மாத்திக்கிறியே?... அதே மாதிரி உருப்படாத உதவாக்கரை புள்ளைய மாத்துறதுக்கும் ஏதாவது வழியிருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்?"

("அதே ஃபீலிங்ஸ்தான் இங்கேயும். செல்போன வேணா காசு போட்டு அப்பப்போ மாத்திக்கலாம். ஆனா உன்ன மாதிரி புலம்பல் கேஸ மாத்துறதுக்கு ஒரு வழியும் இல்லாமப் போச்சேப்பா…சே!")


"நீ வெளியே போயிட்டு வீட்டுக்குள்ள வரும்போதெல்லாம் வாயில போட்டிருக்கிற சுயீங்கம், சிகரெட்ட விட அது வாசனையை மறைக்க நீ வாங்குற சாக்லெட்டும், பபிள் கம்மும்தான் அதிக செலவாகுதுன்னு சொல்லாம சொன்னாலும், விட்டா வீட்டுக்குள்ளயே பிடிப்பேயோன்னு பயத்துல தெரியாத மாதிரியே நடிக்க வேண்டியிருக்கே… முடியலடா டேய்!"

("ம்ம்ம்ம்… அந்த பயம் இருக்கட்டும் அய்யாகிட்ட!")


"ஒவ்வொரு வாட்டியும் உன் செல்போன்ல நீ பொண்ணுங்களோட மணிக்கணக்கா குசு குசுன்னு பேசும் போதும் உருப்படாதபய உன்ன விட, என் பொண்ண காலேஜ்க்கு அனுப்புறத நெனச்சாதான்டா பயம்மாயிருக்கு!"

("அய்யே… உன் பொண்ணு காலேஜ்க்கு போயித்தான் கடலை போடப்போவுதுன்னு நம்பிக்கிட்டு இருக்கிறியாக்கும். எந்தக் காலத்துலப்பா இருக்கே இன்னும் நீ? ஒரு வாட்டி உன் பொண்ண ஸ்கூல்ல போயிப்பாரு. அப்புறமா நீ இப்படியெல்லாம் பயப்படவேண்டியதே இருக்காது…நான் கியாரண்டி!")


"நீ கோக் குடி. பிஸ்ஸா தின்னு. சினிமாவுக்குப்போ. நான் கேக்கமாட்டேன்டா. ஆனா எனக்கே தெரியாம என் பாக்கெட்ல இருந்து காச ஆட்டயப் போட்டுறியே. கடன்காரப்பய நீ பன்ற வேலைக்கு எத்தன இடத்துல நான் பாக்கெட்ல கைய வுட்டுட்டு பல்லிளிச்சு கடன் சொல்லிருக்கேன் தெரியுமாடா?"

("என்னா பண்ணச் சொல்றே என்னை? இப்போ இவ்ளோ வாயக் கிழிக்கிறியே?... என்னிக்காவது கேட்டவுடனே கிராஸ் கொஸ்டின்ஸ் பண்ணாம காசக்குடுத்திருக்கியா நீ?")


"என் துட்ட எப்படியெல்லாம் ஏமாத்துனாலும் பரவாயில்ல. ஏதோ படிச்சு முடிச்சு டிகிரி வாங்கிட்டு வந்தா சரின்னுதானடா கம்முனு இருந்தேன். இப்போ என்னடான்னா கை நிறைய அரியர்ஸோட காலேஜ் முடிச்சிட்டு வந்திருக்கியேடா… உருப்புடுவியாடா நீ?"

("அதெல்லாம் உனக்குப் புரியாதுப்பா… அரியர் இல்லா மனிதன் அரை மனிதன்னு கேள்விப்பட்டதில்ல நீ? டோன்ட் வொர்ரி. அதெல்லாம் யாரைப் புடிச்சி எப்படிக் கிளியர் பண்ணனும்னு எனக்குத் தெரியும்.")


"ஏன்டா.. நீ சம்பாதிச்சு எனக்கு குடுக்காட்டாலும் பரவாயில்ல. அட்லீஸ்ட் உன் வாழ்க்கைய நீ பாத்துக்க வேண்டாமாடா?"

("உலகத்திலேயே ஃப்ரியா கிடைக்கிறது அட்வைஸ் ஒன்னுதானாம்… சீக்கிரம் கிளம்புப்பா… காத்து வரட்டும்.")


