SaiRose...

தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித்துன்பமிக உழன்று
பிறர்வாடப் பலச்செயல்கள் செய்து
நரை கூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின்மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?.....!


Sunday, May 1, 2011

உன் கண் உன்னை ஏமாற்றுமா?... விஞ்ஞானமா...வெறும் கண் கட்டி வித்தைதானா?

Illusion pictures என்றழைக்கப்படும் கீழ்க்கண்ட புகைப்படங்கள் நிஜமாகவே என்னால் விரும்பப்பட்டு என்னை ஆச்சர்யப்படவைத்தன. இவை அனைத்துமே jpg format படங்களேயொழிய அனிமேஷன்கள் அல்ல. இது விஞ்ஞானமா? இல்லை வெறும் கண்கட்டி வித்தையா? வாருங்கள் நாமும் குழந்தைகளாகி கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்...அட... நிஜமாவே அசையுதா இது?படிக்கட்டுகளை உற்று நோக்கினால் ஒரு பார்வைக்கு ஏறுவதாகவும் ஒரு பார்வைக்கு இறங்குவதாகவும் தெரியும்...அட! இது என்ன கன்ஃப்யூசன் கட்டிடங்களா?


இது எத்தனை கால் யானை?


இந்த மூன்று வீரர்களுமே ஒரே உயரம்தான் என்றால் நம்புவீர்களா?

இந்தப்படத்தின் மையப்புள்ளியை உற்று நோக்கியவாறு உங்கள் பார்வையை முன்னும் பின்னுமாக அசைக்கவும்... அட, நிஜமாவே சுத்துதா?இந்தப்படத்தின் மையத்தில் இருக்கும் கரும்புள்ளியை கொஞ்ச நேரம் உற்று நோக்கிய பின் உங்கள் தலையை கொஞ்சம் பின்னால் இழுங்கள்... எப்படி வந்தது ஒளிவட்டம்?நீங்கள் எந்தக் கரும்புள்ளியை உற்று நோக்கினாலும் அதைத்தவிர மீதமுள்ள வட்டங்கள் மட்டும் அசையும்...(சத்தியமாக இது கிராபிக்ஸ் இல்லை!)


முடிந்தால் இதில் தோன்றும் கரும்புள்ளிகளை எண்ணுங்கள்...கருப்பு சதுரங்களுக்கு இடையில் கரும்புள்ளிகள் தோன்றுவது நிஜம்தானா?...இதிலிருப்பது முகம் போல் தோன்றினாலும் கொஞ்சம் கழுத்தை வலதுபுறமாய்ச் சாய்த்துப் பார்த்தால் "L" ல் ஆரம்பிக்கும் ஆங்கிலவார்த்தை கிடைக்கும்!இதிலிருக்கும் வண்ணக்கோடுகள் நேரானவையா?...அலை அலையாய் அசைவது நிஜம்தானா?...சத்தியமாக இது பழைய தமிழ் படத்தின் டைட்டில் கிராபிக்ஸ்கள் அல்ல...
சாத்தியம்தானா இது?...
பச்சைக்கலரில் ஓடுவது தண்ணீரா?...


வட்டங்களில் ஏதாவது பூச்சி சுற்றுகிறதா?...


மையக்கரும்பகுதியையே உற்று நோக்குங்கள்...


வெளிப்புற ஃப்ரேம் அசையாமலும் வட்டத்திற்குள் இருப்பது அசைவதும் நிஜம்தானா?


இது வட்டங்களா? உருண்டையா? இல்லை சுருளா?...


பிரச்சனை யார் கண்ணில்?...


முகங்களும் உருவங்களும் கலந்த சில இல்யூசன் படங்கள்... திறமைசாலிகள் கண்டுபிடியுங்கள். சந்தேகமுள்ளவர்கள் என்னை வினவுங்கள்.


கீழேயிருக்கும் படங்களை குழந்தைகள் பார்க்கும்போது ஒரு மனிதனின் முகமும், பாட்டிலில் சுற்றும் டால்பின்களும் மட்டுமே தெரியும். ஆனால் பெரியவர்களுக்கு?...
அட இதுவும் இல்யூசன்தானா?...


இந்தப்படம் அருகில் பார்த்தால் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை காட்டும். 12அடி தூரத்தில் சென்று பார்த்தால்?...
இறுதியாக நம்ப இயலாத, வார்த்தைகளால் விவரிக்கமுடியாத ஆச்சரியமிது...

1. மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொண்டு படத்தின் மையப்பகுதியில் இருக்கும் நான்கு கரும்புள்ளிகளையும் 40முதல் 50நொடிகள் வரை உற்று நோக்குங்கள்.
2. இப்போது அருகிலிருக்கும் வெள்ளை அல்லது ஒரே வண்ணத்திலான ப்ளைன் சர்ஃபேஸ் உடைய சுவரைப் பாருங்கள்.
3. மெல்ல ஒரு ஒளிவட்டம் தோன்றக்கூடும். பார்வையை நகர்த்தாமல் உங்கள் விழிகளை மூடித்திறங்கள். இரண்டு மூன்று முறை மூடித்திறக்கலாம்.
4. வாவ்வ்வ்... என்ன தெரிந்தது என்பதைவிட யார் தெரிந்தது?
இதுவொரு இல்யூசன் பொழுதுபோக்கு...!

8 comments:

 1. அடேங்கப்பா............. எநேயிருது சார் இத்தனையும் பிடிச்சீங்க!! அத்தனையும் பொக்கிஷம். நன்றி!!

  ReplyDelete
 2. மிகவும் அருமை.. எனக்கும் இப்படியான கண்கட்டி ஓவியங்கள் மீது அலாதி பிரியம் உண்டு ! மூளைக்கும் நல்லதாமே .. அப்படியா ?

  ReplyDelete
 3. அற்புதம் தோழரே...நம்மை வேறு உலகத்திற்கே அழைத்து செல்கிறது..யானை மிகவும் அற்புதம்..

  ReplyDelete
 4. உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன்.

  ReplyDelete
 5. venna thana iruku.........................kevalamana pictures oru silatu

  ReplyDelete
 6. பதிவுக்கு நன்றி தோழர்.
  ஐன்ஸ்டீன் படம் !!!!!!!!!!!!!! என் கண்ணை என்னாலே நம்பவே முடியலை , அவ்வளவு அருமை . பாஆஆஆஆராட்டுக்கள்.
  கே.எம்.அபுபக்கர்
  கல்லிடக்குறிச்சி

  ReplyDelete