SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Saturday, May 14, 2011

முதல்வர் "ஜெ"வுக்கு ஒரு சாமான்யனின் கடிதம்…


புரட்சித்தலைவி, தங்கத்தாரகை, இதய தெய்வம், எங்கள் அம்மா என்றெல்லாம் அழைக்க நான் உங்கள் கட்சிக்காரன் இல்லையென்பதால் மதிப்பிற்குரிய முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு என்றே ஆரம்பிக்கிறேன்…

உங்கள் வீறு கொண்ட வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கும் அதே நேரத்தில் எதனால் இந்த வெற்றி உங்களுக்கு வழங்கப்பட்டது? இதன் மூலம் வருங்கால அரசியலுக்கு தமிழக மக்கள் உணர்த்திய சேதியென்ன? என்பதையும் விளக்க கடமைப்பட்டவனாயிருக்கிறேன்.

முதன் முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது உங்களது இந்த இமாலய வெற்றிக்கு காரணம் நீங்களோ, உங்களது தேர்தல் அறிக்கைகளோ இல்லை தேர்தல் பிரச்சாரமோ இல்லை என்பதைத்தான். இலவசங்களை அறிவித்த உங்கள் தேர்தல் அறிக்கை உங்கள் வெற்றிக்கு காரணமில்லை என்பது உங்களுக்கு முன் இலவசங்களை வாரியிறைத்தவர்களின் தோல்வியிலிருந்தே புரிந்து கொள்ளலாம். பின்னர் உங்கள் வெற்றிக்கான காரணங்கள் என்னென்ன?...

# கருணாநிதியின் சர்வாதிகார குடும்ப ஆட்சியில் தமிழகம் அவரின் குடும்பம் மற்றும் கட்சியினரால் சுரண்டப்பட்ட விதங்களை படித்தவன் முதல் பாமரன் வரை கொண்டு சென்ற அதிவேக வளர்ச்சி மற்றும் மறுமலர்ச்சியிலிருக்கும் ஊடகத்துறை.

# தேர்தல் கமிஷனின் அதிரடிகளும் நடுநிலைமையும்.

# 2ஜி ஊழல்… இந்தியாவே வாய் பிளந்து மலைத்து நிற்குமளவுக்கு நடந்த ஊழலில் உச்சநீதிமன்றத்தின் அதிரடிகளும், கருணாநிதியின் முகம் சுளிக்க வைத்த அறிக்கைகளும் அரசியல் நாடகங்களும்.

# ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் கருணாநிதியின் இனத்துரோகம் பாமரன் வரை சென்றடையாமல் இருந்த போதிலும் சொந்த மீனவத் தமிழர்களின் உயிரிழப்பிலும் ஆட்சியை கெட்டியாகப் பற்றிக்கொண்டு வாய்மூடி மௌனம் காத்த கருணாநிதியின் கையாலாகாத்தனம்.

# தான் என்ன ஊழல் செய்தாலும், என்ன துரோகமிழைத்தாலும் வாரியிறைத்த இலவசப் பிச்சைகளும், ஓட்டுக்குத் தூக்கி வீசும் ஊழல் பணமும் தன்னைக் காக்கும் என்று எண்ணிய கருணாநிதியின் தப்புக்கணக்கு.

# கருணாநிதியின் கவுன்சிலர்கள் முதல் மந்திரிகள் வரை மாநிலம் முழுவதும் நடத்திய அடாவடித்தனங்களும், ஊழல்களும், சொத்து குவிப்புகளும், ரவுடியிசமும்.

# அடுத்த கட்சிக்காரர்களையெல்லாம் தொடர்ச்சியாக மிரட்டியும், விலைபேசியும் தி.மு.க வில் சேர்த்துக்கொண்டது.

# திரையுலகத்தினரை மிரட்டி மிரட்டியே தனக்குத்தானே கருணாநிதி கலை விழாக்களை நடத்திக்கொண்டது.

# இலவசங்களையும் சலுகைகளையும் தவிர பெயர் சொல்லுமளவுக்கு எந்த உருப்படியானத் திட்டங்களும் நிறைவேற்றாமல் போன ஐந்தாண்டு கால ஆட்சி.