"வேலைக்கு போகாட்டாக் கூடப் பரவாயில்லடா… ஆனா நான் வேலைக்குப் போற டைம் வரைக்கும் கூட பெட்ல இருந்து எழுந்திரிக்காம தூங்கிட்டிருக்கியே… நல்லாவாடா இருக்கு? காலைல எழுந்திச்சு வீட்டுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணாலாமேடா?"

("சேச்சேச்சே.. இந்த வீட்டுல மனுசன் நிம்மதியா தூங்கக்கூட முடியல… எப்போ பாரு… நொய்யிநொய்யின்னு. முதல்ல வேலைக்குப் போன உடனே தனியா ஒரு ரூம் பாத்துப் போயிடனும்.")


"தண்ணியடிச்சிட்டு வீட்டுக்கு வந்ததும் இல்லாம, கேட்டா… வெறும் பீர்தான்ப்பா குடிச்சேன்… இதெல்லாம் ஒரு தப்பான்னு கேக்குறியே… நாளைக்கு உன்புள்ள இப்படி பண்ணும் போதுதான்டா தெரியும் உனக்கு."

("அய்யே… சும்மா புலம்பாத. பீரெல்லாம் கூல்ட்ரிங்க்ஸா மாத்தி ரொம்ப நாளாவுது. அதுமட்டுமில்ல… நாளைக்கு என் பையன்லாம் வளந்த உடனே, உன்னமாதிரியெல்லாம் இல்லாம நானே அவனுக்கு ஊத்திக் குடுத்து அவன் கூட உக்காந்து சாப்பிடுவேன். அப்போ வந்து பாரு… ஒரு அப்பான்னா எப்படியிருக்கனும்னு காட்டுறேன் உனக்கு.")


"இன்னும் சொந்தக் கால்லயே நிக்கல. அதுக்குள்ள யாரோ ஒரு பொண்ண லவ் வேற பண்றியாடா? உன்னச் சொல்லித் தப்பில்லடா. உன்னயும் நம்பி ஒருத்தி லவ் பண்றா பாரு… அவளைச் சொல்லனும்."

("த்தோடா… உன்னயெல்லாம் நம்பி எங்க அம்மா உன்னக் கட்டிக்கலயா?. அதுக்கு இது எவ்வளவோ பரவாயில்ல. வெட்டிப்பேச்சு பேசாம போய் வேலையப் பாருப்பா!")


"ம்ம்ம்ம்… இவன் எப்பதான் திருந்தப் போறானோ தெரியலியே?... ஆண்டவா கூடிய சீக்கிரம் இவனுக்கு நல்ல புத்தியக் கொடுத்து ஊதாறித்தனமா திரியறத விட்டுப்புட்டு உருப்படற வழியக் காமிங்க ஆண்டவா…!"

("வொய் ப்ளட்?... சேம் ப்ளட்!... ஆண்டவா, கூடிய சீக்கிரம் எங்கப்பன் புலம்பறத நிறுத்திட்டு என்னைப் புரிஞ்சி நடக்கிற மாதிரி பண்ணுங்க ஆண்டவா…!")


அதுனால இந்த மேட்டர்லயிருந்து நாம தெரிஞ்சிக்க வேண்டியது என்னான்னா…
அப்பன்மாருங்கல்லாம் சும்மா புலம்பறத நிறுத்திட்டு உங்க வயசுல நீங்க என்னெல்லாம் பண்ணுனீங்கன்னு ஒரு ஃப்ளாஸ்பேக் ஓட்டிப் பாத்தீங்கன்னா, உங்க பையன் பண்றதெல்லாம் இந்தக் காலத்துல ஒரு விஷயமே இல்லன்னு புரிஞ்சிப்பீங்க. அது மட்டும் இல்லீங்க… இன்னக்கி இருக்கிற பசங்கெல்லாம் ஒரு வயசு வரைக்கும் ஊதாறித்தனமா சுத்துனாலும் அவங்களா அவங்க வாழ்க்கையை புரிஞ்சிக்கிட்டு லைஃப்ல செட்டில் ஆகும் போது உங்களவிட ஒருபடி மேலேயே நிச்சயமா செட்டில் ஆவாங்கன்றதுக்கு இன்னக்கி எத்தனயோ பசங்க உதாரணமா இருக்காங்க. அதனால சும்மா நாதாறிப்பய, ஊதாறிப்பய, உருப்படாதப்பய, தெண்டச்சோறு அப்பிடின்னுலாம் சொல்லிட்டு இருக்காம உங்க புள்ளைங்கள நல்லாப் புரிஞ்சிக்கிட்டு அவங்க வாழ்க்கைய அவங்க வழியில வாழ விடுங்க…!

