SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Wednesday, May 11, 2011

நண்பேன்டா…!!!


இன்னைக்கு எப்படி ஃபிகர் இல்லாத பையன பாக்க முடியாதோ, அப்பிடித்தாங்க ஃபிரண்டு இல்லாத ஆளுங்களப் பாக்குறதும் ரொம்ப ரேர் சமாச்சாரமாயிப் போச்சு. படிப்புல வேணா பசங்க கொஞ்சம் கம்மியா இருக்கலாம்! ஆனா நட்புன்னா வந்திட்டா பொண்ணுங்கள விட நம்ம பசங்க எப்பவுமே ஒரு ஸ்டெப் மேலதான்.

நம்ம எல்லாத்துக்குமே கண்டிப்பா ஃபிரண்ட்ஸ் இருப்பானுங்க. சரி… நமக்கு ஏற்கனவே வாய்ச்ச நண்பனோ, இல்ல…புதுசா வாய்க்கிற ஒருத்தனோ உண்மையிலேயே நல்ல நண்பன்தானானு எப்பிடி கண்டுபிடிக்கறது?

அது ரொம்ப ஈஸிங்க… கமான் ஸ்டார்ட் மியூசிக்!!!

உங்க பிரண்டு கீழேயிருக்கிற மொள்ளமாரித்தனமெல்லாம் செய்யறவனாயிருந்தா கொஞ்சம் கூட யோசிக்காம உடனடியா கழட்டி உட்றுங்க…

# உங்களப் பாத்த உடனே மச்சான் டீ சாப்டலாம் வாடான்னு கூட்டிட்டு போவான். டீக்கடையில டீயோட சேத்து வடை, சிகரெட்னு தூள் பறக்கும். எனக்கு டீ மட்டும் போதும்டா மச்சான்னு சொன்னீங்கன்னா நீங்க நெஜமாலுமே ரொம்ப அப்பாவிங்க… பில் குடுக்கற விசயம்தாங்க இன்னைக்கி வரைக்கும் மண்டக் குடச்சலா இருக்குது. குடிக்கிற மாதிரியே டீ கிளாச வாய்ல வச்சி மோந்து மோந்து பாத்திட்டு டீயைக் காலி பண்ணாமலே கையில வெச்சிக்கிட்டு இருப்பான் பயபுள்ள. இதுல ஒருவொரு வாட்டி மோந்து பாக்கும்போதும் சிகரெட்ட வேற ஒரு பஃப் அடிச்சிக்கிறானுக. நாம மொதல்லயே டீயைக் குடிச்சிட்டோம்னா பில்லு நம்ம தலைலதான். அட இப்பிடித்தான போனவாட்டி ஆச்சிதுன்னு இந்தமுறை உஷாரா நாம நக்கி நக்கிக் குடிச்சு டைம் பாஸ் பண்ணோம்னா… பயபுள்ள உஷாராகி நமக்கு முன்னாடியே டீ, வடை, சிகரெட்ட காலி பண்ணிட்டு மச்சான் அர்ஜெண்டா ஒரு இடத்துக்கு போவேண்டியிருக்கு அப்புறம் பாக்கலாம்டான்னு எஸ்ஸாயிடறானுக. இல்லாட்டி காலே வராத செல்போன காதில எடுத்து வெச்சுகிட்டு மச்சான் என் ஆள் போன்டா… பேசிட்டு வந்திரேன்னு சொல்லி டீக்கடையிலிருந்து நூறடி தூரத்தில போயி நின்னுக்கிட்டு நாமளா பில்ல குடுக்கறவரைக்கும் கிட்ட வரமாட்டேங்கிறானுங்க.
அட, டீக்கடையிலயாவது பரவாயில்லீங்க… ஓட்டல், சினிமாத் தியேட்டர்னு இவனுங்க கூட எங்க போனாலும் இதே அக்கப்போர்தாங்க!

