SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Tuesday, May 3, 2011

பேச்சிலர்ஸ் கிச்சன் – ஆண்களும் சமைக்கலாம்-1...(பேச்சிலர்ஸ் சிக்கன் கிரேவி ஃப்ரை)
நீங்கள் குடும்பத்தை பிரிந்து வெளியூரில் தனியாய்த் தங்கி வேலை செய்து கொண்டிருக்கும் ஆணா?

கோடை விடுமுறைக்கு மனைவி குழந்தைகளை ஊருக்கு அனுப்பிவிட்டு ஹோட்டல் உணவால் வயிறும் நாக்கும் கெட்டுப்போய் தவித்துக் கொண்டிருப்பவரா?

நமக்கு சமையல் தெரிந்தால் வாய்க்கு ருசியாய் நாமே வீட்டில் சமைத்துச் சாப்பிடலாமே என்று எண்ணுபவரா?

என்றாவது சில விடுமுறை நாட்களில் மனைவிக்கு ஓய்வளித்து நீங்களே சமைத்துப்போட்டு அவளை அசத்த நினைக்கிறீர்களா?

அட… கவலையை விடுங்க பாஸ். பொம்பளைங்களெல்லாம் ஏரோப்ளேனே ஓட்டுறாங்க… நம்மால இந்த சமையலை பண்ண முடியாதா என்ன?
இங்கே நான் கூறும் அனைத்து சமையல்களும் ஏதோ புத்தகத்திலிருந்து எழுதப்பட்டதோ… இல்லை செய்து பார்க்காமல் ஏனோதானோவென்று எழுதியதோ அல்ல. எல்லாமே என் வாழ்வில் நானே கற்றுக்கொண்டு அன்றாடம் உபயோகிக்கும் அசல் சமையல்களே.
வாங்க… கலக்குவோம்!

பேச்சிலர்ஸ் சிக்கன் கிரேவி ஃப்ரை :- (இரண்டு பேருக்கான அளவு)

(இந்த படத்திலிருப்பது அல்ல நாம் செய்யப்போவது)

தேவையான பொருட்கள் :-
1. சன் ஃப்ளவர் ஆயில் = 3/4 குழிக்கரண்டி
2. தக்காளி = 02 (நன்கு பழுத்தது, சிறு சிறு துண்டுகளாய் வெட்டியது)
3. வெங்காயம் = பெரிய சைஸ் 01 (சிறு சிறு துண்டுகளாய் வெட்டியது)
4. சிக்கன் = ½ கிலோ (மீடியம் சைஸ் துண்டுகளாய் வெட்டப்பட்டது)
5. இஞ்சி பூண்டு விழுது = 50கிராம்
6. ஆச்சி/சக்தி சிக்கன் குழம்பு மசாலா = 50கிராம்
7. மிளகாய்த்தூள் = 1/2 டீஸ்பூன்
8. மஞ்சள் தூள் = ½ சிட்டிகை
9. உப்பு = தேவையான அளவு (3/4 டீஸ்பூன்)
10. மல்லி இலை,கருவேப்பிலை = கொஞ்சம்
11. தண்ணீர் = 2 முதல் 3 டம்ளர் வரைஎளிதான எட்டு ஸ்டெப் செய்முறை :-
சமையல் செய்யக் கற்றுக் கொள்ளும் முன் அடுப்பை பற்ற வைக்கவும் தீயைக் கூட்டக் குறைக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்.