# வாக்களிக்கும் மக்கள் சதவீதத்தில் உருவான ஜனநாயக மறுமலர்ச்சி (அ) எழுச்சி.

# விஜயகாந்துடன் வைத்துக் கொண்ட கூட்டணி ஆதரவு.

# விலைவாசி உயர்வும், ஆட்சியை மாறி மாறி ஒப்படைக்கும் மக்களின் சுழற்சி முறை மனநிலையும்.

மேற்கூறியது போன்ற பல காரணங்களே உங்கள் வெற்றிக்கான அடிப்படையேயன்றி நீங்கள் பெரிதாய் நல்லாட்சி தருவீர்கள் என்று நம்பி வாக்களித்த கூட்டம் குறைவானதாகவே இருக்கக்கூடும்.

தமிழக மக்கள் நாட்டிற்கு உணர்த்திய தன்மானச் சேதியே வருங்கால அரசியலுக்கும் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டிருக்கும் இனியதொரு மாற்றப் பாடமாகும். தமிழ் நாட்டு மக்களுக்கு இலவசங்களே வாழ்க்கையாகிப்போனது, 2ஜி ஊழல் பணம் முழுவதும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்களுக்கு பட்டுவாடா செய்யப்படப் போகிறது, தமிழக மக்கள் ஓட்டை நல்ல விலைக்கு விற்கிறார்கள் என்றெல்லாம் அண்டை மாநிலத்தாராலும் அரசியல் பார்வையாளர்களாலும் விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் தமிழன் தன்மானமிக்கவன், தமிழன் இனவுணர்வுடையவன், தமிழன் சிந்தனைவாதி என்று நாட்டிற்கு உணர்த்தும் சேதியாய் அமைந்திருக்கிறது இந்தத் தேர்தலில் தமிழனின் மானம் காத்த முடிவுகள். ஈழத் தமிழர்களுக்காக போராடுவது போல் முழக்கமிட்டுக் கொண்டே காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து கொண்ட கட்சிகளுக்கும் செமத்தியாய் ஆப்படிக்கப்பட்டிருக்கிறது.

இந்த முடிவின் மூலம் மக்கள் உங்களுக்கு உணர்த்திய சேதியென்ன?

# கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் போல் உங்களின் தோழி ஆதிக்கம் தலையெடுத்து விடாமல் ஆட்சி நடத்துவது.

# இலவசங்களை வாரியிறைத்து மக்கள் பணத்தை வீணடிக்காமல் உருப்படியான மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவது.

# ஈழத்தமிழர் மற்றும் தமிழக மீனவர் விவகாரங்களில் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்வது.

# கட்சிக்காரர்களையும் கவுன்சிலர்களையும் கட்டுக்குள் வைத்துக்கொள்வது.

# விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பது.

# நாகரீகமான அரசியலும் முடிந்தவரை ஊழலற்ற ஆட்சியும் நடத்துவது.

# தொழில் மயமாக்கல் என்ற போர்வையில் விவசாயிகளின் வாழ்வாதாரங்களில் விளையாடாதிருப்பது.

# எக்காலத்திலும் காங்கிரசுடன் கூட்டணி கூடாதென்பது.

எப்படியும் அடுத்த ஐந்தாண்டுகளில் என்னென்னவோ மாற்றங்கள் நடக்கலாம். கருணாநிதியின் வயோதிகம் அடுத்த தேர்தல் களத்தில் உங்களுக்கெதிராய் அவரை இல்லாமல் போகச் செய்யலாம். வை.கோ வோ, ஸ்டாலினோ இல்லை விஜயகாந்தோ உங்களுக்கெதிரான மிகப்பெரிய சக்தியாய் உருவாகலாம். இந்த முறை கருணாநிதியை வீழ்த்தியதில் மிக முக்கிய சக்தியாய் விளங்கிய இணையதளம் இன்னமும் பலமான மக்கள் சக்தியாய் மாறக்கூடும்.

எனவே இலவசங்களோ, சலுகைகளோ எந்த விதத்திலும் உங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தாது என்பதை நன்கு உணர்ந்து கொண்டு எதிர்வரும் ஐந்தாண்டுகளில் நீங்கள் வழங்கப்போகும் நடுநிலைமையான நல்லாட்சிதான் உங்களை நிரந்தர முதல்வராக்குவதும் இல்லை மீண்டுமொரு மவுனப்புரட்சியால் வீழ்த்தப் போவதுமாகும்.

இங்கேயும் ஒரு எகிப்து… மன்னராட்சி வீழ்ந்தது, ஏகாதிபத்தியம் எழுந்தது என்றெல்லாம் கருத்துக் கூற இடமளிக்காமல் இந்த ஐந்து ஆண்டுகள் தமிழர்க்காகவும், தமிழகத்திற்காகவும் ஆட்சி நடத்தி நிரந்தர முதல்வராய் வீற்றிருக்க விழைவீர்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஒரு தமிழக சாமானியன்…!