# நம்மகிட்ட பேசிட்டு இருக்கும் போதே அவனோட இன்னொரு ஃபிரண்டு எவனயாவது அசிங்க அசிங்கமாத் திட்டுவானுங்க. நாமளும் அத ரசிச்சிக் கேட்டோம்னா நாளைக்கு நம்மள பத்தியும் எங்கயாவது இப்பிடித்தான் புகழுவான்றது நம்ம மரமண்டைக்கு உறைக்காமலே போனாலும் போயிருங்க… ஜாக்கிரத!

# பரதேசிப்பய சினிமா, பார், பீச்சு மாதிரி இடத்துக்கு நம்மள கூப்டறதும், உருப்படியான ஏதோவொரு மேட்டர்ல ஒதுக்கிவிடுறதுமா இருந்தா உஷாரா இருக்கவேண்டியது நாமதாங்க…

# காலேஜ்ல நம்மகூட படிக்கிறவனாயிருந்து நம்மள ஊரெல்லாம் பொறுக்கவச்சு உருப்படாம ஆக்கி, ரிசல்ட் வந்ததும் பாத்தா அவன் எல்லாம் கிளியர் பண்ணி நம்ம கையில பல கப்புங்கள அடுக்கிட்டு ‘’எப்பிடினே தெரியல மச்சான்… என்னெல்லாம் பாஸ் பண்ணி உட்றுக்கானுங்க பாரேன்’’னு சிரிக்கிறான்னா, மொத செமஸ்டர்லேயே உஷார் ஆகிக்கலைன்னா அடுத்தடுத்த செமஸ்டர் உங்களுக்கு செம டர்ர்ர்ர்தான்…

# வெளில சுத்தும் போதெல்லாம் ஜாலின்ற பேர்ல பாக்கிற பொண்ணுங்களயெல்லாம் ஓவரா கலாய்க்கிறானா?... ஒருநாள் உங்களுக்கு லாக்அப் நிச்சயம், உஷாருங்கோ!

# அவன் ஃபிரண்டு யாரோட தங்கச்சியாவது பத்தி உங்ககிட்ட தப்பா பேசுறானா?... அய்யோ சாமீ… அவன எக்காரணத்தக் கொண்டும் உங்க வீட்டுப் பக்கம் கூட்டிட்டுப் போயிராதீங்க!

# ஒருநாள் கூட உங்களுக்கு போனே பண்ணாம மிஸ்டு காலே குடுத்துட்டு இருக்கிறவனுகள மிஸ் பண்ணா தப்பேயில்லைங்க!

# நீங்க வேண்டாம்னு சொன்னாலும் வலுக்கட்டாயமா உங்களக் கூட்டிட்டுப் போயி ட்ரீட் வைக்கிறேன்னு பேர்ல ஆரம்பம் மட்டும் அவன் காசுல வாங்கிக் குடுத்து உங்களுக்கு கொஞ்சம் ஏறுனதும் ஃப்ரண்ட்ஷிப் பத்தி உருக உருகப் பேசி நீங்க வேற எதுக்கோ வச்சிருந்த காசக்கூட குடிச்சிக் காலிபண்ணிட்டு உங்கள ஆஃபாயில் போட்டுதான் அனுப்புறான்னா… அப்பாவியா இல்ல அரைலூசா நீங்க?

# உங்க ஃபிகரபத்தி உங்ககிட்டயே ‘’சூப்பர் ஃபிகராதான்டா பிடிச்சிருக்கே மச்சி, எனக்கு இண்டரடியூஸ் பண்ணி வையுடா’’ன்றானா… கொஞ்சம் யோசிக்கனுங்க!

# எப்போ பாத்தாலும் அவன் பிகருகிட்ட உங்கள மட்டம் தட்டி அவன் இமேஜ உசத்திக்கிறான்னு தெரியுதா?… அய்யய்யோ, என்னக்கியிருந்தாலும் டேஞ்சர்தாங்க.