1. அடுப்பை பற்ற வைத்து மீடியம் சைஸ் அலுமினியக் கடாயை அடுப்பில் வையுங்கள். அடுப்பு மிதமான தீயில் இருக்கட்டும். கடாய் சற்று சூடானதும் முக்கால் குழிக்கரண்டி சன்ஃப்ளவர் ஆயிலை அதில் ஊற்றுங்கள்.
2. எண்ணெய் சூடானதும் பொடித்துண்டுகளாய் வெட்டப்பட்ட வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் சிறிது வதங்கியதும் சிறு துண்டுகளாய் வெட்டப்பட்ட தக்காளியையும் போட்டு வதக்குங்கள்.
3. வெங்காயமும் தக்காளியும் ஓரளவு வதங்கியதும் நன்கு கழுவப்பட்ட சிக்கன் துண்டுகளை தண்ணீரைப் பிழிந்து கடாயில் போடவும். வதங்கிய வெங்காயம் தக்காளியும், சிக்கனும் நன்கு கலக்குமாறு இரண்டு நிமிடங்களுக்குப் புரட்டவும்.
4. இப்போது இஞ்சி பூண்டு விழுது (பேஸ்ட்) 50கிராம் அளவு கடாயில் வேகத் தொடங்கியிருக்கும் சிக்கன் மீது போட்டு நன்கு புரட்டி மூன்று நிமிடமளவுக்கு வதக்குங்கள்.
5. அடுப்பை சிலிம் செய்துகொண்டு வதங்கிக் கொண்டிருக்கும் சிக்கனில் 50கிராம் சிக்கன் குழம்பு மசாலா, 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், ½ சிட்டிகை மஞ்சள் தூள், தேவையான அளவு (3/4 டீஸ்பூன்) உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்கு புரட்டவும். தீயை மீண்டும் மிதமாக்கிக் கொண்டு 04 நிமிடங்கள் வரை இவற்றை வதக்கவும்.
6. பின்னர் கடாயில் 02முதல் மூன்று டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி நன்கு புரட்டி கடாயை மூடிவையுங்கள். பாத்திரத்தின் அடிபிடிக்காமல் இருக்க அவ்வப்போது சிக்கனை மெதுவாக கிளறி விடுங்கள். ஒரு பத்து நிமிடங்களுக்குப்பிறகு அடுப்பை சிலிம் செய்து விடுங்கள். கடாயில் ஊற்றிய தண்ணீர் சுண்டும்வரை சிக்கனை அவ்வப்போது கிளறிவிட்டு அடிபிடிக்காமல் மூடிவைத்து வேகவிடுங்கள்.
7. சிக்கன் தேவையான அளவு வெந்ததும் மூடியை எடுத்துவிட்டு அடுப்பை முழுத்தீயில் வைத்து கொழகொழவென்றிருக்கும் சிக்கன் கிரேவியில் கொஞ்சம் கருவேப்பிலை தூவி 5முதல் 10நிமிடங்களுக்கு கெட்டியாகும் வரை அடிபிடிக்காமல் கிளறி இறக்குங்கள்.
8. இப்போது தயாராயிருக்கும் பேச்சிலர்ஸ் சிக்கன் கிரேவி ஃப்ரை மீது கொஞ்சம் மல்லி இலைகளைத்தூவி பறிமாறிக் கொள்ளலாம். இந்த வெரைட்டி சிக்கனை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சப்பாத்தி தோசைக்கும் இது சரியான காம்பினேசனாய் இருக்கும்.

சமையல் செய்ய சோம்பேறித்தனம் படாமல் ஒருமுறை இதை முயற்சி செய்யுங்கள். முதல் முறை சரியாய் வராமல் போனாலும் நிறை குறைகள் தெரிந்து கொண்டு அடுத்தடுத்த முறைகளில் நிச்சயமாய் உங்கள் கைப்பக்குவம் மிளிரத் தொடங்குமென்பது எனது சொந்த அனுபவம் உணர்த்திய பாடமாகும்.

தொடர்ந்து கலக்குவோம்…

1 comment:

  1. Ore oru suggestion!! After washing and cleaning chicken with turmeric and salt, allow it to simmer in a separate vessel for a while before using it for cooking ..During this process, chicken will leave out water. Wait until all the water evaporates(really donno where so much water comes out from it) and then use it.. This is a tip from my mom-in-law to rid of "so-called" bad water.

    ReplyDelete