10 comments:

 1. பார்ப்போம் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று..

  ReplyDelete
 2. பொறுப்புள்ள குடிமகனாக ஊதப்பட்ட சங்கு.ஏற்றுக்கொள்கிற காதுகளைப் பொறுத்து தான் எல்லாம்.......

  ReplyDelete
 3. அற்புதமான பதிவு. வெற்றி மமதையினில் மதம் கொண்டிடாது திறன்பட ஆட்சிபுரிய வருங்கால முதல்வருக்கு மென்மையாக எச்சரித்திருக்கின்றீர்கள். தோழி. 'சசிகலா & கோ' வினரை தவிர்த்தாலே நல்லாட்சி அமைய வாய்ப்பிருக்கின்றது. களையெடுக்கின்றேன் என தி.மு.கவினரை ஊழல் வழக்குகளில் உள்ளே தள்ளுவதையே பிரதானமாகக் கொள்ளாமல் மக்கள் நலனில் கவனம் செலுத்தட்டும்.

  ReplyDelete
 4. நல்லதொரு அலசல், ம்ம்ம் பார்ப்போம் மாறுபட்ட ஆட்சி நடத்துவாரா இல்லை பழைய குருடி கதவை திறடி கதையாக மாறுவாரா என்று, எப்படியும் ஒருமாதத்தில் தெரிந்துவிடும்

  ReplyDelete
 5. ஞெஃப்ரின்May 14, 2011 at 7:15 PM

  அருமையான விலக்கம் புரிந்துகொண்டு செயல்படுவார் என நம்புவோம் பலயபடி ஆடினார்ன அடுத்த 5 ஆண்டில் இப்போதய திமுக நிலமயம அதிமுக அனுபவிக்கும் அவ்லோதான்

  ReplyDelete
 6. அன்பு நண்பர்களுக்கு...
  பெரிய எழுத்தாளராகும் ஆசையில் ப்ளாக்கரில் எழுதத்துவங்கினேன்... ஒவ்வொரு நாளும் என்ன எழுதுவதென்று மண்டையைப் பிய்த்துக் கொண்டு யோசிக்க வேண்டியதாயிருக்கிறது! நான் மிகவும் விரும்பி எழுதியது நிராகரிக்கப்படுகிறது. ஏனோதானோ என்று எழுதியது சில நேரங்களில் விரும்பப்படுகிறது. கொஞ்சம் சிக்கலாய் இருந்தாலும் கூட தொடர்ந்து முயலவே விரும்புகிறேன்...!நிரூபித்து விட்டீர்கள்!"அம்மாவுக்கு"இதுவெல்லாம் தெரியாதா என்ன?புதுசா,இன்னும் ஏதாவது புதுசா ட்ரை பண்ணுங்க சகோ!!!

  ReplyDelete
 7. உங்களுக்கு தெரியுமா சகோ? நான் 1 மாசத்துக்கு முன்னாடியே எழுதுன மே 13 ஜெ வுக்கு கிட்டினால்... அப்படின்ற பதிவுல ஜெ ஆட்சிக்கு வந்ததும் தலைமைச்செயலக கட்டிடத்தில் மாற்றம் இருக்கும்னு சொல்லிருந்தேன். இப்போ... என்ன ஆச்சு? இன்னும் அதுல என்னல்லாம் சொல்லிருக்கேனோ எல்லாம் நடக்கும்..!

  ReplyDelete
 8. உங்கள் பதிவுக்கு நன்றி. நீங்கள் சுட்டிகாட்டிஉள்ள வெற்றிக்கான காரணங்களும் சரியே. ஆனால் நீங்கள் கேட்க்கும் ஆட்சி கேலியாக உள்ளது. உலகெங்கிலும் மன்னர் ஆட்சி அழிக்கப்பட்டு வருகிறது ஆனால் தமிழனோ மன்னர் ஆட்சிக்கு வாகளித்துல்லான், இனி வேடிக்கை மட்டும்தான். எதிர்பார்ப்போ கேள்வியோ ம்ம்ம்.... கல்லாலான சிலைக்கே உத்திரவாதம் கிடையாது....

  ReplyDelete
 9. Well said Subbu!! Lets not have over expectations. Wait to find out whether we are blessed or cursed!!

  ReplyDelete
 10. We need to wait probably another 10years to be blessed by the politicians. Anyhow its just a letter from a ordinary citizen..thts all.

  ReplyDelete