அதே மாதிரிதான் எல்லாப் புள்ளைங்களுமே அவங்கங்க அப்பன எதிரியாப் பாக்காம, அவங்க என்ன செஞ்சாலும் உங்க மேலயிருக்கிற பாசத்துனாலதான்றத புரிஞ்சிக்கிட்டு, நீங்களே இப்பிடின்னா… உங்க அப்பா எப்படின்னு ஒரு நிமிஷம் யோசனை பண்ணி, பெரியவங்க பேச்சக் கேக்கலைன்னாலும் பரவாயில்ல… ஆனா அவங்க மனச கஷ்டப்படுத்தாம, அவங்க பாசத்த அலட்சியப்படுத்தாம வாழ ட்ரை பண்ணுங்க.

உங்களுக்கெல்லாம் அட்வைஸ் பண்ண நான் ஒன்னும் கருத்து கந்தசாமி இல்லைங்க…! ஏதோ மனசுல பட்டுச்சு…சொன்னேன். அம்புட்டுதேன்!

5 comments:

 1. ம்ம்ம் சொந்த அனுபவம் போல இருக்கு :-), இப்பயெல்லாம் பொண்ண பெத்தவன் யாரும் கவலைபட வேண்டியதே இல்லை போல, அவங்களுக்கு வேணுங்கறத எல்லாம் பையனும் பையன பெத்தவங்களும்தான் கவனிச்சுகுறாங்க, பேராகிராப் பிரிக்கும் போது பையன் அப்பான்னு தனிதனியா பிரிச்சு காட்டி இருந்தீங்கன்னா இன்னும் நல்லா இருந்திருக்கும்

  ReplyDelete
 2. your suggestion implemented... thnx for tht friend!

  ReplyDelete
 3. Hilarious!! :)))

  //பசங்கெல்லாம் ஒரு வயசு வரைக்கும் ஊதாறித்தனமா சுத்துனாலும் அவங்களா அவங்க வாழ்க்கையை புரிஞ்சிக்கிட்டு லைஃப்ல செட்டில் ஆகும் போது உங்களவிட ஒருபடி மேலேயே நிச்சயமா செட்டில் ஆவாங்கன்றதுக்கு இன்னக்கி எத்தனயோ பசங்க உதாரணமா இருக்காங்க. //

  ஆமாமாம். எனக்கு காலேஜ்ல ஒரு பையனைத் தெரியும். எக்ஸாம் ஆரம்பிச்சு அரை மணி நேரம் ஆச்சுன்னு வாட்சைப் பாத்துத் தெரிஞ்சிக்க வேண்டாம். அவன் பேப்பரைக் குடுத்துட்டு வெளிய போறதைப் பார்த்தாலே போதும். :)) இப்ப அவன் ஒரு பொறுப்பான வேலையில, நல்ல குடும்பத்தலைவனா சமத்தா இருக்கான்.

  ReplyDelete
 4. // பெரியவங்க பேச்சக் கேக்கலைன்னாலும் பரவாயில்ல… ஆனா அவங்க மனச கஷ்டப்படுத்தாம, அவங்க பாசத்த அலட்சியப்படுத்தாம வாழ ட்ரை பண்ணுங்க.// This is very good.

  ReplyDelete
 5. "/ஆமாமாம். எனக்கு காலேஜ்ல ஒரு பையனைத் தெரியும். எக்ஸாம் ஆரம்பிச்சு அரை மணி நேரம் ஆச்சுன்னு வாட்சைப் பாத்துத் தெரிஞ்சிக்க வேண்டாம். அவன் பேப்பரைக் குடுத்துட்டு வெளிய போறதைப் பார்த்தாலே போதும். :)) இப்ப அவன் ஒரு பொறுப்பான வேலையில, நல்ல குடும்பத் தலைவனா சமத்தா இருக்கான்./"
  அடப்பாவி... கொஞ்சம் டூ மச்சாத்தான் இருக்கு. ஆமா... யாருப்பா அந்தப் பையன்?!!!!

  ReplyDelete