# என்னிக்காவது ஃப்ரண்ட்ஸ்ங்க எல்லாரும் ஃபுல்லா தண்ணியப் போட்டுட்டு நைட்டு ரிட்டர்ன் ஆகும் போது அவன் மட்டும் முன்னாடி போயி போலிஸ்ல மாட்டி நின்னுகிட்டு இருப்பான். அதே இடத்த நீங்க க்ராஸ் பண்ணும்போது போலிஸே உங்கள பாக்காம விட்டாலும் இவனே சத்தமா ‘’மச்சான் நாம தண்ணியடிச்சிட்டு வண்டி ஓட்டறது போலிசுக்கு தெரிஞ்சிடுச்சிடா… இங்க வந்து நின்னுறு மச்சான்’’ னு போடுவான் பாருங்க ஒரு பிட்ட… அப்புறம் என்ன? தீபாவளிதான்!!!

# நீங்க என்ன செஞ்சாலும் சரி, என்ன சொன்னாலும் சரி… அத பத்தி புரியாமலே ‘’மச்சான் நீ சூப்பர்டா’’ன்னுவான். இதுவரைக்கும் உங்கள பத்தி உங்ககிட்ட ஒரு குறையுமே சொல்லாம எப்போ பாத்தாலும் உங்களப் புகழ்ந்துகிட்டே இருக்கானா?...புறம்போக்குகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதயாவே இருங்க…

# என்னக்காவது உங்க ஆளுகிட்ட சின்ன ஊடலாயிப் போச்சுனா உங்க நண்பன அனுப்பிச்சு சமாதானம் பேசச்சொல்லுவீங்க… அவன் போயி அந்த பொண்ணுகிட்ட உங்களோட அத்தனை வீக் பாயிண்ட்சையும் போட்டுடைச்சி, அவன் கொஞ்சம் அப்பிடித்தாம்மா… நீதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கனும்னு சமாதானம் பேசுறானா?... அய்யோ புள்ளபூச்சிய மடியிலேயே கட்டிக்கிட்டுத் திரியிறீங்க, மறந்துறாதீங்க!

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு சொல்லுவாங்க. அது கண்டிப்பா நண்பனுக்கும் பொருந்தும். சொந்தக்காசுல சூனியம் வச்சிக்கிட்ட மாதிரி நாலு நாதாறிப் பயலுகள ஃபிரண்டு பிடிக்கிறதுக்கு பதிலா ஒரேயொரு நல்லவன மட்டும் பிரண்டா வச்சிக்கிறது எவ்வளவோ மேலுங்க!!!

8 comments:

 1. ம்ம்..சரியா சொன்னீங்க..

  ReplyDelete
 2. பின்னூட்டம் போடுறதுக்கு கூகிள் அக்கெளண்ட் கேட்கிறதை எடுத்து விடுங்களேன்.நிறைய பேர் பின்னூட்டம் போடமாலேயே போய் விடுவார்கள்.

  ReplyDelete
 3. இவனுங்களுக்கு ரோட்ல பொண்ணுங்கள சைட் அடிக்கனும்னா நமக்கு எவ்ளோ டீ வேணும்னாலும் வாங்கி தருவானுங்க. ராஸ்கல்ஸ்!

  ReplyDelete
 4. இன்ட்லி வலைத்திரட்டியில் உங்கள் பதிவுகளை இணைக்கவும்.

  ReplyDelete
 5. அனுபவங்கள்....
  சொந்தமானவையா?
  திரட்டியதா?
  எப்படி இருந்தாலும்
  உங்கள் பதிவு சூப்பர்.

  ReplyDelete
 6. அனுபவங்கள் சொந்தமானவையல்ல... ஆனால் எங்கிருந்தும் திரட்டாமல், திருடாமல் சொந்தமாய் யோசித்து எழுதியதே... எனது முந்தைய படைப்புகளிலிருந்து எழுதும் ஸ்டைலை மாற்றிக்கொள்ள நான் எடுத்த சிறு முயற்சி இது!

  ReplyDelete
 7. Experience pesutha Subbu?

  ReplyDelete